The advice of Arshtishena! | Vana Parva - Section 157 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரனிடம் ஆர்ஷ்டிஷேணர் நலம் விசாரிப்பது; பிறகு கைலாச மலையைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு ஆர்ஷ்டிஷேணர் சொல்வது; பிறகு அர்ஜுனன் வரவு வரை தனது ஆசிரமத்திலேயே அவர்கள் தங்கலாம் என்றும் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பாவங்களைத் தவத்தால் எரித்த அவரை {ஆர்ஷ்டிஷேணரை} அணுகிய யுதிஷ்டிரன், தனது பெயரைச் சொல்லி சிரம் தாழ்த்தி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறினான். பிறகு கிருஷ்ணையும் {திரௌபதியும்}, பீமனும், அர்பணிப்புள்ள இரட்டையர்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, அந்த அரசுமுனிக்குச் சிரம் தாழ்த்தி, அவரைச் சூழ்ந்து நின்றனர். பாண்டவர்களின் புரோகிதரான அறம்சார்ந்த தௌமியரும் நோன்பைக் கடைப்பிடிக்கும் அத்தவசியை அணுகினார். அந்த அறம்சார்ந்த முனிவர் {ஆர்ஷ்டிஷேணர்}, குருக்களின் முதன்மையான பாண்டுவின் மகன்களைத் தனது ஞானப்பார்வையால் கண்டு அறிந்தார். அவர் {ஆர்ஷ்டிஷேணர்} அவர்களிடம், "அமருங்கள்" என்றார்.
குருக்களின் தலைவனை {யுதிஷ்டிரனை} முறையாக வரவேற்ற அந்தக் கடும் தவசி, அவன் {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் அமர்ந்த பிறகு அவர்களின் சுக துக்கங்களைக் கேட்டறிந்தார். அவர் {ஆர்ஷ்டிஷேணர்}, "பொய்மையை நோக்கிச் செல்லாமலிருக்கிறாயா?
அறத்தை நோக்கிச் செல்கிறாயா?
ஓ பார்த்தா {யுதிஷ்டிரா}, தாய் தந்தை மீதான உனது கவனம் குறைவடையாமல் பார்த்துக் கொள்கிறாயா?
மேன்மையானவர்களும், முதியவர்களும், வேதங்களை அறிந்தவர்களும் உன்னால் மதிக்கப்படுகிறார்களா?
ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பாவ காரியங்களில் உனது மனத்தைச் செலுத்தாமல் இருக்கிறாயா?
ஓ! குருக்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, நற்செயல் புரிவதும், தீச்செயல் புரியாமல் இருப்பதும் எப்படி என்பதை நீ தெரிந்து கொண்டிருக்கிறாயா? உன்னை நீ மேன்மையாகக் கருதாமல் இருக்கிறாயா? {தற்புகழ்ச்சி செய்யாமல் இருக்கிறாயா?},
பக்திமான்கள் உன்னால் திருப்திசெய்யப்பட்டு மதிக்கப்படுகிறார்களா? காட்டில் வசித்தாலும், அறத்தை மட்டுமே பயில்கிறாயா?
ஓ! பார்த்தா, உனது நடத்தையால் தௌமியர் துயரடையாது இருக்கிறாரா? தானத்திலும், தர்ம காரியங்களிலும், தவத்திலும், சுத்தத்திலும், கபடமற்ற நேர்மையிலும் {candour}, மன்னிப்பளிப்பதிலும் நீ உனது மூதாதையரின் வழக்கங்களைக் கடைப்பிடிக்கிறாயா?
அரசமுனிகள் சென்ற பாதையில் நீயும் செல்கிறாயா?
(தங்கள்) குலத்தில் மகன் பிறந்தால், பித்ரு லோகத்தில் இருக்கும் பித்ருகள், இந்த மகனின் பாவச்செயல்களால் நமக்குத் தீங்கு விளையுமா அல்லது இவனது நற்செயல்களால் நமக்கு நன்மை கிடைக்குமா? என்று எண்ணி சிரிக்கவும், துக்கப்படவும் செய்கிறார்கள். தந்தை, தாய், குரு, அக்னி மற்றும் ஐந்தாவதாகத் தனது ஆன்மா ஆகியவற்றுக்கு அஞ்சலி செலுத்தும் ஒருவன் இரு உலகங்களையும் {பூலோகம் மற்றும் சொர்க்கம்} வெல்கிறான்" என்று சொன்னார் {ஆர்ஷ்டிஷேணர்}.

