சபா பர்வம் பகுதி 6 | அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: தனது தம்பிகளுடனும், (தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும்) அந்தணர்களில் முதன்மையானவர்களுடனும் (பிரார்த்தனை செய்யும் வகையில்) கரங்கள் கூப்பினான். அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், "அந்தச் சபாமண்டபங்களைக் குறித்து எங்களுக்கெல்லாம் விளக்குங்கள். நாங்கள் நீர் சொல்வதைக் கேட்க விரும்புகிறோம். ஓ அந்தணரே {நாரதரே}, எந்தப் பொருட்களைக் கொண்டு அந்த சபைகள் கட்டப்பட்டிருக்கின்றன? ஒவ்வொன்றின் பரப்பளவு என்ன? அவை ஒவ்வொன்றின் நீளங்களும் அகலங்களும் எவ்வளவு? பெருந்தகப்பனுக்காக அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள்? {அவருக்கு சேவை செய்பவர்கள் யார்?}, தேவர்கள் தலைவன் வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்} விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள்? வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள்? ஓ அந்தண முனிவரே {நாரதரே}, இவை எல்லாவற்றையும் எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து, நீர் விவரிப்பதைக் கேட்க விரும்புகிறோம். உண்மையில் எங்களது ஆவல் அதிகமாக இருக்கிறது", என்றான் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட நாரதர் அவனுக்கு மறுமொழியாக, "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தெய்வீக சபா மண்டங்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக சொல்கிறேன். அனைவரும் கேளுங்கள்," என்றார் {நாரதர்}. see more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section6.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
சபா பர்வம் பகுதி 7 | அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: பராசரர், பர்வதர், சவர்ணி, கலவா, சங்கா, யக்ஞவல்கியா பாலுகி, உத்யலகா, ஸ்வேதகேடு, தண்டியா, பாண்டாயணி, ஹவிஸ்மத், கரிஷ்டா, மன்னன் ஹரிச்சந்திரன்; ஹிருதியன், உதர்ஷண்டில்யா, பராசரியா, கிருஷிவலா, வதஸ்கந்தா, விசாகா, விதாதா, கலா, காராலதண்டா, தஸ்த்ரி, விஸ்வகர்மா, தும்புரு, மேலும் மற்ற முனிவர்கள், சிலர் பெண்கள் மூலம் பிறந்தவர்கள், மற்றவர்கள் காற்றின் மூலம் வாழ்பவர்கள், நெருப்பின் மூலம் வாழ்பவர்கள் ஆகியோர் இடியைத் தாங்கும் உலகங்களின் தலைவன் இந்திரனை சேவிக்கத் தயாராக நிற்கின்றனர். சகாதேவன், சுனிதன், பெரும் ஆன்மத் தகுதியுடைய வால்மீகி, உண்மை பேச்சு கொண்ட சமீகர், சத்தியங்களை நிறைவேற்றும் பிரசேதகர்கள், மேதாதிதி, வாமதேவர், புலஸ்தியர், புலாஹர், கிராது, மருதர், மரீச்சி, பெரும் ஆன்மத்தகுதியுடைய ஸ்தானு, காக்ஷிவத், கௌதமர், தார்கியர், வைஸ்ராவனா, காலகவ்ரிகிய முனிவர், அஸ்ரவ்யர், ஹிரண்மயர், சம்வர்த்தர், தேஹாவ்யர், பெரும் சக்தி கொண்ட விஸ்வக்ஷேனா, கண்வர், கத்யாயணா, ஆகியோரும் ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கர்கியா, கௌசிகா, ஆகியோர் அனைவரும், தெய்வீக நீர்நிலைகள் மற்றும் தாவரங்கள், நம்பிக்கைகள், புத்திசாலித்தனங்கள், கற்றலின் தேவதை, செல்வம், அறம், இன்பம், மின்னல் ஆகியவற்றுக்கு அதிபதிகளும் அங்கே இருந்தனர்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section7.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல
|
-
|
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!