சபா பர்வம் பகுதி 8 | அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: அந்தச் சபா மண்டபத்தில், துக்கமோ, வயதால் ஏற்படும் பலவீனமோ, தாகமோ, பசியோ ஏற்படாது. ஏற்றுக் கொள்ள முடியாத எந்தப் பொருளுக்கும் அங்கே இடம் கிடையாது. எந்த வகையான தீய உணர்வுகளும் அங்கே எழாது. தேவர்களாலும், மனிதர்களாலும் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும் அந்த மாளிகையில் உள்ளன. ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரனே}, இனிப்பான, நீர்த்தன்மையுள்ள, ஏற்புடைய, நக்கி, உறிஞ்சி, குடிக்கக்கூடிய ருசியான உணவு வகைகளும், சுவை மிகுந்த இன்பத்துக்குகந்த அனைத்துப் பொருட்களும் அபரிமிதமாக அங்கே இருக்கின்றன. அந்த மாளிகையை அலங்கரிக்கும் மலர் மாலைகளின் நறுமணம் அலாதியானது. அங்கே அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கும் மரங்கள் விரும்பும் கனியைக் கொடுக்கவல்லவை. அங்கே இனிமையான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க குளிர்ந்த மற்றும் வெப்ப நீர்கள் உள்ளன. அந்த மாளிகையில் புனிதம் மிகுந்த அரச முனிகளும், தூய்மை மிகுந்த பிரம்ம முனிவர்களும் மகிழ்ச்சியுடன் காத்திருந்து, விவஸ்வத்தின் மகனான யமனை வழிபடுகின்றனர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section8.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
மேற்க்கண்ட வீடியோ கோப்பில் சபாபர்வப் பகுதியின் எண் தவறாக இருக்கிறது. இருப்பினும் அதில் உள்ள ஒலிப்பதிவு பகுதி 8 தான்.
எம.பி.3-ஆக பதிவிறக்க
சபா பர்வம் பகுதி 9 | அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: வருணனின் தெய்வீக சபை பிரகாசத்தில் இணையற்றதாக உள்ளது. அது நீள அகலங்களில் யம சபையைப் போன்றே உள்ளது. அதன் சுவர்களும், வளைவுகளும் தூய வெள்ளை நிறத்தில் உள்ளன. அது விஸ்வகர்மனால் (தேவ தச்சன்) நீருக்குள் கட்டப்பட்டது. அது சுற்றிலும் அற்புதமான கனிகளையும் மலர்களையும் கொடுக்கவல்ல தங்கத்தாலும் ரத்தினங்களாலும் ஆன மரங்களால் சூழப்பட்டுள்ளது. நீலமும் மஞ்சளும், கருப்பும் கருமையும், வெள்ளையும் சிவப்பும் ஆகிய நிறங்களில் பூங்கொத்துகள் மிகுந்து இருக்கும் பல மரங்கள் அங்கே இருந்தன. அந்த மரங்களில், பல வண்ணங்களில் அழகாக இருக்கும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள், தங்கள் இனிய இசையை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த மாளிகை குளிர்ச்சியாகவும் இல்லாமல், வெப்பமாகவும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சிகரமான சூழ்நிலை கொண்டதாக இருந்தது. வருணனுக்குச் சொந்தமான அந்த சபா மண்டபத்தில் பல இருக்கைகளுடன் கூடிய, பல வெண்ணிற அறைகளும் இருக்கின்றன. அங்கே வருணன் தெய்வீக ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களும், நகைகளும் பூண்டு, தெய்வீக வாசனைப் பொருட்களை மேனியில் தரித்து, தனது ராணியுடன் அமர்ந்திருக்கிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section9.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!