மஹாபாரதம் - அநுசாஸன பர்வம் 17ம் பகுதியின் 30ம் ஸ்லோகத்தில் தொடங்கி 152ம் வரை கிருஷ்ணனிடம் உபமன்யு சொன்ன சிவசஹஸ்ரநாமம் மொத்தம் 123 ஸ்லோகங்களைக் கொண்டதாகும். இவற்றில் சிவனின் 1008 பெயர்கள் அடங்கியிருக்கின்றன. கீழ்க்கண்ட பெயர்கள் கங்குலியின் ஆங்கிலப் பதிப்பு மற்றும் கும்பகோணம் தமிழ்ப் பதிப்புடன் ஒப்புநோக்கி புனையப்பட்டது.
கீழே ( ) அடைப்புக்குறிக்குள் வரும் எண்கள் (30-1) அநுசாஸன பர்வம் பகுதி 17ல் 30வது ஸ்லோகம் என்றும், சிவஸகஸ்ரநாமத் துதியில் 1வது ஸ்லோகம் என்றும், (152-123) என்று இருந்தால், அநுசாஸன பர்வம் பகுதி 17ல் 152வது ஸ்லோகம் என்றும், சிவஸகஸ்ரநாமத் துதியில் 123வது ஸ்லோகம் என்றும் கொள்க.
கீழே ( ) அடைப்புக்குறிக்குள் வரும் எண்கள் (30-1) அநுசாஸன பர்வம் பகுதி 17ல் 30வது ஸ்லோகம் என்றும், சிவஸகஸ்ரநாமத் துதியில் 1வது ஸ்லோகம் என்றும், (152-123) என்று இருந்தால், அநுசாஸன பர்வம் பகுதி 17ல் 152வது ஸ்லோகம் என்றும், சிவஸகஸ்ரநாமத் துதியில் 123வது ஸ்லோகம் என்றும் கொள்க.
****
மூலத்துதி |
எளிய வடிவில் மூலத்துதி |
தமிழ்த்துதி |
அகராதி |
****
ஓம்
அசைவற்றோனே, நிலையானவனே, பலமிக்கோனே, பயங்கரனே, சுடர்மிக்கோனே, முதன்மைனவனே, வரமளிப்போனே, மேன்மையானவனே,
அனைத்தான்மாவே, யாவராலும் கொண்டாடப்படுபவனே, அனைத்துமானவனே, முற்றுமிருப்பவனே, மூல இருப்பே (30-1)
சடைமுடியோனே, தோலாடையனே, கொண்டையணிவோனே, {சிகையுள்ளவனே, கத்திதரித்தவனே}, எங்குமங்கமுள்ளோனே, முற்றும்படைத்தவனே,
அழிப்பவனே, செவ்விழியோனே, முற்றுமழிப்பவனே, உயரந்தவா (31-2)
இயற்கையே, மறைந்திருப்பவனே, தற்கட்டுப்பாடுடையோனே, அழிவில்லாதவனே, அசையாதிருப்போனே,
சுடலைவாசியே, அறுகுணத்தோனே , இதயவெளிவாசியே, புலன்களாயிருப்போனே, அனைத்தும்பீடிப்பவா (32-3)
யாவருந்துதிக்கத்தக்கவனே, பெருவினையோனே, தவமுள்ளவனே, பூதங்கள்படைத்தோனே,
பித்தன்வடிவில் மறைந்திருப்பவனே, முற்றுலகவுயிரினத் தலைவா (33-4)
அளவிலாவடிவுற்றோனே, பேருடல் படைத்தவனே, அறவடிவமே, பெரும்புகழே,
உயர்ஆன்மாவே, உடல்களின் ஆன்மாவே, அண்ட வடிவமே, பெரும்மோவாயா (34-5)
உலகங்காப்பவனே, ஆன்மாவுக்குள்ளிருப்போனே, அமைதிமயனே, பரிபூண்வாகனனே,
தூயோனே, சிறந்தவனே, சடங்கானோனே, சடங்குபுகலிடமே (35-6)
வினையியக்கமே, தானாயுண்டானவனே, தொடக்கமே, தொடக்கம்படைத்தோனே, செல்வ இருப்பிடமே,
ஆயிரங்கண்ணுற்றவனே, அகன்றவிழியோனே, சோமலதையே, விண்மீன்களைப்படைத்தவா (36-7)
திங்களே, ஞாயிறே, சனியே, கேதுவே, ராகுவே, செவ்வாயே,
{வியாழனே, வெள்ளியே, புதனே},
அத்ரியே, அத்ரிமனைவியை வணங்கியவனே, மானில்கணைதொடுத்தோனே, பாவமண்டாதவா (37-8)
பெருந்தவமே, கொடுந்தவமே, உயர்மனத்தோனே, விருப்பங்களை நிறைவேற்றுபவனே,
காலச்சக்கரமியக்குவோனே, மந்திரனே, அதிகாரமளிப்பவனே, உயர்தவமுள்ளவா (38-9)
யோகியே, பிரம்மத்தில் கலக்கச் செய்வோனே, பெருவித்தே, மாவித்தே, பெரும்பலத்தோனே,
பொன்வித்தே, அனைத்துமறிந்தோனே, நல்வித்தே, காரணவாகனா (39-10)
பதின்கரத்தோனே, இமைக்காதவனே, நீலமிடற்றோனே, உமையின் தலைவனே,
அண்டப்பெருவடிவமே, தானேயுயர்ந்தோய், வலியவீரா, வலிமைமிக்கவனே, தத்துவத் தொகை கணனே (40-11)
கணங்களைப் படைத்தோனே, கணங்களின் தலைவனே, திசைகளுடுத்துவோனே, ஆசை தரும் காமனே,
மந்திரமறிந்தோனே, உயர்ந்த மந்திரமே, அனைத்தும்படைத்தோனே, அண்டமழிப்பவா (41-12)
கமண்டலமுடையவனே, வில்தரித்தோனே, கணைதரித்தவனே, மண்டையோடேந்துவோனே,
வஜ்ரதாரியே, சதக்னி ஆயுதமே, வாள்தரித்தோனே, கோடரிபாணியே, ஆயுததாரியே, சிறந்தவா (42-13)
வேள்விக்கரண்டிகையுற்றவனே, நல்வடிவோனே, ஒளிமிக்கோனே, ஒளியைப்படைப்பவனே,
மகுடந்தரிப்போனே, நன்முகனே, ஆழமானோனே, வணக்கமுள்ளவா (43-14)
நெடியோனே, செஞ்சடையனே, நல்லாசிரியோனே, கார்வண்ணனே,
நரிவடிவேற்றோனே, விருப்பமடைந்தவனே, முடியற்றோனே, மங்கலமுற்றுஞ்செய்பவா (44-15)
பிறப்பற்றவா, பலவடிவத்தோனே, நறுமணஞ்சூடியே, சடைமுடியோனே,
மேனோக்குவித்தே, மேனோக்குங்குறியோனே, மேனோக்கிக்கிடப்பவனே, வலிமைகொள்ளிடமே (45-16)
முச்சடையோனே, மரவுரிசூடியே, கடுஞ்சீற்றமுடையோனே, படைத்தலைவனே, நீக்கமறநிறைந்தோனே,
பகலுலாவியே, இரவுலாவியே, கடுங்கோபியே, நன்மகிமையாளா (46-17)
கஜாசுரனைமாய்த்தவனே, தைத்தியரைக்கொன்றோனே, காலனே, உலகத்தலைவனே, குணம்படைப்போனே,
சிங்கம்புலிவடிவானனே, குருதிதோயானையுரியா (47-18)
காலயோகியே, பேரொலியே, ஆசைகளானவனே, நால்வழியோனே,
இரவுலாவியே, சடலங்களுடன்திரிவோனே, பூதங்களுடன் திரிபவனே, அனைத்துக்கும் மேலான தலைவா (48-19)
பலவடிவமிருப்போனே, பலவற்றைத்தரிப்பவனே, முடிவிலாஆனந்தவொளியே, அளவற்றோனே, இலக்கே,
நடனவிரும்பியே, எப்போதுமாடுபவனே, ஆடல்வல்லோனே, அனைவர்க்கன்பா (49-20)
உக்கிரனே, பெருந்தவமே, பணிவார்ப்பற்றே, என்றுமுள்ளோனே, மலைவாசியே, பற்றற்றோனே,
ஆயிரங்கரத்தவனே, வெற்றியாளனே, உற்சாகனே, ஓய்வற்றவா (50-21)
அச்சமற்றோனே, அச்சுறுத்துபவனே, வேள்வியழித்தோனே, ஆசையழிப்பவனே,
தட்சவேள்வியழித்தோனே, இனியனே, சார்பற்றவா (51-22)
பிறனொளியபகரிப்போனே, பலனைக்கொன்றவனே, இன்பமே, செல்வமே, வெல்லப்படாதோனே, ஒப்பிலா உயர்வே,
மிடுக்குமுழக்கமே, மிடுக்குவடிவமே, மிடுக்குபலவூர்தியே (52-23)
ஆலுறைவடிவமே, ஆலுறைவோனே, ஆலிலைகிடந்தவனே, நிக்கமறநிறைந்தோனே,
கூர்ப்பற்கள்கொண்டவனே, பெருவடிவே, பெருவாயா (53-24)
எங்கும்படர்படையோனே, துயரழிப்பவனே, வேள்வியே, அடலேறுகொடியோனே,
சுட்டெரிக்குந்தீயே, பசும்பரியோனே, துணையே, வினைநேரமறிந்தவா (54-25)
விஷ்ணுவே, அருளானந்தமே, வேள்வியே, ஆழியே, வடந்தைத்தீயே,
தீத்துணைக் காற்றே, ஆழியமைதியே, வேள்வித்தீயே (55-26)
கடுமொளியே, பேரொளியே, போரில்வல்லவனே, வெற்றிக்காலமறிந்தவனே,
விண்மீன்வழியே, காரியநிறைசித்தமே, அனைத்தினுடலே (56-27)
குடுமியுள்ள குடும்பனே, முடியற்ற துறவியே, சடைதரிக் காட்டுவாசியே, சுடரவனே, உடலில்தோன்றுபவனே, தலையில் இருப்போனே, வலிமையுள்ளவனே,
வேணுவொலியே, உடுக்கையொலியே, தாளியொலியே, கலியே, காலமாயைமறைப்பவா (57-28)
தாரகையொளிமதியாளனே, குணமறிந்தோனே, ஏதிலியாக்குபவனே, சலிப்பற்றோனே,
உயிரினத்தலைவனே, அண்டந்தழுவும்கரத்தோனே, நுண்பகுப்பாயிருப்பவனே, எங்குமுள்ளோனே, முகமற்ற அறிவே (58-29)
பற்றறுப்போனே, அடைவார்க்கெளியனே, பொற்கவசவொளியே,
லிங்கத்தோன்றியே, படையுடன்திரிபவனே, பூமியெங்கும்திரிபவனே, எங்கும் நிறைந்தவா (59-30)
இசைமுழுமையே, அனைத்துமீர்ப்பவனே,
அரவவடிவோனே, குகையிலிருப்பவனே, மறைந்திருப்போனே, மாலைதரித்தவனே, மகிழ்ச்சிஅலையே (60-31)
முத்தசையளிப்போனே, முக்காலதாரியே, வினைப்பற்றறுப்போனே,
அசுரர்த்தலைவனைக்கட்டியவனே, போர்ப்பகையழிப்பவா (61-32)
ஆன்மவடிவறியச்செய்வோனே, ஆடையற்றவனே, நல்லோரால் அடையப்படுவோனே,
வீழ்ச்சிக்குக் காரணனே, வினைக்கனிபகுப்போனே, ஒப்பற்றவனே, வேள்விப்பங்குபகுப்பவா (62-33)
எங்குமிருப்பவனே, எங்குந்திரிவோனே, மேலானவனே, {ஆடையற்றோனே, இந்திரனே, மரணமற்ளோனே},
இமயமே, பொன்படைப்போனே, வினையற்றவனே, எங்கும்திரிவோனே, மேன்மையே (63-34)
செங்குருதிவிழியோனே, பெருவிழியோனே, வெற்றிக்கச்சாரமே, அனைத்துமறிந்தோனே,
அனைத்துமேற்பவனே, தண்டிப்போனே, அனைத்தும்படைத்தவனே, அரவஞ்சூடியே (64-35)
முதன்மையானவனே, இறுதியானவனே, பெருகுபவனே, எக்காளமிடுபவனே, ஆசையழிப்பவனே,
எப்போதுமருள்பவனே, நற்பலனே, வலிமைவடிவமே (65-36)
ஆசைகளிற்சிறந்தோனே, அனைத்துங்கொடுப்போனே, எங்குமுகங்கொண்டோனே,
வெளிபோல்வடிவற்றோனே, உடலுள்ளூடுருபவனே, அடங்காதவனே, இதயவெளியிலிருப்பவா (66-37)
கொடூரவடிவே, கதிரே, தொடக்கமுதலிருப்பவனே, எண்ணிலாக்கதிரோனே, அழகொளியே,
காற்றுவேகனே, பெரும்வேகனே, மனோவேகனே, இரவுலாவியே (67-38)
எங்குமிருப்போனே, செல்வத்திலிருப்போனே, கல்விகற்பிப்போனே, முற்றமைதியே,
முனியே, உடல்கடந்து ஆன்மாவைக் கண்டோனே, நன்குதுதிக்கப்படுபவனே, ஏராளங்கொடுப்பவா (68-39)
பறவையே, அரைத்திங்களே, வடிவனே, பேரொளிமிக்கவனே, மனிதர்களின் தலைவா,
மயங்கச்செய்பவனே, மகிழச்செய்பவனே, ஆசையைத்தூண்டுபவனே, அரசமரமே, பொருள்படைப்பவனே, புகழே (69-40)
வேண்டியதுகொடுக்கும் தேவனே, சொக்கனே, பலன்களில் முதல்வனே, திறம்பெற்றவனே, வாமனனே,
நிறைவையெட்டியவனே, பெருமுனியே, விரும்பியதைப்பெற்றவனே, சித்தம்பயில்பவா (70-41)
துறவியே, துறவிவடிவனே, துறவைக்கடந்தவனே, மென்மையானவனே, மாற்றமற்றோனே,
பெரும்படையோனே, விசாகனே, அறுபதுப்பங்கோனே, புலன்களின்தலைவா (71-42)
வஜ்ரகரத்தோனே, முடிவிலியே, படைநிலைமறக்கச்செய்தோனே,
வலம்வந்து வெற்றியடைபவனே, ஆழியாழமறிந்தோனே, வசந்தகால வடிவனே, தேன்நிறவிழியா (72-43)
புரோகிதனே, அதர்யுவே, வாழ்முறைமுற்றிலும்துதிக்கப்படுபவனே,
பிரம்மசாரியே, உலகந்திரிவோனே, எங்குமிருப்பவனே, வாய்மையறிந்தவா (73-44)
இதயவழிகாட்டியே, அண்டம்படர்ந்தவனே, காலனே, ஊழியிரவில்திரிவோனே, பிநாகபாணியே,
காரணங்களிலிருப்போனே, காரணமே, நந்தியே, நந்தியைப்படைத்தவனே, ஹரியே (74-45)
செல்வத் தலைவனே, செல்வமே, மகிழச்செய்வோனே, பகையின்பமழிப்பவனே,
மகிழ்ச்சிபெருக்குபவனே, செல்வமழிப்பவனே, காலனே, பிரம்மனே, பாட்டா (75-46)
நான்முகனே, பெருலிங்கமே, சொக்கலிங்கமே,
லிங்கத்தலைவனே, தேவர்த்தலைவனே, யோகத்தலைவனே, யுகம்படைப்பவா (76-47)
அறமறத்தலைவனே, வினைவித்துபடைப்போனே, ஆன்மவழிபாட்டாளனே, பலமுள்ளோனே,
வரலாறே, சாத்திராபரணத்தோனே, கௌதமனே, சந்திரஇலக்கண ஆசானே (77-48)
பகைவரையடக்குபவனே, அடங்காதவனே, கபடற்றவர்க்கினியனே, வசப்படுத்துபவனே, அடக்கவல்லவனே, கலியே,
உலகம்படைத்தோனே, உயிரினத்தலைவனே, படைத்தவைபடைத்தவனே, அனுபவிக்காதவா (78-49)
அழிவற்றோனே, பரமனே, பிரம்மமே, வலியோனே, இந்திரனே,
நீதியே, அநீதியே, தூய ஆன்மாவே, தூயனே, வழிபடத்தகுந்தவனே, ஓயாமல்தோன்றிமறைபவா (79-50)
பேரருளாளனே, நற்கனவே, உலகங்களைப்பிரதிபலிப்பவனே, பகைவெல்வோனே,
வேதம்படைத்தோனே, மந்திரம்படைத்தோனே, முற்றுமறிந்தோனே, போர்ப்பகைமாய்ப்பவா (80-51)
பெருமுகில்வாசியே, பெருங்கொடூரனே, முற்றுங்கவர்வோனே,
தீச்சுடரே, பெருஞ்சுடரே, பெரும்புகையே, வேள்வி நிறைவே, வேள்விப்பொருளே (81-52)
பலன்பொழிபவனே, ஐயமறுக்குஞ்சங்கரனே, அழவில்லாவொளியே, புகைக்கொடியோனே,
மரகதநீலனே, லிங்கப்புனிதனே, மங்கலனே, தடையற்றவா (82-53)
மங்கலவருளே, அருள்வடிவமே, பங்குடையோனே, பங்குபகிர்பவனே, நளினவேகனே,
பற்றற்றோனே, வலியவுறுப்புளோனே, சிறந்த கருக்காரணா (83-54)
கார்வண்ணனே, பொன்வண்ணனே, சிறந்த கருக்காரணனே,
பெரும்பாதமுள்ளோனே, பெருங்கரத்தோனே, பேருடலோனே, பெரும்புகழே (84-55)
பெருந்தலையோனே, பேரளவுடையோனே, பெருவிழியோனே, அறியாமையிருளுறைவோனே,
பேரந்தகனே, பெருங்காதனே, பேருதடனே, பெரும்மோவாயா (85-56)
பெருமூக்கோனே, பெருமிடற்றோனே, பெருங்கழுத்தோனே, உடற்பற்றறுப்போனே,
பெருமார்போனே, பெருகருணையுள்ளோனே, உள்ளுறையான்மாவே, விலங்காலயா (86-57)
பிரம்மாண்டவிட்டமே, தொங்குவுதடோனே, பெரும்மாயனே, பாற்கடலே,
பெரும்பல்லோனே, பெருந்தாடையோனே, பெருநாவோனே, பெருமுகத்தோனே (87-58)
பெருநகத்தோனே, பெருமுடியோனே, நீள்முடியோனே, அடர்ச்சடையோனே,
உற்சாகமயனே, ஆனந்தமயனே, ஞானமயனே, மலைவில்லாளா (88-59)
அன்பர்க்கன்பனே, அன்பற்றோனே, வெல்லற்கரியனே, பெரும் முனியே,
அண்டமரவடிவனே, அண்டமரமே, நெருப்பே, காற்றுவாகனா (89-60)
மலையரசே, மேருவாசியே, அமரர்க்கோனே,
அதர்வத்தலையோனே, ஸாமவாயோனே, ரிக்காயிரவிழியோனே (90-61)
யஜுர்பாதத்தோளோனே, இதயக்குகையொளிந்தோனே, ஒளிர்மேனியனே, அசைவனவாயிருப்போனே,
மிகுபொருளாளனே, அருளாளனே, அடையத்தகுபுலனுணர்வே, நற்பார்வையுள்ளோனே (91-62)
நல்வினைபுரிவோனே, அன்பனே, முற்றானவனே, பொன்னே, பொன்வண்ணனே,
உந்தியே, நிறைவடையச்செய்வோனே, வினையே, பிரம்மாண்டசிற்பியே, அசைவற்றவா (92-63)
பன்னிருவழியே, அச்சுறுத்துபவனே, முதல்வனே, வேள்வியே, வேள்வியிலிருப்பவனே,
இரவே, கலியே, காலனே, மகரனே, காலனால் வழிபடப்படுபவனே (93-64)
கணங்களுடனிருப்போனே, கணங்களாக்குபவனே, பூதத்தேரோட்டியே,
திருநீற்றில்கிடப்போனே, திருநீற்றால்காப்போனே, திருநீறாயிருப்போனே, கற்பகமரமே, கணனே (94-65)
உலகங்காப்போனே, உலகைக்கடந்தோனே, பேரான்மாவே, யாவராலும் வழிபடப்படுவோனே,
வெண்ணிறமேனியனே, மனவாக்குடல்தூயோனே, முற்றும்நிறைந்தோனே, தூயோனே, பழந்தவசிக்குறிக்கோளே (95-66)
வாழ்முறையிருப்போனே, செயல்வடிவமே, முழுவினைமதியே, விரும்பப்படுவோனே,
நீள்விழியோனே, செவ்விதழோனே, ஆழிநீரே, நிலையுறுதியே (96-67)
செந்நிறத்தோனே, பொன்னிறத்தோனே, வெண்ணிறத்தோனே, வாழ்வுக்காலமே, மேலானவனே, அண்மையிலுள்ளோனே,
கந்தர்வனே, அதிதியே, கருடனே, அறிவோர்க்கெளியனே, வாக்கினியனே (97-68)
பரசாயுதனே, தேவனே, துணையே, நல்லுறவே,
சுரைவீணையோனே, பெருங்கோபியே, மேனோக்குவித்தே, நீரில்கிடப்பவா (98-69)
உக்ரனே, குலம்பெருக்குபவனே, குலமே, குலத்தலைவனே, குற்றமற்றவனே,
முற்றங்கவடிவே, மாயாவியே, நல்லிதயமே, காற்றே, நெருப்பே (99-70)
பற்றைத்தருவோனே, பற்றையுண்டாக்குபவனே, பற்றிலிருந்துவிடுவிப்போனே,
வேள்விப்பகைவருடனிருப்பவனே, வினைப்பகைவசிப்போனே, பெருந்தாடையோனே, பேராயுதா (100-71)
பலவாறு நிந்திக்கப்படுபவனே, மயங்கச்செய்வோனே, சுகமளிப்பவனே, ஐயம்விலக்குவோனே, செல்வமற்றவனே,
இறவோர்த்தலைவனே, பெருந்தேவனே, எவருக்குந்தேவனே, அசுரரைக்கொன்றவா (101-72)
அடியிலிருப்கோனே, புலப்படாதோனே, இயல்பறிந்தோனே, வேள்விப்பொருளே, அஜைகபாத்ருத்ரனே,
மண்டையோடேந்துவோனே, முக்குணஜீவவடிவே, வெல்லற்கரியோனே, சிவனே (102-73)
தேவமருத்துவன் தந்வந்தரியே, புகைக்கொடியோனே, கந்தனே, குபேரனே,
தாதாவான பிரம்மனே, இந்திரனே, விஷ்ணுவே, மித்ரனே, துவஷ்டாவான விஷ்வகர்மனே, துருவனே, வசுவான தரனே (103-74)
வசுவான பிரபாவனே, முற்றுள்ள காற்றே, சூரியனான அர்யமாவே, சவிதாவே, ரவியே,
உஷங்குவே, படைப்பையாதரிக்கும் விதாதாவே, மாந்தாதாவே, பூதம்படைத்தவா (104-75)
நீக்கமறநிறைந்தோனே, வர்ணம்படைத்தோனே, ஆசைகுணம்படைத்தோனே,
தாமரையுந்தியோனே, பெருங்கருவே, மதிமுகமுடையோனே, காற்றே, நெருப்பே (105-76)
வலிமைமிக்கவனே, ஆன்மவமைதியே, முதன்மையானவனே, தகுதியாலறியப்படுபவனே, செல்வமே,
குருவைப்படைத்தோனே, குருவுடனிருப்பவனே, குருவே, குணமருந்தே (106-77)
முற்றிடமே, தர்ப்பங்களில்திரிபவனே, உயிரினம் தலைவனே, தேவதேவனே,
இன்பத்தில் பற்றற்றோனே, காரணமே, காரியமே, சிறந்தவையனைத்துமுள்ளவா (107-78)
கைலாசமலைவாசியே, இமயமலையிலிருப்பவனே,
வெள்ளமாகக் கரையிடிப்போனே, வெள்ளம்படைப்போனே, பலகலைவித்தகனே, முடிவிலா அருள் கொடுப்பவா (108-79)
வணிகனே, மரத்தச்சனே, அரசமரமே, மகிழமே, சந்தனமே, ஏழிலைப்பாலையே,
உறுதியான கழுத்துடையோனே, பெருந்தோளனே, ஆசையற்றவனே, பெருமருந்தே (109-80)
சித்தப்பொருள்கொடுப்பவனே, சித்தமடைந்தவனே, வேதவேதாங்கங்களுக்கு மேம்பட்டவனே,
சிங்கமுழக்கமே, சிங்கப்பற்களுடையோனே, சிங்கநடையோனே, சிங்கவாகனா (110-81)
மேன்மையான ஆன்மாவே, காலத்தாலண்டமழிப்பவனே, உலகங்களுக்கு நன்மை செய்பவனே, கற்பகமரமே,
சிறந்த அங்கமுள்ளவனே, நவசக்கராங்கனே, கொடியினாலொளிர்பவனே, மன்றங்காப்பவா (111-82)
பூதங்களிலிருப்பவனே, பூதத்தலைவனே, பகலிரவாயிருப்பவனே, மாசற்றவா (112-83)
உயிரினமுற்றுமியக்குபவனே, இருப்பிடமே, நீக்கமறநிறைந்தோனே, படைப்பின்காரணனே,
மோகமற்றவனே, மாறாநிலையுள்ளோனே, குதிரைகளாயிருப்போனே, உணவளிப்பவனே, உயிரைநிறுத்துபவனே (113-84)
துணிவுள்ளோனே, மதியுள்ளோனே, திறமுள்ளோனே, முற்றுமதிப்புள்ளோனே, யுகத்தலைவனே,
புலன்களைக்காப்பவனே, கதிர்களின்தலைவனே, பொருள்திரட்டே, மாட்டுத்தோலுடுத்துபவனே, துயரமழிப்பவா (114-85)
பொற்கரத்தோனே, தியானமனங்காப்போனே,
பகைவரையொடுக்குபவனே, பேரின்பமே, காமனைவென்றோனே, புலன்களைவென்றோனே (115-86)
காந்தார சுரமே, நல்லிடமே, தவத்திலிருப்பவனே, இன்பமே, உயிர்வடிவமே,
பேரிசையே, பேராடல்வல்லோனே, அப்சரஸ்களால்துதிக்கப்படுபவா (116-87)
பெருங்கொடியே, மேருமலையே, மலைமுகடுகளில்திரிபவனே, கற்கப்படமுடியாதவனே,
கற்பிக்கப்படத்தகுந்தவனே, கல்வியின் தலைவனே, நறுமணமுண்டாக்குபவா (117-88)
முக்திவாயிலே, கடக்கச்செய்பவனே, யாவருமடைபவனே, படைமுகப்பிலிருப்போனே, ஆதாரம்வேண்டானே,
உடலில் ஆன்மாவைக்கலப்போனே, பெருக்குபவனே, பெருகுபவனே, பெரியவனுக்கும்பெரியவனே, குணமிக்கவா (118-89)
ஆன்மத்துணையே, தேவாசுரத்தலைவனே, அனைத்தின்தலைவனே,
அனைத்திலுமுள்ளவனே, கலங்கடிக்குங்கரகொண்டோனே, சுபர்வனுக்குத்தேவா (119-90)
முற்றும்பொறுப்போனே, முற்றுஞ்சுமப்போனே, சலிப்பற்றோனே, பொன்னார்மேனியனே, முற்றுமழிப்பவா,
பிறப்பிறப்புச் சுழலில் வடிவங்கொடுப்போனே, செல்வத்திற்சிறந்தோனே, பெருவழியே (120-91)
தலையறுப்பவனே, {அறிவேவடிவானவனே}, நல்லிலக்கணம்பொருந்தியவனே,
உலகின்அச்சே, முற்றுயோகியே, பெரும்வலிமையே (121-92)
வேதநாயகனே, சாத்திரநாயகனே, புனித தேவனே, பெருந்தேராளியே,
ஜீவனற்றவனே, ஜீவனே, மந்திரனே, கருணைவிழியா (122-93)
ரத்தினமாயிருப்போனே, ரத்தினவுறுப்போனே, ஊழியாழிபருகுவோனே,
வேராயிருப்போனே, பரந்துவிரிந்தவனே, அமுதனே, புலப்படாப்புலமே, தவச்செல்வமே (123-94)
உயரச்செய்பவனே, உயர்நிலையே, நல்லொழுக்கங்காப்போனே, பெரும்புகழே,
படைபடைத்தோனே, ஆபரணஞ்சிறந்தோனே, யோகனே, யுகம்படைத்தோனே, ஹரியே (124-95)
யுகவடிவே, பெருவடிவனே, மாயானைமாய்த்தோனே, கொல்பவனே,
நீதிவகுப்போனே, இறுதியே, அனைத்துமறிந்தவனே, அணுகப்படக்கூடியவனே (125-96)
எல்லாமறிந்தவனே, மாமாலைசூடியே, அழகில் ஒளிர்வோனே,
முற்றும்மறைப்போனே, சந்திரவிழியோனே, பூமிகாப்போனே, யுகமூன்றே, நன்னிறைவடிவா (126-97)
மூவிழியோனே, நுண்வடிவோனே, செவிமணியணிந்தோனே, ஆர்ச்சடையோனே,
ஓங்காரப்புள்ளியே, படைப்பவனே, நன்முகனே, கணையே, முற்றாயுதனே, துணையே (127-98)
முற்றுமறியச்செய்வோனே, நன்மையின்பிறப்பே, நறுமணத்தோனே, பெருவில்லே,
வினைமணங்காக்கும் தலைவனே, வினைமுற்றும்படைத்தவா (128-99)
ஊழிப்பெருங்காற்றே, முற்றே, முற்றுமறிந்தவனே,
சொடுக்கிடுபவனே, உள்ளங்கைப்பாத்திரமே, கடுவுடல்கொண்டோனே, சிறந்தவா (129-100)
குடையே, நற்குடையே, நன்கறியப்பட்டவனே, முற்றானவொழுங்கே,
முடியற்றவனே, பலவடிவத்தோனே, அனைத்துமானவனே, தண்டனே, குண்டமுள்ளோனே, வினையணுகாதவா (130-101)
சிங்கவடிவோனே, திசைவடிவே, வஜ்ரதாரியே, நூறுநாவனே, ஆயிரங்காலுளோனே,
ஆயிரந்தலையோனே, தேவேந்திரா, முற்றுந்தேவமயனே, குருவே (131-102)
ஆயிரங்கரத்தோனே, ஆயிரமுறுப்புள்ளவனே, காப்பவனே, உலகமுற்றும்படைத்தோனே,
தூய்மைபுரிவோனே, மூவியல்மந்திரனே, இளையோனே, கருஞ்சிவப்பே (132-103)
பிரம்மதண்டஞ்செய்வோனே, சதக்னிபாசசூலவா,
தாமரைக்கருவே, பெருங்கருவே, பிரம்மக்கருவே, ஊழிநீர்ப்பிறப்பே (133-104)
கதிரவன்கதிரே, வேதம்படைத்தோனே, வேதமோதியே, வேதமறிந்தவா, பிராமணா, கதியே,
ஆனந்தவடிவே, பல்லுடல்கொள்ளியே, கடுந்தன்னொளியே (134-105)
மேனோக்கான்மாவே, உயிரினத்தலைவா, காற்றுவேகனே, மனோவேகனே,
சந்தனமேனியனே, தாமரைநுனிவாசியே, குணவோரைக்கரைசேர்ப்பவனே, உயிர்வடிவமே (135-106)
செங்கொன்றைச்சூடியே, நீலக்கல்மகுடனே, பிநாகதாரியே,
உமையின்தலைவா, உமையையீர்ப்பவனே, கங்கைசூடியே, உமையின்தவமே (136-107)
ஆதிவராகமே, வரமருள்பவனே, வரந்தரத்தகுந்தவனே, நற்தொனியனே,
பெருந்துணையாயிருப்போனே, தீயோரையடக்குபவனே, பகையழிப்போனே, வெஞ்சிவப்பே (137-108)
பொன்வண்ணனே, பரமாத்மாவே, தூயான்மாவே, அண்டக்காரணனே,
திசையெங்கும்முகமுள்ளவனே, முக்கண்ணனே, இயலறக்கனியே (138-109)
உலகான்மாவே, நுண்ணான்மாவே, இறவாமையருள்வோனே,
சாத்தியமுனியே, ஆதித்யவசுவே, விவஸ்வானே, சவிதாவே, அமுதமே, (139-110)
வியாசனே, சூத்திரவிளக்கஞ்சுருக்கமே, ஜீவத்திரளே,
ருதுவே, வருடமே, மாதமே, பக்ஷமே, புனிதநாட்களே (140-111)
கலையே, காஷ்டையே, லவமே, மாத்திரையே, முகூர்த்தமே, அஹஸே, க்ஷபமே, க்ஷணமே,
உலகாதாரமே, உயிரினவித்தே, லிங்கமே, உயிரின்முதல்முளையே (141-112)
காரணமே, காரியமே, வெளிப்பட்டவனே, வெளிப்படாதவனே, அப்பனே, அம்மையே, அப்பனுக்கப்பனே,
சொர்க்கவாயிலே, உயிரினவாயிலே, முக்திவாயிலே, சொர்க்கமே (142-113)
நிர்வாணமே, ஆனந்தம்படைப்போனே, பிரம்மலோகனே, பரகதியே,
தேவாசுரரைப் படைத்தவனே, தேவாசுரரின் ஆதரவாளா (143-114)
தேவாசுரகுருவே, தேவனே, தேவாசுரரால் வழிபடப்படுபவனே,
தேவாசுரரின் முக்கிய அமைச்சனே, தேவாசுரரால் அடையப்படுபவனே (144-115)
தேவாசுரர்த்தலைவா, தேவாசுரரின்முன்செல்வோனே,
தேவாதிதேவா, தேவமுனியே, தேவாசுரர்க்கு வரமளிப்பவனே (145-116)
தேவாசுரரை நியமிப்பவனே, முற்றுந்தன்னுள்கொண்டோனே, தேவாசுரப்பெருந்தலைவா,
தேவர்களனைவருமாயிருப்பவனே, சிந்தைக்கெட்டாதவனே, தேவான்மாவே, தானே பிறந்தவா (146-117)
மாயைப்பிளந்து வெளிப்படுபவனே, மூவுலகுநிறைந்தவனே, பெருங்கல்விமானே, ரஜோகுணமற்றவனே, ரஜோகுணம்மறைப்பவனே, அழிவைக்கடந்தவனே,
துதிக்கப்படத்தகுந்தவனே, களிற்றுத்தலைவா, புலித்தலைவா, தேவசிங்கமே, மனிதக்காளையே (147-118)
பெருஞ்ஞானியே, வேள்விப்பங்கில்முதல்வனே, நுட்பமே, முற்றானதேவா, தவமயனே,
விழிப்புமிக்கோனே, மங்கலனே, வஜ்ரபாணியே, பிராசமுண்டாகுமிடமே, மாற்றமில்லாதவா (148-119)
குகையில்மறைந்திருப்பவனே, ஈர்ப்பவனே, மெய்ப்படைப்பே, தூய்மையாக்குபவனே, முற்றுந்தூய்மையாக்குபவனே,
கொம்பனே, சிகரம்விரும்புவோனே, சனிக்கோளே, பேரரசனே, குற்றமற்றவா (149-120)
மனத்துக்கினியவனே, தேவர்களால்கருதப்படுவோனே, பகையொழிப்பவனே, பயன்முற்றங்கொடுப்பவனே,
நெற்றிக்கண்ணனே, அனைத்தின்தேவா, மான்வடிவனே, பிரம்மவொளியே (150-121)
அடைதற்கரியவற்றின் தலைவனே, தவத்தால் புலனறுப்பவனே,
சித்தமடைந்தவனே, சித்தப்பயனே, சிந்தனைக்கெட்டாதவனே, வாய்மைநோன்பே, தூயோனே (151-122)
நோன்புத்தலைவனே, பரமே, பிரம்மமே, பக்தர்களின்உயர்புகலிடம்,
முற்றும்விடுபட்டவனே, முக்தியொளியே, செல்வனே, செல்வம்பெருக்குபவனே, அண்டமே (152-123)
நினைப் போற்றுவோம் போற்றி போற்றி.
****
மூலத்துதி |
எளிய வடிவில் மூலத்துதி |
தமிழ்த்துதி |
அகராதி |
****