Showing posts with label திக்விஜய பர்வம். Show all posts
Showing posts with label திக்விஜய பர்வம். Show all posts

Saturday, September 28, 2013

நகுலனின் மேற்றிசைப் போர்ப்பயணம் - சபாபர்வம் பகுதி 31

Nakula's Westward Journey! | Sabha Parva - Section 31 | Mahabharata In Tamil

(திக்விஜய பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : நகுலன் மேற்கு நோக்கி படையெடுப்பது; நகுலன் அடக்கிய நாடுகளின் விபரம்…

Shalya sees Nakula

வைசம்பாயனர் சொன்னார், "நான் இப்போது உன்னிடம் நகுலனின் சாதனைகளையும், வெற்றிகளையும் குறித்தும் முன்பு வாசுதேவன் {கிருஷ்ணன்} அடக்கிய திசையை அந்த மேன்மையானவனும் {நகுலனும்} எப்படி அடக்கினான் என்பதையும் உரைக்கப் போகிறேன்.(1) புத்திகூர்மையுள்ள நகுலன், தங்கள் கூச்சலாலும், சிங்க முழக்கங்களாலும் நடுங்கச் செய்த வீரர்களாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும் உலகை நடுங்கச் செய்த படை சூழ, காண்டவப்பிரஸ்தத்தில் இருந்து மேற்கு நோக்கி சென்றான்.(2,3)

அக்னியின் காதலும், சகாதேவனின் போரும் - சபாபர்வம் பகுதி 30ஆ

Agni's Love and Sahadeva's Battle  | Sabha Parva - Section 30B | Mahabharata In Tamil

(திக்விஜய பர்வத் தொடர்ச்சி)

சகாதேவனின் தெற்கு நோக்கி படையெடுப்பு; சகாதேவன் அடக்கிய நாடுகளின் விவரம்

வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா, அக்னிதேவன் மஹிஷ்மதியில் வசித்து வந்தபோது, ஒரு காதலனாகப் புகழ்பெற்றான். மன்னன் நீலனுக்கு பெரும் அழகு படைத்த ஒரு மகள் இருந்தாள். அவள் எப்போதும் வேள்வி நெருப்பின் அருகில் தனது தந்தையுடன் இருந்து, அதை {அக்னியை} வீரியத்துடன் சுடர்விட்டு எரியவைத்தாள். மன்னன் நீலனின் வேள்வியில் நெருப்பு மூட்ட விசிறினாலும் எரியாமல், அந்த மங்கையின் அழகான இதழ்க் குவித்து ஊதிய மென்மையான காற்றினால் மட்டுமே அந்த அக்னி எரிந்தான். அக்னி அந்த அழகான மங்கையை தனக்கு மணமகளாக விரும்பினான். அந்த மங்கையும் அவனை  {அவனை} ஏற்றுக் கொண்டாள்.



