Ravana took away Sita forcibly! | Vana Parva - Section 276 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
மாரீசன் ராவணனுக்குப் புத்தி சொல்வது; ராவணன் மாரீசனை மிரட்டுவது; மாரீசன் மானுரு கொண்டு சீதைக்கு ஆசை காட்டுவது; ராமன் மானைத் துரத்துவது; ராமனால் அடிக்கப்பட்ட மாரீசன் ராமனின் குரலில் கதறுவது; அச்சமுற்ற சீதை ராமனைத் தேடி லட்சுமணனைப் போகச் சொல்வது; போகாத லட்சுமணனை சீதை நிந்திப்பது; லட்சுமணன் சென்றதும் ராவணன் வந்து சீதையைத் தூக்கிச் செல்வது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ராவணன் வருவதைக் கண்ட மாரீசன் அவனை மரியாதையுடன் வரவேற்று, அவனுக்குப் பழங்களும் கிழங்குகளும் கொடுத்தான். ராவணன் இருக்கையில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்த பிறகு, பேச்சில் வல்லவனான மாரீசன், ராவணன் அருகில் அமர்ந்து, பேச்சில் சொல்திறனுடன் அவனிடம் {ராவணனிடம்}, “உன்னுடைய நிறம் இயற்கைக்கு மாறான சாயலைக் கொண்டிருக்கிறதே, ஓ! ராட்சச மன்னா {ராவணனா}, உன் நாட்டில் அனைத்தும் சரியாக இருக்கிறதா? எது உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது? உனது குடிமக்கள் முன்பு போலவே உன்னிடம் பற்றுறுதியுடன் இருக்கிறார்களா? என்ன காரியம் உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது? அது {அக்காரியம்} சாதிப்பதற்கு எவ்வளவு கடினமானதாக இருப்பினும் அதை நிறைவேறிவிட்டதாக அறி" என்றான்.
கோபத்தாலும் அவமானத்தாலும் கொந்தளித்த இதயம் கொண்ட ராவணன், ராமனின் செயல்களைக் குறித்தும், இனி செய்ய வேண்டியவை குறித்தும் அவனிடம் சுருக்கமாகச் சொன்னான். அவனது கதையைக் கேட்ட மாரீசன், “நீ ராமனைத் தூண்டக்கூடாது. நான் அவனது சக்தியை அறிவேன். அவனது கணைகளின் வேகத்தைத் தாங்கும் திறன்மிக்க மனிதன் எவன்? அந்தப் பெரும் மனிதனே {ராமனே}, எனது தற்போதைய துறவு வாழ்க்கைக்குக் காரணமானவன். உனக்குச் சிதைவையும், அழிவையும் தரும் இத்திட்டத்தைத் தீட்டிய தீய மனம் கொண்டவன் எவன்?” என்று சுருக்கமாகவே கேட்டான். அதற்கு ராவணன் கோபத்துடன் மறுமொழி கூறி, நிந்தித்து {மாரீசனிடம்}, “நீ எனது கட்டளைகளுக்குக் கீழ்படியவில்லையென்றால், நிச்சயம் என் கைகளால் இறப்பாய்" என்றான் {இராவணன்}.
பிறகு மாரீசன் {ராவணனிடம்}, “மரணம் தவிர்க்க முடியாதது எனும்போது, மேன்மையானவன் கையால் இறப்பதே சிறந்தது. எனவே, நான் இவன் கேட்டதைச் செய்வேன்" என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். பிறகு அவன் {மாரீசன்}, ராட்சசர்கள் தலைவனிடம் {ராவணனிடம்}, “என்னால் முடிந்த உதவியை நான் உனக்கு நிச்சயம் செய்வேன்" என்றான். பிறகு, அந்தப் பத்துத்தலை ராவணன் அவனிடம் {மாரீசனிடம்}, “தங்கக் கொம்புகளும், தங்கத் தோலும் கொண்ட அழகிய மானின் வடிவம் தாங்கிச்சென்று சீதைக்கு ஆசை காட்டு. அப்படி இருக்கும் உன்னைக் காணும் சீதை, உன்னை வேட்டையாட நிச்சயம் ராமனை அனுப்பிவிடுவாள். பிறகு சீதை எனது ஆளுகையின் கீழ் நிச்சயம் வருவாள். நான் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்வேன். பிறகு, தனது மனைவியின் இழப்பால் வருந்தும் தீய ராமன் நிச்சயம் இறப்பான். இவ்வழியில் நீ எனக்கு உதவி செய்!" என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட மாரீசன், (எதிர்நோக்கியிருக்கும்) தனது ஈமச்சடங்குகளை முடித்துக் கொண்டு {எள்ளும் தண்ணீரும் இறைத்துவிட்டு}, தனக்கு முன் சென்ற ராவணனைத் தொடர்ந்து சோகமான இதயத்துடன் சென்றான். பிறகு, கடும்சாதனைகள் செய்திருந்த ராமனின் ஆசிரமத்தை அடைந்து, இருவரும் முன்பே தீர்மானித்து வைத்திருந்தபடி செயல்பட்டனர். கமண்டலமும் திரிதண்டமும் தரித்த ராவணன், துறவியின் கோலத்தில் மழித்த {மொட்டைத்} தலையுடன் தோன்றினான். மாரீசன் மானின் வடிவம் கொண்டான். அந்தக் கோலத்தில் மாரீசன் விதேக இளவரசியின் {சீதையின்} முன் தோன்றினான். விதியால் உந்தப்பட்ட அவள், மானுக்குப் பின்னே ராமனை அனுப்பிவிட்டாள். அவளை மனநிறைவு கொள்ளச் செய்யும் நோக்கத்துடன், விரைவாகத் தனது வில்லை எடுத்துக் கொண்ட ராமன், அவளை {சீதையைப்} பாதுகாப்பதற்கு லட்சுமணனை விட்டுவிட்டு, மானைத் துரத்திச் சென்றான்.
வில், அம்பறாத்தூணி மற்றும் கூன்வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, உடும்புத் தோலாலான உறையை விரல்களுக்கு அணிந்த ராமன், நட்சத்திர மானைத் [1] தொடர்ந்த ருத்திரனைப் போல, அந்த மானைத் தொடர்ந்து சென்றான். ஒருநேரம் தோன்றுவதும், மறுநேரம் அவனது பார்வையில் இருந்து மறைவதுமாக, அந்த ராட்சசன், வெகுதூரத்திற்கு ராமனைக் கவர்ந்திழுத்துச் சென்றான். கடைசியில், ராட்சசனே மான் என்பதை ராமன் அறிந்த போது, ரகு குலத்தின் அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, தவறாத கணையொன்றை எடுத்து, மானின் உருவம் கொண்டு வந்த அந்த ராட்சசனைக் {மாரீசனைக்} கொன்றான். ராமனின் கணையால் அடிக்கப்பட்ட அந்த ராட்சசன் {மாரீசன்}, ராமனின் குரலைப் பிரதிபலித்து, பெருந்துக்கத்துடன் அழுது, சீதையையும், லட்சுமணனையும் அழைத்தான்.
அந்தத் துன்பக் குரலை விதேக இளவரசி {சீதை} கேட்ட போது, அந்தக் குரல் வந்த பகுதியை நோக்கி லட்சுமணனை விரையச் சொல்லி வலியுறுத்தினாள். பிறகு, லட்சுமணன் அவளிடம் {சீதையிடம்}, “அச்சமுள்ள பெண்ணே, நீ அஞ்சக் காரணமேதுமில்லை. ராமனை அடிக்கும் அளவு சக்தியுள்ளவன் எவன்? ஓ! இனிய புன்னகை கொண்டவளே {சீதை}, ஒரு நொடியில் நீ உனது கணவனைக் காண்பாய்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய சீதை, பெண்களுக்கே இயற்கையான அச்சத்துடன், புனிதமான லட்சுமணன் மீது சந்தேகம் கொண்டு, உரக்க அழுத் தொடங்கினாள். பிறகு கணவனுக்கு {ராமனுக்குத்} தன்னை அர்ப்பணித்திருந்த அந்தக் கற்புடைய மங்கை {சீதை}, “ஓ! மூடனே {லட்சுமணா}, உனது இதயத்தில் நீ கொண்டிருக்கும் நோக்கம் எப்போதும் ஈடேறாது! ஆயுதம் கொண்டோ, மலைமேல் இருந்து குதித்தோ, சுடர்விட்டெரியும் நெருப்புக்குள் புகுந்தோ என்னை மாய்த்துக் கொள்வேனேயன்றி, என் கணவர் ராமரைப் புறக்கணித்து, நரியின் பாதுகாப்பில் இருக்கும் பெண்புலியைப் போல, உன்னைப் போன்ற இழிந்தவனுடன் நான் வாழ மாட்டேன்" என்று சொல்லி கடுமையாக ஏசினாள் {சீதை}.
