Twenty types of sons! | Anusasana-Parva-Section-49 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 49)
பதிவின் சுருக்கம் : இருபது வகை மகன்ளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, வகைகள் {வர்ணங்கள்} மற்றும் வகுப்புகள் {கலப்பு சாதிகள்} ஆகியவற்றைத் தனித்தனியாகவும், எவ்வகைப் பெண்களிடம் எவ்வகை மகன் பெறப்படுகிறான்? மகன்களாக எவரை உரிமை கொண்டாடலாம்? என்னென்ன வகை மகன்கள் இருக்கின்றனர்? என்பவை குறித்தும் எங்களுக்குச் சொல்வீராக.(1) மகன்களைப் பொறுத்தவரையில் சச்சரவுகள் அடிக்கடி எழுகின்றன. ஓ! மன்னா, எங்கள் மனத்தைப் பீடிக்கும் ஐயங்களைப் போக்குவதே உமக்குத் தகும். உண்மையில், இக்காரியத்தில் நாங்கள் கலக்கத்தில் {தெளிவற்ற நிலையில்} இருக்கிறோம்" என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் மடியில் பிறந்த பிள்ளையாக {அனந்தராஜனாக}{1} ஒருவனுடைய சுயமே கருதப்படுகிறது {தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் தானே பெறும் மகன் ஔரஸன் என்றழைக்கப்படுகிறான்}.
பிள்ளை பெறும் பணிக்காகத் தன்னால் அழைக்கப்பட்ட ஒருவன் மூலம் தன் மனைவியிடம் பிறந்த மகன் நிருக்தஜன்{2} என்றழைக்கப்படுகிறான்.
தன் மனைவியிடம் தன் அனுமதி இல்லாமல் வேறு எவராலோ பெறப்பட்ட மகன் பிரஸ்ருதஜன்{3} ஆவான்[1].(3)
தன் நிலையின் இருந்து வீழ்ந்தவிட்ட மனிதன் மூலம் தன் மனைவியிடம் பெறப்பட்ட மகன் பதிதஜன்{4} என்றழைக்கப்படுகிறான்.
கொடுக்கப்பட்டவன், ஆக்கப்பட்டவன் என மேலும் இரு மகன்களும்{5,6} இருக்கின்றனர்.
அத்யுதன்{7} என்றழைக்கப்படும் மற்றொருவனும் இருக்கிறான்[2].(4)
ஒரு கன்னிகையுடைய தந்தையின் இல்லத்தில் பிறந்த மகன் கானீனன்{8} என்றழைக்கப்படுகிறான்.
இவை தவிர்த்து அபத்வம்ஸஜர்கள் என்று அழைக்கப்படும் ஆறுவகை மகன்களும்{9....14},
அபஸதர்கள் என்றழைக்கப்படும் மேலும் அறுவரும்{15....20} இருக்கின்றனர்.
ஓ! பாரதா, சாத்திரங்களில் குறிப்பிடப்படும் பல்வேறு வகை மகன்கள் இவர்களே ஆவர் என்பதை அறிவாயாக" என்றார் {பீஷ்மர்}[3].(5)
பிள்ளை பெறும் பணிக்காகத் தன்னால் அழைக்கப்பட்ட ஒருவன் மூலம் தன் மனைவியிடம் பிறந்த மகன் நிருக்தஜன்{2} என்றழைக்கப்படுகிறான்.
தன் மனைவியிடம் தன் அனுமதி இல்லாமல் வேறு எவராலோ பெறப்பட்ட மகன் பிரஸ்ருதஜன்{3} ஆவான்[1].(3)
தன் நிலையின் இருந்து வீழ்ந்தவிட்ட மனிதன் மூலம் தன் மனைவியிடம் பெறப்பட்ட மகன் பதிதஜன்{4} என்றழைக்கப்படுகிறான்.
கொடுக்கப்பட்டவன், ஆக்கப்பட்டவன் என மேலும் இரு மகன்களும்{5,6} இருக்கின்றனர்.
அத்யுதன்{7} என்றழைக்கப்படும் மற்றொருவனும் இருக்கிறான்[2].(4)
ஒரு கன்னிகையுடைய தந்தையின் இல்லத்தில் பிறந்த மகன் கானீனன்{8} என்றழைக்கப்படுகிறான்.
இவை தவிர்த்து அபத்வம்ஸஜர்கள் என்று அழைக்கப்படும் ஆறுவகை மகன்களும்{9....14},
அபஸதர்கள் என்றழைக்கப்படும் மேலும் அறுவரும்{15....20} இருக்கின்றனர்.
ஓ! பாரதா, சாத்திரங்களில் குறிப்பிடப்படும் பல்வேறு வகை மகன்கள் இவர்களே ஆவர் என்பதை அறிவாயாக" என்றார் {பீஷ்மர்}[3].(5)
[1] கும்பகோணம் பதிப்பில், "மந்திரத்தினால் நிஷேகஸம்ஸ்காரம் பெற்ற தனது மனைவியிடத்தில் தனக்குண்டாகும் புத்ரன் முதன்மையாக விதிக்கப்பட்ட ஔரஸபுத்ரனென்று அறிய வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நியுக்தம் மூலம் அடையப்பட்ட மகன் பிரஸ்ரிதஜன் என்றழைக்கப்படுகிறான் என அறிவாயாக" என்றிருக்கிறது.[2] "கணவன் முறையில்லாத ஒருவன் மூலம் ஒரு கன்னிகையிடம் அவளது திருமணத்திற்குப் பிறகு பெறப்பட்ட மகன், அவனுக்குச் சொந்தமாகாமல், அவளது கணவனுக்கே உரிய மகனாவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] ஆதிபர்வம் பகுதி 120ல் ஏற்கனவே பனிரெண்டு வகை மகன்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதில் இங்கே சொல்லப்படும் கானீனன் என்றொரு வகையும் இருக்கிறது.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அபத்வம்ஸஜர் என்றழைக்கப்படும் அறுவர் யாவர்? மேலும் அபஸதர்கள் என்பவர்கள் யாவர்? இவை யாவையும் விரிவாக எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தாழ்ந்த மூன்று வகைகளைச் சார்ந்த மனைவிகளிடம் ஒரு பிராமணனால் பெறப்படும் மகன்கள் {மூவர்}, தாழ்ந்த இரு வகைகளைச் சார்ந்த மனைவிகளிடம் ஒரு க்ஷத்திரியனால் பெறப்படும் மகன்கள் {இருவர்}, ஓ! பாரதா, தாழ்ந்த ஒரு வகையைச் சார்ந்த மனைவியிடம் ஒரு வைசியனால் பெறப்படும் மகன் {ஒருவன்} ஆகியோரே {இந்த அறுவரே} அபத்வம்ஸஜர்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறே ஆறு வகைகளாக விளக்கப்படுகின்றனர். இப்போது அபஸதர்கள் யார் என்பதைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(8)
ஒரு பிராமணிப் பெண்ணிடம் ஒரு சூத்திரன் பெறும் மகன் சண்டாளன் என்றழைக்கப்படுகிறான். ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் சூத்திர வகையைச் சார்ந்த ஒருவன் பெறும் மகன் விராத்யன் என்றழைக்கப்படுகிறான். வைசியப் பெண்ணிடம், ஒரு சூத்திரத் தந்தை பெறும் மகன் வைத்யன் என்றழைக்கப்படுகிறான். இந்த மூவகை மகன்களும் அபஸதர் என்று அழைக்கப்படுகின்றனர்.(9)
ஒரு வைசியன் பிராமண வகையைச் சார்ந்த ஒரு பெண்ணுடன் கலப்பதன் மூலம் மாகதன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான், அதே வேளையில் க்ஷத்திரியப் பெண்ணிடம் வாமகன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான்.
க்ஷத்திரியனால் மேன்மையான வகைப் பெண்ணிடம் ஒரு வகை மகனைப் பெற முடியும்.(10) உண்மையில் ஒரு க்ஷத்திரியனால், ஒரு பிராமணப் பெண்ணிடம் பெறப்பட்ட மகன் சூதன் என்றழைக்கப்படுகிறான். இந்த மூவரும் கூட அபஸதர்கள் என்றழைக்கப்படுகின்றனர். ஓ! மன்னா, இந்த ஆறு வகை மகன்களும் மகன்களல்ல என்று சொல்ல முடியாது" என்றார் {பீஷ்மர்}.(11)
ஒரு வைசியன் பிராமண வகையைச் சார்ந்த ஒரு பெண்ணுடன் கலப்பதன் மூலம் மாகதன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான், அதே வேளையில் க்ஷத்திரியப் பெண்ணிடம் வாமகன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான்.
க்ஷத்திரியனால் மேன்மையான வகைப் பெண்ணிடம் ஒரு வகை மகனைப் பெற முடியும்.(10) உண்மையில் ஒரு க்ஷத்திரியனால், ஒரு பிராமணப் பெண்ணிடம் பெறப்பட்ட மகன் சூதன் என்றழைக்கப்படுகிறான். இந்த மூவரும் கூட அபஸதர்கள் என்றழைக்கப்படுகின்றனர். ஓ! மன்னா, இந்த ஆறு வகை மகன்களும் மகன்களல்ல என்று சொல்ல முடியாது" என்றார் {பீஷ்மர்}.(11)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒருவனுடைய நிலத்தில் {மனைவியிடத்தில்} பிறந்தவனே அவனுடைய மகன் என்று சிலர் சொல்கின்றனர். மறுபுறம், ஒருவனுடைய வித்தில் இருந்து பெறப்பட்டவனே ஒருவனுடைய மகன் என்றும் சிலர் சொல்கின்றனர். இந்த இரு வகை மகன்களும் சமமானவர்கள்தானா? மேலும், அந்த மகன் யாருடையவன்? ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவனுடைய வித்தில் இருந்து பிறந்தவன் அவனுடைய மகனே. எனினும், வித்துக்குச் சொந்தக்காரன் அதில் இருந்து பிறக்கும் மகனைக் கைவிட்டால், அத்தகைய மகன் எவனுடைய மனைவியிடம் பெறப்பட்டானோ அவனுடையவனாவான். அத்யுதன் என்றழைக்கப்படும் மகனுக்கும் இதே விதியே பொருந்தும். அவன் எந்த மனிதனின் வித்திற்குப் பிறந்தானோ அவனுக்கே உரியவனாவான். இருப்பினும், வித்துக்குச் சொந்தக்காரன் அவனைக் கைவிட்டால், அவன் தன் தாயின் கணவனுடைய மகனாகிறான். சட்டம் இதையே அறிவிக்கிறது என்பதை அறிவாயாக" என்றார்.(13)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒருவன் எவனுடைய வித்தில் பிறக்கிறானோ அவனுக்கு மகனாகிறான் என்பதை நாம் அறிவோம். அந்த மகனை ஈன்றெடுக்கும் பெண்ணின் கணவன் அவனிடம் {அந்த மகனிடம்} உரிமையைப் பெறுவது எவ்வாறு? அதே போல அத்யுதன் என்றழைக்கப்படும் மகன், எவனுடைய வித்தில் இருந்து பிறந்தானோ அவனது மகனாகவே அறியப்பட வேண்டும். உரிமையும் வளர்ப்பும் முறிந்து போனதன் விளைவால் அவன் பிறரின் மகனாவது எவ்வாறு?" என்று கேட்டான்.(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் தன் மடியில் பிறந்த மகனை ஏதோ ஒரு காரணத்திற்காகக் கைவிட்டால், உயிர் வித்து மட்டுமே மகன் என்ற நிலையை உண்டாக்க முடியாது என்பதால், அவனை அத்தகைய மகனின் தந்தையாகக் கருத முடியாது. நிலத்தை {மனைவியை} உரிமையாகக் கொண்ட மனிதனுக்கு உரியவனாகவே அத்தகைய மகன் கருதப்பட வேண்டும்.(15) ஒரு மனிதன் ஒரு மகனைப் பெற விரும்பி, கருவுற்றிருக்கும் பெண்ணை மணக்கும்போது, தன் மனைவிக்குப் பிறந்த மகனானவன், தன் நிலத்தில் விளைந்த கனியே என்பதால் அவனுக்கே உரியவனாவான். எந்த மனிதனின் உயிர்வித்தில் அந்த மகன் பிறந்தானோ, அவன் அத்தகைய மகனிடம் எந்த உரிமையும் கொள்ள முடியாது.(16) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒருவனது நிலத்தில் {மனைவியிடத்தில்} பிறந்தவனும், தன்னால் பெறப்படாதவனுமான மகன், தன்னை உண்மையில் பெற்ற தந்தையின் அடையாளங்கள் அனைத்தையும் சுமக்கிறான் (தன் தாயின் கணவனுடைய அடையாளங்களைச் சுமப்பதில்லை). இவ்வாறு பிறக்கும் மகன், உடற்குறி அளிக்கும் சான்றுகளை மறைக்க முடியாது. அவன் கண் பார்வையிலேயே (மற்றொருவனுக்குரியவன் என்று) அறியப்படுவான்[4].(17) ஆக்கப்பட மகனைப் பொறுத்தவரையில், அவன் சில வேளைகளில் ஆக்கியவரின் பிள்ளையாகவும், வளர்த்தவரின் பிள்ளையாகவும் {கிருத்ரிமபுத்ரனாகக்} கருதப்படுகிறான். அவனது வழக்கில், மகன்தன்மைக்கான காரணமாக உயிர்வித்தோ, பிறந்த நிலமோ இருப்பதில்லை" என்றார்.(18)
[4] "அத்தகைய மகன் தாயின் கணவனுடைய உடைமையாவானேயன்றி பெற்றவனின் உடைமையாகமாட்டான். எனினும், பெற்றவன் அவனை உரிமைகொள்ளவும், வளர்க்கவும் விரும்பினால், அவன் பெற்றவனுக்குரியவனாகவே கருதப்பட வேண்டும். பெற்றவன் தன்னை மறைத்துக் கொண்டு, அவனைப் பெற விரும்பவில்லையெனில் தாயின் கணவன் அந்தப் பிள்ளைக்கு உரியவன் என்பதே கோட்பாடு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மகனாக ஆக்கப்பட்டவனும், எடுத்து வளர்க்கப்பட்டதன் காரணமாக மகன் என்ற நிலை உண்டானவனும், உயிர்வித்தையோ, பிறந்த நிலத்தையோ மகன் என்ற நிலைக்குக் காரணமாகக் கொள்ளாதவனுமான மகன் எவ்வகை மகனாவான்?" என்று கேட்டான்.(19)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தந்தை மற்றும் தாயால் சாலையில் கைவிடப்பட்ட ஒரு மகனை ஒருவன் எடுத்து வளர்க்கும்போது, அவ்வாறு எடுத்து வளர்ப்பவன், பெற்றோரைத் தேடியும் காணத்தவறும்போது, அவனே அத்தகைய மகனின் தந்தையாகிறான், பின்னவனும் ஆக்கப்பட்ட மகன் {கிருத்ரிமபுத்ரன்} என்று அழைக்கப்படுகிறான்.(20) சொந்தங்கொள்ள எவரும் இல்லாதபோது அவன் தன்னை வளர்ப்பவருக்கு உரிமையாகிறான். மேலும் அத்தகைய மகன், தன்னை வளர்ப்பவர் சார்ந்த வகைக்கு உரியவனாகவே கருதப்படுகிறான்" என்றார்.(21)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அத்தகைய ஒருவனின் தூய்மைசெய் சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும்? எவருக்கு எத்தகைய சடங்குகள் செய்யப்பட வேண்டும்? அவன் எந்தப் பெண்ணை மணந்து கொள்ள வேண்டும்? ஓ!பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(22)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெற்றோரால் கைவிடப்பட்ட மகன், தன்னை எடுத்து வளர்த்தவரின் வகையையே அடைவதால், தன்னை எடுத்து வளர்ப்பவரின் வழக்கத்திற்கு இசைவாகவே அத்தகைய மகனின் {உபநயனம் முதலிய} தூய்மைச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.(23) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உண்மையில், அத்தகைய மகனை வளர்ப்பவன், தன் சொந்த குல மற்றும் உறவுகளின் நடைமுறைப்படி அவனுக்குண்டான தூய்மைச் சடங்குகள் அனைத்தையும் செய்ய வேண்டும். அத்தகைய மகனுக்குத் திருமணத்தில் அளிக்கப்படும் பெண்ணைப் பொறுத்தவரையிலும்கூட, அவள், அவனை வளர்ப்பவனின் வகையைச் சார்ந்தவளாகவே இருக்க வேண்டும்.(24) ஒரு மகனின் உண்மைத் தாயை உறுதி செய்ய முடியாதபோது மட்டுமே இவை யாவும் செய்யப்பட வேண்டும். மகன்களுக்கு மத்தியில், ஒரு கன்னிகைக்குப் பிறந்தவனும் {கானீனனும்}, திருமணத்திற்கு முன்பே கருவுற்ற தாய்க்குப்பிறந்து அதையடுத்து {திருமணத்திற்குப் பிறகு அவளால்} வளர்க்கப்பட்டு வருபவனும் {ஸஹோடனும்} மதிப்பற்றவர்களாகவும், மிக இழிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(25) எனினும், சட்டப்படியான திருமணத்தின் மூலம் தந்தையால் பெறப்பட்ட மகன்களுக்கு விதிக்கப்பட்ட தூய்மைச் சடங்குகளையே இவர்கள் இருவரும் பெற வேண்டும். தந்தையின் வித்தில் பிறந்ததன் விளைவால் தந்தையின் மகனாகுபவன் {க்ஷேத்ரஜன்}, அபஸதர்கள் என்றழைக்கப்படும் மகன்கள், கன்னிப்பருவத்தில் மனைவியால் பெறப்பட்டு, திருமணத்திற்குப் பிறகு வளர்க்கப்படுபவர்கள் {ஸகோடர்கள்} ஆகியோரைப் பொறுத்தவரையில்,(26) பிராமணர்களும், பிறரும் தங்கள் தங்கள் வகைக்குரிய அதே தூய்மைச் சடங்குகளையே அவர்களுக்கும் செய்ய வேண்டும். பல்வேறு வகை மகன்கள் பொறுத்தவரையில் சாத்திரங்களில் காணப்படும் தீர்மானங்கள் இவையே. உன் கேள்விகள் தொடர்புடைய அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறு என்ன நீ கேட்க விரும்புகிறாய்?" என்று கேட்டார் {பீஷ்மர்}.(27)
அநுசாஸனபர்வம் பகுதி – 49ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |