History of Charvaka! | Shanti-Parva-Section-39 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 39)
பதிவின் சுருக்கம் : சார்வாகனுடைய வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது உலகளாவிய அறிவு படைத்தவனான தேவகியின் மகன் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் தம்பிகளுடன் அங்கே நின்று கொண்டிருந்த மன்னன் யுதிஷ்டிரனிடம்,(1) "ஓ! ஐயா, இவ்வுலகில் பிராமணர்கள் எப்போதும் என் வழிபாட்டுக்குரியவராவர். பேச்சில் நஞ்சு கொண்டவர்களும், நிறைவு செய்ய எளிதானவர்களுமான அவர்களே {பிராமணர்களே} இந்தப் பூமியில் தேவர்களாவர்.(2) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, முன்பு கிருத காலத்தில், சார்வாகன் என்ற பெயருடைய ராட்சசன் ஒருவன், பதரியில் பல வருடங்கள் கடுந்தவமிருந்தான்.(3) தம்மிடம் வரங்களை வேண்டுமாறு பிரம்மன் மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக அந்த ராட்சசன், அண்டத்தின் அனைத்துயிரிடம் கொண்ட அச்சத்திலிருந்தும் எதிர்ப்புணர்வு கொள்ளும் {எவ்வுயிரிடமும் அச்சமடையாமல் இருக்கும்} வரத்தை வேண்டினான்.(4) அண்டத்தின் தலைவன் {பிரம்மன்}, பிராமணர்களுக்குக் குற்றமிழைக்காமல் கவனத்துடன் இருக்கும்வரை, அனைத்துயிரிடமும் அச்சமடையாத எதிர்ப்புணர்வைக் கொள்வான் என்ற உயர்ந்த வரத்தை அவனுக்கு அளித்தான்.(5)
பாவம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனும், கொடுஞ்செயல்களைப் புரிபவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த ராட்சசன் {சார்வாகன்}, வரத்தை அடைந்ததும் தேவர்களுக்குத் துன்பத்தை அளிக்கத் தொடங்கினான்.(6) அந்த ராட்சசனின் வலிமையால் துன்புற்ற தேவர்கள் ஒன்றாகக் கூடி தங்கள் எதிரியின் அழிவைத் தீர்மானிக்கப் பிரம்மனை அணுகினர்.(7) ஓ! பாரதரே, அழிவில்லாதவனும், மாற்றமற்றவனுமான அந்தத்தேவன் {பிரம்மன்} அவர்களிடம், "இந்த ராட்சசன் விரைவில் இறப்பதற்கான வழிமுறைகளை நான் ஏற்கனவே ஏற்பாடு செய்துவிட்டேன்.(8) துரியோதனன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருப்பான். மனிதர்களுக்கு மத்தியில் அவன் {துரியோதனன்} இந்தப் பொல்லாதவனின் {சார்வாகனனின்} நண்பனாக இருப்பான். அவன் {துரியோதனன்} மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த ராட்சசன் பிராமணர்களை அவமதிப்பான்.(9) அவர்களுக்கு இவன் இழைக்கும் தீமையால் குட்டப்படுபவர்களும், பேச்சையே தங்கள் வலிமையாகக் கொண்டவர்களுமான அந்தப் பிராமணர்கள், கோபத்தால் இவனை {சார்வாகனை} நிந்திப்பார்கள், அதன் பேரில் அவன் அழிவைச் சந்திப்பான்" என்றான்.(10)
ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {ஜனமேஜயா}, அந்த ராட்சசன் சார்வாகனே இப்போது பிராமணர்களின் சாபத்தால் உயிரை இழந்து கீழே கிடக்கிறான். ஓ! பாரதக் குலத்தின் காளையே துயருக்கு ஆளாகாதீர்.(11) ஓ! மன்னா, உமது உறவினர்கள் அனைவரும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும்போதே அழிவடைந்தனர். க்ஷத்திரியர்களில் காளைகளும், உயர் ஆன்ம வீரர்களுமான அவர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். இப்போது நீர் உமது கடமைகளை ஆற்றுவீராக. ஓ! மங்காப் புகழ் கொண்டவரே, துயரம் உமதாகாதிருக்கட்டும். உமது எதிரிகளைக் கொன்று, உமது குடிமக்களைக் காத்து, பிராமணர்களை வழிபடுவீராக" என்றான் {கிருஷ்ணன்}".(13)
சாந்திபர்வம் பகுதி – 39ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |