அக்நிஜ்வாலன் - தீச்சுடராக இருப்பவன் {அக்நியைப் போல் ஜ்வாலையுள்ளவன்}
அக்ரவரன் - வேள்வியில் முதல் பங்கைப் பெறுபவன்
அகமன் - சலிப்பற்றவன்
அகரன் - ஒன்றும் செய்யாதவன் முற்றான அமைதியே
அங்கலுப்தன் - உறுப்பில் {லிங்கத்தில்} புனிதமாக இருப்பவன்
அச்வதன் - அரச மரமாக இருப்பவன்
அச்வன் - குதிரையாக இருப்பவன் / எங்கும் நிறைந்திருப்பவன்
அசநி - வஜ்ராயுதந்தரிப்பவன்
அசலோபமன் - மலை போன்றவன் / ஞானத்தை வெளிப்படுத்தாதவன் / அணுகப்படக்கூடியவன்.
அசிந்த்யன் (2) - சிந்திக்க ஏதும் இல்லாதவன் / குறைவில்லாதவன் / வழிபாட்டுக்கும் எட்டாதவன்
அத்யாத்மாநுகதன் - ஆத்மாவை வழிபடுபவன்
அத்ரி - சந்திரனுக்கு தந்தையான ஒரு முனிவர் / முக்குணமற்றவன்
அத்ரியாநமஸ்கர்த்தன் - அத்ரிமுனிவரின் மனைவியான அநஸூயைக்குத் துர்வாஸஸ் எனும் மகனாகப் பிறந்து அவளை வணங்கியவன்
அதந்த்ரிதன் - சோம்பலற்றவன் / ஓய்வில்லாதவன்
அதநன் - செல்வமற்றவன்
அதம்பன் - தன்னை அடக்க எவனுமில்லாதவன்
அதர்வசீர்ஷன் - அதர்வ வேதத்தைத் தலையாகக் கொண்டவன்
அதர்ஷணன் - அசைக்கமுடியாதவன் / அச்சமற்றவன்
அதிதி - தெய்வீகத்தாய் / பூமி
அதிதீப்தன் - பேரொளிமிக்கவன்
அதிதூம்ரன் - பெரும்புகையுடையவன்
அதிரோஹன் - உயர்நிலையில் இருப்பவன்
அதிவ்ருத்தன் - பெரியவனுக்கும்பெரியவன்
அதீநன் - உயர்மனம் கொண்டவன்
அதுல்யன் - ஒப்பற்றவன்
அந்தர்ஹிதாத்மா - வெளிப்படாகுணங்கொண்டவன் / ஆன்மாவுக்குள் வசிப்பவன்
அந்தராத்மா - உள்ஆன்மா
அநகன் - {தக்ஷனின் வேள்வியை அழித்தும்} பாபமண்டாதவன்
அநந்தரூபன் - அளவற்றவடிவுகொண்டவன்
அநலன் (3) - நிறைவற்றவன் / தீயாயிருப்பவன் / தீ போல் பாவமெரிப்பவன் / உண்பதால் தணிவடையாதவன்
அநிந்திதன் (2) - இகழப்படாதவன் / குற்றமற்றவன் / களங்கமற்றவன்
அநிமிஷன் - இமைக்காதவன்
அநிலன் (2) - காற்றாயிருப்பவன் / உயிரைத் தருபவன்
அநிலாபன் - காற்றைப் போன்றவன் / கண்ணுக்குப் புலப்படாதவன்
அநீதி - பிறரால் நடத்தப்படாதவன்
அநுகாரி - {பக்தர்களுக்குத்} துணைபுரிபவன்
அநௌஷதன் - தடுக்கப்படமுடியாதவன் / அனுபவிக்காதவன்
அப்ஸரோகணஸேவித்- அப்ஸரஸுகளின் கூட்டத்தால் மதித்துத் துதிக்கப்படுபவன்.
அபரன் - அண்மையானவன்
அபிகம்யன் - அடையத்தக்கவன் / அழகிய வடிவம் கொண்டவன்
அபிராமன் - மனத்துக்கினியவன் / மகிழ்ச்சியை அதிகப்படுத்துபவன்
அபிவாத்யன் - வணங்கித்துதிக்கத்தக்கவன்
அம்சு - கதிராயிருப்பவன் / அம்சுதேவன்
அம்புஜாலன் - ஆழிநீரே
அம்ருதகோவ்ருஷேச்வரன் - அறத்தில் அழிவில்லா ஈஸ்வரன் / இறவாமையை அருள்பவன்
அம்ருதன் (2) - அமுதம் போன்றவன் / நித்யன் / சந்திரவடிவினன்
அமரன் (2) - மரணமற்றவன் / அழிவைக் கடந்தவன்
அமரேசன் - தேவர்களின் தலைவன்
அமித்ரஜித் - பகைவரை வெல்பவன்
அமிதன் - அளவற்றவன்
அமுக்யன் - இறுதியாயிருப்பவன்
அமுகன் - முகமற்றவன் / பரந்த அறிவாயிருப்பவன்
அமோகன் - வீணாகாதவன் / எப்போதும் கனிநிறைந்தவன்
அமோகார்த்தன் - வேண்டுதலை வீண்போகச் செய்யாதவன்
அயஜ்ஞன் - வேள்வியற்றவன் {செயல்களற்றவன்}
அர்த்தநன் - தீயோரைப்பீடிப்பவன்
அர்த்தன் - வேண்டப்படுபவன் / செல்வத்தின் வடிவம்
அர்யமா - சூரியனின் பெயர் அர்யமான்
அலோகன் - உலகைக் கடந்தவன்
அலோலன் - ஆசையற்றவன்
அவ்யக்தம் - புலப்படாதவன்
அவ்யயன் (2) - மாறாதவன் / அர்ப்பணிப்பால் மட்டுமே அடையப்படுபவன்
அவசன் - யாருக்கும் உட்படாதவன்
அவரன் - தனக்கு மேம்பட்டவனில்லாதவன்
அஜன் - பிறப்பற்றவன்
அஜிதன் (3) - வெல்லப்பட முடியாதவன்
அஜைகபாத் - பதினோரு ருத்ரர்களில் ஒருவன்
அஸ்நேஹநன் - பற்றற்றவன் / அன்பற்றவன்
அஸத் - காரியம்
அஸமாம்நாயன் - சாத்திரங்களாயிருப்பவன்
அஸுரேந்த்ராணாம்பந்தநன் - அஸுரர்களின் தலைவனை {பலியைக்} கட்டிப் போட்டவன்
அஹஸ் - பகலாயிருப்பவனே
அஹஸ்சரன் - பகலில் உலவுபவன்
அஹிர்ப்த்நியன் - அடியில் வசிப்பவன் {சேஷன்}
அஹோராத்ரன் - பகலிரவாயிருப்பவன்
அக்ஷரன் - அழிவற்றவன்
ஆகாசநிர்விரூபன் - ஆகாயம் போல பல வடிவங்களை உண்டாக்குபவன்.
ஆச்ரமஸ்தன் - நான்கு வாழ்வுமுறைகளிலுமிருப்பவன்
ஆத்மநிராலோசகன் - ஆன்மாவைக் காண உடலைக் கடப்பவன்
ஆத்மஸம்பவன் - தானே பிறந்தவன்
ஆத்யநிர்க்கமன் - உயிரின் முதல் முளையாயிருப்பவன்
ஆத்யன் - முதல்வன்
ஆதி - அனைத்தின் தொடக்கம்
ஆதிகரன் - தொடக்கத்தைப் படைப்பவன்
ஆதித்யன் - பகன் எனும் தேவன் / தொடக்கம் முதல் இருப்பவன்
ஆதித்யவஸு - அதிதியின் மகனான வஸுவாக இருப்பவன்
ஆதேசன் - கல்வியின் தலைவன்
ஆயுதி - ஆயுதங்கள் அனைத்தையும் தரிப்பவன்
ஆயுஸ் - வாழ்வுக்காலமாக இருப்பவன்
ஆர்த்ரசர்மாம்பராவ்ருதன் - குருதியால் நனைந்த யானைத்தோலை உடுத்துபவன்
ஆரோஹணன் - {பக்தர்களை} உயரச் செய்பவன்
ஆவர்த்தமாநேப்யோவபு - பிறப்பிறப்பில் சுழல்வோருக்கு உடல் வடிவங்களை அளிப்பவன்
ஆவேதநீயன் - ஆசானால் கற்பிக்கப்படத்தக்கவன்
ஆஷாடன் - அனைத்தையும் பொறுக்கும் சக்தியுள்ளவன்
இதிஹாஸன் - வரலாறுகளாய் இருப்பவன்
ஈ - லட்சுமியாய் இருப்பவன்
ஈச்வரன் - நீக்கமற நிறைந்திருப்பவன்
ஈசாநன் - அனைத்தையும் வழிநடத்துபவன்
ஈட்யன் - துதிக்கப்படத்தக்கவன்
உக்ரதேஜஸ் - கடுமொளியாக இருப்பவன்
உக்ரன் - அனைத்தையும் எரிப்பவன்
உத்பித் - அசைவற்ற பொருட்களின் வடிவம் / மாயைப் பிளந்து வெளிப்படுபவன்
உத்ஸங்கன் - பற்றற்றவன்
உதக்ரன் - காந்தியிலும், பலத்திலும் பெருகுபவன்
உந்மத்தவேஷப்ரச்சந்நன் - பித்தனாக மறைந்திருப்பவன்
உந்மாதன் - மயங்கச் செய்பவன் / பசியைத் தூண்டுபவன்
உபகாரன் - உதவி செய்பவன்
உபசாந்தன் - திறனை வெளிக்காட்டாதவன் / ஆன்ம அமைதி கொண்டவன்
உபதேசகரன் - கல்வி கற்பிப்பவன்
உமாகாந்தன் - உமையினால் விரும்பப்பட்டவன்
உமாதவன் - உமையின் தலைவன்
உமாபதி (2) - உமையின் கணவன் / பிரம்மத் திறனின் தலைவன்
உஷ்ணீஷி - மகுடம் கொண்டவன்
உஷங்கு - எரியும் கதிர்களைக் கொண்டவன்
ஊர்த்வகாத்மா - பிரகிருதி அல்லது குணங்களைக் கடந்த ஆன்மா கொண்டவன்
ஊர்த்வசாயி - மேல்நோக்கி {அண்ணாந்து} படுப்பவன்
ஊர்த்வரேதஸ் (2) - மேல்நோக்கிய உயிரணு கொண்டவன் / புலன்களை வென்றவன் / பிரம்மன் முதலிய மேம்பட்ட படைப்புகளைச் செய்பவன்
ஊர்த்வலிங்கன் - மேல்நோக்கிய குறியைக் கொண்டவன் / காமத்தை வென்றவன்
ஊர்த்வஸம்ஹநநன்- பெரும் வலிமை கொண்டவன் / கடின உடல் கொண்டவன் / உயரமான உடல் படைத்தவன்
க்ரஹபதி - கோள்களின் தலைவன் / செவ்வாய்க்கோள்
க்ரஹன் - அனைத்தையும் ஈர்த்துக்கொள்பவன் / ராகு கோள்
க்ராமன் - அனைத்தையும் திரட்டிக் கொள்பவன்
க்ரியாவஸ்தன் - வேள்வி முதலிய செயல்களைச் செய்பவன் / வேள்விச் செயல்களின் வடிவிலான அறம்
க்ருஷ்ணபிங்களன் - கருஞ்சிவப்பு நிறம் / ஹரிஹர வடிவம்
க்ருஷ்ணன் - பரப்பிரம்மம் / கிருஷ்ணனாக அவதரித்தவன்
க்ருஷ்ணவர்ணன் - கரியநிறத்தவன் / விஷ்ணுவின் வடிவம்
ககன் - இதயமெனும் ஆகாயத்தில் இருப்பவன்
ககுபன் - திசைகளின் வடிவம்
கசரன் - உயிரினங்களின் இதயத்தில் இருப்பவன்
கட்கி - கத்தியைக் கொண்டவன்
கண்டலி - மேடுகளில் திரிபவன்
கணகர்த்தன் - கணங்களை, தத்துவங்களைப் படைப்பவன்
கணகாரன் - பக்தர்களைக் கணங்காக்குபவன்
கணபதி - கணங்களின் தலைவன்
கணன் (2) - தத்துவத் தொகையானவன் / முதல் கணமாக இருப்பவன்
கதாகதன் - இடையறாமல் தோன்றி மறைபவன்
கதி (2) - அனைவரும் அடையும் இறுதி நிலை / அனைவருக்கும் சாதகமாக இருப்பவன்
கந்தகாரி - நறுமணம் தரிப்பவன்
கந்தபாலீபகவாந் - செயல்மணத்தைக் காக்கும் தலைவன்
கந்தர்வன் - கந்தர்வனாக இருப்பவன்
கநகன் - பொன்னாக இருப்பவன்
கநிஷ்டன் - இளையவன்
கபர்த்தி - சடைமுடியுடையோன்
கபஸ்தி - கதிரவன்கதிர்
கபாலவாந் - {பிரம்மனின்} மண்டையோட்டை ஏந்துபவன்
கபிசன் - பொன்னிறமாயிருப்பவன்
கபிலன் - கபில முனி / பழுப்பு நிறம்
கம்பீரகோஷன் - மிடுக்காக முழங்குபவனே
கம்பீரபலவாஹனன் - மிடுக்கையும், பலத்தையும் வாகனமாகக் கொண்டவனே
கம்பீரன் - அறிவுக்கெட்டா ஆழம் கொண்டவன்
கமண்டலுதரன் - கமண்டலம் தரிப்பவன்
கர்ணிகாரமஹாஸ்ரக்வீ - செங்கொன்றைமாலையணிந்தவன் / கொன்றைசூடி
கர்த்தன் - அனைத்தையும் படைத்தவன்
கர்மகலாவித் - செயற்காலம் அறிந்தவன்
கர்மஸர்வபந்தவிமோசநன் - செயல்களினால் உண்டான பந்தங்களில் இருந்து விடுவிப்பவன்
கரஸ்தாலி - கையைப் பாத்திரமாகக் கொண்டவன்
கல்பன் - சாத்திரங்களை ஆபரணமாகக் கொண்டவன்
கலி (3) - நெற்களத் தலைவன் / போர்வடிவன் / கலியுகம்
கலை - கலையெனும் காலப்பிரிவு
கவாம்பதி - புலன்களை இயக்குபவன்
கஜஹன் - யானையாக வந்த அசுரனைக் கொன்றவன்
காஞ்சநச்சவி - பொன்னிறமுள்ளவன்
காந்தன் - ஆனந்த எல்லையாக இருப்பவன்
காந்தாரன் - பூமியைத் தரிப்பவன் / காந்தார சுரம்
காபாலி - மண்டையோட்டைக் கொண்டவன் / பிரம்மாண்டத்தின் தலைவன்
காமநாசகன் - மன்மதனை அழித்தவன்
காமன் (2) - அனைவராலும் விரும்பப்படுபவன் / மன்மதனைப் போன்றவன்
காலகடங்கடன் - யமனை மறைக்கும் மாயையை மறைப்பவன்
காலபூஜிதன் - யமனால் வழிபடப்படுபவன்
காலயோகி - காலத்தை வஞ்சிக்கும் யோகி
காலன் (4) - காலமாக இருப்பவன் / யமன் / அனைத்தையும் இயக்குபவன் / பிறப்பிறப்புகளின் பெருக்காயிருப்பவன்
காஷ்டை - காலத்தின் சிறு பிரிவு
காஹலி - காஹள இசைக்கருவியைக் கொண்டவன்
கிரிருஹன் - மலையின் மேல் இருப்பவன்
கிரிஸாதநன் - மலையைக் கருவியாகக் கொண்டவன்
குண்டீ - குண்டத்தைக் கொண்டவன்
குணபுத்தி - குணங்களையறிந்தவன்
குணாகரன் - குணங்களைப் படைப்பவன்
குணாதிகன் - பெருங்குணங்களைக் கொண்டவன்
குணௌஷதன் - குணங்களைப் பெருக்குபவன்
குரு - ஆசான்
குருகர்த்தன் - குருவைப் படைத்தவன்
குருபூதன் - குருவாக அமைபவன்
குருவாசி - குருவாக இருப்பவன்
குஹ்யன் - மறைந்திருப்பவன் / உபநிஷதங்களாக இருப்பவன்
குஹன் (2) - முருகன் / மறைந்திருப்பவன்
குஹாவாசி - யோகியாயிருப்பவன் / இதயக்குகையில் வசிப்பவன்
கூபன் - பூமியைக் காப்பவன்
கூலகர்த்தன் - நீர்நிலைகளைச் செய்தவன்
கூலஹாரி - நீர்ப்பெருக்காகக் கரையை இடிப்பவன்
கேசரன் - ஆகாயத்தில் இருப்பவன் / எந்த ஆதாரமும் வேண்டாதவன்
கேது - கொடிபோல் எங்கும் விளங்குபவன்
கேதுமாலி - கொடியினால் ஒளிர்பவன்
கைலாஸகிரிவாஸி - கைலாச மலையில் வசிப்பவன்
கோசர்மவஸநன் - மாட்டுத்தோலை ஆடையாக உடுத்துபவன்
கோசரன் - புலன்களில் இருப்பவன்
கோபதி - கதிர்களின் தலைவன்
கோபாலி - புலன்களைக் காப்பவன்
கோரதபஸ் - உக்கிர ஆலோசனையுள்ளவன்
கோரன் - உக்கிரமாயிருப்பவன்
கௌதமன் - நீதி சாத்திரம் செய்தவன்
ச்மசாநபாக் - உடற்பற்றுகளை அறுப்பவன்
ச்மசாநவாஸி - உடலில் வசிப்பவன் / காசியில் வசிப்பவன்
ச்ருங்கப்ரியன் - சிகரத்தை விரும்புபவன்
ச்ருங்கி - கொம்புள்ளவைகளாக இருப்பவன் / உயர்வுள்ளவன்
ச்வேதபிங்களன் - வெண்சிவப்பு நிறத்தோன்
சக்ரன் (2) - சக்தியுள்ளவன் / இந்திரன்
சங்கரன் (3) - சுகத்தைக் கொடுப்பவன் / ஐயங்களை அறுப்பவன்
சசீஹரஸுலோசநன் - தீய வழியில் செல்வோரை அழிக்கும் அழகிய கண்களைக் கொண்டவன்
சத்ரன் - குடையாயிருப்பவன் / துயரத்தைத் தணிப்பவன்
சத்ருஹன் - பகைவரை அழிப்பவன்
சதக்நி - நூற்றுவப்பொறி
சதக்நீபாசசக்திமாந் - நூற்றுவப்பொறி, கயிறு மற்றும் வேல் முதலிய ஆயுதங்கள் உடையவன்
சதம் - ஏழிலைம்பாலை மரமாக இருப்பவன்
சதஜிஹ்வன் - நூறு நா கொண்டவன்
சதுர்முகன் - நான்கு முகங்களைக் கொண்டவன்
சதுஷ்பதன் - நான்கு வழிகளைக் கொண்டவன்
சந்த்ரன் - மகிழ்ச்சியடையச் செய்பவன்
சந்த்ரவக்த்ரன் - மதிமுகமுடையவன்
சந்தநம் - சந்தனமரமாயிருப்பவன்
சந்தநி - சந்தனம் பூசியவன்
சந்தோவ்யாகரணோத்தரன் - வேதவேதாங்கங்களுக்கு மேம்பட்டவன்
சநி - மெதுவாக நகர்பவன்
சமூஸ்தம்பநன் - அசுரப்படைகளை நிறுத்தியவன்
சர்மி - தோலுடுத்தியவன்
சர்வன் - மயங்கச்செய்பவன்
சரண்யன் - காப்பவன்
சரன் - சிதறடிப்பவன் / கணையாயிருப்பவன்
சராசராத்மா - அசைபவையாகவும் அசையாதவையாகவும் இருப்பவன்
சலன் - எவ்விடத்திலும் நில்லாதவன் / புரிந்து கொள்ளப்பட முடியாதவன்
சாச்வதன் - நித்தியமானவன்
சாருலிங்கன் - அழகான வடிவுடையவன்
சிகண்டி - சடாமுடி கொண்டவன்
சிகி - சிகையுள்ளவன், குடுமியுள்ளவன்
சிரோஹாரி - {பிரம்மனின்} தலையறுத்தவன்
சிவன் - தூய்மையிலும் தூய்மையானவன்
சீரவாஸஸ் - மரவுரி தரிப்பவன்
சீலதாரி - நல்லொழுக்கம் காப்பவன்
சுக்லன் (2) - தூய்மையானவன் / வெண்ணிறமாயிருப்பவன்
சுசி - தூய்மையானவன் / பிரகிருதியில் இருந்து விலகியிருப்பவன்
சுத்தன் - தூய்மையானவன் / குற்றமற்றவன்
சுத்தாத்மா - தூய ஆன்மா
சுபாக்ஷன் - கருணைக் கண் கொண்டவன்
சேகிதாநன் - செவ்வாயக அறிந்தவன்
சோபநன் (2) - மங்கலமானவன் / திருமணமானவன்
த்ராஸநன் - அச்சுறுத்துபவன்
த்ரிக்குந்மந்த்ரன் - பீஜம் {விதைப்பை}, சக்தி, கீலகம் {பொருத்த அறிவு} எனும் மூன்று முக்கிய தன்மைகளின் மந்திரமாயிருப்பவன்
த்ரிகாலத்ருக் - முற்காலம், தற்காலம், எதிர்காலம் என்ற முக்காலங்களையும் தரிப்பவன்
த்ரிசங்கு - ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களை ஆணிகள் போல ஆதாரமாகக் கொண்டவன்.
த்ரிசுக்லன் - மனம், வாக்கும், காயம் மூன்றும் தூய்மையானவன்.
த்ரிதசன் - பிறவி, மரணம், வாழ்க்கை ஆகிய மூன்று தசைகளையும் உயிரினங்களுக்குக் கொடுப்பவன்.
த்ரியக்ஷன் - முக்கண்ணன்
த்ரியுகன் - ஞானம், சக்தி, பலம், செழிப்பு, வீரம், ஒளி எனும் ஆறு குணங்களைக் கொண்டவன் / கலி தவிர்த்த மூன்று யுகங்களாயிருப்பவன்.
த்ரிலோசநன் - முக்கண்ணன்
த்ரிவிக்ரமன் - மூவுலகங்களிலும் நிறைந்திருப்பவன்
த்ரிவிஷ்டபம் - சொர்க்கமே வடிவானவன்
த்ரிஜடி - முச்சடையோன்
த்ருதிமாந் - துணிவுள்ளவன்
த்ருவன் (3) - அசைவற்றவன் / சலிப்பில்லாதவன் / நட்சத்திரம்
த்வஷ்டா - விஷ்வகர்ம, அனைத்தையும் அழிப்பவன்
த்வாதசன் - பனிரெண்டு சூரியன்களாயிருப்பவன்
தசபாஹு - பத்து கரங்களைக் கொண்டவன்
தண்டி - தண்டத்தைக் கொண்டவன்
தந்வந்தரி - பிறவிப் பிணிக்குச் சிறந்த மருத்துவன்
தந்வி - வில்லைக் கொண்டவன்
தபஸ்வி - தவசி
தபஸ்ஸக்தன் - தவத்திலிருப்பவன்
தபோநிதி - தவத்தை செல்வமாகக் கொண்டவன்
தபோமயன் - தவவடிவினன்
தம்பன் - பகைவரையடக்குபவன்
தமநன் - தீயோரையடக்குபவன்\
தர்ப்பசாரி - தர்ப்பங்களில் வைக்கப்பட்ட வேள்விக்காணிக்கைகளையுண்பவன் / தர்ப்பங்களில் திரிபவன்
தர்ப்பணன் - கண்ணாடிபோன்றவன்
தர்மஸாதாரணவரன்- தகுதிக்கனி / புண்ணியத்திற்குத் தக்க பயனாக இருப்பவன்
தர்ஷணாத்மா - பிறரை அச்சுறுத்துபவன்
தரங்கவித் - அலைகளைக் கொண்டவன்
தரன் - வசுக்களில் ஒருவனான தரன்
தரு (2) - ஆபத்தைக் கடக்கச் செய்பவன் / கற்பக மரம் முதலியவையாக இருப்பவன்
தரோத்தமன் - ஆதிசேஷன் முதலான அனைவருக்கும் மேலானவன்
தலஸ்தாலன் - கைத்தாளமிடுபவன்
தக்ஷயாகாபஹாரி - தக்ஷனின் வேள்வியை அழித்தவன்
தக்ஷன் - திறமையுள்ளவன்
தக்ஷிணன் - திறம்பெற்றவன்
தாதா - பிரம்மன்
தாம்ரோஷ்டன் - சிவந்த உதடுகளைக் கொண்டவன்
தார்க்ஷ்யன் - கருடன்
தாரணன் - பிறவிப் பெருங்கடலைக் கடக்கச் செய்பவன்
தாலன் - பிறவிப் பெருங்கடலின் ஆழத்தை {பிரம்மத்தை} அறிந்தவன்
தாளி - தாளமுள்ளவன்
திக்மதேஜாஸ்வயம்புவன் - தாங்கமுடியாத ஆற்றலைக் கொண்டவன்
திக்மமந்யு - கடுங்கோபம் கொண்டவன்
திக்வாஸஸ் - திசைகளை ஆடையாக உடுத்துபவன்
திவிஸுபர்ணோதேவன்- தேலோக இந்திரனுக்கும் மேன்மையானவன்
தீநஸாதகன் - வறியவர்க்குதவி செய்பவன்
தீர்க்கன் - நெடியவன்
தீர்த்ததேவன் - தூய்மையான தேவன்
தீக்ஷ்ணதாபன் - கடுமையாக எரிக்கும் தீயாயிருப்பவன்
தும்பவீணன் - சுரைக்காயுடன் கூடிய வீணையுடையவன் / ருத்ரவீணையோன்
துர்வாஸன் (2) - ஆடையற்றவன் / துர்வாச முனிவன்
தூமகேதநன் - புகையைக் கொடியாய் கொண்ட தீயானவன்
தூமகேது - வால்நட்சத்திரமாயிருப்பவன்
தேவதாத்மா - தேவர்களின் ஆத்மாவாக இருப்பவன்
தேவதேவன் - அமரர்க்கோனே
தேவன் (2) - வெற்றி அடைபவன் / வெற்றியடையும் எண்ணங்கொண்டவன்
தேவரிஷி - தேவனாகவும், முனிவனாகவும் இருப்பவன்
தேவஸிம்மன் - தேவர்களில் சிறந்தவன்
தேவாதிதேவன் - புலன்களுக்கு எட்டாமல் விளங்குபவன்
தேவாதிபதி - தேவர்களின் தலைவன்
தேவாஸுரகணாக்ரணி - தேவாசுரக்கூட்டத்திற்கு முன் செல்பவன்
தேவாஸுரகணாச்ரயன் - தேவாசுரர்களால் அடையப்படுபவன்
தேவாஸுரகணாத்யக்ஷன் - தேவாசுரர்களின் தலைவன்
தேவாஸுரகுரு - தேவாசுரர்களுக்கு குருவாக இருப்பவன்
தேவாஸுரநம்ஸ்க்ருதன் - தேவாசுரர்களால் வணங்கப்படுபவன்
தேவாஸுரபதி - தேவாசுரர்களின் தலைவன்
தேவாஸுரபராயணன் - தேவாசுரர்களின் முக்கிய ஆதரவாளன்
தேவாஸுரமஹாமாத்ரன் - தேவாசுரர்களுக்கு முக்கிய அமைச்சனாக இருப்பவன்
தேவாஸுரமஹேச்வரன் - தேவாசுரர்களின் பெருந்தலைவன்
தேவாஸுரவரப்ரதன் - தேவாசுரர்களுக்கு வரமளிப்பவன்
தேவாஸுரநமஸ்க்ருதன் - தேவாசுரரால் வழிபடப்படுபவனே
தேவாஸுரவிநிர்மாதா - தேவாசுரர்களைப் படைப்பவன்
தேவாஸுரேச்வரன் - தேவாசுரர்களை நியமிப்பவன்
தேவேந்த்ரன் - தேவர்களின் இந்திரன்
தேஜஸ் - ஒளியாயிருப்பவன்
தேஜஸ்கரன் - ஒளியைப் படைப்பவன்
தேஜோபஹாரி - பிறர் சக்தியை அபகரிப்பவன்
தேஹன் - பெருகுபவன்
தைத்யஹன் - அசுரர்களைக் கொன்றவன்
தோரணன் - முக்திக்கு வாயிலாக இருப்பவன்
ந்யக்ரோதன் - அலுறைவோனே
ந்யக்ரோதரூபன் - கீழ்நோக்கி வளரும் உலக மரத்தின் வடிவாயிருப்பவன்
ந்யாயநிர்வபணர் - நீதிசாத்திரங்களை வகுப்பவன்
ந்ருத்யப்ரியன் - ஆடலில் விருப்பமுள்ளவன் /ஆடற்கோ
நக்தஞ்சரன் - இரவில் திரிபவன்
நக்தன் - இரவாயிருப்பவன்
நந்தநன் - மகிழ்ச்சியடையச் செய்பவன்
நந்தி (2) - நந்தியாக இருப்பவன் / செல்வமாயிருப்பவன்
நந்திகரன் (2) - நிறைவடையச் செய்பவன் / செல்வத்தைப் படைப்பவன்
நந்திவர்த்தநன் - பகைவனின் இன்பத்தை அழிப்பவன்
நந்தீச்வரன் - நந்திக்குத் தலைவன்
நபன் - புலன்களுக்கு விளங்காத ஆகாயமாக இருப்பவன்
நபஸ்தலன் - ஆகாயத்தை இடமாகக் கொண்டவன்
நர்த்தகன் - அனைத்தையும் ஆட்டி வைப்பவன்
நரன் (2) - அனைத்தையும் நடத்துபவன் / உயிரின் வடிவமாக இருப்பவன் / பற்றறவன் / எதுமடையாதவன்
நரர்ஷபன் - மனிதர்களில் சிறந்தவன்
நவசக்ராங்கன் - சக்கர வடிவத்தில் இருக்கும் ஒன்பது கோள்களையும் அங்கமாகக் கொண்டவன்
நக்ஷத்ரவிக்ரஹ்மதி - விண்மீனைப் போன்ற ஒளியுடலும் புத்தியும் கொண்டவன்
நக்ஷத்ரஸாதகன் - விண்மீன்களைப் படைத்தவன்
நாபி - உலகத்தின் ஆதாரமாக இருப்பவன்
நிக்ரஹன் - தண்டிப்பவன்
நிசாகரன் - சந்திரனின் இலக்கண நூலைப் படைத்தவன்
நிசாசரன் - இரவில் திரிபவன் / இரவெனும் அறியாமையைப் பெருக்குபவன்
நிசாசாரி - ஊழியிரவில் திரிபவன்
நிசாலயன் - இரவெனும் அறியாமை இருள் சிறிதுமற்றவன்
நித்யநர்த்தன் - எப்போதும் ஆடிக் கொண்டிருப்பவன்
நித்யம்ஆச்ரம்பூஜிதன் - எப்போதும் அனைத்து வாழ்வுமுறையினராலும் வழிபடப்படுபவன்
நித்யம்வர்ச்சஸ்வீ - எப்போதும் ஒளியுள்ளவன்
நித்யன் - அழிவில்லாதவன்
நித்யாத்மஸஹாயன் - எப்போதும் ஆன்மாவுக்குத் துணையாக இருப்பவன்
நிதி (2) - செல்வத்தைப் போன்றவன் / அனைத்தொளிக்கும் இருப்பிடம்
நிபாதி - உடலில் ஊடுருவுபவன்
நிமித்தன் - காரணமாயிருப்பவன்
நிமித்தஸ்தன் - காரணங்களில் இருப்பவன்
நியதன் - புலன்களை வென்றவன்
நியமன் - அனைத்தையும் நியமிப்பவன்
நியமாச்ரிதன் - அனைத்து தவங்களாலும் அடையப்படுபவன்
நியமேந்த்ரியவர்த்தநன் - தவத்தால் ஐம்புலன்களை அறுப்பவன்
நிர்வாணம் - முக்திவடிவினன்
நிர்ஜீவன் - உயிரற்ற பொருளாயிருப்பவன்
நிரவக்ரஹன் - தடையற்றவன்
நிராமயன் - குற்றமற்றவன்
நிலயன் - அனைத்துயிரனங்களுக்கும் இருப்பிடமாக இருப்பவன்
நிவ்ருத்தி - மறைந்திருப்பவன்
நிவேதநன் - அனைத்தையும் அறியச் செய்பவன்
நிஜஸர்க்கன் - மெய் படைப்புகளாய் இருப்பவன்
நிஹந்தன் - கொல்பவன்
நீதி - குற்றத்திற்கான தண்டனையாக இருப்பவன்
நீரஜன் - ரஜோ குணத்தை மறைப்பவன்
நீலகண்டன் - நீலமிடற்றோன் / நீலத் தொண்டை கொண்டவனே
நீலமௌலி - நீலக் கல் மகுடன்
நீலன் - வைடூரிய நிறத்தோன்
நைகஸாநுசரன் - பல மலைச்சிகரங்களில் திரிபவன்
நைகாத்மா - பல உடல்களையெடுப்பவன்
ப்ரக்ருஷ்டாரி - பகைவரை மிக ஒடுக்குபவன்
ப்ரகாசன் - வெளிப்படையாயிருப்பவன் / ஒளிர்மேனியன்
ப்ரசாந்தாத்மா - அலையோய்ந்த கடலாய் அடங்கியிருப்பவன்
ப்ரத்யயன் - ஞானமாயிருப்பவன் / நம்பிக்கை வடிவன் / அறிவன்
ப்ரதாநத்ருத் - அண்டம் உண்டாகக் காரணமான அடித்தளம்
ப்ரபாவன் - வசுக்களின் ஒருவன் / சக்தியின் வடிவம்
ப்ரபாவாத்மா - சக்தியின் ஆன்மாவாக இருப்பவன்
ப்ரபு - அனைத்தையும் அனுபவிப்பவன்
ப்ரம்மக்ருத் - வேதங்களைப் படைத்தவன்
ப்ரம்மகர்ப்பன் - பிரம்மனைக் கருவில் கொண்டவன்
பிரம்மசாரி - பிரம்மத்தில் திரிபவன் / பிரம்மத்தில் இருப்பவன்
ப்ரம்மதண்டவிநிர்மாதா - பிரம்ம தண்ட ஆயுதத்தைச் செய்பவன்
ப்ரம்மலோகன் - ப்ரம்மமாகப் பார்க்கப்படுபவன்
ப்ரம்மவர்ச்சஸன் - பிரம்ம ஒளியாக இருப்பவன்
ப்ரம்மவித் - வேதமறிந்தவன்
ப்ரம்மா - மிகப் பெரியவன்
ப்ரம்மி - வேதமோதியவன்
ப்ரமாணன் - மெய்யறிவின் காரணமாக இருப்பவன்
ப்ரயதாத்மா - தூய ஆன்மா கொண்டவன்
ப்ரவ்ருத்தி - உலக நடையாயிருப்பவன்
ப்ரவரன் - தலைசிறந்தவன்
ப்ரவேசிநாம்குஹாபாலன் - தியானிப்பவனின் மனத்தைக் காப்பவன்
ப்ரஜாத்வாரம் - உயிரினங்களின் உற்பத்தி வாயில்
ப்ரஜாபதி - உயிரினங்களின் தலைவன்
ப்ரஜாபீஜம் - உயிரினங்களின் வித்தாயிருப்பவன்
ப்ரஸ்கந்தநன் - பிறரின் வீழ்ச்சிக்குக் காரணமானவன்
ப்ரஸந்தன் - எப்போதும் உற்சாகமாயிருப்பவன்
ப்ரஸாதன் (3) - ஆனந்தமயமானவன் / அருள் வடிவினன் / எப்போதும் அருள் வழங்குபவன்
ப்ராக் - பலன்களில் முதல்வன்
ப்ராணதாரணன் - உயிரை நிறுத்துபவன்
ப்ராம்மணன் - பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொண்டவன்
ப்ராஸாநம்ப்ரபவன் - பிராசங்கள் உண்டாகும் இடம்
ப்ரியன் - இனியவன்
ப்ரேதசாரி - சடலங்களுடன் திரிபவன்
பக்தாநாம்பரமாகதி- பக்திமான்களின் உயர்ந்த புகலிடம்
பகவான் - அறிவு, ஆற்றல், பலம், செல்வம், வீரம், ஒளி ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவன்
பகஹாரி - செல்வத்தையழிப்பவன்
பசுபதி (2) - ஜீவாத்மாக்களின் தலைவன்
பட்டிசி - பட்டிசமெனும் ஆயுதம் கொண்டவனே
படபாமுகன் - வடவாமுகாக்னி
பண்டிதன் - அனைத்துமறிந்தவன்
பணவி - பணவமெனும் இசைக்கருவியுடையவன்
பத்மகர்ப்பன் - தாமரையின் கருவறையில் இருந்தவனே
பத்மநாபன் - தொப்புளில் தாமரையைக் கொண்டவனே
பத்மநாளாக்ரன் - தாமரையின் காம்பைத் தனக்கு முன்னதாகக் கொண்டவனே
பதி - அனைத்திற்கும் தலைவன்
பந்தகர்த்தன் - உலகப்பற்றைப் படைப்பவன்
பந்தநன் - உலகப்பற்றாக இருப்பவன்
பப்ரு - சனிக்கோள்
பயோநிதி - பாற்கடல்
பர்யயோநரன் - ஜீவன்களின் மொத்த தொகை
பரகதி - உயர்ந்த கதி
பரச்வதாயுதன் - கோடரியை ஆயுதமாகக் கொண்டவன்
பரம்ப்ரம்மம் - மேலான பிரம்மம்
பரமம்தபன் - மேலான தவமாக இருப்பவன்
பரமம்ப்ரம்ம் - மேலான பிரம்மம்
பரமாத்மா - மேலான ஆன்மா
பரமோமந்த்ரன் - சிறந்த ஆலோசகன்
பரன் - மேலானவன்
பரிதீபதி - படைகளின் ஓரத்தைப் பார்ப்பவன் / ஊர்களின் வடிவம்
பலசாரி - படையுடன் திரிபவன்
பலன் (2) - பலங்கொண்டவன்
பலரூபத்ருத் - வலியவடிவம் கொண்டவன்
பலவத் - வலிமையுள்ளவன்
பலவாந் - பெரும் வலிமையுள்ளவன்
பலவீரன் - வலியவீரன்
பலஹன் - பலாசுரனைக் கொன்றவன்
பலி - வலிமையுள்ளவன்
பவன் (2) - படைப்பின் காரணம்
பவித்ரன் (3) - துயரில் இருந்து ஆன்மாவைத் தூய்மையடையச் செய்பவன்
பஸ்மகோப்தன் - சாம்பலால் {திருநீற்றினால்} உலகத்தைக் காப்பவன்
பஸ்மசயன் - சாம்பலில் கிடப்பவன்
பஸ்மபூதன் - சாம்பலாயிருப்பவன்
பஹுகர்க்கசன் - அழிப்பதில் மிகக் கடுமையானவன்
பஹுதரன் - பலவற்றைத் தரிப்பவன்
பஹுதாநிந்திதன் - பலவாறு நிந்திக்கப்பட்டவன்
பஹுப்ரதன் - மிகுதியாகக் கொடுப்பவன்
பஹுப்ரஸாதன் - பேரருளைக் கொண்டவன்
பஹுபூதன் - பலவடிவங்களாயிருப்பவன்
பஹுமாலன் - அனைத்தையும் அறிந்தவன்
பஹுரச்மி - பலகதிர்களைக் கொண்டவன்
பஹுரூபன் - பலவடிவங்களைக் கொண்டவன்
பஹுவித்யன் - பல கல்விகளையும் கொண்டவன்
பக்ஷம் - அரைத்திங்களாயிருப்பவன்
பக்ஷரூபன் - உதவியின் வடிவம்
பக்ஷி - பறவை
பாககரன் - வேள்விப் பங்கைப் பகிர்ந்து கொடுப்பவன்
பாகி - வேள்விப் பங்கு உடையவன்
பாசன் - மாயையினால் அனைத்தையும் கட்டுபவன்
பாணஹஸ்தன் - கையில் கணை கொண்டவன்
பாதன் - அனைத்தும் அடையும் கதியாக இருப்பவன்
பாநு - ஒளிர்பவன்
பாவன் - செயலாயிருப்பவன்
பிதா - தந்தை
பிதாமஹன் - பாட்டன்
பிந்து - அழிப்பவன்
பிநாகத்ருத் - பிநாகமெனும் வில்லைத் தரிப்பவன்
பிநாகவாந் - பிநாகமெனும் வில்லைக் கொண்டவன்
பிக்ஷு - சந்நியாசி வடிவிலுள்ள பிரம்மசாரி
பிக்ஷுரூபன் - பிச்சைக்காரனின் வடிவம் கொண்டவன்
பீதாத்மா - பொன்னிறம் கொண்டவன்
பீஜகர்த்தன் - நன்மைதீமைகளின் காரணமாக இருக்கும் வித்து
பீஜவாஹநன் - காரணங்களை வாகனமாகக் கொண்டவன்
பீஜாத்யக்ஷன் - அறமறங்களுக்குத் தலைவன்
புண்யசஞ்சு - தகுதியால் அறியப்படுபவன்
புராணன் - முதன்மையானவன்
புஷ்கரஸ்தபதி - பிரம்ம அண்டத்தைச் செய்த சிற்பி
பூதசாரி - பூதங்களுடன் திரிபவன்
பூதநிஷேவிதன் - பழங்காலப் பேராசன்களால் அடையப்பட்டவன்
பூதபதி - பூதங்களுக்குத் தலைவன்
பூதபாவநன் (2) - ஐம்பூதங்களையும் படைத்தவன் / அனைத்தையும் காப்பவன்
பூதவாஹநஸாரதி - பூதவாகனங்களின் சாரதி
பூதாலயன் - பூதங்களிலிருப்பவன்
போஜநன் - அனைத்திற்கும் உணவளிப்பவன்
ம்ருகபாணார்ப்பணன் - மான் வடிவ வேள்வியைக் கணையால் அடித்தவன்
ம்ருகாலயன் - மானைக் கொண்டவன்
ம்ருது - மென்மையானவன்
மகரன் - ஆமை முதலிய வடிவங்கொண்டவன்
மணிவித்தன் - காதில் ரத்தினமணிந்தவன்
மத்யமன் - சார்பற்றவன்
மதநன் - மகிழ்ச்சியடையச் செய்பவன்
மதிமாந் - மதியுள்ளவன்
மது - வசந்தகால வடிவம்
மதுகலோசநன் - தேன்நிறக் கண்களைக் கொண்டவன்
மந்த்ரகாரன் - மந்திரங்களைப் படைத்தவன்
மந்த்ரன் (2) - தியானிப்பவனைக் காப்பவன், மந்திர வடிவம்
மந்த்ரவித் - மந்திரங்களை அறிந்தவன்
மந்தாநோபஹுலோவாயு - ஊழிப்பெருங்காற்று
மநோவேகன் - மனோவேகன்
மநோஜவன் - மனோவேகம் கொண்டவன்
மஹரிஷி - பெரும் முனிவன்
மஹாக்ரீவன் - பெருங்கழுத்தைக் கொண்டவன்
மஹாக்ரோதன் - பெருங்கோபி
மஹாகம்பு - சங்கு போன்ற பெருங்கழுத்தைக் கொண்டவன்
மஹாகர்ணன் - பெரும் காதுகளைக் கொண்டவன்
மஹாகர்த்தன் - படைத்தவனையும் படைத்தவன்
மஹாகர்ப்பபராயணன் - சிறந்த கருவுக்குக் காரணம்
மஹாகர்ப்பன் (2) - பெருங்கரு
மஹாகர்மன் - பெருஞ்செயல் செய்பவன்
மஹாகல்பன் - சிறந்த ஆபரணங்களைக் கொண்டவன்
மஹாகாயன் (3) - பேருடல் கொண்டவன்
மஹாகீதன் - சிறந்த பாடகன்
மஹாகேசன் - பெரும் தலைமயிர் கொண்டவன்
மஹாகேது - பெரிய காளைக் கொடி கொண்டவன்
மஹாகோரன் - பெருங்கொடூரன்
மஹாங்கன் - பெரிய லிங்கத்தைக் கொண்டவன்
மஹாத்மா (2) - பேரான்மா
மஹாதந்தன் - பெரும்பற்களைக் கொண்டவன்
மஹாதநு - பெரும் வில்லைக் கொண்டவன்
மஹாதபஸ் (2) - பெருந்தவம்
மஹாதம்ஷ்ட்ரன் (2) - பெரும் கோரப்பற்களைக் கொண்டவன்
மஹாதாது - மேருமலை
மஹதேவன் - பெருந்தேவன்
மஹாதேஜஸ் - பேரொளி
மஹாந் (2) - சிறந்தவன்
மஹாந்தகன் - பேரந்தகன்
மஹாந்ருத்யன் - பெரும் நடனக்காரன்
மஹாநகன் - பெரிய நகங்களைக் கொண்டவன்
மஹாநநன் - பெரிய வாயுள்ளவன்
மஹாநாகஹநன் - பெரும் யானையைக் கொன்றவன்
மஹாநாதன் - பேரொலி
மஹாநாஸன் - பெரிய மூக்கைக் கொண்டவன்
மஹாநேத்ரன் - பெரிய கண்களைக் கொண்டவன்
மஹாப்ரஸாதன் - பேருதவி செய்பவன்
மஹாபதன் - பெரும் வழியாயிருப்பவன்
மஹாபலன் (2) - பெரும் வலிமைகொண்டவன்
மஹாபாதன் - பெருங்கால்களைக் கொண்டவன்
மஹாபீஜன் - பெருங்காரணன்
மஹாமாத்ரன் - பெரிய அளவைக் கொண்டவன்
மஹாமாயன் - பெரும் மாயை கொண்டவன்
மஹாமாலன் - பெரும் மாலையைக் கொண்டவன்
மஹாமுகன் - பெரும் வாயைக் கொண்டவன்
மஹாமுநி - பெரும் முனிவன்
மஹாமூர்த்தன் - பெருந்தலை கொண்டவன்
மஹாமேகநிவாஸி - பெரும் மேகங்களில் வசிப்பவன்
மஹாயசஸ் (2) - பெரும்புகழ் கொண்டவன்
மஹாயுதன் - பேராயுதன்
மஹார்ணவநிபாநவித் - ஊழிப் பெருங்கடலைப் பருகுபவன்
மஹாரதன் - பெருந்தேரைக் கொண்டவன்
மஹாரூபன் (2) - பெருவடிவுடையோன்
மஹாரேதஸ் - பேருயிரணு
மஹாரோமன் - நெடுமயிரோன்
மஹாலிங்கன் - பெருலிங்கன்
மஹாவக்ஷஸ் - பெருமார்பன்
மஹாவேகன் - பெருவேகன்
மஹாஜ்வாலன் - பெருஞ்சுடரோன்
மஹாஜடன் - பெருஞ்சடையன் /அடர்ச்சடையன்
மஹாஜத்ரு - பெருந்தோளன்
மஹாஜிஹ்வன் - பெருநாவன்
மஹாஸேநன் - பெரும்படையோன்
மஹஹநு (2) - பெருங்கன்னத்தோன்
மஹாஹர்ஷன் - பேரின்பன்
மஹாஹஸ்தன் - பெருங்கரத்தோன்
மஹாக்ஷன் - பெருவிழியோன்
மஹீசாரி - பூமியெங்கும் திரிபவன்
மஹேச்வரன் - அனைத்துக்கும் மேலான தலைவன்
மஹோரஸ்கன் - பெருமார்போன்
மஹோஷ்டன் - பேருதடன் {பெரும் உதடுகளைக் கொண்டவன்}
மஹௌஷதன் - பெருமருந்தாயிருப்பன்
மாத்ரை - மாத்திரை எனும் காலப்பிரிவு
மாதா - தாய்
மாந்தாதா - நானெனும் ஆன்மாவை உண்பவன்
மாந்யன் - வழிபடத்தகுந்தவன்
மாயாவி - மாயம் செய்பவன்
மாலி - மாலைதரித்தவன்
மாஸம் - மாதம்
மித்ரன் - அனைத்தையும் அளிக்கும் நண்பன்
முக்ததேஜஸ் - முக்தியொளி / லிங்கவுடலை விட்டவன்
முக்யன் - முதன்மையானவன்
முண்டன் - மொட்டைத் தலை கொண்ட சன்னியாசி / முடியற்றவன்
முண்டி - மொட்டைத் தலையன்
முதிதன் - எப்போதும் இன்பமாயிருப்பவன்
முநி - உள்ளடங்கிப் பேசாதவன்
முஹூர்த்தம் - முஹூர்த்தமெனும் காலப்பிரிவு
மூர்த்தகன் - தலையில் இருப்பவன்
மூர்த்திஜன் - உடலில் உண்டாகுபவன்
மூலன் - வேரவன்
மேட்ரஜன் - லிங்கத்தில் தோன்றுபவன்
மேருதாமன் - மேருவில் இருப்பவன்
மோக்ஷத்வாரன் - முக்திவாசல்
யசஸ் - புகழாயிருப்பவன்
யஜ்ஞபாகவித் - வேள்விப்பங்கை அடைபவன்
யஜ்ஞன் (3) - வேள்வியாயிருப்பவன் / வழிபடப்படுபவன்
யஜ்ஞஸமாஹிதன் - வேள்வியிலிருப்பவன்
யஜ்ஞஹன் - வேள்வியை அழித்தவன்
யஜுப்பாதபுஜன் - கைகால்களை யஜுர்வேதமாகக் கொண்டவன்
யுக்தபாஹு - கலங்கடிக்கவல்ல கைகளைக் கொண்டவன்
யுக்தன் - அனைத்திலுமுள்ளவன் /கவசந்தரிப்பவன்
யுககரன் - யுகங்களைப் படைப்பவன்
யுகரூபன் - யுகவடிவன்
யுகாதிபன் - யுகங்களின் தலைவன்
யுஹாவஹன் - யுகங்களைப் படைப்பவன்
யுதிசத்ருவிநாசநன் - போரில் பகைவரை அழிப்பவன்
யோகன் - யோகன்
யோஜ்யன் - யோகத்தால் அடையத்தக்கவன்
ரத்நபரபூதன் - ரத்தினங்களைக் கொண்டவன்
ரத்நாங்கன் - ரத்தினம் போன்ற உறுப்புகளைக் கொண்டவன்
ரதயோகிஅக்ஷன் - உலகத்தேரின் அச்சாக இருப்பவன்
ரதி - இன்பவடிவம்
ரவி - சூரியன்
ராஜராஜன் - மன்னர்களுக்கு மன்னன் / குபேரன்
ரிக்ஸஹஸ்ராமிதேக்ஷணன் - ஆயிரம் ரிக்குகளைக் கண்களாகக் கொண்டவன்
ருத்ரன் - கடுஞ்சீற்றம் கொண்டவன் / அழச்செய்பவன்
ருது - பருவகாலம்
ரௌத்ரரூபன் - மிகக்கொடும்வடிவினன்
லகு - பெருவேகன்
லம்பநன் - பிரம்மாண்டங்கள் தொங்கும் ஆதாரம்
லம்பிதோஷ்டன் - தொங்கும் உதட்டைக் கொண்டவன்
லயன் - அனைத்தையும் ஏதிலியாக்குபவன்
லலாடாக்ஷன் - நெற்றிக்கண்ணன்
லவணன் - அழிப்பவன் / சந்திரனைக் கண்ணாய் கொண்டவன்
லவம் - லவமெனும் காலப்பிரிவு
லிங்கம் - மஹத் எனும் தத்துவம் /
லிங்காத்யக்ஷன் - சாத்திரங்களால் அறியப்படுபவன்
லோககர்த்தன் - உலகம்படைத்தோன்
லோகசாரி - உலகங்களில் திரிபவன்
லோகதாதா - உலகத் தலைவன்
போகலபாலன் (2) - உலகங்காப்போன்
லோகஹிதன் - உலகங்களுக்கு நன்மை செய்பவன்
லோஹிதாக்ஷன் - செவ்விழியோன்
வ்யக்தம் - புலப்படுபவன்
வ்யக்தாவ்யக்தன் - புலப்பட்டும் புலப்படாமல் இருப்பவன்
வ்யவஸாயன் - உற்சாகன்
வ்யாக்ரன் - புலிகளின் தலைவன்
வ்யாலரூபன் - அரவவடிவோன்
வ்யாஸன் - {வேதங்களைத்} தொகுப்பவன்
வ்ரதாதிபன் - நோன்புத்தலைவன்
வ்ருத்தன் - பெருகுபவன்
வ்ருத்தாவ்ருத்தகரன்- போரில் மண்டலவலம் வந்து வென்று திரும்புபவன்
வ்ருஷ்ணன் - வினைப்பயன்களைப் பொழிபவன்
வ்ருஷரூபன் - அறவடிவோன்
வ்ருக்ஷகர்ணஸ்திதி - மரக்காதில் {இலையில்} இருப்பவன் / ஆலிலையில் கிடக்கும் விஷ்ணு வடிவினன்
வ்ருஷகேது - உலகமரக்கொடி
வ்ருக்ஷன் - மரமானவன்
வ்ருக்ஷாகாரன் - உலகமர வடிவினன்
வகுளம் - மகிழமரம்
வச்யன் - வயப்படுத்துபவன்
வசகரன் - அனைத்தையும் வயப்படுத்துபவன்
வசீகரன் - அனைத்தையும் கவர்பவன்
வணிஜன் - வணிகன்
வதன் - கொல்பவன்
வம்சகரன் - குலம்பெருக்குபவன்
வம்சநாதன் - புல்லாங்குழல் சுரமாயிருப்பவன்
வம்சன் - புல்லாங்குழலாயிருப்பவன்
வர்ணவிபாவி - வர்ணங்களைப் படைத்தவன்
வர்த்தகி - மரத்தச்சன்
வர்த்தநன் - ஆன்மாவையும் உடலையும் பெருக்குபவன்
வரதன் (2) - வரமருள்பவன்
வரன் (3) - விரும்பப்படுபவன்
வரேண்யன் - வரந்தரத்தகுந்தவன்
வரோவராஹன் - ஆதிவராக வடிவன்
வஜ்ரஹஸ்தன் - வஜ்ர கரத்தோன்
வஜ்ரி - இந்திரன்
வஜ்ரி - வஜ்ராயுதபாணி
வஸுவேகன் - காற்றுவேகன்
வஸுஸ்ரேஷ்டன் - செல்வத்தில் சிறந்தவன்
வாசஸ்பத்யன் - பிருஹஸ்பதிக்குத் துணைவன் / புரோகிதன்
வாதன் - யாவரும் அடைபவன்
வாதரம்ஹஸ் - காற்றுவேகன்
வாமதேவன் - வேண்டப்படும் தேவன்
வாமநன் - குள்ளன்
வாமன் - அழகன்
வாயுவாஹநன் - காற்றுவாகனன்
வாஜஸநன் - அதர்யுக்களின் செயலைச் செய்பவன்
வாஸவன் - இந்திரன்
விக்யாதோலோகன் - வெளிப்படையான ஒளியாக இருப்பவன்
விக்ருதன் - அனைத்துமாபவன்
விகுர்வணன் - செயல்களால் அடையப்படாதவன்
விச்வகர்மமதி - தேவசிற்பியின்புத்தி
விச்வதேவன் (2) - அனைவருக்கும் தேவன்
விச்வபாஹு - அண்டம் தழுவும் கைகளைக் கொண்டவன்
விச்வன் - அனைத்தையும் தன்னுள் வைத்திருப்பவன்
விச்வரூபன் (2) - எங்குமுள்ளவன்
விச்வக்ஷேத்ரம் - உலகங்களின் ஆதாரம்
விசாகன் - குமரனின் உடலில் இருந்து எழுந்தவன்
விசாம்பதி - மனிதர்களின்தலைவன்
விசாரதன் - அனைத்துமறிந்தவன்
விசாரவித் - உண்மையறிந்தவன்
விசாலசாகர் - பெரியகைகளைக் கொண்டவன்
விசாலன் - பரந்து விரிந்திருப்பவன்
விசாலாக்ஷன் - அகன்றவிழியோன்
வித்வாந் - அனைத்துமறிந்தவன்
விதாதா - ஆணையிடுபவன்
விநதன் - வணக்கமுள்ளவன்
விபணன் - துறவைக்கடந்தவன்
விபாகன் - உறுப்புகளற்றவன்
விபாகஜ்ஞன் - வினைக்கனிபகுப்பவன்
விபு (4) - நீக்கமற நிறைந்தவன் / பல வடிவினன்
விபுதன் - பெரும்ஞானி
விமர்சன் - அறிவுவடிவன்
விமுக்தன் - முற்றும்விடுபட்டவன்
விமோசநன் - பற்றுகளிலிருந்து விடுவிப்பவன்
விரஜன் - ரஜோகுணமற்றவன்
விராமன் - பகைவரையொழிப்பவன்
விரூபன் - பல வடிவங்களில் தோன்றுபவன்
விவஸ்வாந் - கதிர்களைக் கொண்டவன்
விஜயகாலவித் - வெற்றித்தருணமறிந்தவன்
விஜயன் - வெற்றியோன்
விஜயாக்ஷன் - வெற்றியின் அச்சாரம்
விஷ்கம்பி - முடிவிலி
விஷ்ணு - நீக்கமற நிறைந்தவன்
விஷ்ணுப்ரஸாதிதன் - விஷ்ணுவால் வழிபடப்படுபவன்
விஷ்வக்ஸேநன் - எங்கும் பரவும் படையைக் கொண்டவன்
விஷ்வரூபன் - அண்டப்பெருவடிவமே
விஷண்ணாங்கன் - நுட்பவடிவினன்
விஸ்தாரன் - அனைத்தையும் மறைப்பவன்
விஸர்க்கன் - படைப்பவன்
வேணவி - புல்லாங்குழலைக் கொண்டவன்
வேதகாரன் - வேதங்களைப்படைத்தவன்
வைச்ரவணன் - குபேரன்
வைத்யன் - பெருங்கல்வி கொண்டவன்
வைதம்பன் - கபடற்றவர்க்கு வேண்டியவன்
ஜ்யோதிஷாம்அயநன் - விண்மீன்களின் வழி
ஜ்வாலி - சுடரவன்
ஜகத் - யாவுமானவன்
ஜகத்காலஸ்தாலன் - காலன்மூலம் அனைத்தையுமழிப்பவன்
ஜங்கமன் - அசைபவன்
ஜடாதரன் - சடைதரித்தவன்
ஜடி (2) - சடைமுடியோன் / சடையன் / வானப்ரஸ்தன் / காட்டுவாழ்ச்சடையன்
ஜந்யன் - போரில் வல்லவன்
ஜலோசயன் - நீரில்கிடப்பவன்
ஜலோத்பவன் - ஊழிநீரிலுண்டானவன்
ஜாஹ்நவீத்ருக் - கங்காசூடி
ஜிதகாமன் - காமனையடக்கியவன்
ஜிதேந்த்ரியன் - புலன்களையடக்கியவன்
ஜீவநன் - உயிர் படைத்தோன்
ஷஷ்டிபாகன் - அறுபதுபாகங்களைக்கொண்டவன்
ஸ்கந்தன் - கந்தன்
ஸ்தாணு - நிலையானவன்
ஸ்தாவராணாம்பதி - அடைதற்கரிய பொட்களின் தலைவன்
ஸ்திரன் (2) - அழியாதவன் / அசையாதவன்
ஸ்நேஹநன் - அன்புநிறைந்தவன் / அன்பர்க்கன்பன்
ஸ்ருகாலரூபன் - நரிவடிவமேற்றவன்
ஸ்ருதன் - எங்கும்நிறைந்தவன்
ஸ்ருவஹஸ்தன் - வேள்விக்கரண்டியைக் கையில் கொண்டவன்
ஸ்வயம்ச்ரேஷ்டன் - தானே உய்ந்தவன்
ஸ்வயம்பூதன் - தானே உண்டானவன்
ஸ்வர்க்கத்வாரன் - சொர்க்கவாசல்
ஸ்வர்ணரேதஸ் - தங்க உயிரணு கொண்டவன்
ஸ்வர்ப்பாநு - ராகு / முடிவிலா ஆனந்த ஒளியோன்
ஸ்வஸ்திதன் - மங்கலங்கொடுப்போன்
ஸ்வஸ்திபாவன் - சிறந்திருப்பவன்
ஸகணன் - கணங்களின் மத்தியில் வாழ்பவன்
ஸகலன் - நிறைந்தவன்
ஸகாமாரி - செயல்களின் பகைவரில் வசிப்பவன்
ஸங்க்யாஸமாபநன்- காலப்பிரிவுகளை நிறைவு செய்யும் புனிதன்
ஸங்க்ரஹன் - அனைத்தையும் ஏற்பவன்
ஸத் (2) - காரணம்
ஸத்க்ருதன் - யாவராலும் மதிக்கப்படுபவன்
ஸத்யவ்ரதன் - வாய்மைநோன்பைக் கொண்டவன்
ஸபலோதயன் - நன்னிறைவடிவன்
ஸபாவநன் - மன்றங்காப்போன்
ஸம்பக்நன் - நன்கு துதிக்கப்படுபவன்
ஸம்பந்நன் - அனைத்தும்நிறைந்தவன்
ஸம்யதன் - சார்ந்தோருக்குக் கட்டுப்பட்டவன்
ஸம்யுகாபீடவாஹனன் - போர்க்கொடிச்சின்னம் வாகனமாகக் காளையைக் கொண்டவன் / அடல்விடைக்கொடியோன்
ஸம்யோகன் - ஆன்மாவை உடலில் சேர்ப்பவன்
ஸம்வத்ஸரகரன் - காலச்சக்கரத்தை இயக்குபவன்
ஸம்வத்ஸரம் - வருடம்
ஸம்க்ஷேபோவிஸ்தரஸ்ஸர்க்கன் - சூத்திரங்களின் சுருக்கமாகவும், விரிவாகவும் இருப்பவன்
ஸமரமர்த்தநன் - போரில்பகைவரைமாய்ப்பவன்
ஸமாம்நாயன் - வேதமாயிருப்பவன்
ஸமுத்ரன் - ஆழியானவனே
ஸயஜ்ஞாரி - வேள்வியின் பகைவரோடும் இருப்பவன்
ஸர்ப்பசீரநிவாஸநன் - அரவஞ்சூடியே
ஸர்வகந்தஸ்ஸுகாவஹன் - மணங்களனைத்திலும் நறுமணத்தை உண்டாக்குபவன்
ஸர்வகன் - எங்குமிருப்பவன்
ஸர்வகர்மணாம்உத்தாநன் - வினைகளனைத்தையும் தோன்றச் செய்பவன்
ஸர்வகர்மா - செயல்களனைத்தையுமுடையவன்
ஸர்வகரன் - அனைத்தையும்படைத்தவன்
ஸர்வகாமகுணாவஹன் - யாவரும்விரும்பும் குணங்களைப் படைப்போன்
ஸர்வகாமதன் - ஆசைகள் அனைத்தையும் கொடுப்பவன்
ஸர்வகாமன் - ஆசைகள் அனைத்துமானவன்
ஸர்வகாமவரன் - ஆசைகளனைத்திலும் சிறந்தவன்
ஸர்வகாலப்ரஸாதன் - காலங்கள் அனைத்திலும் அருள்பவன்
ஸர்வகோவாயு - எங்குமுள்ள காற்றாயிருப்பவன்
ஸர்வசாரி (2) - எங்குமிருப்பவன்
ஸர்வசுபங்கரன் - மங்கலங்களனைத்தும் செய்பவன்
ஸர்வதன் - அனைத்தையும் கொடுப்பவன்
ஸர்வதாரி - அனைத்தையும் தாங்குபவன்
ஸர்வதுர்யநிநாதி - இசையொலிகள் அனைத்தையும் கொண்டவன்
ஸர்வதேவமயன் (2) - தேவர்களனைவராயிருப்பவன்
ஸர்வதேவன் - அனைவருக்கும் தேவன்
ஸர்வதேஹிநாம்இந்த்ரியன் - உயிரினங்கள் அனைத்தின் புலன்களாயிருப்பவன்
ஸர்வதோமுகன் - எங்கும் முகங்களைக் கொண்டவன்
ஸர்வபார்ச்வமுகன் - பக்கங்கள் அனைத்திலும் முகங்களைக் கொண்டவன்
ஸர்வபாவகரன் - அனைத்துப் பொருட்களையும் உண்டாக்குபவன்
ஸர்வபாவநன் - அனைத்தையும் உண்டாக்குபவன் / அனைத்தையும் தூய்மையாக்குபவன்
ஸர்வபூஹரன் - உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவன்
ஸர்வபூதாத்மா - உயிரினங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்டவன்
ஸர்வபூதாநாம்வாஹிதன் - உயிரினங்கள் அனைத்தையும் இயக்குபவன்
ஸர்வபூஜிதன் - யாவராலும் வழிபடப்படுபவன்
ஸர்வயோகி - முற்றிலுமிருப்பவனே
ஸர்வன் (2) - முற்றாயிருப்பவன்
ஸர்வரத்நவித் - சிறந்தவை அனைத்தையும் கொண்டவன்
ஸர்வலக்ஷணலக்ஷிதன் - நல்ல இலக்கணங்கள் பொருந்தியவன்
ஸர்வலாலஸன் - அனைவரிடமும் அன்புள்ளவன்
ஸர்வலோகக்ருத் - உலகங்களனைத்தும் படைப்பவன்
ஸர்வலோகப்ரஜாபதி - உலகங்களின் அனைத்திலும் உள்ள உயிரினங்களின் தலைவன்
ஸர்வலோசநன் - அனைத்தையுமறிபவன்
ஸர்வவாஸன் - எங்குமிருப்பவன்
ஸர்வவாஸீ - எங்குமிருப்பவன்
ஸர்வவிக்யாதன் - இடங்கள், காலங்கள், உயிரினங்கள் அனைத்திலும் வெளிப்படையாகத்தெரிபவன்
ஸர்வவிக்ரஹன் - அனைத்தையும் உடலாகக் கொண்டவன்
ஸர்வஜ்ஞன் - அனைத்தையும் அறிந்தவன்
ஸர்வஸாதநன் - பயன்களனைத்தையும் கொடுப்பவன்
ஸர்வஸாதுநிஷேவிதன் - நல்லோரனைவராலும் அடையப்பட்டவன்
ஸர்வாங்கன் (2) - உலகங்களை அங்கங்களாகக் கொண்டவன்
ஸர்வாங்கரூபன் - அங்கங்கள் அனைத்துமாய் இருப்பவன்
ஸர்வாச்ரயக்ரமன் - அனைத்திலுமுள்ள ஒழுங்காயிருப்பவன்
ஸர்வாசயன் - அனைத்திற்குமிடமாக இருப்பவன்
ஸர்வாத்மா - அனைத்திற்கும் ஆத்மாவாக இருப்பவன்
ஸர்வாதோத்யபரிக்ரஹன் - அனைத்தையும் ஈர்ப்பவன்
ஸர்வாயுதன் - அனைத்து ஆயுதங்களையும் கொண்டவன்
ஸர்வேஷாம்ப்ராணிநாம்பதி - உயிரினங்கள் அனைத்தின் தலைவன்
ஸவிதா (2) - படைப்பவன்
ஸஹன் - சக்தி கொண்டவன்
ஸஹஸ்ரதன் - ஏராளமாகக் கொடுப்பவன்
ஸஹஸ்ரபாத் - ஆயிரங்கால்களைக் கொண்டவன்
ஸஹஸ்ரபாஹு - ஆயிரங்கைகளைக் கொண்டவன்
ஸஹஸ்ரமூர்த்தன் - ஆயிரந்தலைகளைக் கொண்டவன்
ஸஹஸ்ரஹஸ்தன் - ஆயிரங்கைகளைக் கொண்டவன்
ஸஹஸ்ராக்ஷன் - ஆயிரங்கண்களைக் கொண்டவன்
ஸஹாயன் - துணையாயிருப்பவன்
ஸாங்க்யப்ரஸாதன் - ஆத்மவடிவத்தை அறியச் செய்பவன்
ஸாத்யரிஷி - ஸாத்யதேவர்களில் முனிவன்
ஸாமாஸ்யன் - சாம வேதத்தை வாயாகக் கொண்டவன்
ஸாரக்ரீவன் - உறுதியான கழுத்தைக் கொண்டவன்
ஸாரங்கன் - சிறந்த அங்கமுள்ளவன்
ஸித்தபூதார்த்தன் - சித்தியடைந்தவர்களின் பயனாக இருப்பவன்
ஸித்தயோகி - சித்தயோகி
ஸித்தஸாதகன் - சித்தம் பயில்பவன்
ஸித்தார்த்தகாரி - சித்தர்களுக்கு பலனளிப்பவன்
ஸித்தார்த்தன் (4) - விரும்பிய அனைத்தையும் பெற்றவன்
ஸித்தி - காரியநிறைவாயிருப்பவன்
ஸிம்மகன் - சிங்கநடை கொண்டவன்
ஸிம்மசார்த்தூலரூபன் - சிங்கம்புலிவடிவினன்
ஸிம்மதம்ஷ்ட்ரன் - சிங்கப்பற்கள் கொண்டவன்
ஸிம்மநாதன் - சிங்க முழக்கம் செய்பவன்
ஸிம்மவாஹநன் - சிங்க வாகனம் கொண்டவன்
ஸுகந்தாரன் - நறுமணத்தோன்
ஸுகாஜாதன் - நல்வடிவாய் பிறந்தோன் / நலத்திற்காகப் பிறந்தவன்
ஸுகாஸக்தன் - இன்பப்பற்றில்லாதோன்
ஸுச்சத்ரன் - அழகிய குடை கொண்டவன்
ஸுசாரதன் - இனியவாக்குடையோன்
ஸுதர்சநன் - நற்பார்வைகொண்டவன்
ஸுதீர்த்தன் - நல்லாசிரியன்
ஸுதீக்ஷ்ணதசநன் - கூரிய பற்களைக் கொண்டவன்
ஸுநிச்சலன் - அசையாதிருப்பவன்
ஸுபந்தநவிமோசநன் - உலகபந்தமறுப்பவன்
ஸுபலன் - நற்பலன் கொண்டவன்
ஸுபாந்தவன் - நல்லுறவினன்
ஸுபீஜன் - நல்வித்தாக இருப்பவன்
ஸுமஹாஸ்வநன் - நற்தொனி கொண்டவன்
ஸுமுகன் - நன்முகம் கொண்டவன்
ஸுயுக்தன் - பெருவிழிப்புள்ளவன்
ஸுரகர்ணன் - தேவர்களால் கருதப்படுபவன்
ஸுரபயுத்தரணன் - குணவோரைக் கரைசேர்ப்பவன்
ஸுராத்யக்ஷன் - தேவர்களின் தலைவன்
ஸுராரிஹன் - அசுரரைக் கொன்றவன்
ஸுரூபன் - அழகிய நிறம் கொண்டவன்
ஸுவக்த்ரன் - நன்முகம் கொண்டவன்
ஸுவர்ச்சஸன் - நன்மகிமைகொண்டவன்
ஸுவர்ச்சஸி - அழகிய ஒளி கொண்டவன்
ஸுவர்ணன் - அழகிய நிறம் கொண்டவன்
ஸுவாஸன் - நல்லிடத்தில் இருப்பவன்
ஸுவிஜ்ஞேயன் - எளிதாக அறியப்படக்கூடியவன்
ஸுஷாடன் - அனைத்தையும்எளிதில் தாங்குபவன்
ஸுஸ்வப்நன் - நற்கனவு கொண்டவன்
ஸுஸரணன் - எளிதாக அடையப்படக்கூடியவன்
ஸுஸஹன் - .நற்துணைவன்
ஸுஹ்ருதன் - நல்லிதயம் கொண்டவன்
ஸூர்யன் - அனைத்தையும் இயக்குபவன்
ஸூக்ஷ்மன் - அறிவுநுட்பம் கொண்டவன்
ஸூக்ஷ்மாத்மா - அறிவுக்கெட்ட வடிவம் கொண்டவன்
ஸேநாகல்பன் - படைகளைப் படைப்பவன்
ஸேதநாதிபதி - படைத்தலைவன்
ஸோமன் - சோமலதைவடிவினன்
ஹ்லாதநன் - ஆனந்தம்படைப்பவன்
ஹயகர்த்தபி - குதிரையேறுபவன் / பரியேறி
ஹர்யச்வன் - பச்சை குதிரை கொண்டவன் / பசும்பரியோன்
ஹர்யக்ஷன் - சிங்கவடிவோன்
ஹரன் (3) - அனைத்தையும் அழிப்பவன் / மனத்தையிழுப்பவன் / துயரமழிப்பவன்
ஹரி (4) - துயரமழிப்பவன் / விஷ்ணுவாயிருப்பவன்
ஹரிகேசன் - செம்மட்டை மயிரோன்
ஹரிணன் (2) - பொன்னார்மேனியன் / மான் வடிவம் கொண்டவன்
ஹரிணாக்ஷன் - செவ்விழியோன்
ஹவி - வேள்விப்பொருள்
ஹவிஸ் - தன்னில் இன்பம் கொள்பவன்
ஹஸ்தீச்வரன் - வாயுலிங்க வடிவன்
ஹிமவத்கிரிஸமச்ரயன் - இமயமலையிலிருப்பவன்
ஹிரண்யகவசோத்பவன் - பொற்கவச ஒளியாக இருப்பவன்
ஹிரண்யபாகு - பொற்கரத்தோன்
ஹுதன் - வேள்வியில் நிறைவடைபவன்
ஹுதாசநன் - வேள்வி நெருப்பானவன்
ஹுதாசநஸஹாயன் - நெருப்புக்குத் துணைபுரிபவன் / காற்று தேவன்
ஹேமகரன் - பொன்படைப்போன்
ஹைமன் - பொன்னிறத்தோன் / இமயமலையோன்
க்ஷணம் - கணக்காலம்
க்ஷபன் - இரவாயிருப்பவன்
ஸ்ரீயாவாஸி - செல்வத்துடன் இருப்பவன்
ஸ்ரீமாந் - செல்வமுள்ளவன்
ஸ்ரீவர்த்தநன் - செல்வத்தைப் பெருக்குபவன்
****
மூலத்துதி |
எளிய வடிவில் மூலத்துதி |
தமிழ்த்துதி |
அகராதி |
****