The charecteristics of a Brahmana! | Shanti-Parva-Section-76 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 76)
பதிவின் சுருக்கம் : பிராமணனின் பண்புகளையும், அவன் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, பிராமணர்களில் சிலர் தங்கள் வகைக்குரிய கடமைகளில் ஈடுபடுகின்றனர், அதே வேளையில் வேறு சிலரோ வேறு கடமைகளில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு வகையினருக்கிடையிலான வேறுபாட்டை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, கல்விமான்களும், நற்பண்புகளைக் கொண்டோரும், சமபார்வை கொண்டோருமான பிராமணர்கள் பிரம்மனுக்கு இணையானவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(2)
{வேதங்களான} ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்களை அறிந்தவர்களும், தங்கள் வகைக்கான நடைமுறைகளில் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான அவர்கள் தேவர்களுக்கு இணையானவர்களாவர்.(3)
எனினும், அவர்களில் {பிராமணர்களில்} நற்பிறவியற்றோர், தங்கள் வகைக்குரிய கடமைகளில் அர்ப்பணிப்பில்லாதோர், அதையும் தவிரத் தீய நடைமுறைகளைச் செய்வோர் ஆகியோர் சூத்திரர்களைப் போன்றோராவர்.(4)
ஓர் அறம் சார்ந்த மன்னன், வேதமறியாதவர்களும், வழிபடுவதற்குத் தங்கள் சொந்த நெருப்புகள் இல்லாதவர்களுமான பிராமணர்களைக் கப்பம் கட்டும்படியும், கட்டணமில்லாமல் பொதுச் சேவையில் ஈடுபடும்படியும் பணிக்க வேண்டும்.(5)

நீதிமன்றங்களில் மக்களை அழைக்க நியப்பட்டவர்கள் கட்டணத்தின் நிமித்தம் மற்றவர்களுக்காக வழிபாடுகளைச் செய்பவர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திர்களின் வேள்விகளைச் செய்பவர்கள், மொத்த கிராமத்தின் சார்பாக வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுபவர்கள் ஆகிய இந்த ஐவரும் பிராமணர்களுக்கு மத்தியில் சண்டாளர்களாகக் கருதத்தக்கவர்களாவர்[1].(6)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் ரித்விக்குகள், புரோகிதர்கள், அமைச்சர்கள், தூதர்கள் ஆகியோர் க்ஷத்திரியர்களுக்கு இணையானவர்களாவார்கள்.(7)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் குதிரைகள், அல்லது யானைகள், அல்லது தேர்களைச் செலுத்துபவர்களும், காலாட்படை வீரர்களும் வைசியர்களுக்கு இணையானவர்களாவார்கள்.(8)
மன்னனின் கருவூலம் நிரம்பவில்லையெனில், அவன் இவர்களிடம் இருந்து கப்பம் {வரி} வசூலிக்கலாம். எனினும், கப்பம் திரட்டும்போது, அம்மன்னன், தேவர்களுக்கோ, (தங்கள் நடத்தையால்) பிரம்மனுக்கோ இணையான பிராமணர்களைத் தவிர்க்க வேண்டும்.(9) பிராமணர்களைத் தவிர்த்த மற்ற வகையினர் அனைவருடைய செல்வங்களுக்கும் மன்னனே தலைவன் என்று வேதங்கள் சொல்கின்றன. சட்டப்படியான தங்கள் கடமைகளில் இருந்து தவறிய பிராமணர்களின் செல்வத்தையும் அவன் எடுத்துக் கொள்ளலாம். (10)

[1] கும்பகோணம் பதிப்பில், "தர்மாதிகாரம் செய்பவர்களும், கூலி வாங்கிக் கொண்டு தேவர்களைப் பூஜிப்பவர்களும், சோதிடம் சொல்லிப் பிழைப்பவர்களும், கிராம ஸமுதாயத்திற்கு யாகம் செய்பவர்களும், கப்பலேறிக் கடலில் செல்லுகிறவர்களுமான இவ்வைந்துபேர்களும் பிராம்மணர்களுள் சண்டாளரென்று சொல்லப்படுவார்கள்" என்றிருக்கிறது.
தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களிடம் ஒரு மன்னன் எந்த அலட்சியமும் கொள்ளக்கூடாது. தன் மக்களை அறம்சார்ந்தவர்களாக்கும் நிமித்தமாக அவன், சிறந்தவர்களிடம் இருந்து அவர்களைப் பிரித்துத் தண்டிக்க வேண்டும்.(11) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, எவனுடைய ஆட்சிப்பகுதியில் ஒரு பிராமணன் கள்வனாகிறானோ, அந்தக் கெட்ட காரியத்திற்குக் காரணம் அந்த மன்னனே என்று கல்விமான்கள் கருதுகின்றனர்.(12) வேதங்களை அறிந்தவனும், நோன்புகளை நோற்பவனுமான ஒரு பிராமணன், தன் வாழ்வாதாரத்தைத் தாங்கிக் கொள்ளும் தேவைகளுக்காக ஒரு கள்வனாக மாறினால், அத்தேவைகளைக் கொடுத்து அவனை ஆதரிக்க வேண்டியது மன்னனின் கடமையாகும்.(13) ஓ! எதிரிகளை எரிப்பவனே, அவனைத் தாங்கிக் கொள்வதற்கான பொருட்களைக் கொடுத்த பிறகும் அவன் களவைத் தவிர்க்கவில்லையெனில், அவன் அவனுடைய சொந்தங்களுடன் சேர்ந்து நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(14)
சாந்திபர்வம் பகுதி – 76ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |