Agastya stopped the growth of Vindhya! | Vana Parva - Section 104| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சூரியனோடு போட்டியிட்டு உயர்ந்த விந்தியம்; விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர்; கடலைக் குடிக்க வேண்டும் என்று தேவர்கள் அகஸ்தியரை வேண்டுவது; அனைவரும் சேர்ந்து பெருங்கடலிடம் செல்லல்...
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், "ஓ பெரும் தவசியே, கோபத்தால் மதியிழந்த விந்தியன் {விந்திய மலை}, ஏன் திடீரெனத் தனது உருவத்தை வளர்த்துக் கொண்டான் என்பதை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்"
அதற்கு லோமசர், "சூரியன், தனது உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் தங்கமாக மின்னும் மலைகளின் ஏகாதிபதியான பெரும் மேருவை வலம் வந்தான். இதைக் கண்ட மலையான விந்தியன் சூரியனிடம், "நீ தினமும் மேருவைச் சுற்றி வலம் வந்து அவனை மதிக்கிறாய். ஓ ஒளியை உண்டாக்குபவனே, என்னையும் அதே போல் நீ வலம் வர வேண்டும்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட சூரியன் அந்தப் பெரும் மலையிடம் {விந்தியனிடம்}, "நான் எனது சுய விருப்பத்தின் பேரில் இந்த மலையை வலம் வந்து மதிக்கவில்லை. இந்த அண்டத்தைக் கட்டியவர்களால் எனது பாதை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது" என்றான் {சூரியன்}.
இதனால் அந்த மலையானவன், சூரியன் மற்றும் சந்திரனின் பாதைகளுக்குத் தடங்கல் செய்ய விரும்பி, பெரும் கோபத்துடன் தனது உருவத்தை வளர்த்தான். அனைத்து தேவர்களும் கூடி மலைகளின் பலம் வாய்ந்த மன்னனான விந்தியனிடம் வந்து அவனது நோக்கத்தில் இருந்து பின்வாங்கச் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவன் அவர்கள் சொன்ன எதையும் கவனிக்கவே இல்லை. பிறகு அந்தத் தேவர்கள் அனைவரும், ஆசிரமத்தில் வாழ்ந்து, தவத்தில் ஈடுபட்டு, அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மனிதர்களில் சிறந்தவரும் அற்புத சக்திகளால் அனைவரையும் விஞ்சி நிற்பவருமான அகஸ்தியரிடம் சென்றனர்.
இதனால் அந்த மலையானவன், சூரியன் மற்றும் சந்திரனின் பாதைகளுக்குத் தடங்கல் செய்ய விரும்பி, பெரும் கோபத்துடன் தனது உருவத்தை வளர்த்தான். அனைத்து தேவர்களும் கூடி மலைகளின் பலம் வாய்ந்த மன்னனான விந்தியனிடம் வந்து அவனது நோக்கத்தில் இருந்து பின்வாங்கச் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவன் அவர்கள் சொன்ன எதையும் கவனிக்கவே இல்லை. பிறகு அந்தத் தேவர்கள் அனைவரும், ஆசிரமத்தில் வாழ்ந்து, தவத்தில் ஈடுபட்டு, அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மனிதர்களில் சிறந்தவரும் அற்புத சக்திகளால் அனைவரையும் விஞ்சி நிற்பவருமான அகஸ்தியரிடம் சென்றனர்.