தன் அண்ணனை மிகவும் விரும்புபவனும், நல்ல இயல்பு கொண்டவனுமான லட்சுமணன், இவ்வார்த்தைகளைக் கேட்டு, தனது காதுகளைப் (தன் கைகளால்) பொத்தி, ராமன் சென்ற பாதையில் சென்றான். கோவைப்பழம் {Bimba Fruit} போலச் சிவந்து மென்மையாக இருக்கும் உதடுகளைக் கொண்ட அந்த மங்கையை {சீதையை} ஒரு முறையும் {திரும்பிப்} பாராமல் லட்சுமணன் சென்றான். அதே வேளையில், இதயத்தில் தீமையுடன் இருந்தாலும், மரியாதையான தோற்றத்தை அணிந்திருந்த அந்த ராட்சசனான ராவணன், சாம்பற்குவியால் மூடப்பட்ட நெருப்பு போல இருந்து, தன்னை வெளிப்படுத்தினான். களங்கமற்ற குணம் கொண்ட அந்த மங்கையைப் {சீதையைப்} பலவந்தமாகத் தூக்கிச் செல்ல அவன் துறவியின் கோலத்தில் அங்கே தோன்றினான்.
அவன் {துறவியின் வேடத்திலிருந்த ராவணன்} வருவதைக் கண்ட நல்லொழுக்கம் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, கனிகளும், கிழங்கும், இருக்கையும் கொடுத்து அவனை {ராவணனை} வரவேற்றாள். இவற்றையெல்லாம் அலட்சியம் செய்து, தன் சுயஉருவம் கொண்ட அந்த ராட்சசர்களில் காளை {ராவணன்}, விதேக இளவரசியிடம் {சீதையிடம்}, “ஓ! சீதை, ராவணன் என்ற பெயரில் அறியப்படும் நான், ராட்சசர்களின் மன்னனாவேன். இலங்கை என்ற பெயரில் அறியப்படும் காண்பதற்கினிய என் நகரம், பெருங்கடலைத் தாண்டிய அக்கரையில் இருக்கிறது! அங்கே அழகிய பெண்களுக்கு மத்தியில் என்னுடன் நீ ஒளிர்வாய்! ஓ! அழகிய உதடுகள் கொண்ட மங்கையே {சீதையே}, துறவியான ராமனைப் புறக்கணித்து, என் மனைவியாவாயாக!” என்ற வார்த்தைகளைச் சொன்னான்.
இவற்றையும், இதே வகையான வேறு வார்த்தைகளையும் கேட்ட அழகிய உதடுகள் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, தனது காதுகளைப் பொத்திக் கொண்டு, அவனிடம் {ராவணனிடம்}, “அப்படிச் சொல்லாதே! நட்சத்திரங்களுடன் கூடிய வானம் இடிந்து விழலாம், இந்தப் பூமித் தூள் தூளாக உடைந்து போகலாம், நெருப்பும் தனது இயல்பை விட்டுக் குளுமையடையலாம், இருப்பினும் என்னால் ரகுவின் வழித்தோன்றலைக் {ராமரைக்} கைவிட முடியாது! யானைக்கூட்டத்தில், நெற்றிப்பொட்டில் {temple} மதம் பெருகும் தலைமை யானையுடன் வாழ்ந்த பெண் யானை எப்படி அதைக் கைவிட்டு காட்டுப்பன்றியுடன் {hog} வாழும்? தேன் அல்லது {இலுப்பை} மலர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிய மதுவை ஒரு முறையே சுவைத்த ஒரு பெண், அரிசியில் தயாரிக்கப்பட்ட இழிந்த சாராயத்தை எப்படி விரும்பி அருந்துவாள்?" என்றாள்.
