Dushmanta (Dushyanta)! | Adi Parva - Section 68 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 4)
பதிவின் சுருக்கம் : பௌரவக் குலத்தை நிறுவிய துஷ்யந்தன்; துஷ்யந்தனின் ஆட்சி சிறப்பு...
ஜனமேஜயன், "ஓ பிராமணரே! {வைசம்பாயனரே} உண்மையில் நான் தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரின் உயிர்ப்பகுதிகளுக்கேற்ப உண்டான அவதராங்களை உம்மிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டேன்.(1) எனினும் நான், குருக்களின் அரசமரபை {வம்சத்தைக்} குறித்துத் தொடக்கத்திலிருந்தே கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, அவற்றை இந்த மறுபிறப்பாளர்களான முனிவர்கள் அனைவரின் முன்னிலையில் சொல்வீராக" என்றான்.(2)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ பாரதக் குலத்தின் மேன்மைமிக்கவனே {ஜனமேஜயா}, பௌரவக் குலத்தை நிறுவியவன் பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட துஷ்யந்தனாவான் {துஷ்மந்தனாவான்}. நான்கு கடல்களால் சூழப்பட்ட பூமியின் பாதுகாவலனாக அவன் இருந்தான். இந்த உலகின் நாற்காற்பகுதிகள் முழுமையும் அவனது {துஷ்யந்தன்} ஆதிக்கத்திலேயே இருந்தன. நடுக்கடலில் இருந்த பல்வேறு மண்டலங்களுக்கும் அவனே {துஷ்யந்தனே} தலைவனாக இருந்தான்.(3,4) அந்த எதிரிகளை ஒடுக்குபவன் {துஷ்யந்தன்}, {நால் வகை மனிதர்களால் நிறைந்தவையும், கடலால் சூழப்பட்டவையும், ரத்தினங்களின் சுரங்கமாவும் இருந்த} மிலேச்சர்களின் நாடுகளின் மேலும் தன் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தான்.(5)
அவனுடைய ஆட்சிக்காலத்தில் மனிதர்களில் கலப்பு சாதியினரோ[1], (நிலம் தானே விளைந்ததால்) மண்ணை உழுபவர்களோ, (பூமியின் பரப்பிலேயே செல்வம் அபரிமிதமாக இருந்ததால்) சுரங்கத் தொழிலாளர்களோ, பாவம் நிறைந்த மனிதர்களோ எவரும் இல்லை[2].(6) ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரும் அறம் சார்ந்தோராகவும், அற நோக்கங்களைக் கொண்டவர்களுமாகவே இருந்தனர்.(7) ஓ அன்புக்குரியோனே! {ஜனமேஜயா}, அங்கே கள்வர்கள் குறித்த அச்சமேதும் இல்லை, பஞ்சம் குறித்த அஞ்சமேதும் இல்லை, நோய் குறித்த அச்சமேதும் இல்லை.(8) தங்கள் தங்களுள்ளுரிய கடமைகளைச் செய்வதில் இன்புற்ற நால் வகை மனிதர்களும், ஆசைகளின் பலனை அடைவதற்காக எப்போதும் அறச் செயல்களைச் செய்ததில்லை. அவனை {துஷ்யனைச்} சார்ந்திருந்த அவனது குடிமக்கள் எந்த அச்சத்தையும் கொண்டிருக்கவில்லை.(9) பரஜன்யா (இந்திரன்) சரியான காலத்தில் மழையைப் பொழிந்ததால், நிலத்தில் விளைந்ததனைத்திலும் நீர்ச்சத்தும், சதைப்பற்றும் நிறைந்திருந்தன. பூமியில் அனைத்து வகைச் செல்வங்களும், அனைத்து வகை விலங்குகளும் நிறைந்திருந்தன.(10) பிராமணர்கள் எப்போதும் தங்கள் கடமைகளில் ஈடுபடுபவர்களாக, எப்போதும் உண்மை பேசுபவர்களாக இருந்தனர்.
இளமை நிறைந்த அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, அற்புதமான ஆற்றலையும், காடுகள் மற்றும் புதர்களோடு கூடிய மந்தர மலையை எடுத்துத் தன் கரங்களில் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வஜ்ரத்தைப் போன்ற கடினமான உடலையும் கொண்டிருந்தான். கதாயுதத்தைக் கொண்டு போரிடும் நான்கு முறைகளிலும் (அதாவது, தூரத்தில் இருப்பவர்கள் மீது வீசுவது, அருகில் இருப்பவர்களைத் தாக்குவது, பலருக்கு மத்தியில் சுழற்றுவது, எதிரில் இருக்கும் எதிரிகளை விரட்டுவது போன்ற முறைகளில்) அவன் மிகுந்த திறம் பெற்றவனாக இருந்தான். மேலும் அவன் {துஷ்யந்தன்}, அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும்,(11,12) யானைகள் மற்றும் குதிரைகளைச் செலுத்துவதிலும் திறமை பெற்றவனாக இருந்தான். பலத்தில் அவன் {துஷ்யந்தன்} விஷ்ணுவைப் போன்றவனாகவும், காந்தியில் பகலை உண்டாக்குபவனை {சூரியனைப்} போன்றவனாகவும்,(13) நிறையீர்ப்பில் கடலைப் போன்றவனாகவும், பொறுமையில் பூமியைப் போன்றவனாகவும் இருந்தான். மேலும் தன் குடிமக்கள் அனைவராலும் பெரிதும் நேசிக்கப்பட்ட அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, நிறைவுள்ள தன் மக்களை அறம் சார்ந்து ஆண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(14)

[1] கங்குலியிலும், மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளிலும் இங்கே கலப்புச் சாதிகள் என்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பிலோ, "வருணங்களின் ஒழுக்கங்களை மீறுகிறவன்" என்றிருக்கிறது. கங்குலியும் மன்மதநாததத்தரும் ஆங்கில வாசகர்களுக்குச் சொல்வதால் மூலத்தில் வர்ணங்கள் என்றிருப்பதைச் சாதிகள் என்று சொல்லியிருக்க வேண்டும்.
[2] மண்ணை உழுவதனாலோ, சுரங்கம்-கிணறு எனத் தோண்டுவதாலோ மண்ணைத் துன்புறுத்தாமல், தானாய் விளைந்த தானியங்கள் காய்கனிகள், தாமாய் வெளிப்படும் இரத்தினங்கள் மற்றும் உலோகங்களை உபயோகித்த மக்கள் வாழ்ந்தனர் என்று கொள்ளலாம்.
இளமை நிறைந்த அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, அற்புதமான ஆற்றலையும், காடுகள் மற்றும் புதர்களோடு கூடிய மந்தர மலையை எடுத்துத் தன் கரங்களில் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வஜ்ரத்தைப் போன்ற கடினமான உடலையும் கொண்டிருந்தான். கதாயுதத்தைக் கொண்டு போரிடும் நான்கு முறைகளிலும் (அதாவது, தூரத்தில் இருப்பவர்கள் மீது வீசுவது, அருகில் இருப்பவர்களைத் தாக்குவது, பலருக்கு மத்தியில் சுழற்றுவது, எதிரில் இருக்கும் எதிரிகளை விரட்டுவது போன்ற முறைகளில்) அவன் மிகுந்த திறம் பெற்றவனாக இருந்தான். மேலும் அவன் {துஷ்யந்தன்}, அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும்,(11,12) யானைகள் மற்றும் குதிரைகளைச் செலுத்துவதிலும் திறமை பெற்றவனாக இருந்தான். பலத்தில் அவன் {துஷ்யந்தன்} விஷ்ணுவைப் போன்றவனாகவும், காந்தியில் பகலை உண்டாக்குபவனை {சூரியனைப்} போன்றவனாகவும்,(13) நிறையீர்ப்பில் கடலைப் போன்றவனாகவும், பொறுமையில் பூமியைப் போன்றவனாகவும் இருந்தான். மேலும் தன் குடிமக்கள் அனைவராலும் பெரிதும் நேசிக்கப்பட்ட அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, நிறைவுள்ள தன் மக்களை அறம் சார்ந்து ஆண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(14)
ஆங்கிலத்தில் | In English |