Friday, October 10, 2014

ஒரு விளக்கம்

வனபர்வம் 301 கங்குலியுடன் ஒத்துப்போகிறது. இது 313 வரை வரப்போகிறது. ஆனால் சம்ஸ்கிருத மூலத்தில் 298 தான் இருக்கிறது. இந்த வேறுபாட்டுக்கு என்ன விளக்கம் தருகிறார் கங்குலி. இந்த மொழி மாற்றம் மூலத்துடன் விலகி நிற்கிறதே? 

- P Chandrasekaran

*******************************************



நண்பரே

நீங்கள் கேட்பது சரிதான். மூலத்திற்கும், கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும், பகுதிகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கவே செய்கிறது. இதற்கு கங்குலி தனது முன்னுரையில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

நானாக யூகிப்பது என்னவென்றால், இப்போது நான் கங்குலி ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருப்பதை, தமிழ் மொழிமாற்றம் செய்து வருகிறேன். சில பகுதிகள் வெகு சிறியதாகவும், சில பகுதிகள் வெகு நீளமானதாகவும் இருக்கின்றன. சிறியதை அப்படியே தந்து விடுகிறேன். ஆனால் பெரிய பகுதிகளை நான்காக உடைத்து, அ, ஆ, இ, ஈ என்று தருகிறேன்.

நான் இப்படிச் செய்வது போலவே, கங்குலி அவர்கள் ஒரே பகுதியில் பொருள் காரணம் மாறும் பகுதிகளைத் தனியாகப் பிரித்து தனி பகுதியாகத் தந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

மேலும் ஒரு வித்தியாசம் என்னவென்றால், கங்குலி சில உப பர்வங்களை அப்படியே விலக்கியிருக்கிறார். அதாவது கதையை விலக்காமல் தலைப்பை அப்படியே விலக்கியிருக்கிறார். உதாரணமாக, நான் இப்போது மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் பதிவிரதா மாஹாத்மியப் பர்வத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

வடமொழி மூலத்தில் சாவித்ரி கதை முடிவதோடு பதிவிரதா மாஹாத்மிய பர்வம் முடிந்து, கர்ணனிடம் இந்திரன் குண்டலங்களையும், கவசதையும் யாசிக்கும் குண்டலா ஹரண பர்வம் தொடங்கிவிடும். ஆனால் கங்குலி இங்கு அந்தக் கதையை பதிவிரதா மாஹாத்மிய பர்வத்திலேயே தருகிறார். குண்டலா ஹரண பர்வம் என்ற தலைப்பை அப்படியே தவிர்த்திருக்கிறார்.

இப்படி கங்குலி உப பர்வ தலைப்புகளிலும், பர்வத்திற்குள்ளே வரும் பகுதிகளின் எண்ணிக்கையிலும் மூலத்தில் இருந்து மாறுபடுகிறார். ஆனால் மூலத்தில் இருந்து மாறுபடவில்லை என்றே தெரிகிறது. அப்படி மாறுபட்டிருந்தால், மூலத்திற்கு வெகு நெருக்கமான பதிப்பு என்று கங்குலியின் "The Mahabharata" புகழ்பெற்றிருக்காது.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

***************************

பிற்சேர்க்கை

கங்குலி அவர்கள் தனது முன்னுரையில், சம்ஸ்க்ருத மஹாபாரதத்தின் கல்கத்தா பதிப்பு, பம்பாய் பதிப்பு ஆகியவற்றின் உரைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாகச் சொல்கிறார்.



******************
"About the readings I have adopted, I should say that as regards the first half of the work, I have generally adhered to the Bengal texts; as regards the latter half, to the printed Bombay edition. Sometimes individual sections, as occurring in the Bengal editions, differ widely, in respect of the order of the verses, from the corresponding ones in the Bombay edition. In such cases I have adhered to the Bengal texts, convinced that the sequence of ideas has been better preserved in the Bengal editions than the Bombay one." says http://sacred-texts.com/hin/m01/m01001.htm

"நான் ஏற்றுக்கொண்ட வாசிப்புகளைப் பற்றிச் சொல்கையில், எனது படைப்பின் முதல் பாதியைப் பொறுத்தவரையில், நான் வங்காள உரைகளையே கடைப்பிடித்திருக்கிறேன். அடுத்த பாதியைப் பொறுத்தவரை அச்சிடப்பட்ட பம்பாய் பதிப்பைக் கடைப்பிடித்திருக்கிறேன். சில நேரங்களில், தனிப்பட்ட பகுதிகளில், வங்கப் பதிப்புக்கும் பம்பாய் பதிப்புக்கும் இடையில், வரிகளின் வரிசையைப் பொறுத்தவரையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. அத்தகு சமயங்களில், நான், பம்பாய் பதிப்பைவிட, வங்கப் பதிப்புகளில் வரிசைகள் சிறப்பாக பராமிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நம்பி ஏற்றுக் கொண்டு, வங்க உரைகளையே கடைப்பிடித்திருக்கிறேன்."  என்று http://sacred-texts.com/hin/m01/m01001  சுட்டியில் தகவல் கிடைத்தது.

முன்னுரையில் அல்லாமல் வனபர்வத்தின் பகுதிகளில் வரும் அடிக்குறிப்புகள் பலவற்றில் தென்னிந்திய பதிப்பையும், நீலகண்டர் உரைகளையும் சேர்த்து கவனத்தில் கொண்டதாகவும் கங்குலி சொல்கிறார். 

******************

மஹாபாரத ஸ்லோகங்கள் பெரும்பாலானவை அனுஷ்டூப் சந்தங்களில் உள்ளவை என்றும், அந்த அனுஷ்டூப் சந்தங்களுக்குப் பொருந்தாத ஸ்லோகங்களை நீக்கி Critical edition of Mahabharata தயார் செய்யப்பட்டது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.


