What use of harsh words | Vana Parva - Section 34 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரன் தனது சபதத்தை விடமுடியாது என்று சொல்வது; சபதத்தின் முடிவுக்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்று பீமனிடம் சொல்வது...
வைசம்பாயனர் சொன்னார் "பீமசேனனால் இப்படிச் சொல்லப்பட்ட, உண்மைக்குத் தன்னை உறுதியாக அர்ப்பணித்திருந்த, உயர் ஆன்ம மன்னனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} பொறுமையுடன் இருந்து சில கணம் பொறுத்து, "ஓ பாரதா {பீமா}, சந்தேகமற இவையெல்லாம் உண்மையே. அம்பு போன்ற உனது வார்த்தைகளால் துளைத்து என்னைச் சித்திரவதைச் செய்யும் உன்னை என்னால் நிந்திக்க முடியாது. எனது முட்டாள்தனத்தால் மட்டுமே இந்தப் பேரிடர் உங்களுக்கு வந்திருக்கிறது. திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} நாட்டையும் அரசுரிமையையும் பறிக்க விரும்பியே நான் பகடை வீச முற்பட்டேன். அதனால்தான், தந்திரம் கொண்ட சூதாடியான சுபலனின் மகன் {சகுனி}, சுயோதனன் {துரியோதனன்} சார்பாக என்னை எதிர்த்து விளையாடினான்.
மலைநாட்டுக்காரனான {காந்தார நாட்டுக்காரனான} சகுனி, ஏய்ப்பதில் மிகவும் தந்திரம் மிக்கவன். எந்த யுக்தியும் தெரியாமல் சபை நடுவே நான் பகடை வீசினேன். அவன் {சகுனி} தந்திரமாக என்னை வீழ்த்திவிட்டான். அதனாலேயே, ஓ பீமசேனா, நாம் இந்தப் பேரிடரில் மூழ்கினோம். சகுனியின் விருப்பத்திற்கேற்றபடி பகடைகள் இரட்டைப் படையாகவும், ஒற்றைப்படையாகவும் விழுவதைப் பார்த்தாவது நான் எனது மனதை அடக்கியிருக்க வேண்டும். இருப்பினும், கோபம் ஒரு மனிதனின் பொறுமையை விரட்டிவிடுகிறது. ஓ குழந்தாய் {பீமா}, ஆணவம், தற்பெருமை, கர்வம் ஆகியவற்றின் வசமாக இருக்கும்போது மனதை கட்டுக்குள் வைக்க முடியவில்லை.
ஓ பீமசேனா, நீ பயன்படுத்திய வார்த்தைகளுக்காக நான் உன்னை நிந்திக்கவில்லை. இவ்விதம் நமக்குக் நடக்க வேண்டியது முன்பே விதிக்கப்பட்டது என்றுதான் நான் கருதுகிறேன். திருதராஷ்டிரன் மகனான மன்னன் துரியோதனன் நமது நாட்டை விரும்பி, நம்மை துன்பத்திலும் அடிமைத்தனத்திலும் தள்ளியபோது, திரௌபதியே நம்மைக் காத்தாள். மீண்டும் பகடை விளையாட சபைக்கு அழைக்கப்பட்ட போது, அனைத்து பாரதர்கள் முன்னிலையிலும், திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பந்தயப் பொருள் குறித்து என்ன சொன்னான் என்பதை நீயும் அறிவாய் அர்ஜுனனும் அறிவான்.
துரியோதனன் "ஓ இளவரசே, அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, (வீழ்த்தப்பட்டால்) நீ உனது அனைத்து தம்பிகளுடன், அனைவரும் அறியும்படி பனிரெண்டு {12} வருடங்களுக்கு நீ தேர்ந்தெடுக்கும் கானகத்தில் வாழ வேண்டும். பதிமூன்றாவது {13வது} வருடத்தை தலைமறைவாகக் கழிக்க வேண்டும். அந்தக் கடைசி காலத்தில், பாரதர்களின் ஒற்றர்கள் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களைக் கண்டுபிடித்து விட்டால், நீ மீண்டும் கானகத்தில் அதே அளவு காலம் வாழ வேண்டும். மேலும் கடைசி வருடத்தை தலைமறைவாக வாழ வேண்டும். இது குறித்து சிந்தித்து அதை சபதமாக ஏற்றுக் கொள். {துரியோதனனாகிய} என்னைப் பொறுத்தவரை, எனது ஒற்றர்களைக் குழப்பி அவர்களால் கண்டுபிடிக்க முடியாதவாறு நீங்கள் இருந்தீர்களானால், ஓ பாரதா, ஐந்து நதிகள் பாயும் இந்த நாடு மீண்டும் உனதாகும் நான் இந்தக் குருக்களின் சபையில் சத்தியம் செய்கிறேன். அதே போல, ஓ பாரதா, உன்னால் நான் வீழ்த்தப்பட்டால், நாங்கள் அனைவரும், எங்கள் செல்வங்களைத் துறந்து, அதே காலத்திற்கு, அதே விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வோம்." என்று சொன்னான் {துரியோதனன்}.
துரியோதனன் "ஓ இளவரசே, அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, (வீழ்த்தப்பட்டால்) நீ உனது அனைத்து தம்பிகளுடன், அனைவரும் அறியும்படி பனிரெண்டு {12} வருடங்களுக்கு நீ தேர்ந்தெடுக்கும் கானகத்தில் வாழ வேண்டும். பதிமூன்றாவது {13வது} வருடத்தை தலைமறைவாகக் கழிக்க வேண்டும். அந்தக் கடைசி காலத்தில், பாரதர்களின் ஒற்றர்கள் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களைக் கண்டுபிடித்து விட்டால், நீ மீண்டும் கானகத்தில் அதே அளவு காலம் வாழ வேண்டும். மேலும் கடைசி வருடத்தை தலைமறைவாக வாழ வேண்டும். இது குறித்து சிந்தித்து அதை சபதமாக ஏற்றுக் கொள். {துரியோதனனாகிய} என்னைப் பொறுத்தவரை, எனது ஒற்றர்களைக் குழப்பி அவர்களால் கண்டுபிடிக்க முடியாதவாறு நீங்கள் இருந்தீர்களானால், ஓ பாரதா, ஐந்து நதிகள் பாயும் இந்த நாடு மீண்டும் உனதாகும் நான் இந்தக் குருக்களின் சபையில் சத்தியம் செய்கிறேன். அதே போல, ஓ பாரதா, உன்னால் நான் வீழ்த்தப்பட்டால், நாங்கள் அனைவரும், எங்கள் செல்வங்களைத் துறந்து, அதே காலத்திற்கு, அதே விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வோம்." என்று சொன்னான் {துரியோதனன்}.
அந்த இளவரசனால் {துரியோதனனால்} அப்படிச் சொல்லப்பட்டதும், நான் அனைத்து குருக்களுக்கும் மத்தியில் "அப்படியே ஆகட்டும்'' என்றேன். அந்த இழிந்த விளையாட்டு அதன்பிறகு தொடங்கியது. நாம் வீழ்த்தப்பட்டு நாடு கடத்தப்பட்டோம். அதனாலேயே நாம் பல வனங்களில் துயரத்துடனும், அசௌகரியத்துடனும் சுற்றி வருகிறோம். எனினும் திருப்தியடையாத சுயோதனன் {துரியோதனன்} கோபத்திற்குத் தன்னைக் கொடுத்து, நமது இடரைக் கண்டு அனைத்து குருக்களையும் மகிழ்ச்சி தெரிவிக்க வைத்தான். நல்லோர் முன்னிலையில் இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் நுழைந்த பிறகு, பூமியில் உள்ள நாட்டிற்காக யார்தான் அந்த ஒப்பந்தத்தை உடைக்க முடியும்?
ஒரு மரியாதைக்குரிய மனிதனுக்கு, ஒப்பந்தத்தை மீறி அரசை அடைவதை விட மரணமே மேலானது என்று நான் நினைக்கிறேன். அந்த விளையாட்டின் போது, *நீ எனது கரங்களை எரிக்க விரும்பினாய். அர்ஜுனனால் நீ தடுக்கப்பட்டு, உனது கரங்களையே பிசைந்து நின்றாய். நீ விரும்பியதைச் செய்திருந்தாயானால், இந்தப் பேரிடர் நம்மேல் விழுந்திருக்குமா? ஓ பீமா, உனது வீரத்தை உணர்ந்த நீ, இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னரே ஏன் அதைச் சொல்லவில்லை? ஏற்ற சபதத்தினால் துயரில் மூழ்கி, நேரமும் கடந்து பிறகு, என்னிடம் இத்தகு கடும் வார்த்தைகள் பேசி என்ன பயன்?
ஓ பீமா, திரௌபதி அப்படித் துன்பப்படுத்தப்பட்டதைக் கண்டும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்பதுதான் எனது பெரும் கவலை. நான் ஏதோ விஷ பானத்தை அருந்தியதைப் போல எனது இதயம் எரிகிறது. இருப்பினும் குரு வீரர்களுக்கு மத்தியில் சபதமேற்ற பிறகு, என்னால் அதை மீற முடியாது. விதைகளைத் தூவியவன் அறுவடைக்காகக் காத்திருப்பது போல, ஓ பீமா, பொறுத்திரு. நமது சிறந்த நாட்கள் மீண்டும் வரும். முதலில் காயப்பட்டவன், எதிரிகள் கனிகளுடனும் மலர்களுடன் இருப்பதை அறிந்து, அவனைத் தனது வீரத்தால் பழிவாங்குவது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வீரன் சாகாப்புகழடைகிறான். அப்படிப்பட்ட மனிதன் பெரும் செழிப்பை அடைகிறான். அவனது எதிரிகள் அவனுக்கு தலைவணங்கி, இந்திரனைச் சுற்றி பாதுகாப்புக்காக நிற்கும் தேவர்களைப் போல, நண்பர்கள் அவனைச் சூழ்ந்து நிற்பார்கள்.
ஆனால், ஓ பீமா, எனது சத்தியம் பொய்யாகாது என்பதை அறிந்து கொள். நான் அறத்தை உயிரினும், தேவத்தன்மையினும் மேலாகக் கருதுகிறேன். நாடு, மகன்கள், புகழ், செல்வம் ஆகியவை அனைத்தும் உண்மையின் {சத்தியத்தின்} பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது." என்றான் {யுதிஷ்டிரன்}.
***********************************************************************
*நீ எனது கரங்களை எரிக்க விரும்பினாய்.
மேலும் பார்க்க கீழே சொடுக்கவும்:
மானம் காத்த மாயவன் | சபா பர்வம் - பகுதி 67அ
பீமன் சொன்னான் "ஓ யுதிஷ்டிரரே, சூதாடிகளின் இல்லத்தில் தளர்ந்த நடத்தை கொண்ட பல பெண்கள் இருந்தாலும், அவர்கள்கூட அப்பெண்கள் மீது கொண்டிருக்கும் அன்பால் பந்தயப் பொருளாக வைக்கமாட்டார்கள்.
இருப்பினும், திரௌபதியைப் பந்தயமாக வைத்த உமது செயல் பெரிதும் முறையற்றது என நான் கருதுகிறேன். இந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} இப்படி நடத்தப்படுவதற்குத் தகுதியானவள் கிடையாது. அவள் காரணமாகவே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது கோபம் உம்மீது விழுகிறது. **நான் அந்த உமது கரங்களை எரித்துவிடுகிறேன். சகாதேவா, கொஞ்சம் நெருப்பைக் கொண்டு வா**" என்றான். {இந்த வரிகளை பாரதியாரின் வார்த்தைகளில்- பாரதியாரின் பாஞ்சாலி சபததில் Footnoteல் பாருங்கள்}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.