Reading Bharatha is equal unto Vedas! | Adi Parva - Section 62 | Mahabharata In Tamil
(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 4)
பதிவின் சுருக்கம் : மகாபாரதப் பாத்திரங்களின் செயல்பாட்டில் உள்ள தன் சந்தேகங்களைக் கேள்விகளாக வைசம்பாயனரிடம் வைத்த ஜனமேஜயன்; மஹாபாரதத்தை விரிவாகச் சொல்லும்படி வைசம்பாயனரை வேண்டினான்; மகாபாரதத்தின் பெருமைகளை எடுத்துரைத்த வைசம்பாயனர்...
ஜனமேஜயன் "ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {வைசம்பாயனரே} குருக்களின் {குரு குலத்தவர்களின்} பெரும் செயல்களை விளக்குவதும், மஹாபாரதம் என்று அழைக்கப்படுவதுமான வரலாற்றை நீர் சுருக்கமாகச் சொல்லிவிட்ட போதிலும்,(1) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! {வைசம்பாயனரே} அந்த அற்புதமான விவரிப்பை முழுமையாகச் சொல்வீராக. அதைக் கேட்பதில் நான் {ஜனமேஜயனாகிய நான்} பெரும் ஆவல் கொண்டுள்ளேன்.(2) எனவே, அதை நீர் முழுமையாகச் சொல்வீராக. இப்படி அந்தப் பெரும் வரலாற்றை மணிச்சுருக்கமாகக் கேட்பதில் நான் மனநிறைவுகொள்ளவில்லை.(3) கொல்லத்தகாதவர்களைக் {ஆசிரியர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும்} கொன்ற அந்த அறவோர் {பாண்டவர்கள்}, அதற்காகக் கொண்டாடப்படுகிறார்கள் என்றால் அதன் காரணம் சிறியதாக இருக்கமுடியாது.(4) நேர்மையானவர்களும், தாங்களே பழி வாங்கும் திறன் கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்}, ஏன், அந்தப் பொல்லாத குருக்களின் {கௌரவர்களின்} துன்புறுத்தலை அமைதியாக ஏற்றனர்?(5)
ஓ பிராமணர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, பெரும்பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனும், பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவனுமான அந்தப் பீமன், ஏன் தவறுகளைப் பொறுத்து தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்?(6) துருபதனின் மகளும், கற்புள்ளவளுமான திரௌபதி, அந்தப் பாவிகள் {கௌரவர்கள்} தன்னைத் துன்புறுத்தும் போது, அவர்களை எரித்துவிடும் சக்தி கொண்டிருந்த போதும், அந்தத் திருதராஷ்டிரனின் மைந்தர்களைத் {கௌரவர்களைத்} தனது கோபப் பார்வையால் ஏன் எரிக்கவில்லை?(7)
பிருதையின் {குந்தியின்} மற்ற இரு மகன்களும் (பீமனும், அர்ஜுனனும்), மாத்ரியின் இரு மகன்களும் (நகுலனும் சகதேவனும்) அந்தப் பாவிகளான குருக்களிடம் {கௌரவர்களிடம்} காயப்பட்டும் தீய பழக்கமான சூதாட்டத்தின் அடிமையாக இருந்த யுதிஷ்டிரனை ஏன் அனுசரித்துச் சென்றார்கள்?(8) அறவோரில் முதன்மையானவனும், தர்ம தேவதையின் புதல்வனுமான யுதிஷ்டிரன், தனது கடமைகளைச் சரியாகச் செய்தும், ஏன் அந்தப் பெரும் துன்பத்திற்கு ஆளானான்?(9)
அச்சமின்றிப் போர்புரியும் மாந்தர்களை தனது கணைகளால் வேறு உலகத்திற்கு அனுப்பியவனும், கிருஷ்ணனைத் தேரோட்டியாகக் கொண்டவனுமான அந்தப் பாண்டவத் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏன் அப்படிப்பட்ட துன்புறுத்தலுக்கு ஆளானான்?(10) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, நடந்தவை அனைத்தையும் உள்ளவாறே எனக்குச் சொல்வீராக. அந்தப் பெரும் தேர்வீரர்கள் சாதித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்றான் {ஜனமேஜயன்}.(11)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அதைக் {வரலாற்றைக்} கேட்பதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்வாயாக. கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} சொல்லப்பட்ட இந்த வரலாறு மிகப் பெரியதாகும். இது வெறும் தொடக்கம்தான். நான் அஃதை உரைக்கிறேன். அளவிட முடியாப் பெரும் மனோபலம் கொண்டவரும், உலகங்கள் அனைத்திலும் வழிபடப்படுபவரும், சிறப்பு மிகுந்தவருமான பெரும் முனிவர் வியாசர் அருளிய அந்த முழுத் தொகுப்பையும் முழுமையாக நான் மறுபடியும் சொல்கிறேன்.(12,13) அளவில்லா மனோபலம் கொண்ட சத்தியவதி மகனால் {வியாசரால்} படைக்கப்பட்ட இந்தப் பாரதம் நூறாயிரம் {100000} செய்யுள்களைக் (சுலோகங்களைக்) கொண்டதாகும்.(14)
அடுத்தவருக்கு இஃதை யார் படித்துக் காட்டுகிறார்களோ, யார் இதைக் கேட்கிறார்களோ, அவர்கள் பிரம்மனின் உலகை அடைந்து, தேவர்களுக்குச் சமமாக இருப்பர்.(15) இந்தப் பாரதம் வேதங்களுக்கு இணையானது; புனிதமானது; அருமையானது; கேட்பனவற்றிலெல்லாம் சிறந்தது. இது முனிவர்களால் வழிபடப்படும் ஒரு புராணமுமாகும்.(16) பொருள், இன்பம் (அர்த்தம், காமம்) சம்பந்தமான பயனுள்ள கருத்துகள் பல இதில் அடங்கியுள்ளன. இந்தப் புனிதமான வரலாறு {மகாபாரதம்}, நம் இதயத்தைப் வீடுபேறு அடைதலில் ஆர்வம் கொள்ள வைப்பதுமாகும்.(17)
தாராளவாதிகளும், உண்மை நிறைந்தவர்களும், நம்பிக்கையுள்ளவர்களுமான மனிதர்களுக்கு, கிருஷ்ண துவைபாயனரின் {வியாசரின்} இந்த வேதத்தை, உரைக்கும் கல்விமான்கள் பெருஞ்செல்வத்தை அடைகின்றனர்[1].(18) கருவறையிலேயே கருவைக் கொல்லும் பாவம் கூட இதைக் கேட்பதால் அகலும். ஒரு மனிதன் எவ்வளவுதான் கொடூரமானவனாகவும், பாவியாகவும் இருந்தாலும், இந்த {மகாபாரத} வரலாற்றைக் கேட்பதால், {கிரகணம் முடிந்தவுடன்} ராகுவிடம் இருந்து விடுபடும் சூரியனைப் போல, அவனிடமிருந்து எல்லாப் பாவங்களும் அகலும். இந்த {மகாபாரத} வரலாறு ஜெயம் என்று அழைக்கப்படுகிறது. வெற்றியடைவதில் விருப்பம் கொண்டோர் அனைவரும் இதைக் கேட்க வேண்டும்.(19,20)
ஒரு மன்னன் இதைக் கேட்பதால், முழு உலகத்தையும் தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து, தனது எதிரிகள் அனைவரையும் அடக்குவான். தனது இயல்பாலேயே நிறைவை அளிக்கும் ஒரு சிறந்த செயல்பாடான இவ்வரலாறானது {மகாபாரதமானது}, அருள்நிறைந்த கனியை உருவாக்கும் ஒரு பெரும் வேள்வியாகும்.(21) இளம் ஏகாதிபதிகள், தங்கள் மனைவியுடன் இதைக் கேட்க வேண்டும். அதனால் அவர்கள் தங்கள் அரியணையை அலங்கரிக்கச் சிறந்த புதல்வனையோ, புதல்வியையோ பெறுவார்கள்.(22)
