Bhima offered to bear all! | Vana Parva - Section 140 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பீமன், திரௌபதி, சகாதேவன் மற்றும் பலரைத் திரும்பிச் செல்லுமாறு யுதிஷ்டிரன் கேட்டுக் கொள்வது; கடக்க முடியாத இடங்களில் திரௌபதியையும், நகுல சகாதேவனையும் தான் சுமப்பதாக பீமன் சொல்வது; நான் நடப்பேன் என்று திரௌபதி சொல்வது; அர்ஜுனனை நினைத்து யுதிஷ்டிரன் வருந்துவது...
யுதிஷ்டிரன், "ஓ! விருகோதரா {பீமா}, இந்த இடத்தில் பலமும் சக்தியும் வாய்ந்த கண்ணுக்குத் தெரியாத ஆவிகள் இருக்கின்றன. எனினும், நாம் அவற்றை நமது தவம் மற்றும் அக்னிஹோத்திரங்களின் பலன்களால் அவற்றைக் கடந்து செல்லலாம். ஓ! குந்தியின் மகனே {பீமா}, ஆகையால், நீ உனது ஆற்றல்களைப் பெருக்கி, பசி மற்றும் தாகத்தைப் போக்கு. மேலும் ஓ! விருகோதரா {பீமா} உனது வலிமையையும் புத்திசாலித்தனத்தையும் அடைய நடவடிக்கை எடு.
ஓ! குந்தியின் மகனே {பீமனே}, அந்தத் தவசி (லோமசர்) கைலாச மலையைக் குறித்து என்ன சொன்னார் என்பதைக் கேட்டாய். எனவே, கவனமாகச் சிந்தித்த பிறகு, இந்த இடத்தைக் கிருஷ்ணை {திரௌபதி} எப்படிக் கடப்பாள் என்பதை உறுதி செய். அல்லது ஓ! அகன்ற கண் கொண்ட பலம்வாய்ந்த பீமா, நீ சகாதேவனையும், நமது அனைத்து தேரோட்டிகளையும், சமையற்காரர்களையும், பணியாட்களையும், தேர்களையும், குதிரைகளையும், பயணத்தால் களைப்படைந்திருக்கும் அந்தணர்களையும் இங்கிருந்து அழைத்துச் செல். நானும் நகுலனும் கடும் தவங்களைப் பயிலும் தவசியான லோமசருடன் நோன்புகள் நோற்று, அதிகச் சுமையில்லாதவர்களாக முன்னேறுகிறோம். நீ எனது வருகையை எதிர்பார்த்து, எச்சரிக்கையுடன் கங்கையின் தோற்றவாயில், திரௌபதியைப் பாதுகாத்துக் கொண்டு நான் வரும் வரை காத்திரு" என்றான்.
ஓ! குந்தியின் மகனே {பீமனே}, அந்தத் தவசி (லோமசர்) கைலாச மலையைக் குறித்து என்ன சொன்னார் என்பதைக் கேட்டாய். எனவே, கவனமாகச் சிந்தித்த பிறகு, இந்த இடத்தைக் கிருஷ்ணை {திரௌபதி} எப்படிக் கடப்பாள் என்பதை உறுதி செய். அல்லது ஓ! அகன்ற கண் கொண்ட பலம்வாய்ந்த பீமா, நீ சகாதேவனையும், நமது அனைத்து தேரோட்டிகளையும், சமையற்காரர்களையும், பணியாட்களையும், தேர்களையும், குதிரைகளையும், பயணத்தால் களைப்படைந்திருக்கும் அந்தணர்களையும் இங்கிருந்து அழைத்துச் செல். நானும் நகுலனும் கடும் தவங்களைப் பயிலும் தவசியான லோமசருடன் நோன்புகள் நோற்று, அதிகச் சுமையில்லாதவர்களாக முன்னேறுகிறோம். நீ எனது வருகையை எதிர்பார்த்து, எச்சரிக்கையுடன் கங்கையின் தோற்றவாயில், திரௌபதியைப் பாதுகாத்துக் கொண்டு நான் வரும் வரை காத்திரு" என்றான்.
அதற்குப் பீமன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பரதகுலத்தோன்றலே {யுதிஷ்டிரரே}, இந்த அருளப்பட்ட இளவரசி {திரௌபதி}, துன்பத்தாலும் துயரத்தாலும் புண்பட்டுப் பாதிக்கப்பட்டிருந்தாலும், வெண்குதிரைகளைக் கொண்டவனைக் {அர்ஜுனனைக்} காணும் நம்பிக்கையில் எளிதாக முன்னேறுவாள். போரில் பின்வாங்காத உயர் ஆன்ம அர்ஜுனனைக் காணாது, நீர் அடையும் மனவருத்தம் மிகப்பெரியதே. ஓ! பரதரே {யுதிஷ்டிரரே}, நீர் என்னையோ, சகாதேவனையோ, கிருஷ்ணையையோ {திரௌபதியையோ} காணவில்லையென்றால் உமது மனவருத்தும் நிச்சயம் இன்னும் அதிகரிக்கும். நமது பணியாட்களுடனும், தேரோட்டிகளுடனும், சமையற்காரர்களுடனும், உமது கட்டளையின் பேரில் செல்லும் இன்னும் மற்றவர்களுடனும் அந்தணர்கள் திரும்பட்டும். ராட்சசர்களால் பாதிக்கப்பட்டும், எவரும் அணுக முடியாத இந்த முரட்டுத்தனமான மலைப்பாங்கான பகுதிகளில் உம்மை விட்டுவிட்டு நான் செல்ல மாட்டேன். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, உயர்ந்த நற்பேறு பெற்ற இந்த இளவரசி {திரௌபதி}, தனது தலைவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறாள். ஆகையால் நீரில்லாமல் அவள் வரமாட்டாள். சகாதேவன் எப்போதும் உமக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறான், அவனும் தனது பாதச்சுவடுகளைத் தேடி பின்வாங்க மாட்டான். அவனது மனநிலையை நான் அறிவேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி, நாங்கள் அனைவரும் சவ்யசச்சினைக் {அர்ஜுனனைக்} காண ஆவலுடன் இருக்கிறோம். ஆகையால் நாம் அனைவரும் ஒன்றாகவே செல்லலாம். நமது தேர்கள் மூலமாகப் பல குகைகளையுடைய இந்த மலையை நாம் அடைய முடியவில்லையென்றால், கால்நடையாகச் செல்லலாம். ஓ மன்னா, நீர் வருந்தாதீர், நான் பாஞ்சாலன் மகளை {திரௌபதியை}, அவள் நடக்க இயலாத பகுதிகளில் தூக்கிக் கொள்வேன். ஓ மன்னா, நான் இதுகுறித்துத் தீர்மானித்து விட்டேன். ஆகையால் உமது மனம் கவலை கொள்ள வேண்டாம். கடக்க முடியாத பகுதிகளில் தங்கள் தாயின் மகிழ்ச்சிக்குக் காரணமான இந்த இளம் உடல் கொண்ட இரட்டை வீரர்களையும் {நகுல சகாதேவர்களையும்} நான் சும்பபேன்" என்றான் {பீமன்}.
யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "ஓ பீமா, சிறப்புமிக்கப் பாஞ்சாலியையும், இந்த இரட்டையர்களையும் சுமப்பதாக நீ பேசுவதால், உனது பலம் அதிகரிக்கட்டும். நீ அருளப்பட்டிரு. இத்தகு வீரம் வேறு எந்த ஒரு மனிதனிடமும் கிடையாது. உனது பலம், புகழ், தகுதி, மதிப்பு ஆகியவை பெருகட்டும்! ஓ நீண்ட கரமுடையவனே, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்}, நமது தம்பிகளான இரட்டையர்களையும் சுமக்க முன்வருவதால், உனக்குக் களைப்போ தோல்வியோ எப்போதும் ஏற்படாது" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு அழகான கிருஷ்ணை {திரௌபதி} புன்னகையுடன், "ஓ பாரதக் குலத்தோன்றலே {யுதிஷ்டிரரே}, என்னால் நடக்க முடியும். எனவே நீ என்னைக் குறித்து வருத்தப்படாதீர்" என்றாள்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "கந்தமாதன மலையை அடைவது ஒருவரின் தவத்தால் மட்டுமே முடியும். எனவே, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, நாம் அனைவரும் தவம்பயில்வோம். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நகுலா, சகாதேவா, பீமசேனா, ஓ குந்தியின் மகன்களே {பாண்டவர்களே} நீங்களும் நானும் வெண்குதிரைகளைக் கொண்டவனைக் {அர்ஜுனனைக்} காண்போம்" என்றார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே தங்களுக்குள் பேசிக் கொண்டு, சுபாகுவின் அழகான பரந்த நாட்டைக் கண்டனர். இமயத்தின் அருகில் இருந்த அந்த நாட்டில் குதிரைகளும் யானைகளும், கிராதர்களும், தங்கணர்களும், நூற்றுக்கணக்கான புளிந்தர்களையும் {குளிந்தர்கள்} இருந்தனர். அந்தப் பகுதி தேவர்கள் அடிக்கடி வரும்பகுதியாகவும், அற்புதங்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தது. புளிந்தர்களுக்குத் தலைவனான மன்னன் சுபாகு, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து வணங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றான். இப்படி மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, வசதியாக அந்த இடத்தில் தங்கிய பிறகு, ஆகாயத்தில் பளிச்சென மின்னிய இமய மலையை நோக்கிய பயணத்தை அவர்கள் தொடர்ந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, தங்கள் பணியாட்களான இந்திரசேனன் மற்றும் பிறரையும், சமையற்காரர்களையும், கண்காணிப்பாளர்களையும், திரௌபதியின் பணியாட்களையும் மற்றும் அனைத்து செல்வங்களையும் அந்தப் பெரும் ரதவீரர்களான குருக்களின் மைந்தர்கள் புளிந்தர்களின் தலைவனிடம் {சுபாகுவிடம்} ஒப்படைத்துவிட்டு, அந்நாட்டில் இருந்து புறப்பட்டு, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} எச்சரிக்கையாக முன்னேறினர். அவர்கள் அனைவரும் அர்ஜுனனைக் காணும் நோக்கத்தோடு மகிழ்ச்சியாகச் சென்றனர்.
யுதிஷ்டிரன் சொன்னான், "ஓ! பீமசேனா, ஓ! பாஞ்சாலி, இரட்டையர்களே எனது வார்த்தைகளைக் கேளுங்கள். கடந்த பிறவிகளில் செய்யப்பட்ட செயல்கள் (அதற்குண்டான பலனைக் கொடுக்காமல்) அழிந்து போவதில்லை. பாருங்கள்! எப்படிப்பட்ட நாம் இப்படிக் கானகவாசிகளானோம். தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} காண்பதற்காகக் களைத்துப் போய்த் துயரத்தில் இருக்கும் நாம், ஒருவரை ஒருவர் தாங்கிக் கொண்டு, இந்தக் கடக்கமுடியாத இடங்களைக் கடப்போமாக. பஞ்சுப் பொதியை எரிக்கும் நெருப்பு போல இதுவே என்னை எரிக்கிறது. ஓ வீரா {பீமா}, நான் எனது பக்கத்தில் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணவில்லை. நான் எனது தம்பிகளுடன் அவனைக் காண்பதற்காகக் கானகத்தில் வசித்து வருகிறேன். யக்ஞசேனிக்கு {திரௌபதிக்கு} ஏற்பட்ட பெருத்த அவமானத்தின் நினைவும் என்னை எரித்துக் கொண்டிருக்கிறது. ஓ! விருகோதரா {பீமா}, வலிமையான வில்லும், ஒப்பற்ற சக்தியும் கொண்டவனும், நகுலனுக்கு மூத்தவனுமான சிறப்புமிக்கப் பார்த்தனை {அர்ஜுனனை} நான் காணவில்லை. ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன்.
