The Virtuous support the distressed | Vana Parva - Section 6 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
விதுரன் பாண்டவர்களிடம் சென்றதும் திருதராஷ்டிரன் தனது தம்பியை நினைத்து வருந்தல்; சஞ்சயனை அனுப்பி விதுரனை அழுத்துவரச் சொல்லல்; சஞ்சயன் விதுரனை திரும்ப அழைத்து வரல்; சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரி மகிழ்ந்திருத்தல்
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, விதுரன் பாண்டவர்களின் இருப்பிடம் சென்றதும், ஓ பாரதா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன், ஆழமான விவேகத்துடன் தனது செயலுக்காக வருந்தினான். போர் மற்றும் அமைதியில் விதுரனுக்கு இருக்கும் பெரும் புத்திசாலித்தனத்தையும், பிற்காலத்தில் பாண்டவர்களுக்கு ஏற்படப்போகும் பெரும் செல்வாக்கையும் நினைத்துப் பார்த்தான். விதுரனை நினைத்து வலி கொண்ட திருதராஷ்டிரன் சபையின் வாயிலை அணுகப்போய் (காத்திருக்கும்) மற்ற ஏகாதிபதிகளின் முன்னிலையில் உணர்வற்று கீழே விழுந்தான்.
மீண்டும் நினைவை அடைந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தரையில் இருந்து எழுந்து சஞ்சயனிடம், "எனக்கு நண்பனாக இருந்த எனது தம்பி {விதுரன்} அறதேவனைப் {தர்ம தேவனைப்} போன்றவன்! அவனை நினைத்துப் பார்த்த எனது இதயம் துயரத்தால் பற்றி எரிகிறது! செல், தாமதமில்லாமல் அறநெறிய அறிந்த எனது தம்பியை {விதுரனை} என்னிடம் அழைத்துவா!" என்றான். அதைச் சொன்ன பிறகு, அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} கதறி அழுதான்.
விதுரனை நினைத்து, வருத்தமடைந்து உள்ளம் கொதித்து, சகோதர பாசத்தால் துயரம் மேலிட்டு, சஞ்சயனிடம், "ஓ சஞ்சயா, பாவியான என்னால் கோபத்தில் துரத்தப்பட்ட எனது தம்பி {விதுரன்} இன்னும் உயிருடன் இருக்கிறானா என்பதை முதலில் உறுதி செய்! எனது ஞானமுள்ள தம்பி {விதுரன்}, அளவற்ற புத்திசாலித்தனம் கொண்ட அவன் {விதுரன்} சிறிதும் வரம்பு மீறி செயல்பட்ட குற்றவாளி கிடையாது. ஆனால், மறுபுறம், எனது கையால் செய்யப்பட்ட பெரும் தவறுகளுக்காகவே {சுட்டிக்காட்ட} வந்தான்! ஓ ஞானமுள்ளவனே {சஞ்ஜயனே}, அவனைக் கண்டுபிடித்து இங்கே கொண்டுவா. அல்லது, ஓ சஞ்சயா நான் எனது உயிரை விடுவேன்!" என்றான் {திருதராஷ்டிரன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னனின் {திருதராஷ்டிரனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட சஞ்சயன், தனது பாராட்டை உணர்த்தி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி காம்யக வனம் இருக்கும் திக்கில் சென்றான். நேரத்தைக் கடத்தாமல் பாண்டுவின் மகன்கள் வசித்த வனத்தை அடைந்து மான் தோல் உடுத்தியிருந்த யுதிஷ்டிரன், தனது தம்பிகளின் பாதுகாப்பில் ஆயிரக்கணக்கான அந்தணர்களுக்கு மத்தியில் விதுரனுடன் அமர்ந்து தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் புரந்தரன் {இந்திரன்} போல இருப்பதைக் கண்டான்.

யுதிஷ்டிரனை அணுகிய சஞ்சயன் அவனை முறைப்படி வணங்கினான். பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} அவனை {சஞ்சயனை} உரிய மரியாதையுடன் வரவேற்றனர். அவன் {சஞ்சயன்} வசதியாக அமர்ந்த பிறகு, யுதிஷ்டிரன் அவனிடம் {சஞ்சயனிடம்} சில வழக்கமான விசாரிப்புகளை விசாரித்து அவனுடைய {சஞ்சயனுடைய} நன்னிலை குறித்து கேட்டான். பிறகு அவன் வந்த காரணத்தைக் குறித்தும் கேட்டான். சஞ்சயன் "அம்பிகையின் மகனான திருதராஷ்டிரர், ஓ க்ஷத்தா {விதுரா}, உம்மை நினைவு கூர்ந்தார். நேரத்தைக் கடத்தாமல் வந்து மன்னனை {திருதராஷ்டிரனே} காப்பாற்றும். ஓ மனிதர்களில் சிறந்தவரே {விதுரரே}, மனிதர்களில் முதன்மையான இந்தக் குரு இளவரசர்களின் {பாண்டவர்களின்} அனுமதியுடன், மன்னர்களில் சிங்கம்போன்றவரின் {திருதராஷ்டிரரின்} கட்டளையை ஏற்று, அவரிடம் திரும்பி வருவதே உமக்குத் தகும்!" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சஞ்சயனால் இப்படிச் சொல்லப்பட்ட உறவினர்களுடன் நெருக்கமாக இருக்கும் புத்திசாலியான விதுரன், யுதிஷ்டிரனின் அனுமதியுடன் யானையின் பெயர் கொண்ட நகரத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பிச் சென்றான். அவன் {விதுரன்} மன்னனை {திருதராஷ்டினை} அடைந்ததும், அம்பிகையின் மகனான பெரும் சக்தி கொண்ட திருதராஷ்டிரன், அவனிடம் {விதுரனிடம்}, "எனது நற்பேறாலேயே, ஓ விதுரா, பாவங்களற்ற நீ, அறநெறிகள் அறிந்த நீ என்னை நினைவுகூர்ந்து என்னிடம் வந்திருக்கிறாய்! மேலும், ஓ பாரத குலத்தின் காளையே {விதுரனே}, நீ இல்லாத நிலையில், இரவும் பகலும் தூக்கமற்று, பூமியில் தொலைந்து போனவனாகத் தான் நான் இருந்தேன்" என்றான் {திருதராஷ்டிரன்}.

பிறகு மன்னன் {திருதராஷ்டிரன்} விதுரனைத் தனது மடியில் அமர்த்தி, அவனது {விதுரனது} தலையை முகர்ந்து பார்த்து, "நான் உச்சரித்த வார்த்தைகளுக்காக என்னை நீ மன்னித்துவிடு, ஓ பாவங்களற்றவனே" என்றான். விதுரன், "ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நான் உம்மை மன்னித்துவிட்டேன். நீர் எனக்கு மூத்தவர், எனது உயர்ந்த மரியாதைக்குரியவர்! நான் உம்மைக் காணும் விருப்பத்திலேயே திரும்பி வந்தேன். அனைத்து அறம்சார்ந்த மனிதர்களும், ஓ மனிதர்களில் புலியே, (உள்ளுணர்வால்) துயரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, இது அரிதான கருத்துகளின் விளைவே! (பாண்டவர்களுக்குச் சாதகமான எனது பாகுபாடு இந்தக் காரணத்தினாலேயே உண்டானது). ஓ பாரதா {திருதராஷ்டிரா}, உமது மகன்களும், பாண்டுவின் மகன்களைப் போல எனக்கு அன்பானவர்களே. ஆனால் பின்னவர்கள் {பாண்டவர்கள்} இப்போது துயரத்தில் இருக்கின்றனர். ஆகையால் எனது இதயம் அவர்களையே விரும்புகிறது" என்றான் {விதுரன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த இரு சிறப்புமிக்க சகோதரர்களான விதுரனும், திருதராஷ்டிரனும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கோரும் பேச்சைப் பேசி, தங்களை பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக உணர்ந்தனர்.