The royal conclave remained lying on the ground! | Shalya-Parva-Section-01 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவர்கள் என்ன செய்தனர் என்று கேட்ட ஜனமேஜயன்; கர்ணனின் படுகொலையால் துரியோதனன் அடைந்த துயரம்; படைத்தலைவனாக நியமிக்கப்பட்ட சல்லியன்; நடுப்பகலில் யுதிஷ்டிரனால் கொல்லப்பட்ட சல்லியன்; பீமசேனனால் கொல்லப்பட்ட துரியோதனன்; பாண்டவப் படையை இரவில் அழித்த மூவர்; சஞ்சயனின் சொற்களைக் கேட்டு மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்; அரச மகளிரின் துயரம்; திருதராஷ்டிரனுக்கு ஆறுதலளித்த விதுரன்...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.
ஜனமேஜயன், "ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, அந்தப் போரில் இவ்வாறு சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கர்ணன் கொல்லப்பட்ட பிறகு, கௌரவர்களில் (கொல்லப்படாமல்) எஞ்சிய சிலர் என்ன செய்தனர்?(1) வலிமையிலும், சக்தியிலும் பெருகியிருந்த (பாண்டவர்களின்) படையைக் கண்டு, குரு இளவரசனான துரியோதனன், அந்த நேரத்திற்குத் தகுந்ததாக நினைத்துப் பாண்டவர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான்?(2) இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே} எனக்குச் சொல்வீராக. என் மூதாதையரின் பெரும் சாதனைகளைக் கேட்பதில் நான் ஒருபோதும் சலிப்படைவதில்லை" என்று கேட்டான்.(3)
வைசம்பாயனர் சொன்னார், "கர்ணன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் மகனான சுயோதனன் {துரியோதனன்}, துன்பப்பெருங்கடலில் மூழ்கியவனாக, அனைத்துப் பக்கத்திலும் நம்பிக்கை இழந்த நிலையையே கண்டான்.(4) "ஐயோ, ஓ! கர்ணா, ஐயோ, ஓ! கர்ணா" என்று இடையறாத ஒப்பாரியில் ஈடுபட்ட அவன், பெரும் சிரமத்துடனும், தன் தரப்பில் கொல்லப்படாமல் எஞ்சிய மன்னர்கள் துணையுடனும் தன் பாசறையை அடைந்தான்.(5) சாத்திரங்கள் கற்பிக்கும் அற்புதக் காரணங்களைச் சொல்லி அம்மன்னர்கள் அவனைத் {துரியோதனனைத்} தேற்றினாலும் கூட, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலையை நினைத்து அவனது மனம் அமைதியடையவில்லை.(6) {பிறகு}, விதியும், தேவையும் அனைத்திலும் பலமிக்கவை என்று கருதிய அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, போரிடுவதென உறுதியாகத் தீர்மானித்தான்.(7) தன் படைகளின் தலைவனாக முறையாகச் சல்லியனை நியமித்த அந்த மன்னர்களில் காளை {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தன் படைகளில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்போர் துணையுடன் போரிடச் சென்றான்.(8)
அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தேவர்களுக்கும், அசுரரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பாகக் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது.(9) பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பேரழிவை ஏற்படுத்திய சல்லியன், பெரும் எண்ணிக்கையிலான தன் துருப்புகளை இழந்து, இறுதியாக நடுப்பகல் வேளையில் யுதிஷ்டிரனால் கொல்லப்பட்டான்.(10) அப்போது தன் நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரையும் இழந்த மன்னன் துரியோதனன், போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடி, தன் எதிரிகள் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஒரு பயங்கரமான தடாகத்தின் ஆழத்திற்குள் ஊடுருவிச் சென்றான்.(11) அந்நாளின் பிற்பகல் வேளையில், அந்தத் தடாகத்தை வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரால் சூழச் செய்த பீமசேனன், துரியோதனனை {தடாகத்திற்கு} வெளியே வரவைத்து, தன் பலத்தை வெளிப்படுத்தி வேகமாக அவனை {துரியோதனனைக்} கொன்றான்.(12)
துரியோதனன் கொல்லப்பட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, (குரு தரப்பில்) கொல்லப்படாமல் எஞ்சிய மூன்று தேரவீரர்கள் (அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்), சினத்தால் நிறைந்து, இரவில் பாஞ்சாலத் துருப்புகளைக் கொன்றனர்.(13) அடுத்த நாள் காலையில், முகாமில் இருந்து புறப்பட்ட சஞ்சயன், சோகத்தாலும், கவலையாலும் நிறைந்து, உற்சாகமற்ற நிலையில் நகருக்குள் (குரு தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்}) நுழைந்தான்.(14) நகருக்குள் நுழைந்த அந்தச் சூதன் சஞ்சயன், துயரால் தன் கரங்களை உயர்த்தியபடியும், அங்கங்கள் நடுங்கிக் கொண்டும், மன்னனின் {திருதராஷ்டிரனின்} அரண்மனைக்குள் நுழைந்தான்.(15)
துயரால் நிறைந்த அவன் {சஞ்சயன்}, ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, உரக்க அழுதபடியே, "ஐயோ, ஓ! மன்னா! ஐயோ, உயர் ஆன்ம ஏகாதிபதியின் {துரியோதனனின்} கொலையால் நாம் அனைவரும் அழிவையடைந்தோம்.(16) ஐயோ, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான வலிமையை உடைய நமது கூட்டாளிகள் {மன்னர்கள்} அனைவரும் பாண்டவர்களால் கொல்லப்பட்டதால், காலனே அனைத்திலும் பலமிக்கவனும், தன் வழியில் கோணலானவனும் ஆவான்[1]." என்றான்.(17) ஓ! மன்னா {ஜனமேஜயா}, "சஞ்சயன் அந்த அவல நிலையில் நகருக்கு திரும்பியதைக் கண்ட மக்கள் அனைவரும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பெரும் துயரால் நிறைந்து, "ஐயோ, ஓ! மன்னா!" என்று சொல்லி உரக்க அழுதனர்.(18) ஓ! மனிதர்களில் புலியே, துரியோதனனின் மரணத்தைக் கேட்டு, குழந்தைகள் உட்பட அனைத்துப் பக்கங்களிலும் மொத்த நகரமும் ஒப்பாரியிட்டது.(19) துன்பத்தில் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருந்த ஆண்களும், பெண்களும் என அனைவரும், தங்கள் புலனுணர்வை இழந்து, பைத்தியக்காரர்களுக்கு ஒப்பாக அங்கேயும் இங்கேயும் ஓடுவதை நாங்கள் கண்டோம்[2].(20)
[1] "பம்பாயப் பதிப்பில் 17ம் சுலோகத்தின் முதல் வரி வேறுவகையில் இருக்கிறது. அந்த உரை ஏற்கப்பட்டால், மொழிபெயர்ப்பானது, ’ஓ மன்னா, விதியே அனைத்திலும் பலமானது, ஆற்றலோ கனியற்றது’ என்று ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில், "ஐயோ, காலனே பலமிக்கவன், அவனது வழிகளோ கடினமானவை" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "எந்தக் காலத்தினால் இந்திரனுக்கு நிகரான பலமுடைய அரசர்களெல்லாரும் கொல்லப்பட்டார்களோ அந்தக் காலமானது மிக்கப் பலமுடையது. அந்தோ! அவ்விதமான கதியும் சிறந்தது" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலோ முற்றிலும் வேறுவகையில், "இன்னும் காலமாகவில்லையெனினும், மிகவும் பலமிக்கவனான அவன் {துரியோதனன்} தன் உயர்ந்த நோக்கத்தை அடைந்தான்" என்றிருக்கிறது.[2] இந்த வரி ஐயத்திற்கிடமானதே. நாங்கள் கண்டோம் என்று வைசம்பாயனர் சொல்கிறார் என்றால் அந்நேரத்தில் அவர் அஸ்தினாபுரத்தில் இருந்திருக்க வேண்டும். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இந்தத் தகவல் இல்லை. பிபேக்த் திப்ராயின் பதிப்பிலோ, "மனிதர்களில் காளையரான மூவர் அங்கே ஓடிக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம். அவர்கள் தங்கள் புலன்களை இழந்திருந்தனர். அவர்கள் துயரத்தால் பித்துப்பிடித்திருந்தனர். அவர்கள் மிகவும் பீடிக்கப்பட்டிருந்தனர்" என்றிருக்கிறது. மேலும் அடிக்குறிப்பாக, "இஃது எழுத்துப் பிழையாக இருக்க வேண்டும். sthree என்பது three ஆகியிருக்க வேண்டும். இங்கே ஆண்களும், பெண்களும் ஓடிக் கொண்டிருந்தனர் என்றே படிக்க வேண்டும்" என்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மிகவும் கலங்கிப் போயிருந்த அந்தச் சூதன் சஞ்சயன், மன்னனின் {திருதராஷ்டிரனின்} வசிப்பிடத்திற்குள் நுழைந்து, ஏகாதிபதிகளில் முதன்மையானவனும், தன் கண்களையே அறிவாகக் கொண்டவனுமான அந்த மனிதர்களின் தலைவனை {திருதராஷ்டிரனைக்} கண்டான்.(21) பாவமற்ற ஏகாதிபதியான அந்தப் பாரதக் குலத்தின் தலைவன் {திருதராஷ்டிரன்}, தன் மருமகள்கள், காந்தாரி, விதுரன் ஆகியோரும், எப்போதும் தன் நலன்விரும்பிகளாக இருந்த பிற நண்பர்களும், உறவினர்களும் சூழ அமர்ந்திருப்பதையும்,(22) கர்ணனின் மரணத்தையே நினைத்துக் கொண்டிருப்பதையும் கண்ட அந்தச் சூதன் சஞ்சயன், ஓ! ஜனமேஜயா, இதயம் நிறைந்த துயரத்துடனும், கண்ணீரால் தடைபட்ட குரலுடனும் அழுதுகொண்டே அவனிடம், "ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, நான் சஞ்சயன் {வந்திருக்கிறேன்}. ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் உம்மை வணங்குகிறேன்.(23,24) மத்ரர்களின் ஆட்சியாளன் சல்லியன் கொல்லப்பட்டான். அதே போலச் சுபலனின் மகனான சகுனியும், அந்தச் சூதாடியின் வீர மகனான உலூகனும் கொல்லப்பட்டனர்.(25)
சம்சப்தகர்கள் அனைவரும், சகர்களோடு கூடிய காம்போஜர்களும், மிலேச்சர்களும், மலைவாசிகளும், யவனர்களும் கூடக் கொல்லப்பட்டனர்.(26) ஓ! ஏகதிபதி {திருதராஷ்டிரரே}, கிழக்கத்தியர்களும், தெற்கத்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, வடக்கத்தியர்கள் மற்றும் மேற்கத்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி, மன்னர்கள் அனைவரும், இளவரசர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். மன்னன் துரியோதனனும், பாண்டுவின் மகனால் {பீமனால்}, அவனது சபத்தின்படியே கொல்லப்பட்டான்.(28) ஓ! ஏகாதிபதி, முறிந்த தொடைகளுடன், குருதியில் நனைந்து, புழுதியில் இப்போது அவன் கிடக்கிறான். ஓ! மன்னா, திருஷ்டத்யும்னனும், வெல்லப்பட முடியாத சிகண்டியும் கூடக் கொல்லப்பட்டனர்.(29) ஓ! மன்னா, உத்தமௌஜஸ், யுதாமன்யு, பிரபத்ரகர்கள், மனிதர்களில் புலிகளான பாஞ்சாலர்கள் மற்றும் சேதிகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.(30)
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரும், திரௌபதியின் மகன்களும் (ஐவரும்) கூடக் கொல்லப்பட்டனர். வீரனும், கர்ணனின் வலிமைமிக்க மகனுமான விருஷசேனனும் கொல்லப்பட்டான்.(31) (அங்கே கூடியிருந்த) மனிதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். யானைகள் அனைத்தும் கொல்லப்பட்டன. ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்கள் அனைவரும் போரில் வீழ்ந்தனர், குதிரைகள் அனைத்தும்கூட வீழ்ந்தன.(32) ஓ! தலைவா, உமது தரப்பில் மிகச் சிலரே உயிரோடுள்ளனர். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டதன் விளைவாக,(33) காலத்தால் திகைப்படையச் செய்யப்பட்ட இந்த உலகமானது இப்போது பெண்களை மட்டுமே கொண்டிருக்கிறது. பாண்டவர்களின் தரப்பில் எழுவர் உயிரோடிருக்கின்றனர், தார்தராஷ்டிரர்களிலோ மூவர் அவ்வாறு {உயிரோடு} இருக்கின்றனர்.(34) ஐந்து (பாண்டவ) சகோதரர்கள், வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, கிருபர், கிருதவர்மன், வெற்றியாளர்களில் முதன்மையான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரே அவர்கள்.(35)
ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் திரட்டப்பட்ட அக்ஷௌஹிணிகள் அனைத்திலும் பிழைத்திருப்போர் இந்தத் தேர்வீரர்கள் மூவர் மட்டுமே.(36) பிழைத்திருப்போர் இவர்களே, எஞ்சியோர் {அனைவரும்} அழிந்துவிட்டனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனனையும், (பாண்டவர்களிடம்) அவன் கொண்ட பகைமையையும் காரணமாகக் கொண்டு, காலத்தால் மொத்த உலகமும் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது" என்றான் {சஞ்சயன்}."(37)
ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் திரட்டப்பட்ட அக்ஷௌஹிணிகள் அனைத்திலும் பிழைத்திருப்போர் இந்தத் தேர்வீரர்கள் மூவர் மட்டுமே.(36) பிழைத்திருப்போர் இவர்களே, எஞ்சியோர் {அனைவரும்} அழிந்துவிட்டனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனனையும், (பாண்டவர்களிடம்) அவன் கொண்ட பகைமையையும் காரணமாகக் கொண்டு, காலத்தால் மொத்த உலகமும் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது" என்றான் {சஞ்சயன்}."(37)
விதுரர் |
தன் புலனுணர்வை மீண்டும் அடைந்த அம்மன்னன் {திருதராஷ்டிரன்}, நடுங்கும் அங்கங்களுடனும், கவலை நிறைந்த இதயத்துடனும் தன் முகத்தை அனைத்துப் பக்கங்களிலும் திருப்பியபடி, க்ஷத்ரியிடம் (விதுரனிடம்) இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(43) "ஓ! கல்விமானான க்ஷத்ரியே {விதுரா}, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீயே இப்போது எனது புகலிடமாவாய். என் மகன்கள் அனைவரையும் இழந்த நான், {இப்போது} தலைவனற்றவனாக இருக்கிறேன்" என்றான்.(44) இதைச் சொன்ன அவன், மீண்டும் தன் புலனுணர்வுகளை இழந்து கீழே விழுந்தான். கீழே விழுந்த அவனைக் கண்டவர்களும், அங்கிருந்தவர்களுமான அவனது உறவினர்கள் அனைவரும்,(45) அவன் மீது குளிர்ந்த நீரைத் தெளித்து, விசிறிகளால் அவனுக்கு வீசியும்விட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு தேறுதலடைந்த அந்தப் பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்},(46) தன் மகன்களுடைய மரணத்தின் நிமித்தமாகக் கவலையால் பீடிக்கபட்டு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குடத்திலிட்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடியே அமைதியாக இருந்தான்.(47) இவ்வாறு பீடிக்கப்பட்ட மன்னனைக் கண்டு சஞ்சயனும் அழுதான். மங்கையர் அனைவரும், பெரும் புகழைக் கொண்ட காந்தாரியும் கூட அவ்வாறே செய்தனர் {அழுதனர்}.(48)
ஓ! மனிதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, மீண்டும் மீண்டும் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன், நீண்ட நேரத்திற்குப் பிறகு, விதுரனிடம்,(49) "மகளிர் அனைவரும் செல்லட்டும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும், இந்த நண்பர்கள் அனைவரும் செல்லட்டும். என் மனம் மிகவும் கலங்கியிருக்கிறது" என்றான்.(50) இவ்வாறு சொல்லப்பட்ட விதுரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மீண்டும் மீண்டும் நடுங்கிக் கொண்டே மெதுவாக மங்கையரை அனுப்பிவைத்தான்.(51) ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஆழமாகப் பீடிக்கப்பட்ட மன்னனைக் கண்டு, அந்த மங்கையர் அனைவரும், நண்பர்கள் அனைவரும் {அங்கிருந்து} சென்றனர்.(52) அப்போது சஞ்சயன், ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, புலனுணர்வு மீண்டவனும், பெரும் துன்பத்தால் அழுது கொண்டிருந்தவனுமான மன்னனை உற்சாகமில்லாமல் கண்டான்.(53) பிறகு விதுரன், இடையறாமல் அழுது கொண்டிருந்த அந்த மனிதர்களின் ஆட்சியாளனுக்கு {திருதராஷ்டிரனுக்கு}, கூப்பிய கரங்களுடனும், இனிய சொற்களுடனும் தேறுதல் கூறினான்" {என்றார் வைசம்பாயனர்}.(54)
ஆங்கிலத்தில் | In English |