Savitri restored Satyavan! | Vana Parva - Section 295a | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
பழங்களைப் பறித்து, மரக்கிளைகளை வெட்டிய சத்யவானுக்கு வியர்த்துப் போனதால், தலைவலி வந்தது; தூங்கப்போவதாகச் சொன்ன சத்தியவானின் தலையைச் சாவித்ரி தனது மடியில் கிடத்தியது; சாவித்ரி யமனைக் கண்டது; சாவித்ரிக்கும் யமனுக்கு இடையில் நடந்த உரையாடல்; சாவித்ரி பெற்ற நான்கு வரங்கள்; யமனிடம் ஐந்தாவது வரமாகச் சாவித்ரி சத்யவானின் உயிர்மீட்பைக் கேட்பது....
"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பலவானான சத்யவான் பிறகு தனது மனைவியையும் {சாவித்ரியையும்} அழைத்துக் கொண்டு, பழங்களைப் பறித்து, தனது கூடையை அவற்றால் நிரப்பிக் கொண்டான். பிறகு அவன் {சத்யவான்} மரங்களின் கிளைகளை விழச்செய்யத் தொடங்கினான் {வெட்டத் தொடங்கினான்}. அப்படி அவன் {சத்யவான்} வெட்டிக் கொண்டிருந்தபோது, அவனுக்கு {சத்யவானுக்கு} வேர்க்கத் தொடங்கியது. அவ்வேலையின் விளைவாக, அவனுக்குத் தலை வலிக்கத் தொடங்கியது. கடும் உழைப்பால் பாதிக்கப்பட்ட அவன் தனது அன்பிற்குரிய மனைவியை {சாவித்ரியை} அணுகி, அவளிடம், “ஓ! சாவித்ரி, இந்தக் கடுமையான வேலையின் காரணமாக எனக்குத் தலை வலிக்கிறது. எனது அங்கங்கள் அனைத்தும், எனது இதயமும் மிகவும் களைத்துப் போய்விட்டன! ஓ! மிதமாகப் பேசுபவளே {சாவித்ரி}, எனக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைக்கிறேன். எண்ணிலடங்கா அம்புகளால் எனது தலை துளைக்கப்படுவதைப் போல உணர்கிறேன். எனவே, ஓ! மங்களகரமான மங்கையே {கல்யாணி}, நிற்பதற்கும் சக்தியற்ற நான் உறங்க விரும்புகிறேன்" என்றான் {சத்யவான்}.
இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி விரைவாக முன்னேறி, தனது கணவனை {சத்யவானை} அணுகி, தரையில் அமர்ந்து, அவனது தலையைத் தனது மடியில் வைத்தாள். பிறகு நாரதரின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்த அந்த ஆதவற்ற பெண் {சாவித்ரி}, அந்த நாளின் (நிர்ணயிக்கப்பட்ட) பிரிவு, முகூர்த்தம் மற்றும் கணத்தைக் கணிக்கத் தொடங்கினாள். அடுத்த நொடியில் அவள் {சாவித்ரி}, செவ்வாடை உடுத்தி, தலையில் கிரீடத்துடன் உள்ள ஒருவனைக் கண்டாள். அவனது பெரிய உடல் சூரியனைப் போன்று பிரகாசித்தது. கரிய நிறமும், சிவந்த கண்களும் கொண்ட அவன் {யமன்}, கையில் சுருக்குக் கயிறை {பாசத்தை} வைத்துக் கொண்டு பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். அவன் {யமன்}, சத்யவானுக்கு அருகில் நின்று கொண்டு அவனை {சத்யவானை} நிலைத்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனைக் {யமனைக்} கண்ட சாவித்ரி, தனது கணவனின் தலையை மெதுவாகத் தரையில் வைத்து, திடீரென எழுந்து, நடுங்கும் இதயத்துடன் துயர் நிறைந்த இவ்வார்த்தைகளைப் பேசினாள். அவள் {சாவித்ரி}, “மனிதசக்திக்கு அப்பாற்பட்ட உனது உருவத்தைக் கண்டு, நீ ஒரு தேவன் என்பதாகக் கொள்கிறேன். உனக்கு விருப்பமிருந்தால், ஓ! தேவர்களின் தலைவா, நீ யார் என்றும், நீ என்ன செய்யக் கருதுகிறாய் என்றும் என்னிடம் சொல்" என்றாள். அதன் பேரில் யமன் {சாவித்ரியிடம்}, “நீ எப்போதும் உனது கணவனுக்கு அர்ப்பணிப்போடு இருக்கிறாய், மேலும் தவத்தகுதி கொண்டவளாகவும் இருக்கிறாய். இதன்காரணமாகவே நான் உன்னோடு உரையாடுகிறேன். ஓ! மங்களகரமானவளே, நான் யமன் என்று அறிந்து கொள். மன்னனின் {தியுமத்சேனனின்} மகனான இந்த உனது தலைவன் சத்யவானின் நாட்கள் முடிந்துவிட்டன {வாழ்ந்நாள் [ஆயுள்] முடிந்துவிட்டது}. எனவே, நான் இவனை எனது சுருக்குக் கயிற்றில் {பாசத்தில்} கட்டி எடுத்துச் செல்லப் போகிறேன். இது எனது வேலை {கடமை} என்பதை அறிந்து கொள்!” என்றான். இந்த வார்த்தைகளுக்கு, சாவித்ரி {யமனிடம்}, “ஓ! வழிபடத்தகுந்தவனே! மனிதர்களைக் கொண்டு செல்ல உனது தூதர்களே வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ! தலைவா, பிறகு ஏன் நீயே நேரடியாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டாள் {சாவித்ரி}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவளால் {சாவித்ரியால்} இப்படிச் சொல்லப்பட்ட பித்ருக்களின் சிறப்புமிக்கத் தலைவன் {யமன்}, அவளை இணங்க வைக்கும் நோக்கில், தனது நோக்கங்கள் குறித்த உண்மை அனைத்தையும் அவளுக்கு வெளிப்படுத்தத் தொடங்கினான். யமன் {சாவித்ரியிடம்}, “இந்த இளவரசன் {சத்யவான்}, அறங்களையும், மேனி அழகையும் கொண்டவன். சாதனைகள் கடலளவு கொண்டவன். எனது தூதர்களால் கொண்டு போகத் தகாதவன். எனவேதான், நானே நேரடியாக வந்தேன்!” என்றான். இதைச் சொன்ன யமன் தனது முக்கியச் சக்தியின் மூலம் சத்யவானின் உடலில் இருந்து, {யமனின்} முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்த கட்டைவிரலளவு உள்ள ஒருவனைத் தனது சுருக்குக் கயிற்றால் {பாசத்தால்} கட்டி வெளியே இழுத்தான். சத்யவானின் உயிர் இப்படி எடுக்கப்பட்ட போது, அவனது உடல், சுவாசமற்று, பிரகாசமிழந்து, அசைவிழந்து, காணச் சகியாத படி இருந்தது. சத்யவானின் உயிர் சாரத்தைக் கட்டி எடுத்த யமன், தென்திசையில் முன்னேறினான். அதன்பேரில், தனது தலைவனுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்தவளும், தனது நோன்புகளில் வெற்றி மகுடம் தரித்தவளும், துயரத்தில் மூழ்கிய இதயம் கொண்டவளுமான மேன்மையான சாவித்ரி யமனைத் தொடர்ந்து செல்லத் தொடங்கினாள்.
இதனால் யமன், “ஓ! சாவித்ரி, நில்! திரும்பிச் செல். உனது தலைவனின் {சத்யவானின்} ஈமக்கடன்களைச் செய்! நீ உன்னுடைய தலைவனிடம் கொண்ட அனைத்துக் கடமைகளிலிருந்தும் விடுபட்டுவிட்டாய். எதுவரை வரமுடியுமோ அதுவரை நீ வந்துவிட்டாய்" என்றான். சாவித்ரி, “எனது கணவர் எங்கே கொண்டு செல்லப்படுகிறாரோ, அல்லது அவர் எங்குப் போகிறாரோ, அங்கே நான் அவரைத் தொடர்ந்து செல்வேன். இது எனது நித்திய வழக்கமாகும் {கடனாகும்}. என் தவத்தின் அறத்தால், மூத்தவர்களிடம் நான் கொண்ட மரியாதையால், எனது தலைவன் மீது நான் கொண்ட பாசத்தால், நான் நோற்ற நோன்புகளால், உனது உதவியாலும் கூட நான் வருவது தடுக்கப்படவில்லை. மற்றொருவருடன் ஏழு அடிகள் சேர்ந்து நடப்பதின் மூலம், அந்த மற்றவனின் துணை கொண்டதால், அவனுடன் ஒரு நட்பு ஒப்பந்தமாகிறது என்று உண்மை ஞானம் கொண்ட ஞானிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (நான் உன்னிடம் கொண்ட) அந்த நட்பைக் கருதி, நான் உன்னிடம் ஒன்றைப் பேசுகிறேன். அதை நீ கேள்.
கல்வியுடன் கூடிய மணமாகாநிலை {பிரம்மச்சரியம்} (1),
இல்லறம் {கிரகஸ்தம்} (2),
காட்டில் ஓய்ந்திருத்தல் {வானப்பிரஸ்தம்} (3),
உலகைத் துறத்தல் {சந்நியாசம்} (4)
ஆகிய தொடர்ச்சியான நான்கு வகை வாழ்வுகளை மேற்கொண்டாலும் தங்கள் ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காதவர்கள் எந்தத் தகுதியையும் அடைவதில்லை. உண்மை ஞானம் கொண்டதே ஆன்மத்தகுதி என்று அழைக்கப்படுகிறது. எனவே, ஆன்மத்தகுதியே {ஆத்மஞானமே} அனைத்திலும் முதன்மையானது என்றும், தொடர்ச்சியாக வரும் நான்கு வகை வாழ்வின் வழிகள் {முதன்மையானவை} அல்ல என்றும் ஞானிகள் தீர்மானித்துள்ளனர். நான்கு வகையான இவற்றில் ஒன்றின் கடமைகளையாவது ஞானிகளின் வழிகாட்டுதலின் படி ஏற்புடைய வகையில் பயின்றால். ஞானிகளின் வழியில் உடன்படும் இந்த நான்கு வகையில் ஏதாவதொன்றின் கடமைகளைப் பயில்வதன் மூலம், நாம் உண்மையான தகுதியை {ஞானத்தை} அடைந்துவிடுகிறோம். எனவே, நாம் கல்வியுடன் கூடிய மணமாகா நிலையான {பிரம்மச்சரியம்}, இரண்டாவது வகையையும் {முதல் வகை என்றிருக்க வேண்டும், ஆனால் ஆங்கிலத்தில் இப்படித்தான் இருக்கிறது}, துறவு என்ற மூன்றாவது வகையையும் {நான்காவது வகை என்றிருக்க வேண்டும்) விரும்பவில்லை. இதற்காகவே ஞானிகள், ஆன்மத்தகுதியே {ஆத்மஞானமே} அனைத்திலும் முதன்மையானது என்று தீர்மானித்திருக்கிறார்கள்!” என்றாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்ட யமன் {சாவித்ரியிடம்}, “நீ திரும்பு! ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்து, சரியான எழுத்துகள், உச்சரிப்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட உனது இந்த வார்த்தைகளைக் கேட்டு நான் மகிழ்கிறேன். ஓ! களங்கமற்ற குணங்கள் கொண்டவளே {சாவித்ரி}, உனது கணவனின் வாழ்வைத் {உயிரைத்} தவிர வேறு ஏதேனும் வரத்தை நீ கேள். நீ கேட்கும் எந்த வரத்தையும் நான் அளிப்பேன்!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, “நாட்டை இழந்து, பார்வையும் இழந்து, எங்கள் காடுறை ஆசிரமத்தில் ஓய்வு வாழ்வை வாழ்கிறார் எனது மாமனார். உன் ஆதரவால் அந்த மன்னன் {தியுமத்சேனன்} தனது பார்வையைப் பெற்று, நெருப்பைப் போன்றோ சூரியனைப் போன்றோ பலத்தைப் பெறட்டும்!” என்றாள்.
யமன் {சாவித்ரியிடம்}, “குற்றமற்ற குணங்கள் கொண்டவளே, இவ்வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன்! நீ சொன்னவாறே அது நடக்கும்! உனது பயணத்தால் நீ களைத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே நீ திரும்பு! சோர்வுற்றிருக்கும் நீ மேலும் பாதிப்படையாதே!" என்றான்.
அதற்குச் சாவித்ரி {யமனிடம்}, “எனது கணவர் அருகில் இருக்கும் போது களைப்பை நான் எப்படி உணர்வேன்? எனது கணவர் எங்கிருக்கிறாரோ, நிச்சயமாக அதுவே எனது இடமும் ஆகும். நீ எனது கணவரை எங்கே கொண்டு போகிறாயோ, அங்கே நானும் வருவேன்! ஓ! தேவர்களின் தலைவா {யமனே}, நான் சொல்வதை மீண்டும் கேள்! பக்திமானுடனான ஒரேயொரு நேர்காணல் கூட மிகவும் விரும்பத்தக்கதாகும்; அவர்களுடன் {பக்திமான்களுடனான} நட்பு என்பது அதைவிட மேலானதாகும். அறம்சார்ந்தவர்களுடனான {நல்லவர்களுடனான} உறவு கனியற்றதாக {பலனற்றதாக} இருக்க முடியாது. எனவே, நெறிசார்ந்தவர்களின் துணையுடனே ஒருவன் வாழ வேண்டும்" என்றாள்.

யமன் {சாவித்ரியிடம்}, “பயனுள்ள வழிமுறைகள் நிறைந்திருக்கும் நீ சொன்ன வார்த்தைகள், இதயங்களை மகிழ்விக்கும், கற்றோரின் ஞானத்தை மேம்படுத்தும். எனவே, ஓ! பெண்ணே {சாவித்ரியே}, சத்யவானின் வாழ்வைத் தவிர இரண்டாவதாக இன்னொரு வரத்தை கேள்!” என்றான். சாவித்ரி, “சில காலத்துக்கு முன்னால், ஞானமும், புத்தி கூர்மையும் கொண்ட எனது மாமனார் தனது நாட்டை இழந்தார். அந்த ஏகாதிபதி {தியுமத்சேனர்} மீண்டும் தனது நாட்டை அடையட்டும். எனக்கு மேன்மையான அவர் தனது கடமைகளைக் கைவிடாதிருக்கட்டும்! இதுவே நான் கேட்கும் இரண்டாவது வரம்!” என்றாள். யமன், “விரைவில் அம்மன்னன் {தியுமத்சேனன்} தனது நாட்டை மீண்டும் பெறுவான். அவன் தனது கடமைகளில் இருந்து எப்போதும் விழ மாட்டான். இப்படியே, ஓ! மன்னனின் மகளே நான் உனது விருப்பத்தை நிறைவேற்றிவிட்டேன்! இப்போது நீ திரும்பு! மேலும் எதிர்வரும் சிரமத்தை அனுபவிக்காதே!” என்றான்.
அதற்குச் சாவித்ரி {யமனிடம்}, “உனது தீர்ப்புகளின் மூலம் அனைத்து உயிர்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. உனது தீர்ப்புகளாலேயே, {விதியின் பயனாகவே} அவற்றை எடுத்துச் செல்கிறாய். உனது விருப்பத்தின் படி அல்ல. எனவே, ஓ! தெய்வமே, ஓ! தெய்வீகமானவனே, மக்கள் உன்னை யமன் என்று அழைக்கின்றனர்! நான் சொல்லும் வார்த்தைகளை நீ கேள்! சிந்தனையாலோ, வார்த்தையாலோ, செயலாலோ காயப்படுத்தாமல், அன்பு செலுத்தி, அவரவர் பெற வேண்டியதைக் கொடுப்பதே அனைத்து உயிர்களின் நன்மையை நோக்கிச் செய்யப்படும் {உனது} நித்திய கடமை ஆகும். இவ்வுலகைப் பொறுத்தமட்டில், அனைத்தும் இவ்வாறே (எனது கணவரைப் போலவே} இருக்கிறது. மனிதர்கள் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் அற்றிருக்கிறார்கள். எனினும், நல்லவர்கள் தங்கள் பாதுகாப்பைக் கோரும் எதிரிகளுக்குக் கூடக் கருணை காட்டுவார்கள்!” என்றாள். யமன், “தாகம் கொண்ட ஆன்மாவுக்கு நீரைப் போல, உன்னால் எனக்குச் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகள் இருக்கின்றன. எனவே, ஓ! அழகான பெண்ணே {சாவித்ரி}, மீண்டும் சத்யவானின் உயிரைத் தவிர வேறு ஏதேனும் வரத்தைக் கேள்!” என்றான்.
இந்த வார்த்தைகளுக்குச் சாவித்ரி {யமனிடம்}, “பூமியின் தலைவரான எனது தந்தை {அஸ்வபதி} மகன்களற்று இருக்கிறார். அவர் தனது இடுப்பில் நூறு மகன்களைப் {ஔரஸ புத்திரர்களைப்} பெற்று, அவரது {என் தந்தையான மன்னன் அஸ்வபதியின்} குலம் தழைக்க வேண்டும் என்பதே நான் உன்னிடம் கேட்கும் மூன்றாவது வரமாகும்" என்று மறுமொழி கூறினாள்.
யமன் {சாவித்ரியிடம்}, “ஓ! மங்களகரமான பெண்ணே {கல்யாணி}, உனது தகப்பன் {மன்னன் அஸ்வபதி}, நூறு சிறப்புமிக்க மகன்களைப் பெறுவான். அவர்கள் உனது தந்தையின் குலத்தைத் தழைக்கச் செய்வார்கள்! ஓ! மன்னனின் மகளே {சாவித்ரி}, இப்போது நீ உனது விருப்பதை அடைந்தாய். திரும்பிச் செல். போதுமான அளவுக்கு நெடுந்தூரம் வந்துவிட்டாய்!” என்றான். சாவித்ரி, “எனது கணவருக்கு அருகில் இருப்பதால், நான் நடந்த வந்த வழியின் தொலைவை நான் உணரவில்லை. உண்மையில், எனது மனம் இன்னும் நீண்ட வழிகளில் விரைகிறது. {இப்படிச்} சென்று கொண்டிருக்கும்போதே நான் தற்போது சொல்லும் வார்த்தைகளையும் கேள்! நீ விவஸ்வத்தின் {விவஸ்வானின் = சூரியனின்} பலமிக்க மகனாவாய். இதன் காரணமாகவே நீ ஞானிகளால் வைவஸ்வதன் என்று அழைக்கப்படுகிறாய். ஓ! தலைவா, படைக்கப்பட்ட அனைத்திற்கும் பொதுவான சட்டத்துக்கு உட்பட்டு நீ செயல்படுவதாலேயே நீ அறத்தலைவனாக {தர்மத்தின் தலைவனாக = தர்மராஜாவாக = தர்மதேவனாக} நியமிக்கப்பட்டிருக்கிறாய்! நேர்மையானவர்களிடம் ஒருவன் கொள்ளும் நம்பிக்கையை, தன்னிடத்தில் கூட ஒருவனும் கண்டுகொண்டு இளைப்பாறுவதில்லை. எனவே, அனைவரும் நேர்மையானவர்களுடனான நெருக்கத்தை அதிகம் விரும்புகின்றனர். இதயத்தின் நற்குணம் மட்டுமே அனைத்து உயிரினங்களிடமும் நம்பிக்கையைத் தூண்டுகிறது. குறிப்பாக இதன்காரணமாகவே மக்கள் நேர்மையானவர்களை நம்புகிறார்கள்" என்றாள்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட யமன் {சாவித்ரியிடம்}, “ஓ அழகான பெண்ணே {சாவித்ரி}, உன்னைத் தவிர வேறொருவரிடமும் இவ்வார்த்தைகளை நான் கேட்டதில்லை; உனது இந்தப் பேச்சால் நான் பெரிதும் மகிழ்கிறேன். சத்யவானின் உயிரைத் தவிர நான்காவதாக ஒரு வரத்தைப் பெற்று, நீ உன் வழியே செல்!” என்றான். பிறகு சாவித்ரி, “நான் மற்றும் சத்யவான் {இவர்} ஆகிய எங்கள் இருவரின் இடைகளைக் {loins} கொண்டு, பலமும், பராக்கிரமமும், {எங்கள்} குலத்தைத் தழைக்க வைக்கும் திறனும் கொண்ட நூறு மகன்கள் {ஔரஸபுத்திரர்கள் = இடையில் பிறக்கும் பிள்ளைகள்} பிறக்கட்டும்! இதுவே நான் உன்னிடம் இரந்து கேட்கும் நான்காவது வரமாகும்!” என்றாள். அவளது இந்த வார்த்தைகளைக் கேட்ட யமன், “ஓ! பெண்ணே, பலமும், பராக்கிரமும் கொண்டு, பெரும் மகிழ்ச்சியில் உன்னை ஆழ்த்தும் நூறு மகன்களை நீ பெறுவாய்! ஓ! மன்னனின் மகளே, மேலும் நீ களைப்படையாதே! திரும்பிப் போ! நீ ஏற்கனவே வெகுதூரம் வந்துவிட்டாய்!” என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட சாவித்ரி {யமனிடம்}, “நேர்மையாக இருப்பவர்கள் எப்போதும் நித்திய அறநெறிகளையே பயில்கிறார்கள்! பக்திமான்களுடனான பக்திமான்களின் தொடர்பு கனியற்றதாகாது {பயனற்றதாகாது}! பக்திமானர்களால், அந்தப் பக்திமான்களுக்கு ஆபத்து ஏற்படுவதில்லை. நேர்மையானவர்களே தங்கள் சத்தியத்தால் வானத்தில் சூரியனை நகர வைக்கிறார்கள். அந்த நேர்மையானவர்களே உலகத்தையும் தங்கள் துறவால் தாங்குகிறார்கள்! ஓ! மன்னா, நேர்மையானவர்களை நம்பியே கடந்த காலமும் எதிர் காலமும் இருக்கிறது! எனவே, நேர்மையானவர்களின் துணையுடன் இருக்கும் நேர்மையானவர்கள் ஒருபோதும் உற்சாகமற்று இருப்பதில்லை. இதுவே நல்லவர்கள் மற்றும் நேர்மையானவர்களின் நித்திய பயிற்சி என்பதை அறிந்திருக்கும் நேர்மையானவர்கள், எந்தக் கைம்மாறும் எதிர்பாராமல் பிறருக்கு நன்மையைச் செய்கின்றனர். ஒரு நற்காரியத்தை நல்லவர்களும் அறம்சார்ந்தவர்களும் எப்போதும் தூக்கி எறிய மாட்டார்கள். ஆர்வமோ, கண்ணியமோ இத்தகு செயல்களால் பாதிக்கப்படுவதில்லை. இத்தகு நடத்தை நேர்மையின்பாற்பட்டதால், நேர்மையானவர்களே அனைவரின் பாதுகாவலர்களாகிறார்கள்" என்றாள்.
