"Lo, I have won!" said Sakuni | Sabha Parva - Section 59 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
பகடை ஆட்டம் தொடங்கி முதல் வீச்சில் யுதிஷ்டிரன் தோற்றது
வைசம்பாணர் சொன்னார், "விளையாட்டு ஆரம்பித்த போது, மன்னன் திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட அனைத்து மன்னர்களும் அந்த சபையில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, பீஷ்மர், துரோணர், கிருபர், உயர் ஆன்ம விதுரன் ஆகியோர் மகிழ்ச்சியற்ற இதயங்களுடன் பின்னே அமர்ந்தனர். சிம்ம கழுத்து கொண்ட பெரும் சக்தி கொண்ட மன்னர்கள் தனியாக ஜோடி ஜோடியாக இருந்த அழகான உருவமும் வண்ணமும் கொண்ட உயர்ந்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, அங்கே கூடியிருந்த மன்னர்களால் அந்த சபை மிகப் பிரகாசித்து நற்பேறை அருளும் தேவர்கள் அமர்ந்திருக்கும் தேவலோக சபை போல காட்சியளித்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்து, வீரம் கொண்டு பிரகாசமாக இருப்பவர்கள் ஆவார்கள். ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, பிறகு நட்புரீதியான பகடை ஆட்டம் ஆரம்பித்தது.
யுதிஷ்டிரன், "ஓ மன்னா {துரியோதனா}, அழகாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டும் இருக்கும் இந்த பெரும் மதிப்பு கொண்ட சிறந்த முத்துகள், பழங்காலத்தில் சமுத்திரத்தைக் கடைந்து பெறப்பட்டது, ஓ மன்னா {துரியோதனா}, இதுவே ஏனது பந்தயப் பொருள். ஓ பெரும் மன்னா, என்னுடன் விளையாடுவதற்காக, இதற்கு பதில் நீ பந்தயமாக வைக்க விரும்பும் செல்வம் என்ன?" என்று கேட்டான்.
துரியோதனன், "என்னிடம் நிறைய நகைகளும் செல்வமும் இருக்கின்றன. ஆனால் நான் அவற்றை வீணடிப்பதில்லை. இந்தப் பந்தயத்தை நீ வென்று கொள்" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, பகடையில் பெரும் நிபுணத்துவம் வாய்ந்த சகுனி, பகடைப் பாச்சை {தாயக்கட்டையை} எடுத்து (உருட்டி) யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.
![]() |
![]() |
![]() |