இது குறித்து மேலும் தேடுகையில்....

"This the Sanskrit text of the Mahabharata in Sanskrit. This is derived from electronic files created by Prof. Muneo Tokunaga of Kyoto and edited by John D. Smith. Their data was used to generate parallel Devanagari and Romanization, using custom C programs created at sacred-texts." says http://sacred-texts.com/hin/mbs/index.htm

அதாவது மேற்கண்ட சம்ஸ்க்ருத வரிகள், கியோடோவின் பேராசிரியர் முனியோ டோகுநாகா அவர்களால் செய்யப்பட்டது எனவும், ஜான் டி.ஸ்மித் அவர்களால் திருத்தப்பட்டது எனவும் சொல்லப்பட்டுள்ளது. என்று http://sacred-texts.com/hin/mbs/index.htm சுட்டியில் தகவல் கிடைத்தது.


******************

சரி யாரிந்த டோகுநாகா முனியோ என்று தேடுகையில்...

"Tokunaga Muneo (徳永宗雄?) is a Japanese Indologist. A graduate of the doctoral program of Harvard University, he now teaches in the Indology Department of Kyoto University.

Tokunaga Muneo is a specialist in Sanskrit and Vedic but also one of the world's foremost authorities on Indian languages[citation needed]. He is an authority on Indian epics, and in 1994 provided the world with the first digital, searchable text, in ASCII format, of the Mahabharata, based on the Poona Critical Edition. This has now been revised by John D. Smith."  says http://en.wikipedia.org/wiki/Tokunaga_Muneo

டோகுநாகா முனியோ அவர்கள் ஜப்பானைச் சார்ந்த இந்தியவியலாளர் ஆவார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் முனைவர் திட்டத்தில்    பட்டம் பெற்றவராவார். இவர் இப்போது கியோடோ பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.


வேதங்கள் மற்றும் சம்ஸ்க்ருதத்தில் நிபுணத்துவம் மட்டுமல்லாது, இந்திய மொழிகள் சம்பந்தமாக உலகின் முன்னணி அதிகாரிகளில் ஒருவராகத் திகழ்கிறார். 1994ல் தேடுவதற்கு எளிதாகத் தேடும் முறையிலமைந்த தனது முதல் டிஜிட்டல் மகாபாரதத்தை, ASCII முறையில் {Poona Critical Edition} பூனா பதிப்பின் அடிப்படையில் இவர் அளித்தார். என்று http://en.wikipedia.org/wiki/Tokunaga_Muneo சுட்டியில் தகவல் கிடைத்தது.

******************
சரி பூனா பதிப்பு என்பது என்ன? அதை யார் தொகுத்தது என்று தேடுகையில்

"Between 1919 and 1966, scholars at the Bhandarkar Oriental Research Institute, Pune, compared the various manuscripts of the epic from India and abroad and produced the Critical Edition of the Mahabharata, on 13,000 pages in 19 volumes, followed by the Harivamsha in another two volumes and six index volumes. This is the text that is usually used in current Mahabharata studies for reference. This work is sometimes called the 'Pune' or 'Poona' edition of the Mahabharata." says http://en.wikipedia.org/wiki/Mahabharata#Critical_Edition

1919 - 1966 காலக்கட்டத்துக்குள், பூனேவைச் சேர்ந்த பந்தார்க்கர் கிழக்கத்திய ஆய்வு நிறுவனத்தைச் {Bhandarkar Oriental Research Institute, Pune}சார்ந்த பல அறிஞர்கள் கூடி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்த பல்வேறு கைப்பிரதிகளை ஒப்பிட்டு, பத்தொன்பது பாகங்களும் 13,000 பக்கங்களும் கொண்ட அதிகாரப்பூர்வமான {Critical Edition} மஹாபாரதத்தையும், அதைத் தொடர்ந்து இரண்டு பாகங்களும், இரண்டு குறியீட்டு பாகங்களும் கொண்ட ஹரிவம்சத்தையும் தயாரித்தார்கள்.  தற்போதைய மகாபாரத ஆய்வுகளில் இந்த உரையே வழக்கமாக குறிக்கப்படுகிறது. இந்தப் படைப்பு சில வேளைகளில் மஹாபாரதத்தின் பூனே பதிப்பு அல்லது பூனா பதிப்பு என்று அழைக்கப்படுகிறது. என்று  http://en.wikipedia.org/wiki/Mahabharata#Critical_Edition

என்ற செய்திகள் கிடைத்தன. சுட்டியில் தகவல் கிடைத்தது.

******************

ஆக கங்குலியின் பதிப்பு வங்களாப் பதிப்பையே பெரும்பாலும் சார்ந்தது. பிற்பகுதியில் மட்டும் பம்பாய் பதிப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். நமக்குக் கிடைக்கும் சம்ஸ்க்ருத சுலோகங்கள் பூனா பதிப்பைச் சார்ந்தவை. இந்த மூன்று பதிப்புகளைத் தவிர, அதாவது, வங்காள, பம்பாய், பூனா பதிப்புகளைத் தவிர, மஹாபாரதத்தின் தென்னிந்திய பதிப்பும் இருக்கிறது. அதனால் தான் கங்குலியின் அத்தியாயங்களுக்கும் வேறு பதிப்புகளின் அத்தியாயங்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.

எனவே நமது முழுமஹாபாரத மொழிபெயர்ப்பு கங்குலி அவர்கள் பயன்படுத்திய வங்காளப் பதிப்பைச் சார்ந்தே இருக்கும்.

நன்றி.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்