ஆதிபர்வம் பகுதி 5 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: அருள்நிறைந்த பெருமுனிவர் பிருகு {Bhrigu}, தான்தோன்றியாக தன்னாலேயே நிலைத்திருக்கும் பிரம்மாவிடம் (Self Existing - சுயம்புவிடம்) இருந்து ஒரு வருணனின் வேள்வியில் பிறந்தவர். பிருகுவிற்கு சியவனன் {Chyavana} என்று ஒரு மகன் பிறந்தான். அவன்மீது மிகுந்த அன்புடனிருந்தார். சியவனனுக்கு நற்குணமிக்க பிரம்மாதி {Pramati} என்று ஒருவன் பிறந்தான். பிரம்மாதிக்கு தேவலோக நடனமாது கிரிடச்சி {Ghritachi} மூலம் ருரு {Ruru} என்றொரு மகன் பிறந்தான். ருருவுக்கு, பிரம்மத்வாரா {Pramadvara} என்ற தன் மனைவி மூலம் சுனகா {Sunaka} என்றொரு மகன் பிறந்தான். ஓ சௌனகரே! நற்குணமிக்க அவரே உமது மூதாதை. அவர் {சுனகா} தன்னை ஆன்மிகத்திற்கு அர்ப்பணித்திருந்தார். நற்பெயருடன், நீதிமானாக, வேதம் அறிந்தவர்களில் மேம்பட்டவராக, நற்குணத்துடன், உண்மைபேசி தன்னைச் செதுக்கி வைத்திருந்தார்," என்று பதிலுரைத்தார்.
சௌனகர், "ஓ சூத மைந்தனே {சௌதியே}, ஒப்பற்ற பிருகுவின் மைந்தனுக்கு சியவனன் என்று ஏன் பெயர் சூட்டப்பட்டது? எல்லாவற்றையும் சொல்வாயாக!" என்று கேட்டார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section5.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!