ஆதிபர்வம் அச்சிடுதல் சம்பந்தமான பதிவுக்கு மின்னஞ்சலிலும் முகநூலிலும் பலர் தங்கள் பின்னூட்டங்களைத் தெரிவித்தீர்கள். கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
பலர் எனது வங்கிக் கணக்கைக் கேட்டு அனுப்பியிருந்தார்கள். அவர்கள் அனைவருக்குமே, "வாசகர்களும் நண்பர்களும் என்ன பின்னூட்டம் தருகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு, பலர் இதற்கு ஒப்புதல் அளித்தால், ஒரு வங்கிக் கணக்கெண்ணைத் தருகிறேன்" என்று பதில் கூறியிருந்தேன்.
நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே நான் அந்தப் பதிவை இட்டிருந்தேன். அவர், "இது நிச்சயம் அச்சு வடிவில் இருக்க வேண்டும். அதற்கு உண்டாகும் செலவு முழுமையும் நானே தருகிறேன். ஆனால், இந்தப் புண்ணியத்தை நான் மட்டுமில்லாமல், அனைவரும் பெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆகையால், உங்கள் வலைப்பூவில் ஒரு அறிவிப்பு கொடுங்கள். முதலில் நான் தரும் பணத்தை வைத்து வேலையை ஆரம்பித்துவிடுங்கள். பிறகு, மஹாபாரதத்துக்கு என்று புதிய வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்குங்கள். அந்த வங்கிக் கணக்கெண் மூலம், இதில் பங்கெடுக்க விரும்புவோர் பணம் தரட்டும். அது சிறு தொகையாக இருந்தாலும் பரவாயில்லை. பணம் போதவில்லையென்றால் அதையும் நானே தருவேன்" என்று சொல்லியிருந்தார்.
அவரது கோரிக்கையின் படியே "ஆதிபர்வம் அச்சிடலாமா?" என்று தலைப்பிட்டு பதிவை இட்டேன். பின்னூட்டங்கள் பல வந்தன.
சில நெருங்கிய நண்பர்கள், "இது உங்கள் வேலையல்ல. இதைச்
செய்யாதீர்கள். பதிப்பகத்தார் முன் வந்தால் மட்டும் செய்யுங்கள். இது உங்கள் நேரத்தைக் கறைத்துவிடும். முதலில் முழு மகாபாரதத்தையும் முடியுங்கள். பிறகு
அச்சு பதிப்பது குறித்து யோசியுங்கள். இச்சேவைக்குப் பணம் கோரினீர்கள்
என்றால் அது சேவையல்ல என்றாகிவிடும்." என்று சொல்லியிருந்தார்கள்.
இதனால் "நாம் தவறு செய்கிறோமோ" என்று நான் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்கள், தனது பின்னூட்டத்தைத் தந்திருக்கிறார். அது உங்கள் பார்வைக்காக....
****************************************************
மகாபாரதம்
என்னும் படைப்பு வியாசரால் எழுதப்பட்டது. இது பொழுது போக்குவதற்காக
எழுதப்பட்ட நாவல் அல்ல. இது மனித மனத்தை செம்மைப்படுத்தி அவனை மிக உயர்ந்த
நிலையான முக்தி நிலைக்கு கூட்டிக் செல்லக் கூடிய ஒன்றாகும். இதை
படிப்பதற்கு நாம் மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இதை தமிழில் மொழி பெயர்த்து எழுதிக் கொண்டு இருக்கும் செ.அருட்செல்வப்பேரரசனை வாழ்த்தி வணங்குகிறேன். இந்த பணி என்பது மகத்தானது. இது அவ்வளவு எளிதானதும் அல்ல. ஏனென்றால் மனித மனம் அவ்வளவு எளிதாக கட்டுப்படக்கூடியது அல்ல. ஏதோ ஒன்று அல்லது இரண்டு நாளில் முடியக் கூடிய விஷயமும் அல்ல. கண்டிப்பாக இந்த முழு மகாபாரதத்தையும் எழுதி முடிக்கும் போது மிக உயர்ந்த நிலையில் இவர் இருப்பார் என்பது நிச்சயம்.
மேலும் மகாபாரதம் என்னும் பொக்கிஷம் நூல் வடிவில் இருப்பது தான் சிறந்தது. ஏனென்றால் இது மனிதன் எல்லா துயரங்களையும் நீக்கி பேரின்பத்தை என்னவென்று காட்டி அதில் நம்மை கலந்திடவும் செய்யும். எல்லாரும் எல்லா நேரங்களிலும் வலைப்பூவை பார்த்து படிப்பது என்பது இயலாது. மேலும் இதை புத்தக வடிவில் கொடுப்பது என்பது ஒரு பெரிய யாகம் செய்வதை விட மேலானது. இந்த யாகத்தில் பங்கு பெறும் போது நமக்கு கிடைக்கும் பலன்களோ நினைத்து பார்க்க முடியாதது.
இது மனித குலம் மேன்மையுற வியாசர் ஆற்றிய பெரிய செயலாகும். வியாச பகவான் நினைத்த செயலை நாம் எடுத்து செய்யும் போது பல தெய்வங்கள் நமக்கு அருள் மாரி பொழிவது நிச்சயம். சத்தியம். நான் இதற்கு ஆகும் செலவுத் தொகையை கொடுப்பது என்பது நான் சேர்க்கும் அழியாத சொத்து என்று நினைக்கிறேன். ஆகவே நான் செ.அருட்செல்வப்பேரரசன் அவர்களிடம் இதை மற்றவர்களிடமும் தெரிவித்து விடுங்கள் என்று கூறியிருந்தேன்.
1. மகாபாரதம் கமிட்டி அமைக்க வேண்டும்.
2. இந்த கமிட்டியில் STO 10 நபர்கள் இருக்க வேண்டும்
3. இதற்கு தனியாக மகாபாரத சேவா என்று ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டும்.
4. இதில் வரும் பணத்தை கொண்டு இந்த சேவையை செய்ய வேண்டும்.
இது எனது கருத்து.
மேலும் ஒவ்வொரு வாசகரும் வெறும் ரூபாய் 100/- என்றாலே பணம் என்பது ஒரு பொருட்டல்ல என்பது தெரியும். இதை வைத்து சேவையை நல்ல முறையில் நடத்தலாம்.
நன்றி
ரவிக்குமார்.K

திரு ரவிக்குமார் அவர்களது பின்னூட்டத்தை https://www.facebook.com/arulselva.perarasan/posts/955892877772250?comment_id=957928444235360&ref=notif¬if_t=share_comment என்ற லிங்கில் காணலாம்.
****************************************************
எப்போதும் போல ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Post by முழு மஹாபாரதம்.