Thursday, September 28, 2017

கிண்டில் மின்புத்தகங்கள் - வாங்குவதும், படிப்பதும் எவ்வாறு?


இன்றைய நவீன உலகில் புத்தகங்களைத் தேடிப் படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லைதான். இருப்பினும், புத்தகங்கள் உங்கள் விரல் நுனியில் இருந்தால், கிடைக்கும் சொற்ப நேரங்களில் கூட, நீங்கள் விரும்பிய புத்தகங்களை, அல்லது அறிந்து கொள்ள விரும்பும் செய்திகளைப் படிக்கலாம் இல்லையா?

அதற்கு வழிவகுப்பவைதான் மின்புத்தகங்கள். பிடிஎப், மொபி, இபப் (pdf, mobi, epub) என்று ஏகப்பட்ட வகைகளில் மின்புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழ்ச்சூழலில் தற்போது வரை அவை அந்நியமாகவே இருப்பினும், எதிர்காலத்தில் அவையே படிப்பதற்கான எளிய வழிமுறைகளாக உருவாகும். அப்படிப்பட்ட வழிமுறைகளில் ஒருவகைதான் அமேசான் வழங்கும் கிண்டில் மென்பொருளில் படிக்கக்கூடிய மின்புத்தகங்களாகும்.


கிண்டில் படிப்பான் (வன்பொருள்)
கிண்டில் என்பது அமேசான் நிறுவனம் வழங்கும் மின்புத்தக படிப்பானாகும். முதலில் வன்பொருள் கருவியாக (Kindle reader) அறிமுகமாகிய இப்படிப்பான், இப்போது ஆண்ட்ராய்டு மொபைல்களிலும், டேப்லட்டுகளிலும் மின்புத்தகங்களைப் படிக்க வழி ஏற்படுத்தக்கூடிய மென்பொருளாகவும் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கிறது. அம்மென்பொருளை அமேசான், கூகிள் பிளேஸ்டோர், சிநெட் எனப் பல்வேறு தளங்களின் மூலம் பதிவிறக்கிக் கொள்ள முடிகிறது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கக்கூடிய அனைத்து வன்பொருள்களிலும் (Mobile/Tablet/PC) இந்தக் கிண்டில் மென்பெருளைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். மொபைல் மற்றும் டேப்லட்களில் இந்த மென்பொருளை நிறுவிக்கொண்டால் தமிழ் மின்புத்தகங்களை எளிதாகப் படிக்கலாம்.

கிண்டில் மென்பொருளைப் பதிவிறக்கி, தமிழ் மின்புத்தகங்களைப் படிப்பதெவ்வாறு?

1. https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle&hl=en என்ற சுட்டியில் ஆண்ட்ராய்டுக்கான  கிண்டில் மென்பொருளைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள பிளேஸ்டோர் Appல் Kindle என்று தேடி நிறுவிக் கொள்ளலாம்.
2. இந்த மென்பொருளை உங்கள் வன்பொருளில் (Mobile/Tablet) நிறுவிக் கொண்ட பிறகு, அதனுள் நுழையுங்கள்.
3. இப்போது Register now to get started என்ற ஒரு தேர்வு தோன்றும். அதில் மின்னஞ்சல் முகவரியும், கடவுச் சொல்லும் கேட்கப்படும்.
அ. நீங்கள் ஏற்கனவே அமேசான் வலைத்தளத்தில் பொருட்கள் வாங்கிப் பழக்கப்பட்டவராக இருப்பின், அதே மின்னஞ்சல் முகவரியும், கடவுச் சொல்லுமே இதற்குப் போதும். அதையே உள்ளீடு செய்யலாம்.

ஆ. அமேசானில் இதுவரை பொருட்கள் வாங்காதவராக இருப்பின், அதே ஸ்கிரீனின் இறுதியில் Don't have an Amazon account Create one now என்ற தேர்வைச் செய்யவும். அடுத்து வரும் ஸ்கிரீனில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும்,  நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு புதிய கடவுச்சொல்லையும் உள்ளீடு செய்து, அமேசானில் புதிய கணக்கொன்றைத் தொடங்கிக் கொள்ளுங்கள்.

4. உங்கள் மின்னஞ்சல் பதிவான பிறகு, அந்த மென்பொருள் உங்களை உள்ளே அனுமதிக்கும்

அடுத்து தோன்றும் திரையில், அந்தக் கிண்டில் மென்பொருளின் மேல் வலது மூலையில் (Top right corner) வண்டி போன்ற அடையாளத்துடன் இருக்கும் கிண்டில் ஸ்டோரை (Kindle Store) தேர்வைச் செய்யவும்.

5. அந்தக் கிண்டில் ஸ்டோருக்குள் search என்றொரு தேர்வு இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்து, அந்தத் தேடு பொறியில், நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகத்தின் பெயர், அல்லது எழுத்தாளரின் பெயர், அல்லது பதிப்பகத்தின் பெயரை உள்ளீடு செய்தால், அவற்றின் விலைப்பட்டியல் காட்சியில் தோன்றும்.

"மஹாபாரதம்", "அருட்செல்வப்பேரரசன்" என்று தமிழிலோ, "Arul Selva Perarasan", "arul selva", "perarasan" என்று ஆங்கிலத்திலோ உள்ளீடு செய்து தேடினால், மஹாபாரதம் தொடர்பான நமது மின்புத்தகங்களின் விலைப்பட்டியல் தோன்றும்.
6. அதில் நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தால், Buy now with one click அல்லது Buy now என்ற தேர்வு வரும். அதைத் தேர்வு செய்து, உங்கள் வங்கிக் கணக்கின் மூலமாகவோ, ஏடிஎம் கார்டு மூலமாகவோ அந்த மின்புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய சிறிது நேரத்தில் அந்த மின்புத்தகம் உங்கள் கிண்டில் மென்பொருளுக்குள் பதிவிறங்கும்.
கிண்டிலுக்கு வெளியே வந்து, நமது முழுமஹாபாரதம் வலைப்பூவில் http://mahabharatham.arasan.info/p/mahabharata-tamil-short-stories-sidebar.html என்ற சுட்டிக்கு சென்றாலும் மேற்கண்ட புத்தகங்களின் விலைப்பட்டியல் கிடைக்கும். அதில் நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகத்தின் சுட்டியைத் தேர்வு செய்தால், அது உங்களை அப்புத்தகத்தின் அமேசான் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அங்கே Buy now என்ற தேர்வைச் செய்து மேற்கண்ட முறையிலேயே அந்த மின்புத்தக்கத்தை வாங்கிக் கொள்ளலாம். அடுத்து நீங்கள் கிண்டில் மென்பொருளுக்குள் நுழைந்த  சிறிது நேரத்தில் அந்த மின்புத்தகம் உங்கள் கிண்டில் மென்பொருளுக்குள் பதிவிறங்கிக் கொள்ளும்.

இவ்வாறு எத்தனை மின்புத்தகங்களை வேண்டுமானாலும் பதிவிறக்கிக் கொள்ளலாம். அவை எப்போதும் உங்கள் மென்பொருளிலேயே உங்கள் கணக்கில் இருக்கும். மேலும் நீங்கள் எத்தனை வன்பொருள்களை வைத்திருந்தாலும், அவற்றிலும் கிண்டில் மென்பொருளைப் பதிவிறக்கி, அதே மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்தால், நீங்கள் இதுவரை வாங்கிய மின்புத்தகங்கள் அனைத்தும் அவற்றிலும் பதிவிறங்கிக் கொள்ளும்.

பிறகு நீங்கள் உங்கள் மென்பொருளின் லைப்ரரியில் பதிவிறங்கியிருக்கும் அப்புத்தகங்களை ஒவ்வொன்றாகத் திறந்து படிக்கலாம். கிண்டில் மென்பொருளில் எழுத்துருக்களின் அளவை மாற்ற, பின்புற நிறத்தை மாற்ற, Portrait and Lanscape ஆக மாற்றிக் கொள்ள என்று நிறைய தேர்வுகள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்குப் பிடித்தமானவற்றைத் தேர்வு செய்து, ஓய்வு கிடைக்கும் எந்த இடத்திலும்  எளிமையாகவும், இனிமையாகவும் படிக்கலாம்.

மஹாபாரதம் சம்பந்தமாகக் கிண்டிலில் கிடைக்கக்கூடிய நமது மின்புத்தகங்கள்.

ஜெயம்
1. வெற்றிமுழக்கம்  (ஜெயம் - 1) - ₹.177/-

சிறுகதைகள்
1. உதங்க சபதம்(கிண்டில் பதிப்பு - கதை 1)- ₹.49/-
2. கருடனும்! அமுதமும்!!(கிண்டில் பதிப்பு - கதை 2)- ₹.56/-
3. நாகர்களும்! ஆஸ்தீகரும்!!(கிண்டில் பதிப்பு - கதை 3)- ₹.75/-
4. துஷ்யந்தன் சகுந்தலை(கிண்டில் பதிப்பு - கதை 4)- ₹.70/-
5. யயாதி (கிண்டில் பதிப்பு - கதை 5)- ₹.127/-

கதைத்தொகுப்பு
1. நாகவேள்வி!(கிண்டில் பதிப்பு - கதைத் தொகுப்பு 1)- ₹.130/-
(சிறுகதைகள் பட்டியலில் காணப்படும் முதல் மூன்று புத்தகங்களின் தொகுப்பு)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்