உலகத்தில் ஆன்மத் தேடல் உள்ள அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் இந்தியக் கொடையாகும் மஹாபாரதத்தின் உபபர்வமான இந்த சாந்தி பர்வம். இப்போது கிண்டிலில்
"முழுமஹாபாரதத்தில் பனிரெண்டாவதாகப் பர்வமாக வரும் சாந்தி பர்வம், {புறம் மற்றும் அகப்} புரிதல்களை அதிகரிக்க வல்லதாக இருக்கிறது. தன் தந்தைமார், சகோதரர்கள், மகன்கள், தாய்மாமன்கள், மற்றும் சம்பந்திகள் கொல்லப்பட்ட யுதிஷ்டிரனின் மனத்தளர்ச்சி இதில் விளக்கப்படுகிறது. இந்தப் பர்வத்தில், அறிவை விரும்பும் மன்னர்களுக்குத் தகுந்த பல்வேறு கடமைகளைக் குறித்துப் பீஷ்மர் தன் கணைப்படுக்கையில் இருந்து எவ்வாறு விளக்குகிறார் என்பது சொல்லப்பட்டுள்ளது; ஆபத்துக் காலங்களுக்கு உகந்த கடமைகளையும், காலம் மற்றும் அறிவு ஆகியவற்றையும் முழுமையாக விளக்குகிறது இந்தப் பர்வம். இதைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதன் அரசதர்மம் குறித்த முழுமையான அறிவை அடைகிறான். இறுதி விடுதலை (முக்தி / மோக்ஷம்} குறித்தும் இந்தப் பர்வத்தில் விரிவாக விளக்கப்படுகிறது. இதுவே ஞானிகளுக்குப் பிடித்தமான பனிரெண்டாவது பர்வமாகும். மொத்தம் முந்நூற்று முப்பத்தொன்பது பகுதிகளில் பதினாலாயிரத்து எழுநூற்று முப்பத்திரண்டு ஸ்லோகங்களில் இது விவரிக்கப்படுகிறது" என்று சூத முனிவர் தன் பர்வத்திரட்டில் சொல்லியிருக்கிறார்.
சாந்தி பர்வம் பாகம் 1 :
ராஜதர்மம் மற்றும் ஆபத்தர்மம் ஆகிய இரு உபபர்வங்களும், அவற்றில் 173 பகுதிகளும், 6332 ஸ்லோங்களும் இருக்கின்றன.
https://www.amazon.com/dp/B07D6D974Qசாந்தி பர்வம் பாகம் 2&3 :
மோக்ஷதர்ம உபபர்வமும், அதில் 193 பகுதிகளும், 7350 ஸ்லோங்களும் இருக்கின்றன.
https://www.amazon.com/dp/B07MDDN2KG
சாந்தி பர்வம் மூன்று பாகங்களும் சேர்த்து 366 பகுதிகளும், 13682 ஸ்லோகங்களும் இருக்கின்றன.
- மஹாபாரதம் தொடர்புடைய மேலும் சில கிண்டில் புத்தகங்களுக்கு: https://mahabharatham.arasan.info/p/kindle-ebooks.html
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
201812281117
திருவொற்றியூர்