இந்த {மகாபாரத} வரலாறு அறம், பொருள், வீடு (தர்மம், அர்த்தம், மோட்சம்) என்பதை அறியும் உயர்வான ஒரு புனிதமான அறிவியல் {தர்ம, அர்த்த, மோட்ச சாஸ்திரம்} என்று அளவிலா மனம் கொண்ட வியாசரால் சொல்லப்பட்டுள்ளது.(23) இது தற்போது உரைக்கப்படுகிறது. வருங்காலத்திலும் உரைக்கப்படும். இதைக் கேட்பவர்கள், பணிவாகக் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களான மகன்களையும், பணியாட்களையும் பெற்றிருப்பர்.(24) உடலால், வார்த்தையால், மனத்தால் செய்யப்படும் பாவங்கள் அனைத்தும் இதைக் கேட்பதால் ஒருவனிடமிருந்து உடனே அகன்று போகும்.(25) பாரத இளவரசர்களின் பிறப்பைப் பற்றிய கதைகளைக் குறை கண்டுபிடிக்கும் மனம் இல்லாமல் கேட்பவர்கள், எந்தக் நோயாலும் மற்றும் மறு உலகத்தைப் பற்றிய எந்த எண்ணத்தாலும் அச்சங்கொள்ளாதிருப்பார்கள்.(26)
அனைத்து துறைகளிலும் ஞானமுள்ளவர்களும், ஊக்கமுள்ளவர்களும், தங்கள் சாதனைகளால் உலகில் அறியப்பட்டவர்களான க்ஷத்திரியர்கள் மற்றும் உயரான்ம பாண்டவர்களின் புகழைப் பரப்புவதற்காகவும், உலகிற்கு நன்மை செய்வதற்காகவும், கிருஷ்ண துவைபாயனர் இதை {மஹாபாரதத்தைத்} தொகுத்துள்ளார். இது {மகாபாரதம்} அருமையானதும், புகழை உற்பத்தி செய்யக்கூடியதும், நீண்ட ஆயுளைக் கொடுக்கக்கூடியதும், புனிதமானதும், தெய்வீகமானதுமாகும். எவன் தனது அறத்தகுதிகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு இந்த {மகாபாரத} வரலாற்றைப் புனிதமான பிராமணர்கள் மூலம் கேட்கிறானோ, அவன் அழிவற்ற பெரும் தகுதிகளையும், அறத்தையும் பெறுகிறான். இந்தக் குரு பரம்பரையை {குரு பரம்பரையின் கதையை} விவரிப்பவர்கள் உடனே தூய்மையை அடைந்து {புனிதமாகி},(27-31) பெரிய குடும்பத்தை அடைந்து, உலகத்தில் பெரும் மரியாதைக்கு ஆளாகின்றனர். மழைப்பருவமான அந்த நான்கு மாதங்களில் இந்தப் புனிதமான பாரதத்தைத் தொடர்ந்து படிக்கும் பிராமணன், தனது அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். பாரதத்தைப் படித்த ஒருவனை வேதமறிந்தவனாகக் கருதலாம்.(32)
இந்த {மகாபாரதத்} தொகுப்பில், தேவர்கள், அரசமுனிகள், புனிதமான மறுபிறப்பு அடைந்த முனிகள், பாவங்களற்ற கேசவன் {கிருஷ்ணன்},(33) தேவர்களின் தேவன் மகாதேவன் {சிவன்}, பார்வதி, பார்வதி மகாதேவன் தொடர்பால் கார்த்திகேயன் {முருகன்} பிறந்து, பல தாய்மார்களால் வளர்க்கப்படுவது,(34) பிராமணர்கள் மற்றும் பசுக்களின் பெருமை, ஆகியன விவரிக்கப்படுகின்றன. அனைத்து அறம் சார்ந்தவர்களாலும் கேட்கப்பட வேண்டிய பாரதமென்பது சுருதிகளின் {வேதங்களின்} தொகுப்பாகும்.(35) கற்றவர்களால், புனிதமான மாதங்களில் பிராமணர்களுக்கு இஃது உரைக்கப்படும்போது, அவர்களது அனைத்துப் பாவங்களும் அகன்று சொர்க்கத்தைப் பற்றிய லட்சியமில்லாமல் பிரம்மனிடம் ஐக்கியமடைவார்கள்.(36)
சிரார்த்தத்தின்[2] {திதி எனும் நோன்பிருக்கும்} போது, இதில் ஓர் அடியையேனும் பிராமணர்களைக் கேட்கச் செய்தால், அந்த சிரார்த்தம் அழிவற்றதாகும், பித்ருக்களும் படையலால் எப்போதும் மனநிறைவு பெற்று இருப்பர்.(37) எந்த மனிதனாலும் அறிந்தோ, அறியாமலோ, புலன்களாலோ, மனத்தாலோ, செய்யப்படும் பாவங்கள் அனைத்தும், மஹாபாரதத்தைக் கேட்பதால் அழிந்து போகும். மேன்மையான பிறப்புகளான பாரத இளவரசர்களின் வரலாறே மஹாபாரதம் என்றழைக்கப்படுகிறது.(38,39) இந்தச் சொற்தோற்றத்தை அறிந்தவர்களின் பாவங்கள் கழுவித் தூய்மையாகப்படுகின்றன. இந்தப் பாரதக் குலத்தின் வரலாறு அற்புதமானதாக இருப்பதால்,(40) அஃது உரைக்கப்படும்போது, நிலையாதவர்களின் (அநித்யமானவர்கள்) பாவங்களை உறுதியாகப் போக்குகிறது. கிருஷ்ண துவைபாயன முனிவர் {வியாசர்} இந்தத் தொகுப்பை மூன்று வருடங்களில் நிறைவு செய்தார்.(41) தினமும் எழுந்து, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தனது ஆன்மீகக் கடமைகளை முடித்து மஹாபாரதத்தைத் தொகுத்தார்.(42) எனவே, இஃது உறுதியேற்றிருக்கும் (நோன்பிருக்கும்) பிராமணர்களால் கேட்கத்தக்கது. மற்றவர்கள் கேட்பதற்காக யாரொருவர் கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} உரைத்திருக்கும் இந்தப் புனித விவரிப்பை உரைக்கிறாரோ, அவருக்கும், அவர் சொல்லிக் கேட்கும் மற்றவர்களுக்கும் அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் அவர்களை நல்லவையும் தீயவையுமான கர்மங்கள் பாதிக்காது.(43,44)
தகுதியை {புண்ணியத்தை} அடைய விரும்பும் மனிதன், இதை முழுமையாகக் கேட்க வேண்டும். இஃது எல்லா வரலாறுகளுக்கும் இணையானது. இதைக் கேட்பவர்கள் எவரும் இதயத் தூய்மையை அடைவர்.(45) சொர்க்கத்தை அடைபவனின் மனநிறைவை விட, இந்தப் புனிதமான வரலாற்றைக் கேட்பதால் அடையும் மனநிறைவானது மேலானது.(46) கேட்கவோ, மரியாதையுடன் அது கேட்கப்படவோ {உபன்யாசம் ஏற்பாடு செய்தல், உரைத்தல்} செய்யும் அறம்சார்ந்த மனிதன், ராஜசூய வேள்வி செய்தும், அசுவமேத வேள்வி (குதிரை வேள்வி) செய்தும் கிடைக்கும் பலனைப் பெறுவான்.(47)
ரத்தினங்களின் சுரங்கமாகவும், பெரும் கடலாகவும், பெருமலை மேருவாகவும் பாரதம் போற்றப்படுகிறது.(48) இந்த {மஹாபாரத} வரலாறு வேதத்திற்கிணையானதும், புனிதமானதும் அற்புதமானதுமாகும். {மஹாபாரதம்} கேட்பதற்குத் தகுதியானது, காதுகளுக்கு இனிமையானது, பாவங்களைப் போக்கவல்லது, அறங்களை வளர்க்கவல்லது.(49) ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே}, ஒருவன் பாரதத்தின் {மஹாபாரதத்தின்} ஒரு பிரதியை கேட்பவருக்குக் கொடுப்பானேனால், கடலை கச்சையாக அணிந்திருக்கும் முழுப் பூமியையே அவனுக்குப் பரிசாகக் கொடுத்ததாகப் பொருளாகும்.(50) ஓ பரீக்ஷித்தின் மைந்தா {ஜனமேஜயா}, நான் முழுமையாகச் சொல்லப்போகும் இந்த இனிய விவரிப்பு, அறங்களையும் வெற்றியையும் கொடுக்கவல்லதாகும். கவனமாகக் கேட்பாயாக.(51) முனிவர் கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} மூன்று வருடங்களாகத் தொடர்ந்து, இந்த அற்புதமான வரலாறான மஹாபாரதத்தைத் தொகுத்தார்.(52) பாரத ஏகாதிபதிகளில் காளையே {ஜனமேஜயனே}, அறம், பொருள், இன்பம், வீடு சம்பந்தமாக இதில் பேசப்படும் அனைத்தும் எங்கேயும் பேசப்படலாம், ஆனால், இந்த வரலாற்றில் அடங்காதது எதையும் எங்கும் காண முடியாது" {என்றார் வைசம்பாயனர்}. (53)

[1] கும்பகோணம் பதிப்பில், "வித்வானாயிருப்பவன், கிருஷ்ணத்வைபாயனராற் சொல்லப்பட்ட வேதமாகிய இந்தப் பாரதத்தைப் பெருந்தன்மையுள்ளவர்களும், கொடுப்பவர்களும், ஸ்தயம் தவறாதவர்களும், நாஸ்திகரல்லாதவர்களுமான மனிதர்களுக்குச் சொல்லிப் பொருளை ஸம்பாதிக்கிறான்" என்றிருக்கிறது.

[2] சிரார்த்தம் = சிரம் + அர்த்தம். அதாவது தலையாய கடமை. ஒரு மனிதனின் முதற்கடமை, தனது முன்னோர்களுக்கு பித்ருகடன் செய்வதே ஆகும். வள்ளுவர் கூட (1) முன்னோர்கள் (2) தெய்வம் (3) விருந்தினர் (4) சுற்றத்தார் (5) தான் என்னும் இவ்வைரையும் காக்க வேண்டியது இல்லறத்தார் கடமை எனப் பிதுர்கடனை முதலாவதாகச் சொல்லுவார். பிதுர்கடன் செய்ய வாரிசுகள் இல்லாததால் யாயாரவர்கள் நரகத்தின் குழியில் விழ இருந்ததாக கதையும் மகாபாரதத்தில் படித்தோம். புத்திரர் இல்லாதோர் “புத்” என்னும் நரகத்தில் வீழ்வர் எனப் புராணங்களும் சிரார்த்தத்தின் பெருமை சொல்லும்.பித்ருகடனே தலையாய கடமை என்ற பொருளில் சிரார்த்தம் என அழைக்கப்படுகிறது.
தகுதியை {புண்ணியத்தை} அடைய விரும்பும் மனிதன், இதை முழுமையாகக் கேட்க வேண்டும். இஃது எல்லா வரலாறுகளுக்கும் இணையானது. இதைக் கேட்பவர்கள் எவரும் இதயத் தூய்மையை அடைவர்.(45) சொர்க்கத்தை அடைபவனின் மனநிறைவை விட, இந்தப் புனிதமான வரலாற்றைக் கேட்பதால் அடையும் மனநிறைவானது மேலானது.(46) கேட்கவோ, மரியாதையுடன் அது கேட்கப்படவோ {உபன்யாசம் ஏற்பாடு செய்தல், உரைத்தல்} செய்யும் அறம்சார்ந்த மனிதன், ராஜசூய வேள்வி செய்தும், அசுவமேத வேள்வி (குதிரை வேள்வி) செய்தும் கிடைக்கும் பலனைப் பெறுவான்.(47)
ரத்தினங்களின் சுரங்கமாகவும், பெரும் கடலாகவும், பெருமலை மேருவாகவும் பாரதம் போற்றப்படுகிறது.(48) இந்த {மஹாபாரத} வரலாறு வேதத்திற்கிணையானதும், புனிதமானதும் அற்புதமானதுமாகும். {மஹாபாரதம்} கேட்பதற்குத் தகுதியானது, காதுகளுக்கு இனிமையானது, பாவங்களைப் போக்கவல்லது, அறங்களை வளர்க்கவல்லது.(49) ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே}, ஒருவன் பாரதத்தின் {மஹாபாரதத்தின்} ஒரு பிரதியை கேட்பவருக்குக் கொடுப்பானேனால், கடலை கச்சையாக அணிந்திருக்கும் முழுப் பூமியையே அவனுக்குப் பரிசாகக் கொடுத்ததாகப் பொருளாகும்.(50) ஓ பரீக்ஷித்தின் மைந்தா {ஜனமேஜயா}, நான் முழுமையாகச் சொல்லப்போகும் இந்த இனிய விவரிப்பு, அறங்களையும் வெற்றியையும் கொடுக்கவல்லதாகும். கவனமாகக் கேட்பாயாக.(51) முனிவர் கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} மூன்று வருடங்களாகத் தொடர்ந்து, இந்த அற்புதமான வரலாறான மஹாபாரதத்தைத் தொகுத்தார்.(52) பாரத ஏகாதிபதிகளில் காளையே {ஜனமேஜயனே}, அறம், பொருள், இன்பம், வீடு சம்பந்தமாக இதில் பேசப்படும் அனைத்தும் எங்கேயும் பேசப்படலாம், ஆனால், இந்த வரலாற்றில் அடங்காதது எதையும் எங்கும் காண முடியாது" {என்றார் வைசம்பாயனர்}. (53)
ஆங்கிலத்தில் | In English |