ஒரு நாள் அந்த அக்னிதேவன் ஒரு அந்தண உருவைக் கொண்டு, அந்த அழகானவளின் சமூகத்தை இன்பமாக அனுபவித்த போது மன்னன் நீலனால் கண்டறியப்பட்டான். ஆகையால், அந்த அறம்சார்ந்த மன்னன், அந்த அந்தணனுக்கு சட்டப்படி தண்டனை கொடுக்க கட்டளையிட்டான். இதனால் அந்த சிறப்பு வாய்ந்த தேவன் {அக்னி தேவன்} மிகுந்த கோபத்துக்குள்ளானான். இதைக் கண்ட அந்த மன்னன் மிகவும் வியந்து, தரையளவு சிரம் தாழ்த்தினான். பிறகு சிறிது காலம் கழித்து தனது மகளை அந்தண உருவில் இருந்த அக்னி தேவனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அந்த தேவன் விபபசு (அக்னி), மன்னன் நீலனின் மகளான அந்த அழகிய புருவம் கொண்டவளை ஏற்றுக் கொண்டு, அந்த ஏகாதிபதியை {மன்னன் நீலனை} நினைத்து அருள் கொண்டான். பிறகு, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் அக்னி, அம்மன்னனைத் {நீலனை} தன்னிடம் ஏதாவது வரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சொன்னான். அந்த மன்னன் {நீலன்}, எப்போதும் போரில் தனது துருப்புகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்ற வரத்தைக் கேட்டான். அந்த நேரத்திலிருந்து, ஓ மன்னா {ஜனமேஜயா}, இதை அறியாமல் நீலனின் நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்த ஏகாதிபதிகள் அனைவரும் ஹுதாசனனால் {அக்னியால்} உட்கொள்ளப்பட்டார்கள். அந்த நேரத்தில் இருந்து, ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {ஜனமேஜயா}, மகிஷ்மதி என்ற அந்த நகரத்தில் இருந்த பெண்கள் மற்றவர்களால் (மனைவியாக) ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அக்னிதேவன் அவர்களுக்கு, அவர்கள் நினைத்தவாறு நடந்து கொள்ளவும், ஒரு குறிப்பிட்ட கணவனுக்கு கட்டுப்படாமலும் இருக்க, தனது வரத்தின் மூலம், கலவியில் சுதந்திரம் அளித்தான். மேலும், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயனே}, அந்த நேரத்தில் இருந்து (மற்ற நாட்டு) ஏகாதிபதிகள், அக்னியின் மேல் கொண்ட பயத்தால் அந்த நகரத்தின் {மகிஷ்மதி நகரத்தின்} பக்கம் திரும்பாமல் இருந்தார்கள். அறம்சார்ந்த சகாதேவன், நெருப்பால் சூழப்பட்டு, பயத்தால் பீடிக்கப்பட்ட தனது துருப்பு வீரர்களைக் கண்டு, மலையென அசையாது இருந்தான். பிறகு தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, தண்ணீரைத் தொட்டு, அந்த வீரன் (சகாதேவன்) அனைத்தையும் தவசிப்படுத்தும் அக்னியிடம் இந்த வார்த்தைகளில் பேசினான்:

"ஓ, புகையால் நீ வந்து சென்ற தடத்தைப் பதிப்பவனே, நான் உன்னை வணங்குகிறேன். இந்த எனது முயற்சிகள் எல்லாம் உனக்காகவே செய்யப்படுகின்றன. ஓ அனைத்தையும் தவசிம் செய்பவனே {அக்னியே}, நீயே தேவர்களுக்கு வாயாக இருக்கிறாய், நீயே வேள்வியாகவும் இருக்கிறாய். நீ அனைத்தையும் புனிதமாக்குவதால் பாவகன் என்றும் அழைக்கப்படுகிறாய். உன்னிடத்தில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யைச் சுமந்து செல்வதால் நீ ஹவ்யவாஹனன் என்றும் அழைக்கப்படுகிறாய். உன்னிடம் பேசவே வேதங்கள் வந்தன. ஆகையால் நீ ஜடவேதன் என்று அழைக்கப்படுகிறாய். தேவர்களுக்குத் தலைவனாக இருக்கும் நீ சித்திரபானு, அனலா, விபாவசு, ஹுதாசனா, ஜுவாலனா, சிக்கி, வைஸ்வனரா, பிங்கேசா, பிளவங்கா, பூரிதேஜா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறாய். குமரனுக்கு (கார்த்திகேயனுக்கு) {முருகனுக்கு} நீயே ஆதிமூலமாய் இருக்கிறாய். நீ புனிதமானவன், ருத்ரகர்வனும், ஹிரண்யகிரீதனும் நீயே. ஓ அக்னி, எனக்கு சக்தியைக் கொடு, வாயு எனக்கு உயிரைக் கொடுக்கட்டும், பூமி எனக்கு பலத்தையும் ஊட்டத்தையும் கொடுக்கட்டும், நீர் எனக்கு வளமையைக் கொடுக்கட்டும். ஓ அக்னி, நீர் {தண்ணீர்} பிறக்க முதன்மைக் காரணம் நீயே, பெரும் தூய்மை உடையவன் நீயே, தேவர்களில் முதன்மையானவன் நீயே, நீயே அவர்களுக்கு வாயாகவும் இருக்கிறாய். ஓ அக்னி, நீ என்னை உனது உண்மையால் சுத்தப்படுத்து. முனிவர்களும், அந்தணர்களும், தேவர்களும், அசுரர்களும், தினமும் தெளிந்த நெய்யை வேள்வியில் விதிப்படி ஊற்றுகின்றனர். அந்த வேள்விகளில் காட்சி அளிக்கும் உன்னிலிருந்து பிரகாசிக்கும் உண்மை எனும் கதிர்கள் என்னை சுத்திகரிக்கட்டும். புகையைக் கொடியாகக் கொண்டு, வாயுவால் ஏற்படும் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுவிப்பவனே, நீ அனைத்து உயிர்களிலும் இருக்கிறாய். ஓ அக்னி, உனது உண்மை எனும் சுடர்களால் என்னைச் சுத்தப்படுத்து. அப்படி உன்னால் சுத்திகரிக்கப்பட்ட நான், ஓ மேன்மையானவனே {அக்னியே}, உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அக்னி, நீ எனக்கு மனநிறைவு, செழிப்பு, அறிவு மற்றும் மகிழ்ச்சியை அருள்", என்று வேண்டினான் {சகாதேவன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மேற்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஒருவன் அக்னிக்குள் {நெருப்புக்குள்} தெளிந்த நெய்யை ஊற்றினால், அவன் எப்போதும் செழிப்பும், தனது முழுகட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஆன்மாவும் அருளப்பட்டு, அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.