தேவர்கள் {அகஸ்தியரிடம்}, "மலைகளின் மன்னனான இந்த விந்தியன் கோபம் கொண்டு சூரிய சந்திர பாதைகளையும், நட்சத்திரங்களின் வழிகளையும் அடைத்துக் கொண்டிருக்கிறான். ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {அகஸ்தியரே}, ஓ கொடைகளில் சிறந்தவரே, உம்மைத்தவிர வேறு யாராலும் அவனை {விந்தியனைத்} தடுக்க முடியாது. ஆகையால், அவனை அக்காரியத்தில் இருந்து பின்வாங்கச் செய்யும்" என்று கேட்டுக் கொண்டனர். தேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {அகஸ்தியர்}, அந்த {விந்திய} மலையிடம் சென்றார். அவர் தனது மனைவியுடன் {லோபமுத்ராவுடன்} அந்த இடத்திற்கு வந்து விந்தியன் அருகே சென்று, அவனிடம், :ஓ! மலைகளில் சிறந்தவனே {விந்தியனே}, "ஒரு காரியத்திற்காக நான் தென்னகம் செல்ல விரும்புகிறேன், ஆகையால் நீ எனக்கு ஒரு பாதை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும், நான் திரும்பி வரும்வரை எனக்காக நீ காத்திருக்க வேண்டும். நான் திரும்பி வந்த பிறகு, ஓ மலைகளின் மன்னா, நீ உனது உருவத்தை உனக்கு விருப்பப்பட்ட அளவுக்குப் பெருக்கிக் கொள்" என்றார். ஓ எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, கச்சிதமான இந்த ஒப்பந்தத்தை விந்தியனிடம் ஏற்படுத்திக் கொண்ட வருணனின் மகன் {அகஸ்தியர்) இதுநாள் வரை தென்னகத்தில் இருந்து திரும்பவில்லை. அகஸ்தியரின் சக்தியால் விந்தியன் மேலும் வளர முடியவில்லை என்ற இக்கதையை நீ கேட்டுக் கொண்டபடி சொல்லிவிட்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்ட தேவர்கள் எப்படிக் காலகேயர்களைக் கொன்றார்கள் என்பதைக் கேள்.
தேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட மித்ரா வருண மைந்தன் அகஸ்தியர், "எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள்? நீங்கள் என்னிடம் என்ன வரம் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார். இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், அந்தப் புனிதரிடம் {அகஸ்தியரிடம்}, "ஓ பெருமைவாய்ந்தவரே, பெருங்கடலைக் குடிக்கும் பெரும் சாதனையை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்கிறோம், பிறகு தேவர்களுக்கு எதிரிகளான காலகேயர்களையும் அவர்களைத் தொடர்பவர்களையும் எங்களால் கொல்ல முடியும்" தேவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தவசி "அப்படியே ஆகட்டும், மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் காரியத்தை நீங்கள் விரும்பியவாறே செய்கிறேன்" என்றார்.
ஓ அற்புதமான வாழ்வு வாழ்பவனே {யுதிஷ்டிரனே}, இப்படிச் சொன்ன அவர் {அகஸ்தியர்}, தவப் பயிற்சியில் பழுத்த முனிவர்களுடனும் தேவர்களுடனும் சேர்ந்து ஆறுகளின் தலைவனான கடலை நோக்கி சென்றார். மனிதர்கள், பாம்புகள், தெய்வீக கலைஞர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், பெரும் தவசிகள் ஆகியோர் அந்த அற்புதமான நிகழ்வைக் காண விரும்பி அவரைத் தொடர்ந்து சென்றனர். பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து பரிதாபமாகக் கர்ஜித்துக் கொண்டும் அலைகளை அசைத்து ஆடிக் கொண்டும், தென்றல் நிறைந்தும், நுரை தள்ளிச் சிரித்தும், குகைகளின் அருகே நீரால் அடித்தும், வித்தியாசமான வகைகளான சுறாக்களாலும், அடிக்கடி வந்து போகும் பல்வேறு பறவைகளாலும் நிறைந்திருந்த அந்தப் பெரும் கடலின் அருகில் வந்தனர். அகஸ்தியர், தெய்வீகக் கலைஞர்கள், பெரும் பாம்புகள், பெரும் கொடைகள் கொண்ட தவசிகள் ஆகியோருடன் தேவர்கள் அந்த மகத்தான நீர்க்கழிவை {கடலை} அடைந்தனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.