ஆதிபர்வம்
ஆதிபர்வத்தில் பௌசியம், பௌலோமம், ஆஸ்தீகம், அதிவப்ணாவதரணம்,(86) சம்பவம், அரக்கு மாளிகை எரியூட்டல் , ஹிடிம்பன் வதம் , அசுரர்கள் பகன் மற்றும் சித்ரரதன் வதம் , திரௌபதி சுயம்வரம்,(87) அதைத்தொடர்ந்து அவள் திருமணத்தை முன்னிட்டு நடக்கும் போர் , ,(88) அர்ஜுனன் நாடுகடந்து செல்தல் , சுபத்திரை அபகரிப்பு , பரிசு மற்றும் சீர்வரிசை , காண்டவ வனம் எரிந்துபோதல் ,(89) அசுர சிற்பி மயனுடனான சந்திப்பு ஆகியன இருக்கின்றன.
கங்குலியின் இந்த மொழிபெயர்ப்பில் ஆதிபர்வத்தில் மட்டும் மொத்தம் 236 பகுதிகளும் 8531 ஸ்லோகங்களும் இருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், “இருநூற்றிருபத்தேழு அத்தியாயங்களும், அவற்றில் எண்ணாயிரத்து தொண்ணெண்பத்து நான்கு ஸ்லோகங்களும் சொல்லப்பட்டன” என்றிருக்கிறது.
கிண்டிலில் வாங்க: https://www.amazon.com/dp/B079R8SK5V
கர்ண பர்வம்
கர்ண பர்வத்தில், (கர்ணனின்) தேரோட்டியாக ஞானியான மத்ர மன்னன் நியமிக்கப்பட்டது உரைக்கப்படுகிறது.(269) அதற்கடுத்து திரிபுரன் என்ற அசுரனின் வீழ்ச்சி பற்றிய வரலாறு சொல்லப்படுகிறது. போருக்குப் புறப்படுமுன்பு கர்ணனுக்கும் சல்லியனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கர்ணனை அவமதிக்க அன்னத்தையும் காக்கையையும் ஒப்பிட்டு கதை சொல்வது; அஸ்வத்தாமன் கையால் பாண்டியன் இறப்பது;(271) தண்டசேனன் மற்றும் தண்டன் ஆகியோரின் மரணம்; ஆபத்து என்றறிந்தும் அனைத்து வீரர்களுக்கு மத்தியில் கர்ணனுடன் யுதிஷ்டிரன் தனித்துப் போர் புரிவது; அர்ஜுனனும் யுதிஷ்டிரனும் ஒருவருக்கொருவர் கோபத்துடன் பேசிக்கொள்வது;(272,273) கிருஷ்ணன் அவர்களை அமைதிப்படுத்தல் ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. இந்தப் பர்வத்தில், பீமன் தன் சபதத்தை நிறைவு செய்யும் வகையில், துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து, அவனுடைய இதயத்தின் இரத்தத்தைக் குடிக்கும் காட்சி விவரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் நேருக்கு நேராகக் கர்ணனிடம் போர் புரிந்து அவனை வீழ்த்துவது வருகின்றது.(274,275) பாரதத்தை உரைப்பவர்கள் இதை எட்டாவது பர்வம் என்று சொல்கின்றனர். இஃது அறுபத்தொன்பது பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.(276,277)

கிண்டிலில் வாங்க: https://www.amazon.com/dp/B0787FGV18
சல்லிய பர்வம்
பெரும் போர்வீரர்கள் அனைவரும் வீழ்ந்துவிட்ட நிலையில், மத்ர மன்னன் சல்லியன் படையின் தலைவனாகிறான்.(278) தேர்வீரர்களுக்கிடையில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும் மோதல்கள் இங்கே விளக்கப்படுகின்றன.(279) பெரும் சல்லியன், நீதிமானான யுதிஷ்டிரனின் கையில் வீழ்கிறான். இந்தப் பர்வத்தில்தான் சகாதேவனின் கையால் சகுனி மரணத்தைத் தழுவுகிறான்.(280) பேரழிவுக்குப்பின்னர் சில துருப்புகளே எஞ்சியிருக்கும் நிலையில் தடாகத்திற்குச் சென்ற துரியோதனன், அந்த நீர் நிலைக்குள் ஓர் அறையை உண்டாக்கிக் கொண்டு அங்கே சிறிது நேரம் படுத்துக் கிடக்கிறான்.(281) வேடர்களிடம் இருந்து பீமனுக்கு இந்தச் செய்தி கிடைப்பது உரைக்கப்படுகிறது; நுண்ணறிவு கொண்ட யுதிஷ்டிரனுடைய அவமதிப்பான பேச்சுகளால் தூண்டப்பட்டு, அந்த அவமதிப்புகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நீர்நிலையில் இருந்து துரியோதனன் வெளிவருவது. அதன் பிறகு பீம துரியோதன கதாயுதப் போர்;(282,283) இத்தகு மோதல் நடந்து கொண்டிருக்கும்போது பலராமன் வருகை; சரஸ்வதி நதியின் புனிதத்தன்மை விவரிக்கப்படுகிறது;(284) கதாமோதல் தொடர்வது; போரில் தன் கதாயுதத்தால் பீமன் துரியோதனனின் தொடைகள் முறிப்பது. இவை அனைத்தும் இந்த அற்புதமான ஒன்பதாவது பர்வத்தில் விளக்கப்படுகின்றன.(285,286) மொத்தம் ஐம்பத்து ஒன்பது பகுதிகளில்[11] மூவாயிரத்து இருநூற்று இருபது பாடல்களில் கௌரவர்களின் புகழைப் பரப்புபவரான பெரும் வியாசர் இவற்றை விவரிக்கிறார்.(287,288)
[11] கங்குலியில் சல்லிய பர்வத்தில் 65 பகுதிகளும் 3503 ஸ்லோகங்களும் இருக்கின்றன.
கிண்டிலில் வாங்க: https://www.amazon.com/dp/B07D5H9PVT
சௌப்திக, ஸ்திரீ பர்வங்கள்
சௌப்திக பர்வத்தில், பெரிய வீரர்களான கிருதவர்மன், கிருபர், துரோண மைந்தன் ஆகியோர், தொடை உடைந்து இரத்தத்தில் நனைந்து கிடக்கும் துரியோதனனைக் காண்கின்றனர். இந்தக் காட்சியைக் கண்ட அசுவத்தாமன் கோபங்கொண்டு சபதமேற்கிறான்.(289-292) பிறகு மூவரும் துரியோதனனை விட்டுவிட்டு கதிர் அடங்கும் வேளையில் கானகத்துக்குள் நுழைகின்றனர்.(293) ஓர் ஆந்தை பல காக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்வதைக் கண்ட அஸ்வத்தாமன், தன் தந்தையைக் கொன்ற பாஞ்சாலர்களை உறங்கிக் கொண்டிருக்கும்போது பழி வாங்குவது என்று தீர்மானிக்கிறான்.(295) பாசறையின் வாசலில் பயங்கரமான ஓர் இராட்சசன் காவல்.(296) ருத்திரனை வழிபட்டு அவனைக் குளிர்விக்கும் அஸ்வத்தாம்.(297)

இரவு வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில், திரௌபதி மைந்தர்களும், திருஷ்டத்யும்னனுடன் கூடிய பாஞ்சாலர்களும் உறங்கிக் கொண்டிருக்கும்போது கொல்கிறான். பாண்டவர்களையும், சாத்யகியையும் தவிர்த்து மற்ற அனைவரும் இறக்கின்றனர். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி தப்பியவர்களிடம்,(298-300) உறங்கிக் கொண்டிருக்கும்போது துரோணர் மகனால் பாஞ்சாலர்கள் கொல்லப்பட்டதைத் திருஷ்டத்யும்னனின் தேரோட்டி சொல்கிறான். பிள்ளைகள், தமையன், தந்தை ஆகியோரின் பிரிவால் துயருற்ற திரௌபதி உண்ணாதிருந்து சாக முடிவு செய்து, தனது கணவர்களின் முன்னால் அமர்கிறாள். திரௌபதியின் வார்த்தைகளில் இரக்கமடைந்த பீமசேனன், அவளை நிறைவு செய்ய எண்ணி, தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஆயுதாசானின் மகனைத் தேடுகிறான்.(301-303) பீமசேனன் மீதிருக்கும் பயத்தாலும், விதியின் வசத்தாலும் அசுவத்தாமன் பாண்டவர்கள் அனைவரையும் அழிக்கும்படி, தெய்வீகக் கணையொன்றை ஏவுகிறான்;(304) கிருஷ்ணன் அசுவத்தாமனின் வார்த்தைகளைக் கேட்டு அதைச் செயலிழக்க வைக்கிறான்.(305) துவைபாயனரும் , கிருஷ்ணனும் அசுவத்தாமனுக்குச் சாபம் கொடுக்கின்றனர். அஸ்வத்தாமனும் பதிலுக்குச் சாபமிடுகிறான்.(306) அஸ்வத்தாமனின் தலையில் இருக்கும் நகையொன்றை அறுத்தெடுத்து, துயரத்தில் இருக்கும் திரௌபதிக்கு அதைப் பரிசளிக்கின்றனர் பாண்டவர்கள்.(307) இப்படியே சௌப்திகம் என்று அழைக்கப்படும் இந்தப் பத்தாவது பர்வம் உரைக்கப்படுகிறது. மொத்தம் பதினெட்டு பகுதிகளில்[12] எண்ணூற்று எழுபது பாடல்களில் சௌப்திக பர்வத்தை விவரிக்கிறார் பெரும் வியாசர்.(308,309) இந்தப் பர்வத்தில் சௌப்திக மற்றும் ஐஷிக பர்வங்கள் பெருமுனிவரால் சேர்க்கப்பட்டிருக்கிறது.
[12] கங்குலியில் சௌப்திக பர்வத்தில் 18 பகுதிகளும் 791 ஸ்லோகங்களும் இருக்கின்றன.
ஸ்திரீ பர்வத்தில், மைந்தர்களின் பிரிவால் துயருற்றிருந்த திருதராஷ்டிரன் இரும்புச் சிலையைப் பீமன் எனக் கருதி இறுகப் பற்றித் தூள் தூளாக்குகிறான். விதுரன் அவனது கோபத்தை அமைதிப்படுத்தி, உலகப்பற்றை விடச்சொல்லி அறிவுறுத்துகிறான்.(311-313) திருதராஷ்டிரன் தனது இல்லத்தில் உள்ள பெண்மணிகளை அழைத்துக் கொண்டு, போர் நடந்த இடத்திற்குச் செல்கிறான்.(314) கொல்லப்பட்ட வீரர்களுடைய மனைவியரின் ஓலங்கள் சொல்லப்படுகின்றன. காந்தாரியும் திருதராஷ்டிரனும் நினைவிழப்பது.(315) தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைகள் போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடப்பதை க்ஷத்திரியப் பெண்மணிகள் காண்கின்றனர்.(316) காந்தாரிக்கு கிருஷ்ணன் ஆறுதல் வார்த்தைகள் சொல்வது.(317) இறந்த மன்னர்களின் சடலங்களுக்கு, யுதிஷ்டிரன் உரிய இறுதிச்சடங்குகளைச் செய்வது.(318) கமுக்கத்தில் தனக்கு மகனாய் பிறந்த கர்ணனை அங்கீகரிக்கும் குந்தியின் கதை.(319) இவையாவும் பெரும் முனிவரான வியாசரால் இந்தப் பதினோராவது பர்வத்தில் விளக்கப்படுகிறது.(320) உணர்வுள்ள நெஞ்சங்களில் கவலையையும், கண்ணீரையும் வர வைக்கும் பர்வம் இது. மொத்தம் இருபத்து ஏழு பகுதிகளில்[13] எழுநூற்று எழுபத்தைந்து பாடல்களில் இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.(321,322)
[13] கங்குலியில் ஸ்திரீ பர்வத்தில் 27 பகுதிகளும் 803 ஸ்லோகங்களும் இருக்கின்றன.
மொத்தமாக சௌப்திக ஸ்திரீ பர்வங்களில் 45 பகுதிகளும் 1594 ஸ்லோகங்களும் இருக்கின்றன.
கிண்டிலில் வாங்க: https://www.amazon.com/dp/B07D5KTSZL
சாந்திபர்வம் - பாகம் 1
முழுமஹாபாரதத்தில் பனிரெண்டாவதாகப் பர்வமாக வரும் சாந்தி பர்வம், புரிதலை அதிகரிக்க வல்லதாக இருக்கிறது. தன் தந்தைமார், சகோதரர்கள், மகன்கள், தாய்மாமன்கள், மற்றும் சம்பந்திகள் கொல்லப்பட்ட யுதிஷ்டிரனின் மனத்தளர்ச்சி இதில் விளக்கப்படுகிறது. இந்தப் பர்வத்தில், அறிவை விரும்பும் மன்னர்களுக்குத் தகுந்த பல்வேறு கடமைகளைக் குறித்துப் பீஷ்மர் தன் கணைப்படுக்கையில் இருந்து எவ்வாறு விளக்குகிறார் என்பது சொல்லப்பட்டுள்ளது; ஆபத்துக் காலங்களுக்கு உகந்த கடமைகளையும், காலம் மற்றும் அறிவு ஆகியவற்றையும் முழுமையாக விளக்குகிறது இந்தப் பர்வம்.(323-325) இதைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதன் அரசதர்மம் குறித்த முழுமையான அறிவை அடைகிறான்.
சாந்தி பர்வம் முதல் பாகத்தில் ராஜதர்மம் மற்றும் ஆபத்தர்மம் ஆகிய இரு உபபர்வங்களும், அவற்றில் 173 பகுதிகளும், 6332 ஸ்லோங்களும் இருக்கின்றன.
கிண்டிலில் வாங்க: https://www.amazon.com/dp/B07D6D974Q
முழுமஹாபாரதம்
மஹாபாரதம் சம்பந்தமான
கிண்டில் மின்புத்தகங்களை (Kindle E-books)
விலைக்கு வாங்க