சகாதேவன் மறுபடியும் அக்னியிடம், "ஓ தவசிப் படையல்களைச் சுமந்து செல்பவனே, நீ ஒரு வேள்வியைத் தடை செய்யாதிரு!" என்றான். இதைச் சொன்ன மனிதர்களில் புலியான மாத்ரியின் மகன் {சகாதேவன்}, பீதியிலிருந்த தனது துருப்புகளுக்கு முன்னிலையில், பூமியில் குசப்புற்களை விரித்து நெருப்பை எதிர்பார்த்து அதன் மேல் அமர்ந்தான். கண்டங்களை மீறாத கடலைப் போல அக்னி அவன் தலை மீது விழவில்லை. ஆனால் மறுபுறம் சகாதேவனிடம் அந்த குருகுல இளவரசனிடம் மனிதர்களுக்கு கடவுளான அக்னி அமைதியாக வந்து அனைத்து உறுதிகளையும் கொடுத்து, "ஓ குருரு குலத்தவனே {சகாதேவா}, இந்த கோலத்திலிருந்து எழுந்திரு. ஓ எழுந்திரு. நான் உன்னிடம் ஒரு முயற்சியையே செய்தேன். நான் உனது நோக்கத்தையும், தர்மனின் மகனது {யுதிஷ்டிரனது} நோக்கத்தையும் அறிவேன். ஆனால், ஓ பாரத குலத்தவரில் சிறந்தவனே {சகாதேவனே}, மன்னன் நீலனின் வழித்தோன்றல்களில் ஒருவன் இருக்கும்வரை, இந்த நகரம் என்னால் பாதுகாக்கப்பட்டிருக்கும். இருப்பினும், ஓ பாண்டுவின் மகனே {சகாதேவனே}, நான் உனது இதய விருப்பத்தை ஈடேற்றுகிறேன்," என்றான். அக்னியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ பாதர குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்த மாத்ரியின் மகன் இதயத்தில் மகிழ்ச்சியுடன் எழுந்தான். தனது கரங்களைக் குவித்து, சிரம் தாழ்த்தி அனைத்தையும் புனிதமாக்கும் நெருப்புக் கடவுளை வணங்கினான். கடைசியாக அக்னி மறைந்ததும், அந்தத் தெய்வத்தின் {அக்னி தேவனின்} கட்டளையால் மன்னன் நீலன் அங்கு வந்து மனிதர்களில் புலியான, போர்க்களத்தில் குருவான சகாதேவனை முறைப்படி வணங்கினான். சகாதேவன் அவனது வணக்கங்களைப் பெற்றுக் கொண்டு, அவனை {நீலனை} தனக்குக் கப்பம் கட்ட வைத்தான். மன்னன் நீலனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அந்த வெற்றியாளனான மாத்ரியின் மகன் {சகாதேவன்}, மேலும் தெற்கு நோக்கி சென்றான். அந்த நீண்ட கரம் கொண்ட வீரன் பெரும் சக்தி கொண்ட திரிபுராவின் {இன்றைய திரிபுரா அல்ல} மன்னனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். பிறகு தனது படைகளை பௌரவ நாட்டுக்கு எதிராகத் திருப்பி, அந்த ஏகாதிபதியை வீழ்த்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். பின்பு பெரும் முயற்சி செய்து சௌராஷ்டிராவின் மன்னன் அக்ரிதியையும், கௌசிகர்களின் குருவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அந்த அறம் சார்ந்த இளவரசன் {சகாதேவன்}, சௌராஷ்டிர நாட்டில் தங்கி இருந்த போது, போஜகடத்தின் பீஷ்மகனுக்கும், புத்திகூர்மையுள்ள, இந்திரனின் நண்பனான அவனது மகன் ருக்மிக்கும் ஒரு தூதுவனை அனுப்பினான். தனது மகனுடன் கூடிய அந்த ஏகாதிபதி {பீஷ்மகன்} கிருஷ்ணனுடனான உறவை நினைத்துப் பார்த்து, பாண்டு மகனின் {சகாதேவனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான். பிறகு போர்க்களத்தின் குரு {சகாதேவன்}, மன்னன் ருக்மியிடம் இருந்து நகைகளையும் செல்வத்தையும் பெற்றுக் கொண்டு மேலும் தெற்கு நோக்கி படை நடத்தினான். பிறகு பெரும் சக்தியும் பலமும் கொண்ட அந்த வீரன் சுர்பாரகனையும் தலகடனையும், தண்டகர்களையும் அடக்கினான். பிறகு  அந்த குரு வீரன், கடற்கரையில் வாழும் கணக்கிலடங்கா மிலேச்ச இனக்குழுக்களையும், நிஷாதர்களையும், கர்ணபிரவணர்கள் என்ற நரமாமிசம் உண்பவர்களையும், ராட்சதர்களும் மனிதர்களும் கலந்து பிறந்த காளாமுகர்களையும், கோல மலையையும், சுரபிபட்ணம், தாமிரத்தீவு, ரமக மலை ஆகியவற்றை வென்றான். அந்த உயர் ஆன்ம வீரன், மன்னன் திமிங்கிலனையும், ஒற்றைக் கால் மனிதர்களான கேரகர்கள் என்ற காட்டுமிராண்டிக் கூட்டத்தையும் வென்றான். அந்தப் பாண்டுவின் மகன் {சகாதேவன்}, சஞ்சயந்தி என்ற நகரத்தையும், பாஷாண்டம், காரஹதகம் என்ற நாடுகளுக்கும் தனது தூதுவர்களை மட்டுமே அனுப்பி, அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான். அந்த வீரன் {சகாதேவன்} பௌந்திரயர்களையும், திராவிடர்களையும், உத்திர கேரளர்களையும் {வடகேரளர்களையும்}, ஆந்திரர்களையும், தலவாணர்களையும், கலிங்கர்களையும், உஷ்தரகர்ணிகர்களையும், யவனர்களின் காண்பதற்கினிய அதாவி நகரத்தையும் தனது கட்டுப்பாட்டில், கொண்டு வந்து அவர்களிடம் இருந்து கப்பம் வாங்கினான். ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அந்த எதிரிகளைக் கொல்பவன் {சகாதேவன்}, மாத்ரியின் மகனான புத்திகூர்மையுள்ளவன் கடற்கரைக்கு வந்து, பெரும் உறுதிகள் கொடுத்து புலஸ்தியரின் பேரனனான சிறப்பு மிகுந்த விபீஷணனிடம் தனது தூதுவர்களை அனுப்பினான். காலத்தின் செயலை மதிப்புடன் நினைத்துப் பார்த்த அந்த மேன்மையான ஏகாதிபதி {விபீஷணன்} விருப்பத்துடன் பாண்டு மகனின் {சகாதேவனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான். அவன் {விபீஷணன்}, பாண்டுவின் மகனுக்கு பலதரப்பட்ட நகைகளையும், ரத்தினங்களையும், சந்தனத்தையும், பல தரப்பட்ட தெய்வீக ஆபரணங்களையும், விலையுயர்ந்த ஆடைகளையும், விலையுயர்ந்த முத்துகளையும் அனுப்பி வைத்தான். புத்திசாலித்தனம் கொண்ட சகாதேவன், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, தனது சொந்த நாட்டுக்குத் {இந்திரப்பிரஸ்தம்} திரும்பினான்.

ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே, அந்த எதிரிகளை அழிப்பவன் {சகாதேவன்}, சமாதானத்தாலும், போராலும் பல மன்னர்களை வீழ்த்தி, அவர்களைத் தனக்குக் கப்பம் கட்டச் செய்து தனது சொந்த நகரத்திற்குத் {இந்திரப்பிரஸ்தம்} திரும்பினான். ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, தான் கொண்டு வந்த அனைத்து செல்வத்தையும் நீதிமானான யுதிஷ்டிரனிடம் கொடுத்து, தன்னை வெற்றியாளனாகக் கருதி, தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தான் {சகாதேவன்}.

படத்தைச் சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்


Friday, September 27, 2013

சகாதேவனின் தென்திசைப் போர்ப்பயணம்! - சபாபர்வம் பகுதி 30

The Southward campaign of Sahadeva! | Sabha Parva - Section 30 | Mahabharata In Tamil

(திக்விஜய பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்று சகாதேவன் தெற்கு நோக்கி படையெடுப்பது; சகாதேவன் அடக்கிய நாடுகளின் விபரம்…

Sahadeva and King Neela

வைசம்பாயனர் சொன்னார், "சகாதேவன், நீதிமானான யுதிஷ்டிரன் மேல் கொண்ட அன்பினால் பெரும் படைகளுடன் தென்திசை நோக்கி படையெடுத்துச் சென்றான்.(1) பெரும் பலவானான அந்த வல்லமைமிக்க குருகுல இளவரசன் {சகாதேவன்}, மொத்த சூரசேனர்களையும், மத்ஸ்ய மன்னனையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(2) பிறகு அதிராஜர்களின் பெரும் பலம் வாய்ந்த மன்னனான தந்தவக்ரனை வீழ்த்திய அந்த வீரன், அவனைத் தனக்குக் கப்பம் கட்ட வைத்து, மீண்டும் அவனையே அரியணையில் அமர்த்தினான்.(3) 

Thursday, September 26, 2013

பீமனின் வெற்றிப்பயணம்! - சபாபர்வம் பகுதி 29

The victorious march of Bhima! | Sabha Parva - Section 29 | Mahabharata In Tamil

(திக்விஜய பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : பீமனின் கிழக்குத் திசைப் போர்ப்பயண விவரிப்பு; பீமசேனன் வெற்றியுடன் இந்திரப்ரஸ்தம் திரும்பியது…


வைசம்பாயனர் சொன்னார், "பிறகு, பகைவர்கள் அனைவரையும் தண்டிப்பவனானவன் {பீமன்}, குமார {குமாரவிஜயம் என்ற} நாட்டின் மன்னன் ஸ்ரீணிமத் {சிரேணிமான்}, கோசல நாட்டின் மன்னன் பிருஹத்பலன் ஆகியோரை வீழ்த்தினான்.(1) பிறகு பாண்டு மகன்களில் முதன்மையான பீமன் கடும் சாதனைகளைச் செய்து அனைவரையும் விஞ்சி, அறம்சார்ந்த பலம்வாய்ந்த மன்னனான அயோத்தி மன்னன் தீர்க்கயக்ஞனை வீழ்த்தினான்.(2) பிறகு, அந்த மேன்மைவாய்ந்த பீமன், கோபாலகக்ஷ நாடு, வட கோசலம் மற்றும் மல்லர்களின் மன்னன் ஆகியோரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(3) ஈரப்பதம் நிறைந்த பகுதியான இமயத்தின் அடிவாரத்துக்கு வந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, அந்த முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(4)

பீமனின் கீழ்த்திசைப் போர்ப்பயணம் - சபாபர்வம் பகுதி 28

Eastward expedition of Bhima! | Sabha Parva - Section 28 | Mahabharata In Tamil

(திக்விஜய பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்று பீமன் கிழக்கு நோக்கி படையெடுப்பது; பாஞ்சாலம் செல்வது; சேதியில் தங்குவது…

Yudhishthira Bhima

வைசம்பாயனர் சொன்னார், "அதேவேளையில் {அர்ஜுனன் வடக்கு நோக்கி படை நடத்தி சென்ற வேளையில்}, பெரும் சக்தி கொண்ட பீமசேனன், யுதிஷ்டிரனின் அனுமதியைப் பெற்று, கிழக்கு நோக்கி படை நடத்திச் சென்றான்.(1) பராக்கிரமம் கொண்டவனும்,, யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த படையுடன் இருந்தவனும், எதிரிகளின் துயரை அதிகரிப்பவனுமான அந்தப் பாரதர்களில் புலி {பீமன்}, நன்கு ஆயுதங்கள் நிரம்பியவனாகவும், எதிரி நாடுகளை நசுக்கும் தகுதி உள்ளவனாகவும் இருந்தான். மனிதர்களில் புலியான பாண்டுவின் மைந்தன் {பீமன்}, பெரும் நாடான பாஞ்சாலத்திற்குச் சென்று அந்தப் பழங்குடிகளுடன் உடன்பாடு காண பல்வேறு வழிகளைக் கையாண்டான்.(2,3)