உண்மையில் உறுதி கொண்ட வீரனான அர்ஜுனனைக் காண்பதற்காக, கடந்த ஐந்து வருடங்களாக நான் பலதரப்பட்ட தீர்த்தங்களையும், அழகிய கானகங்களையும், தடாகங்களையும் கடந்தேன். இருப்பினும் நான் இன்னும் அவனைச் சந்திக்கவில்லை. ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன். கருநீல நிறமும், நீண்ட கரங்களும், சிம்மம் போன்ற இடுப்பும் கொண்ட குடகேசனை {அர்ஜுனனை} நான் காணவில்லை. ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன்.
ஆயுதங்களை அறிந்தவனும், போரில் நிபுணனும், வில்லாளிகளில் ஒப்பற்றவனுமான குருக்களில் முதன்மையானவனை {அர்ஜுனனை} நான் காணவில்லை.ஓ! விருகோதரா, இதற்காகவே நான் வருந்துகிறேன்.
உத்திரம் நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவனும், பகைவர்களுக்கு மத்தியில் பிரளய கால யமன் போலத் திரிபவனும், மதப்பெருக்குள்ள யானை போன்றவனும், சிங்கம் போன்ற தோள்களை உடையவனும், சக்ரனுக்கு நிகர்த்த வீரமும் சக்தியும் கொண்டவனும், இரட்டையர்களுக்கு {நகுல சகாதேவனுக்கு} மூத்தவனும், வெள்ளைக் குதிரைகள் கொண்டவனும், ஒப்பற்ற வீரனும், பலமான வில்லைக் கொண்டவனும் பிருதையின் {குந்தியின்} மகனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணாமல் நான் துயரத்தில் இருக்கிறேன். ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன்.
குறுகிய மனம் கொண்டவனால் {துரியோதனனால்} அவமதிக்கப்பட்ட போதும் , மன்னிக்கும் இயல்பு கொண்டவன் அவன் {அர்ஜுனன்} நேர்மையானவர்களுக்குப் பாதுகாப்பையும் நன்மையையும் கொடுப்பவன். ஆனால் தீயன செய்ய முயலும் கடினமான நபர்களுக்குத் தனஞ்சயன் {அர்ஜுனன்} கடும் விஷத்தைப் போன்றவனாவான். அவன் இந்திரனைப் போன்றவனாவான்.
ஆயுதங்களை அறிந்தவனும், போரில் நிபுணனும், வில்லாளிகளில் ஒப்பற்றவனுமான குருக்களில் முதன்மையானவனை {அர்ஜுனனை} நான் காணவில்லை.ஓ! விருகோதரா, இதற்காகவே நான் வருந்துகிறேன்.
உத்திரம் நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவனும், பகைவர்களுக்கு மத்தியில் பிரளய கால யமன் போலத் திரிபவனும், மதப்பெருக்குள்ள யானை போன்றவனும், சிங்கம் போன்ற தோள்களை உடையவனும், சக்ரனுக்கு நிகர்த்த வீரமும் சக்தியும் கொண்டவனும், இரட்டையர்களுக்கு {நகுல சகாதேவனுக்கு} மூத்தவனும், வெள்ளைக் குதிரைகள் கொண்டவனும், ஒப்பற்ற வீரனும், பலமான வில்லைக் கொண்டவனும் பிருதையின் {குந்தியின்} மகனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணாமல் நான் துயரத்தில் இருக்கிறேன். ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன்.
குறுகிய மனம் கொண்டவனால் {துரியோதனனால்} அவமதிக்கப்பட்ட போதும் , மன்னிக்கும் இயல்பு கொண்டவன் அவன் {அர்ஜுனன்} நேர்மையானவர்களுக்குப் பாதுகாப்பையும் நன்மையையும் கொடுப்பவன். ஆனால் தீயன செய்ய முயலும் கடினமான நபர்களுக்குத் தனஞ்சயன் {அர்ஜுனன்} கடும் விஷத்தைப் போன்றவனாவான். அவன் இந்திரனைப் போன்றவனாவான்.