இந்த வார்த்தைகளைச் சொன்ன அவள் {சீதை}, கோபத்தால் உதடுகள் நடுங்க, உணர்ச்சி வசப்பட்டதால் கரங்கள் இங்கும் அங்கும் ஆட, அந்தக் குடிசைக்குள் நுழைந்தாள். எனினும், அங்கே அவளைத் தொடர்ந்து சென்ற ராவணன், மேலும் முன்னேறுவதில் இருந்து அவளை {சீதையை} இடைமறித்தான். முரட்டுத்தனமாக அந்த ராட்சசனால் வசைபாடப்பட்ட அவள் {சீதை} மயக்கமடைந்தாள். ஆனால் ராவணன் அவளது தலை முடியைப் பற்றிக்கொண்டு காற்றில் எழும்பினான். பிறகு {பிரஸ்ரவணம் என்ற} மலைச்சிகரத்தில் வாழும் ஜடாயு என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய கழுகானவன், இப்படி ராவணனால் தூக்கிச் செல்லப்படும் போது, அழுது கொண்டும், பெருந்துயரத்துடன் ராமனை அழைத்துக்கொண்டுமிருந்த ஆதரவற்ற அந்த மங்கையை {சீதையைக்} கண்டான்.

[1] தார்த மிருகம் - முன்பொரு சமயம், பிரஜாபதி, மானின் உருவம் கொண்டு காமத்தால் தனது மகளைத் தொடர்ந்தார். திரிசூலம் கொண்ட ருத்திரன், பிரஜாபதியைத் தொடர்ந்து சென்று, அவன் தலையை அடித்தான் {துண்டித்தான்}. பிரஜாபதியின் அந்த மான் தலை உடலில் இருந்து அறுக்கப்பட்டு, மிருகசீரிஷம் {மிருகத்தின் அறுக்கப்பட்ட தலை} என்றழைக்கப்படும் நட்சத்திரமாகவோ, விண்மீன்கூட்டமாகவோ மாறியது என்கிறார் கங்குலி.
அந்தத் துன்பக் குரலை விதேக இளவரசி {சீதை} கேட்ட போது, அந்தக் குரல் வந்த பகுதியை நோக்கி லட்சுமணனை விரையச் சொல்லி வலியுறுத்தினாள். பிறகு, லட்சுமணன் அவளிடம் {சீதையிடம்}, “அச்சமுள்ள பெண்ணே, நீ அஞ்சக் காரணமேதுமில்லை. ராமனை அடிக்கும் அளவு சக்தியுள்ளவன் எவன்? ஓ! இனிய புன்னகை கொண்டவளே {சீதை}, ஒரு நொடியில் நீ உனது கணவனைக் காண்பாய்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய சீதை, பெண்களுக்கே இயற்கையான அச்சத்துடன், புனிதமான லட்சுமணன் மீது சந்தேகம் கொண்டு, உரக்க அழுத் தொடங்கினாள். பிறகு கணவனுக்கு {ராமனுக்குத்} தன்னை அர்ப்பணித்திருந்த அந்தக் கற்புடைய மங்கை {சீதை}, “ஓ! மூடனே {லட்சுமணா}, உனது இதயத்தில் நீ கொண்டிருக்கும் நோக்கம் எப்போதும் ஈடேறாது! ஆயுதம் கொண்டோ, மலைமேல் இருந்து குதித்தோ, சுடர்விட்டெரியும் நெருப்புக்குள் புகுந்தோ என்னை மாய்த்துக் கொள்வேனேயன்றி, என் கணவர் ராமரைப் புறக்கணித்து, நரியின் பாதுகாப்பில் இருக்கும் பெண்புலியைப் போல, உன்னைப் போன்ற இழிந்தவனுடன் நான் வாழ மாட்டேன்" என்று சொல்லி கடுமையாக ஏசினாள் {சீதை}.
தன் அண்ணனை மிகவும் விரும்புபவனும், நல்ல இயல்பு கொண்டவனுமான லட்சுமணன், இவ்வார்த்தைகளைக் கேட்டு, தனது காதுகளைப் (தன் கைகளால்) பொத்தி, ராமன் சென்ற பாதையில் சென்றான். கோவைப்பழம் {Bimba Fruit} போலச் சிவந்து மென்மையாக இருக்கும் உதடுகளைக் கொண்ட அந்த மங்கையை {சீதையை} ஒரு முறையும் {திரும்பிப்} பாராமல் லட்சுமணன் சென்றான். அதே வேளையில், இதயத்தில் தீமையுடன் இருந்தாலும், மரியாதையான தோற்றத்தை அணிந்திருந்த அந்த ராட்சசனான ராவணன், சாம்பற்குவியால் மூடப்பட்ட நெருப்பு போல இருந்து, தன்னை வெளிப்படுத்தினான். களங்கமற்ற குணம் கொண்ட அந்த மங்கையைப் {சீதையைப்} பலவந்தமாகத் தூக்கிச் செல்ல அவன் துறவியின் கோலத்தில் அங்கே தோன்றினான்.
