The command of Dhritarashtra | Sabha Parva - Section 56 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 12)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை அழைத்து வரும்படி திருதராஷ்டிரன் விதுரனைப் பணிப்பது...
வைசம்பாயனர் சொன்னார், "மன்னன் திருதராஷ்டிரன், தனது மகனின் {துரியோதனனின்} எண்ணத்தை அறிந்து விதியை வெல்ல முடியாது என்று நினைத்து {வைசம்பாயனனாகிய} நான் சொன்னவாறு செய்தான்.(1) இருப்பினும், புத்திசாலி மனிதர்களில் முதன்மையான விதுரன், தனது அண்ணனின் {திருதராஷ்டிரனின்} சொற்களை ஏற்காமல்,(2) "ஓ மன்னா {திருதராஷ்டிரரே, உமது ஆணையை நான் ஏற்கவில்லை. நீர் இவ்வாறு செயல்பட வேண்டாம். நமது குலத்திற்கே இஃது அழிவை ஏற்படுத்துமென நான் அஞ்சுகிறேன். உமது பிள்ளைகள் ஒற்றுமையைத் தொலைத்தால், அவர்களுக்குள் வேற்றுமை உண்டாகும். ஓ மன்னா, இந்தப் பகடை விளையாட்டினால் விளையப் போவதாக இதையே காண்கிறேன்" என்றான்.(3)
திருதராஷ்டிரன், "விதி எனக்கு எதிராகச் செயல்படவில்லை என்றால், இந்த சச்சரவு எனக்குத் துயரத்தை ஏற்படுத்தாது. இந்த முழு அண்டமும் விதியின் ஆதிக்கத்திலும், படைத்தவனின் விருப்பத்திற்கேற்பவுமே நகர்கிறது. அது சுதந்திரமாக இல்லை.(4) எனவே, ஓ விதுரா, எனது உத்தரவின் பேரில் மன்னன் யுதிஷ்டிரனிடம் சென்று, குந்தியின் சிறந்த மகனான அவனை {யுதிஷ்டிரனை} இங்கே {ஹஸ்தினாபுரத்திற்கு} அழைத்து வருவாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.(5)
ஆங்கிலத்தில் | In English |