அவளது வார்த்தைகளைக் கேட்ட யமன் {சாவித்ரியிடம்}, “இது போன்ற மனதிற்கு ஏற்புடைய, அறநெறி கலந்த, தேன் போன்ற சொற்றொடர்கள் நிறைந்த பெருமைமிக்க வார்த்தைகளை மேலும் மேலும் நீ சொல்வதால், உன் மீது நான் உணரும் {கொள்ளும்} மரியாதை மேலும் அதிகரிக்கிறது. ஓ! கொண்ட தலைவனிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவளே, ஒப்பற்ற ஒரு வரத்தை கேள்!” என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட சாவித்ரி {யமனிடம்}, “ஓ! கௌரவத்தைக் கொடுப்பவனே, நீ ஏற்கனவே கொடுத்திருக்கும் வரம், எனது கணவனுடனான சேர்க்கை {கலவி} இல்லாது சாத்தியப்படாது! எனவே, மற்ற வரங்களுக்கு மத்தியில், இந்தச் சத்யவானின் உயிர் மீட்கப்படட்டும் என்பதே நான் கேட்கும் வரமாகும்! எனது கணவரில்லாத நான் இறந்தவள் போன்றவளே! என் கணவரில்லாத எந்த மகிழ்ச்சியையும் நான் விரும்பவில்லை. என் கணவரில்லாத சொர்க்கத்தையே கூட நான் விரும்பவில்லை. என் கணவரில்லாத எந்தச் செழிப்பையும் நான் விரும்பவில்லை. என் கணவரில்லாது வாழ்வதற்கு என்னால் எனது மனதைத் தயார் செய்ய இயலாது! “சத்யவான் உயிருடன் மீட்கப்படட்டும்; அப்படி நேர்ந்தால் தான் உனது வார்த்தைகளை உண்மையாக்க முடியும் {உனது வார்த்தைகள் பொய்க்காது}” என்ற இந்த வரத்தையே நான் கேட்கிறேன்!” என்றாள்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அதன்பேரில், “அப்படியே ஆகட்டும்!” என்று சொன்ன நீதி அளிக்கும் விவஸ்வத்தின் {சூரியனின்} மகன், தனது சுருக்குக் கயிற்றை {பாசத்தை} அவிழ்த்து, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சாவித்ரியிடம் , “ஓ! மங்களகரமான கற்புடைய பெண்ணே, இப்படியே உனது கணவன் என்னால் விடுவிக்கப்பட்டான்! நோயிலிருந்து விடுதலை பெற்றிருக்கும் இவனை நீ மீண்டும் எடுத்துக் கொள்ள முடியும். அவன் வெற்றியை அடைவான்! உன்னுடன் சேர்ந்து அவன் {சத்யவான்} நானூறு வருட வாழ்வை அடைவான். உரிய சடங்குகளுடன் வேள்விகளைக் கொண்டாடும் அவன், இவ்வுலகில் பெரும்புகழைப் பெறுவான். உன்னிடம் சத்யவான் நூறு மகன்களைப் பெறுவான். தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரர்களுடன் கூடிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் மன்னர்களாக இருப்பார்கள். உனது பெயரின் தொடர்பால் அவர்கள் எப்போதும் புகழுடன் இருப்பார்கள். உனது தந்தையும் {அஸ்வபதியும்}, உனது தாய் மாளவியிடம் நூறு மகன்களைப் பெறுவான். தேவர்களைப் போன்றிருக்கும் உனது க்ஷத்திரிய சகோதரர்கள், அவர்களது மகன்கள் மற்றும் மகள்களுடன் மாளவர்கள் என்ற பெயரில் பரவலாக அறியப்படுவார்கள்!” என்றான் {யமன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.