அளவில்லா ஆன்மாவும், பெரும் பலமும் கொண்ட பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, பகைவரும் வீழ்ந்து போகும்போது கருணையும் பாதுகாப்பும் அளிப்பவனாவான். அவன் {அர்ஜுனன்} நமக்கு அனைவருக்கும் புகலிடமாவான். அவன் {அர்ஜுனன்} எதிரிகளைப் போரில் நசுக்குவான். அவன் எவ்வளவு நிதியையும் திரட்டும் சக்தி படைத்தவன் . அவனே நமது மகிழ்ச்சிக்குக் காரணமானவன். அவனின் {அர்ஜுனனின்} வீரத்தாலேயே நாம் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இழந்த அத்தனை செல்வத்தையும் அடைந்தோம். ஓ! வீரா {பீமா}, அவனது பலத்தாலேயே மூன்று உலகமும் கொண்டாடும்படியான ஒரு சபா மண்டபத்தைக் கட்டினோம். ஓ! பாண்டுவின் மகனே {பீமா}, வீரத்தில் அந்தப் பல்குனன் {அர்ஜுனன்} வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நிகரானவன், போரில் அவன் ஒப்பற்றவன். இணையில்லாதவன். கார்த்தவீரியனைப் போன்றவன். ஐயோ! ஓ! பீமா நான் அவனைக் காணவில்லை. பராக்கிரமத்தில் அவன் மிகுந்த பலசாலியான சங்கர்ஷணருக்கும் (பலராமன்) வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} நிகரானவன். கரங்கள் மற்றும் ஆன்ம பலத்தில் அவன் புரந்தரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவன். வேகத்தில் அவன் காற்றைப் போன்றவன். கருணையில் அவன் நிலவைப் போன்றவன். கோபத்தில் அவன் யமனைப் போன்றவன்.
ஓ! பலம்வாய்ந்த கரம் கொண்டவனே {பீமா}, மனிதர்களில் போர்க்குணமிக்கப் புலி போன்ற அவனைக் {அர்ஜுனனைக்} காணும் நோக்கத்தோடு நாம் கந்தமாதன மலையை அடைவோம். அங்கே கொண்டாடப்படும் இலந்தை மரத்தின் அருகே நரன் மற்றும் நாராயணரின் ஆசிரமும் இருக்கிறது. அது யக்ஷர்கள் வசிக்கும் இடமாகவும் இருக்கிறது. அந்த மலைகளில் சிறந்த மலையை நாம் காண்போம். கடும் தவம்பயின்று காலாலேயே நடந்து சென்று ராட்சசர்களால் பாதுகாக்கப்படும் குபேரனின் அழகிய தடாகத்திற்குச் செல்வோம். ஓ! விருகோதரா {பீமா} அந்த இடத்தில் நாம் வாகனத்தில் செல்ல முடியாது. ஓ! பரதனின் மகனே {பீமா}, பேராசை கொண்டவர்களோ, கொடுமையானவர்களோ அல்லது எளிதில் கோபம் கொள்பவர்களோ அந்த இடத்தை அடைய முடியாது. ஓ! பீமா, அர்ஜுனனைக் காண்பதற்காகக் கடும் நோன்புகள் கொண்ட இந்த அந்தணர்களுடன் சேர்ந்து நாமும் நமது வாள்களைக் கட்டிக் கொண்டும், விற்களைத் தாங்கிக் கொண்டும் அங்கே செல்வோம். சுத்தமற்றவர்களையே, ஈக்களும், கொசுக்களும், புலிகளும், சங்கங்களும், ஊர்வனவும் சந்திக்கும். ஆனால் சுத்தமானவர்கள் அவற்றைச் சந்திக்க முடியாது. எனவே, நாம் கட்டுக்கோப்பாக, நமது புலன்களில் இருந்து விடுபட்டு, தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காண விரும்பி கந்தமாதன மலைக்குச் செல்வோம்" என்றான் {யுதிஷ்டிரன்}.