அவன் {துறவியின் வேடத்திலிருந்த ராவணன்} வருவதைக் கண்ட நல்லொழுக்கம் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, கனிகளும், கிழங்கும், இருக்கையும் கொடுத்து அவனை {ராவணனை} வரவேற்றாள். இவற்றையெல்லாம் அலட்சியம் செய்து, தன் சுயஉருவம் கொண்ட அந்த ராட்சசர்களில் காளை {ராவணன்}, விதேக இளவரசியிடம் {சீதையிடம்}, “ஓ! சீதை, ராவணன் என்ற பெயரில் அறியப்படும் நான், ராட்சசர்களின் மன்னனாவேன். இலங்கை என்ற பெயரில் அறியப்படும் காண்பதற்கினிய என் நகரம், பெருங்கடலைத் தாண்டிய அக்கரையில் இருக்கிறது! அங்கே அழகிய பெண்களுக்கு மத்தியில் என்னுடன் நீ ஒளிர்வாய்! ஓ! அழகிய உதடுகள் கொண்ட மங்கையே {சீதையே}, துறவியான ராமனைப் புறக்கணித்து, என் மனைவியாவாயாக!” என்ற வார்த்தைகளைச் சொன்னான்.
இவற்றையும், இதே வகையான வேறு வார்த்தைகளையும் கேட்ட அழகிய உதடுகள் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, தனது காதுகளைப் பொத்திக் கொண்டு, அவனிடம் {ராவணனிடம்}, “அப்படிச் சொல்லாதே! நட்சத்திரங்களுடன் கூடிய வானம் இடிந்து விழலாம், இந்தப் பூமித் தூள் தூளாக உடைந்து போகலாம், நெருப்பும் தனது இயல்பை விட்டுக் குளுமையடையலாம், இருப்பினும் என்னால் ரகுவின் வழித்தோன்றலைக் {ராமரைக்} கைவிட முடியாது! யானைக்கூட்டத்தில், நெற்றிப்பொட்டில் {temple} மதம் பெருகும் தலைமை யானையுடன் வாழ்ந்த பெண் யானை எப்படி அதைக் கைவிட்டு காட்டுப்பன்றியுடன் {hog} வாழும்? தேன் அல்லது {இலுப்பை} மலர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிய மதுவை ஒரு முறையே சுவைத்த ஒரு பெண், அரிசியில் தயாரிக்கப்பட்ட இழிந்த சாராயத்தை எப்படி விரும்பி அருந்துவாள்?" என்றாள்.
இந்த வார்த்தைகளைச் சொன்ன அவள் {சீதை}, கோபத்தால் உதடுகள் நடுங்க, உணர்ச்சி வசப்பட்டதால் கரங்கள் இங்கும் அங்கும் ஆட, அந்தக் குடிசைக்குள் நுழைந்தாள். எனினும், அங்கே அவளைத் தொடர்ந்து சென்ற ராவணன், மேலும் முன்னேறுவதில் இருந்து அவளை {சீதையை} இடைமறித்தான். முரட்டுத்தனமாக அந்த ராட்சசனால் வசைபாடப்பட்ட அவள் {சீதை} மயக்கமடைந்தாள். ஆனால் ராவணன் அவளது தலை முடியைப் பற்றிக்கொண்டு காற்றில் எழும்பினான். பிறகு {பிரஸ்ரவணம் என்ற} மலைச்சிகரத்தில் வாழும் ஜடாயு என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய கழுகானவன், இப்படி ராவணனால் தூக்கிச் செல்லப்படும் போது, அழுது கொண்டும், பெருந்துயரத்துடன் ராமனை அழைத்துக்கொண்டுமிருந்த ஆதரவற்ற அந்த மங்கையை {சீதையைக்} கண்டான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.