ஆதிபர்வம் பகுதி 4 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: அதற்கு தவசிகள் "ஓ லோமஹர்ஷணரின் மகனே {சௌதியே}, எங்களுக்கு கேட்பதில் ஆர்வமுள்ளதையே உம்மிடம் கேட்போம். நீர் ஒவ்வொரு கதையாகச் சொல்வீராக. எங்கள் குருவான சௌனகர், வேள்வித் தீயின் முன் அமர்ந்திருக்கிறார். தேவர்களும், அசுரர்களும் சம்பந்தப்பட்ட கதைகளில், அவரும் தேர்ந்த புலமையுள்ளவர். அவருக்கு மனிதர்கள், நாகர்கள், கந்தர்வர்கள் குறித்த அனைத்து வரலாறுகளும் தெரியும். ஓ சௌதியே! இந்த வேள்வியில் எங்களுக்கெல்லாம் தலைவர் அந்த படித்த பிராமணரே {சௌனகரே}.
அவர் தகுதிவாய்ந்தவர்; தனது உறுதிகளுக்கும் (சத்தியங்களுக்கும்) உண்மையானவர்; ஞானமுள்ளவர்; ஆரண்யகத்திலும், சாத்திரங்களிலும் பண்டிதர், உண்மையைப் பேசுபவர்; அமைதியை விரும்புபவர்; எந்த உயிரையும் துன்புறுத்தாதவர் (அஹிம்சை, புலால் உண்ணாமை); {அவருக்கு} விதிக்கப்பட்டபடி நோன்பிருப்பவர்.
எங்களால் பெரிதும் மதிக்கப்படுபவர், ஆகையால், அவருக்காக {சௌனகருக்காக} காத்திருப்போம். அவர் எப்போது வந்து, தனது மதிப்புள்ள ஆசனத்தில் அமர்கிறாரோ, அப்போது அவர் கேட்பனவற்றிற்கு பதிலளியும்," என்றார்கள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section4.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!