Vices! | Shanti-Parva-Section-163 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 33)
பதிவின் சுருக்கம் : தீமையின் பலத்தையும், பதிமூன்று வகைத் தீமைகளையும், இத்தீமைகளுக்குக் காரணமான அறியாமையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...
Vices! | Shanti-Parva-Section-163 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இந்தப் பதிமூன்று தீமைகளும் உயிரினங்கள் அனைத்தின் வலிமைமிக்கப் பகைவர்களாகக் கருதப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி, இவை மனிதர்களை அனைத்துப் புறங்களில் இருந்தும் அணுகி மயக்குகின்றன.(3) உணர்வற்றவனாகவோ, கவனமற்றவனாக இருக்கும் ஒரு மனிதனை இவை தூண்டி துன்புறுத்துகின்றன. உண்மையில், இவை ஒருவனைக் கண்டதும், தங்கள் இரையின் மீது பாயும் ஓநாய்களைப் போலப் பாய்ந்து வலுவாகத் தாக்குகின்றன.(4) இவற்றில் இருந்தே அனைத்து வகைத் துன்பங்களும் உண்டாகின்றன. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அனைத்து மனிதர்களும் இஃதை எப்போதும் அறிந்திருக்க வேண்டும்.(5) ஓ! பூமியின் தலைவா, நான் இப்போது அவற்றின் மூலத்தையும், அவை சார்ந்திருக்கும் பொருட்களையும், அவற்றை அழிக்கும் வழிமுறைகளைக் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா, முதலில் கோபத்தின் மூலத்தைப் பற்றி உண்மையாகவும் விரிவாகவும் சொல்கிறேன், பிளவுபடாத கவனத்துடன் கேட்பாயாக.(6)
கோபம்<1> பேராசையில் இருந்து எழுகிறது. அது பிறரின் குற்றங்களில் இருந்து பலமடைகிறது. மன்னிக்கும் தன்மையினால் {பொறுமையினால்} அது செயலிழந்து மறைகிறது.(7)
காமத்தைப்<2> பொறுத்தவரையில் அது தீர்மானத்தில் இருந்து எழுகிறது. ஞானமுள்ள மனிதன் அதிலிருந்து தீர்மானத்துடன் திரும்பினால் அது மறைந்து, மரணமடைகிறது.(8)
பொறாமை<3> என்பது கோபம் மற்றும் பேராசையில் இருந்து உண்டாகிறது. கருணை மற்றும் தன்னறிவின் விளைவால் அது மறைகிறது. அனைத்து உயிரினங்களிடம் உண்டாகும் கருணையின் விளைவாலும், (அதன் தொடர்ச்சியாக வரும் ஞானத்தால்) உலகப் பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்வதாலும் அது மறைகிறது. பிற மக்களின் குறைகளைக் காணும்போதும் அஃது எழுகிறது. ஆனால், நுண்ணறிவு கொண்ட மனிதர்களின் உண்மை ஞானத்தின் விளைவால் அது விரைவாக மறைகிறது.(9)
கருத்தில் முடிவின்மை {குழப்பம் / அவிவேகம்}<4> அறியாமையில் தன் மூலத்தைக் கொண்டு, பாவம் நிறைந்த நடத்தையின் மூலம் உண்டாகிறது. இதனால் தாக்குண்ட மனிதன் அறிவிற் சிறந்தவர்களிடம் (அவர்களின் தோழமையிலும், ஆலோசனையிலும்) மகிழ்ச்சியடையும்போது, அந்தத் தீமை உடனே தன் தலையை மறைத்துக் கொள்கிறது.(10)

ஓ குரு குலத்தவனே, மனிதர்கள் முரண்பட்ட சாத்திரங்களைக் காண்கிறார்கள். அந்தச் சூழ்நிலையில் இருந்து பல்வேறு வகையான செயல்பாடுகளில் விருப்பம் {தீய இயல்பு / ப்ரவ்ருத்தி}<5> எழுகிறது. உண்மை ஞானம் ஈட்டப்படும்போது, அந்த விருப்பம் தணிக்கப்படுகிறது.(11) உடல் படைத்த ஓர் உயிரினத்தின் கவலை {சோகம்}<6>, பிரிவால் விழிப்படையும் பற்றிலிருந்து உண்டாகிறது. எனினும், மாண்டோர் மீள்வதில்லை என்பதை ஒருவன் அறியும்போது (அவன் உணரும் எந்தக் கவலையும்) தணிவடைகிறது.(12) பிற மக்களின் நன்மையைத் தாங்கிக் கொள்ள இயலாமை {பொறையின்மை / பரசவசத்தன்மை}<7>, கோபம் மற்றும் பேராசையில் இருந்து உண்டாகிறது. அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் கருணையின் மூலமும், பூமி சார்ந்த அனைத்து பொருட்களையும் அலட்சியம் செய்வதாலும் அது தணிவடைகிறது.(13)
வன்மமானது {மாத்ஸர்யமானது}<8>, வாய்மையைக் கைவிட்டு, தீமையில் ஈடுபடுவதால் உண்டாகிறது. ஓ! குழந்தாய், இந்தத் தீமை, ஞானிகளுக்காகவும், நல்லோருக்காகவும் காத்திருப்பதன் {அவர்களுக்குப் பணிவிடை செய்வதன்} விளைவால் மறைகிறது.(14)
மனிதர்களில் உள்ள செருக்கானது {மதமானது}<9>, பிறப்பு, கல்வி, செழிப்பு ஆகியவற்றில் இருந்து உண்டாகிறது. எனினும், இந்த மூன்றும் உண்மையில் அறியப்படும்போது, இந்தத் தீமையானது உடனே மறைகிறது.(15)

எரிச்சலானது {ஈர்ஷையானது}<10>, காமம், இழிந்த மற்றும் அற்ப மனிதர்களின் தோழமையில் மகிழ்ச்சியடைவது ஆகியவற்றால் எழுகிறது. ஞானத்தின் விளைவால் அஃது அழிவடைகிறது.(16)
அவதூறானது {நிந்தை}<11>, மனிதர்களின் இயல்பான நடையிலிருந்து {போக்கிலிருந்து} முரண்பட்ட (நடத்தைப்) பிழைகளில் இருந்தும், வெறுப்பை வெளிப்படுத்தும் ஏற்பில்லா {இனிமையற்ற} பேச்சுகளின் மூலமும் எழுகிறது. ஓ! மன்னா, மொத்த உலகத்தையும் ஆய்வு செய்வதால் {உலகத்தை நன்றாகப் பார்த்த பின்} அது மறைகிறது.(17)
தீங்கிழைப்பவன் பலமிக்கவனாக இருக்கும்போதும், தீங்கிழைக்கப்பட்டவன் அத்தீங்குக்குப் பழிதீர்க்க இயலாதபோதும் வெறுப்பு {அஸூயை}<12> வெளிப்படுகிறது. எனினும் அன்புடைமையின் மூலம் அஃது அடக்கப்படுகிறது.(18)
யாவரால் இவ்வுலகம் நிறைந்திருக்கிறதோ, அந்த ஆதரவற்ற, பரிதாபத்திற்குரிய மக்களைக் காணும்போது இரக்கம் {தயை}<13> உண்டாகிறது. ஒருவன் அறத்தின் வலிமையைப் புரிந்து கொள்ளும்போது உணர்ச்சிவயம் மறைகிறது[1].(19)

[1] "மேலே பட்டியலிடப்பட்ட குற்றங்களைப் போல இரக்கமும் இதயத்தைக் கலங்கடிக்கிறது, தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவும், ஆன்ம அமைதிக்காகவும் இது தவிர்க்கப்பட வேண்டும் என்று உரையாசிரியரால் {நீலகண்டரால்} விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பேராசையானது {அச்சம்}<14>, அறியாமையில் இருந்தே அனைத்து உயிரினங்களிலும் எழுகிறது. இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தின் நிலையாமையைக் கண்டு அதுவும் அழிவடைகிறது[2].(20) ஆன்ம அமைதியால் மட்டுமே இந்தப் பதிமூன்று குற்றங்களையும் அடக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பதிமூன்று குற்றங்களும்தான் திருதராஷ்டிரன் மகன்களைக் களங்கப்படுத்தின. வாய்மையை எப்போதும் விரும்பிய நீ, பெரியோரிடம் நீ கொண்ட மதிப்பின் விளைவால் இந்தத் தீமைகள் அனைத்தையும் வென்றிருக்கிறாய்" என்றார் {பீஷ்மர்}.(21)
[2] கும்பகோணம் பதிப்பில், "அஜ்ஞானத்திலிருந்து பயம் உண்டாகிறதாகக் காணப்படுகிறது. போகங்களுக்குள்ள நிலையற்ற தன்மையை அறிந்து அனுபவித்த பின் அந்தப் பயம் விலகுகிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இது சொல்லப்பட்டவில்லை. பேராசை / பயம் என்ற இந்தப் பண்பையும் எடுத்துக் கொண்டால் மொத்தம் 14 தீமைகளாகின்றன. கேள்வியின் வரிசையில் பதில்கள் அமையவில்லை.
சாந்திபர்வம் பகுதி – 163ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |