இந்தப் பகுதியில் சந்தனு இறப்பது, சித்திராங்கதன் அரியணை ஏறுவது, சித்திராங்கதன் கந்தர்வனால் கொல்லப்படுவது. விசித்திரவீரியனை அரியணையில் அமர்த்துவது ஆகியன வருகின்றன.
*********************************************************************************
முதற்கனல்-6 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவு...
சந்தனுவின் மைந்தர்கள் | ஆதிபர்வம் - பகுதி 101- http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section101.html
*********************************************************************************
1. முழுமஹாபாரதத்தில் //விசித்திரவீரியன் பருவம் அடைவதற்கு முன்னரே, மன்னன் சந்தனு, தவிர்க்க முடியாத காலத்தின் தலையீடுகளை உணர்ந்தான். சந்தனு சொர்க்கத்திற்கு உயர்ந்த பின்னர், பீஷ்மன் தன்னை சத்தியவதியின் தலைமையின் கீழ் நிறுத்தி, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனை அரியணையில் ஏற்றினான்.// என்று இருப்பது
வெண்முரசில் //ஃபால்குன மாதம் விசாக நட்சத்திரத்தில் மழைக்கால இரவின் நான்காம் சாமத்தில் முதியமன்னர் சந்தனு உயிர்துறந்தார். அவரது உடல்நிலையை அறிந்த மக்களெல்லாம் ஊர்மன்றுகளிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி நின்று அரண்மனைக்கோட்டைமுகப்பின் வெண்கலமணியாகிய காஞ்சனத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். வாத்தியங்களை தாழ்த்திவைத்து சூதர்கள் சோர்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது வெறிமின்னும் கண்களும் சடைவிழுதுகள் தொங்கும் தோள்களும் புழுதியும் அழுக்கும் படிந்த உடலுமாக பித்தன் ஒருவன் கோட்டைவாசலைத் தாண்டி ஊருக்குள் நுழைந்தான். கண்டாமணியை நோக்கி கூடியிருந்த மக்கள் நடுவே அவன் வந்து நின்றபோது அவனுடைய விசித்திரமான தோற்றத்தாலும் சைகைகளாலும் மக்கள் விலகி நின்று கவனிக்கத்தொடங்கினர்.// என்று விரிவாகவே இருக்கிறது {இச்செய்தி வேறு புராணங்களில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம்}.
2. வெண்முரசில் //புடைத்த தசைநார்களும் நீலநரம்புகளும் அசையும் உடல் கொண்ட அந்த அழகனை அள்ளியணைக்க இருகைகளையும் விரித்து முன்னால் குவிந்தான். நீருக்குள் இருந்த சித்ராங்கதன் என்னும் கந்தர்வன் அவனை அணைத்து இழுத்துக்கொண்டு ஆழத்துக்குள் புகுந்துகொண்டான்.// என்று வருவது
முழுமஹாபாரதத்தில் //சித்திராங்கதன் எதிரி மன்னர்களை எல்லாம் அழித்து, தனக்கு நிகர் யாரும் இல்லை என்று உணர்ந்தான். தன்னால் மனிதர்களையும், அசுரர்களையும், ஏன் தேவர்களையும் வெல்ல முடியும் என்று நினைத்த சித்திராங்கதன், பெரும் பலம் வாய்ந்த மன்னனான கந்தர்வ மன்னனைப் போருக்கு அழைத்தான். பெரும் பலசாலிகளான அந்த கந்தர்வனும், குருபரம்பரையின் முன்னவனும் குருக்ஷேத்திரத்தில் உக்கிரமாக போர் செய்தனர். அந்தப் போர் சரஸ்வதி நதிக்கரையில் மூன்று முழு வருடங்களுக்கு உக்கிரமாக நடந்தது. அந்த பயங்கரப் போரில் அடர்ந்த கணைகள் மழையைப் போலப் பொழிந்தன. அவர்களிருவரில் அதிக தந்திரம் கொண்ட கந்தர்வன் குருக்களின் இளவரசனைக் கொன்றான். மனிதர்களில் முதன்மையான, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனைக் கொன்றுவிட்டு கந்தர்வன் மேலுலகம் சென்றான். ஓ மன்னா, மனிதர்களில் புலி போன்ற பெரும் வீரமிக்க சித்திராங்கதன் கொல்லப்பட்ட பிறகு, சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், அவனது ஈமக்கடன்களை முடித்து, பெரும் சக்தி கொண்ட விசித்திரவீரியன் சிறுவனாக இருந்த போதே அவனை குருக்களின் அரியணையில் அமர்த்தினான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section101.htm// என்று வருகிறது.
3. சித்திராங்கதன் தன் பெயர் கொண்ட கந்தர்வனுடனேயே 3 வருடங்கள் தொடர்ச்சியாகப் போரிட்டு மடிந்தான் என்பதுதான் மஹாபாரதச் செய்தி
கந்தர்வனுக்கும் ஒரே பெயர்தான் என்பதால் கிணற்றில் தெரியும் தனது பிம்பத்தைப் பார்த்து விழுந்து இறப்பதாகக் காட்டியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
மேலும் சித்திராங்கதன் குறித்த வர்ணனை அவன் இயல்புக்குமாறாக பெண்ணை விரும்பாது ஆணை விரும்புபவனாகச் சித்தரிக்கப் படுகிறதோ என்றும் நினைக்கிறேன். ஆனால் அதற்கு புராண ஆதரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இந்தப் பதிவில் ஹஸ்தி மன்னன், யானைகள், அஸ்தினாபுரத்தின் தோற்றம், பித்தனின் அறிமுகமும், அவன் சொல்லும் வார்த்தைகளும் அழகாக இருக்கின்றன.
இந்தப் பதிவின் ஓவியம் அருமையாக இருக்கிறது. இனி வரும் பதிவுகளில் ஓவியம் குறித்து பாராட்ட வேண்டியத்தில்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொருநாளும் பாராட்டிக் கொண்டிராமல், குறை இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டலாம் என்றிருக்கிறேன்.
இந்தப் பதிவின் ஓவியம் அருமையாக இருக்கிறது. இனி வரும் பதிவுகளில் ஓவியம் குறித்து பாராட்ட வேண்டியத்தில்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொருநாளும் பாராட்டிக் கொண்டிராமல், குறை இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டலாம் என்றிருக்கிறேன்.
இப்பதிவில் நான் ரசித்த வரிகள்...
* மண்ணுலகின் எழில்காண விண்ணவரும் வருவதற்கு அஸ்தினபுரியே முதற்காரணமாக அமைந்தது.
* விடியலின் முதற்கதிர் மண்ணைத் தொட்டு முதல் கூழாங்கல்லை பொன்னாக்கியபோது சூதர்களின் பாடல் முடிந்து தலைக்கோலர் தன் வெண்சங்கை ஊதினார்.
* “தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது” என்று அவன் சந்தனுவைப்பற்றி சொன்னான். “வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” என்று சந்தனுவின் மைந்தர்களான சித்ராங்கதனைப்பற்றியும் விசித்திரவீரியனைப்பற்றியும் சொன்னான்.
* “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார்.
* அந்த துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.