Wednesday, September 25, 2013

வடகுரு நாட்டை அடைந்த அர்ஜுனன் - சபாபர்வம் பகுதி 27

Arjuna came to North Kuru! | Sabha Parva - Section 27 | Mahabharata In Tamil

(திக்விஜய பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் வடதிசையில் சென்று வென்று வந்த போர்ப்பயண விவரிப்பு…

Arjuna

வைசம்பாயனர் சொன்னார், "வீரனும், பெரும் சக்தி படைத்தவனுமான பாண்டவர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, வெண்மலைகளைக் கடந்து, திருமப்புத்திரனால்  ஆளப்பட்ட கிம்புருஷர்களின் {சிங்க தலையும் மனித உடலும், அல்லது மனிதத் தலையும் சிங்க உடலும் பெற்றவர்களின்} நாட்டை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். பிறகு க்ஷத்திரியர்களின் பெரும் படுகொலைகளுக்குப் பின் அந்தப் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான்.(1,2) அந்த நாட்டை வென்ற பிறகு, அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்) மனத்தை ஒருமுகப்படுத்தி, தனது துருப்புகளுக்குத் தலைமை தாங்கி, குஹ்யர்களால் {யக்ஷர்களால்} ஆளப்படும் ஹாராடகம்  {ஹாடகம்} என்ற நாட்டை நோக்கி முன்னேறினான்.(3)

Tuesday, September 24, 2013

அர்ஜுனனின் வடதிசைப் போர்ப்பயணம்! - சபாபர்வம் பகுதி 26

The Northern campaign of Arjuna! | Sabha Parva - Section 26 | Mahabharata In Tamil

(திக்விஜய பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : பீமன், அர்ஜுனன், நகுல சகாதேவர் ஆகியோர் யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு தனித்தனியே நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆளுக்கொரு திசையாகச் செல்வது; பாண்டவர்களின் போர்ப்பயணங்களை வைசம்பாயனர் சுருக்கமாகச் சொல்லல்…

Arjuna

{ஜனமேஜயன், "ஓ பிராமணரே, (பாண்டவர்களால்) பல்வேறு திசைகளில் நடத்தப்பட்ட படையெடுப்புகளின் வரலாற்றை முழுமையாக எனக்குச் சொல்வீராக. என் மூதாதையரின் பெரும் வரலாற்றைக் கேட்பதில் நான் தணிவடையவில்லை" என்றான்.(1)

திக்விஜயம் சென்ற பாண்டவர்கள் - சபாபர்வம் பகுதி 25

Digvijaya of the Pandavas! | Sabha Parva - Section 25 | Mahabharata In Tamil

(திக்விஜய பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் :பீமன், அர்ஜுனன், நகுல சகாதேவர் ஆகியோர் யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு தனித்தனியே நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆளுக்கொரு திசையாகச் செல்வது; பாண்டவர்களின் போர்ப்பயணங்களை வைசம்பாயனர் சுருக்கமாகச் சொல்லல்…

Arjuna aiming his object

வைசம்பாயனர்    சொன்னார், "விற்களில் சிறந்த வில்லையும், வற்றாத அம்பறாத்தூணியையும், தேரையும் கொடிக்கம்பத்தையும், சபா மண்டபத்தையும் அடைந்த அர்ஜுனன், யுதிஷ்டிரனிடம்,(1) "ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, வில், ஆயுதங்கள், பேராற்றல், கூட்டாளிகள், பரந்த ஆட்சிப்பகுதி, புகழ், துருப்புகள் ஆகியவற்றை விரும்பியவாறு அடைவது கடினமென்றாலும், இவை யாவும் என்னால் அடையப்பட்டது.(2) எனவே, ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, இனி நாம் நமது கருவூலத்தை {பொக்கிஷத்தை} நிரப்ப வேண்டும் என்று நான் கருதுகிறேன். பூமியின் பிற மன்னர்கள் நமக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.(3) நற்பேற்றை அருளும் ஒரு புனிதமான சந்திர நாளில், சாதகமான நட்சத்திரக் கூடுகைகள் இருக்கும் போது, கருவூலத்தலைவன் {குபேரன்} இருக்கும் திக்கை (வடக்கு திசையை) நோக்கி நான் எனது படையெடுப்பைத் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றான்".(4)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்