யுதிஷ்டிரன் {ஆர்ஷ்டிஷேணயரிடம்}, "ஓ! வழிபடத்தகுந்தவரே, நீர் குறிப்பிட்ட கடமைகள் அனைத்தும் அற்புதமானவை. நான் அவற்றை எனது சக்திக்கு சிறந்தவாறு முறையாகவும் சரியாகவும் வெளிப்படுத்துகிறேன்" என்றான்.
ஆர்ஷ்டிஷேணர் {யுதிஷ்டிரனிடம்}, "பர்வசந்திகளின் போது {During Parvas = பௌர்ணமியும் பிரதமையும் சந்திக்கும்போது அல்லது அமாவாசையும் பிரதமையும் சந்திக்கும்போது}, காற்றையும் நீரையும் மட்டும் அருந்தும் முனிவர்கள் இந்த மலைகளிற் சிறந்த மலைக்கு விண் வழியாக வருவார்கள். மலையின் சிகரங்களில் காதல் பாங்கான கிம்புருஷர்கள் தங்கள் காதலிகளுடன் இணைபிரியாமல் இருப்பார்கள்; ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, வெண்பட்டு உடுத்திய பல அப்சரசுகளும், பல கந்தர்வர்களும், அழகான வித்யாதரர்களும் மாலைகள் அணிந்து கொண்டும், பலம்வாய்ந்த நாகர்களும், சுபர்ணர்களும், ஊரகர்களும் பிறரும் இங்கே காணப்படுவார்கள். பர்வசந்திகளின் போது, இம்மலையின் சிகரங்களில் பேரிகைகள், பணவங்கள், சங்கங்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் ஒலிகள் கேட்கும்.
ஓ! பரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இங்கிருந்தபடி நீ அந்த ஒலிகள் அனைத்தையும் கேட்கலாம். அவ்விடத்திற்கு எவ்வகையிலும் செல்ல நீங்கள் எண்ணலாகாது. ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, இதற்கு மேலும் நீங்கள் செல்ல இயலாது. இது தேவர்களின் விளையாட்டிடமாகும். அங்கே செல்வதற்கு மனிதர்களுக்கு அனுமதியில்லை. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, மீறி நடக்கும் எம்மனிதனையும், அச்செயல் மிகச் சிறியதாக இருந்தாலும், இங்கிருக்கும் அனைத்து உயிரினங்களும் பகைக்கும், ராட்சசர்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
இந்தக் கைலாச மலையின் சிகரத்திற்கு அப்பால், தெய்வீக முனிவர்களின் பாதை தென்படுகிறது. யாரும் வெட்கங்கெட்டுப் போய், இதைக் கடந்து சென்றால், இரும்பு சூலங்களாலும், இன்னும் பல ஆயுதங்களாலும் அவனைக் கொன்று போடுவார்கள். ஓ! குழந்தாய், பர்வசந்திங்களின் போது இங்கே மனிதர்களின் தோள்களில் பயணிப்பவனும், அப்சரசுகளால் சூழப்பட்டவனுமான வைஸ்ரவணன் {குபேரன்} பகட்டுடனும் ஆடரம்பரத்துடனும் இருப்பான். ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் தலைவனான அவன் {குபேரன்} சிகரத்தில் அமர்ந்த பிறகு, அனைத்து உயிர்களும் அவனை உதயச் சூரியனைப் போலக் காண்கின்றன. அந்தச் சிகரமே தேவர்கள், தானவர்கள், சித்தர்கள், வைஸ்ரவணன் {குபேரன்} ஆகியோர் விளையாடும் நந்தவனமாகும்.
பர்வசந்திகளின் போது, பொக்கிஷத் தலைவனை {குபேரனை} மகிழ்விக்க எண்ணி கானம் பாடும் தும்புருவின் இனிய குரல் இந்தக் கந்தமாதனம் முழுவதும் கேட்கப்படும். ஓ! குழந்தாய், ஓ! யுதிஷ்டிரா, இங்கே பர்வசந்திகளின் போது, இது போன்ற அற்புதங்களை அனைத்து உயிர்களும் பார்க்கவும், கேட்கவும் செய்கின்றன. ஓ! பாண்டவர்களே, அர்ஜுனனை நீங்கள் சந்திக்கும்வரை சுவைமிக்கக் கனிகளையும், முனிவர்களின் உணவையும் உண்டு இங்கே தங்கிக் கொள்ளுங்கள். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, இங்கே வந்த பிறகு, நீங்கள் எதையும் மதிக்காமல் நம்பிக்கைதுரோகம் செய்யக்கூடாது. ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, இங்கே உங்கள் விருப்பப்படி வாழும்போது, நீ எண்ணியவாறு மாறுதல் அடைந்து, பிறகு உனது கரங்களின் பலத்தால் அடைந்த உலகை நெடுநாள் ஆள்வாய்" என்றார் {ஆர்ஷ்டிஷேணர்}.