Sushena slained by Uttamaujas! | Karna-Parva-Section-75 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் புறப்பட்ட பிறகு ஏற்பட்ட போரின் தன்மையைத் திருதராஷ்டிரனுக்கு விளக்கிய சஞ்சயன்; அர்ஜுனன் ஏற்படுத்திய அழிவு; எவரெவர் எவரெவரோடு மோதினர் என்ற குறிப்பு; கர்ணனின் மகனான சுஷேணனைக் கொன்ற உத்தமௌஜஸ்; உத்தமௌஜஸைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன்; கிருபரின் குதிரைகளைத் தாக்கிவிட்டு சிகண்டியின் தேரில் ஏறிக் கொண்ட உத்தமௌஜஸ்; தேரிழந்த கிருபரைக் கொல்லாமல் விட்ட சிகண்டி; கிருபரை மீட்ட அஸ்வத்தாமன்; பீமனின் ஆவேசத் தாக்குதல்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! ஐயா {சஞ்சயா}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும், என் படையின் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்ததும், பயங்கரமானதும், நிலைகாண முடியாததுமான அம்மோதலில் தனஞ்சயன் {அர்ஜுனன்} போரிடச் சென்ற போது, உண்மையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது?” என்று கேட்டான்.(1)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் போரில் உயரந்த கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், (செருக்கிலும், சக்தியிலும்) பெருகியிருந்தவையுமான பாண்டவப்படையின் எண்ணற்ற பிரிவுகள் ஒன்றாகச் சேர்ந்து, கோடையின் முடிவில் ஆழ்ந்த முழக்கங்களை வெளியிடும் மேகத்திரள்களைப் போல, பேரிகைகளையும், பிற கருவிகளையுமே தங்கள் வாயாகக் கொண்டு உரக்க முழங்கத் தொடங்கின.(2) அதைத் தொடர்ந்து நடந்த போரானது, கொடூரமானதும், வாழும் உயிரினங்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான பருவந்தவறிய, கேடுநிறைந்த மழைக்கு ஒப்பானதாக இருந்தது. பெரும் யானைகளே அதன் மேகங்களாக இருந்தன; ஆயுதங்களே அங்கே பொழியும் நீராகின; இசைக்கருவிகளின் டங்காரமும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், உள்ளங்கை ஒலிகளும் அதன் முழக்கங்களாகின; தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் மின்னலின் கீற்றுகளாகின; கணைகள், வாள்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, வலிமைமிக்க ஆயுதங்கள் ஆகியன மழைத்தாரைகளாகின. {போரின்} வேகமான தொடக்கத்தால் அம்மோதலில் குருதியாறு பாய்ந்தது. இடைவிடாத வாள்வீச்சுகளால் பயங்கரத் தன்மையை அடைந்த அது {அம்மோதல்}, க்ஷத்தரியரின் பேரழிவை அதிகமாகக் கொண்டிருந்தது.(3,4)
தேர்வீரர்கள் பலர் ஒன்றாகச் சேர்ந்து, தனியொரு தேர்வீரனைச் சூழ்ந்து கொண்டு, அவனை யமனின் முன்னிலைக்கு அனுப்பினர். அல்லது, தனியொரு முதன்மையான தேர்வீரன், தனியொரு பகைவனை {அவ்வாறு} அனுப்பினான், அல்லது தனியொருவன் ஒன்றாகச் சேர்ந்திரந்த பகைவர்கள் பலரை {யமனின் முன்னிலைக்கு} அனுப்பினான்.(5) மேலும், ஏதோவொரு தேர்வீரன், ஏதோவொரு பகைவனை அவனது சாரதி மற்றும் குதிரைகளோடு யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான். ஒரே யானையில் ஏதோ ஒரு பாகன், தேர்வீரர்கள் பலரையும், குதிரைவீரர்களையும் {யமனுலகு} அனுப்பினான்.(6) அதேபோலவே பார்த்தனும் {அர்ஜுனனும்}, {தன்} கணை மேகங்களைக் கொண்டு, பகைவருக்குச் சொந்தமான சாரதிகள் மற்றும் குதிரைகளோடு கூடிய தேர்கள் பலவற்றையும், சாரதிகளோடு கூடிய யானைகளையும், குதிரைகளையும், காலாட்படைவீரர்களையும் {யமனுலகு} அனுப்பினான்.(7) அந்தப் போரில் கிருபரும், சிகண்டியும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர், அதே வேளையில், சாத்யகி துரியோதனனை எதிர்த்துச் சென்றான். மேலும் சுருதசிரவஸ், துரோணர் மகனோடும் {அஸ்வத்தாமனோடும்}, யுதாமன்யு சித்திரசேனனோடும் மோதினர்.(8)
பெரும் சிருஞ்சயத் தேர்வீரனான உத்தமௌஜஸ், கர்ணனின் மகனான சுஷேணனுடன் மோதினான், அதேவேளையில் சகாதேவன், வலிமைமிக்கக் காளையை எதிர்க்கும் பசித்த சிங்கம் ஒன்றைப் போலக் காந்தாரர்களின் மன்னன் சகுனியை எதிர்த்து விரைந்தான்.(9) நகுலனின் மகனான இளமைநிறைந்த சதானீகன், கணைமாரியை ஏவியபடியே கர்ணனின் மகனான இளமைநிறைந்த விருஷசேனனை எதிர்த்து விரைந்தான். கர்ணனின் வீர மகனும் {விருஷசேனனும்}, அந்தப் பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} மகனை {சதானீகனை} கணைகள் பலவற்றால் தாக்கினான்.(10) போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனும், தேர்வீரர்களில் காளையுமான அந்த மாத்ரியின் மகன் நகுலன் கிருதவர்மனைத் தாக்கினான். பாஞ்சாலர்களின் மன்னனும், யக்ஞசேனனின் {துருபதனின்} மகனுமான திருஷ்டத்யும்னன், கௌரவப் படையின் தலைவனான கர்ணனைத் தன் படைகள் அனைத்தையும் கொண்டு தாக்கினான்.(11) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாரதப் படையில் ஒரு பகுதியாக அமைந்திருந்தவர்களும், பெருகியிருந்தவர்களுமான சம்சப்தகர்களின் படையோடு கூடிய துச்சாசனன், தடுக்கப்பட முடியாத வேகத்தைக் கொண்டவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான பீமனை அந்தப் போரில் சீற்றத்துடன் தாக்கினான்.(12)

வீர உத்தமௌஜஸ் தன் பலத்தை வெளிப்படுத்தி, கர்ணன் மகனை {சுஷேணனைத்} தாக்கி, அவனது தலையை அறுத்ததால், அது {அந்தத் தலை} பூமியையும், ஆகாயத்தையும் பேரொலியால் நிறைத்தபடி கீழே பூமியில் விழுந்தது.(13) சுஷேணனின் தலை தரையில் கிடப்பத்தைக் கண்டு, கர்ணன் கவலையால் நிறைந்தான். எனினும் சினத்தோடு கூடிய அவன் {கர்ணன்}, தன் மகனைக் கொன்றவனின் {உத்தமௌஜஸின்} குதிரைகள், தேர், கொடிமரம் ஆகியவற்றைக் கூரிய கணைகள் பலவற்றால் விரைவில் வெட்டி வீழ்த்தினான்.(14) அதே வேளையில் உத்தமௌஜஸ், கிருபரின் குதிரைகளைத் தன் கூரிய கணைகளால் துளைத்து, பிரகாசமான தன் வாளால் அவற்றையும், கிருபரின் பக்கங்களைப் பாதுகாத்த போர்வீரர்களையும் வெட்டி வீழ்த்தி, சிகண்டியின் தேரில் வேகமாக ஏறினான்.(15) கிருபர் தமது தேரை இழந்தவராக இருப்பதைக் கண்டவனும், தன் வாகனத்தில் இருந்தவனுமான சிகண்டி, அவரை {கிருபரைத்} தன் கணைகளால் தாக்க விரும்பவில்லை. அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கிருபரின் தேரைத் தன் தேரால் மறைத்துக் கொண்டு, சேற்றில் சிக்கிய காளையை மீட்பதைப் போலப் பின்னவரை {கிருபரை} மீட்டான்.(16)
அதேவேளையில், காற்று தேவனின் {வாயுத்தேவனின்} மகனான பீமன், தங்கக் கவசம் பூண்டு, கோடை காலத்தலில் அனைத்தையும் எரிக்கும் நடுப்பகல் சூரியனைப் போல, உமது மகன்களின் துருப்புகளைத் தன் கூரிய கணைகளால் எரிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(17)
----------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி - 75ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |