The Hunting of Dushmanta! | Adi Parva - Section 69 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 5)
பதிவின் சுருக்கம் : காட்டுக்கு வேட்டையாட படைகளுடன் சென்ற துஷ்யந்தன்; விலங்குகளை வேட்டையாடி அவற்றை அச்சுறுத்தியது...
ஜனமேஜயன், "உயர் ஆன்ம பரதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் சகுந்தலையின் பிறப்பு குறித்தும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன். ஓ புனிதமானவரே! {வைசம்பாயனரே}, மனிதர்களில் சிங்கமான துஷ்யந்தனைக் குறித்தும், அவ்வீரன் சகுந்தலையை எப்படி அடைந்தான் என்பது குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ உண்மையை அறிந்தவரே, புத்திசாலிகள் அனைவரிலும் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, அனைத்தும் எனக்குக் கூறுவதே உமக்குத் தகும்" என்றான்.(2)
வைசம்பாயனர் சொன்னார், "முன்பொரு காலத்தில் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் (மன்னன் துஷ்யந்தன்), தனது பெரும் படையின் துணையுடன் காட்டுக்குள் சென்றான். அவன் தன்னுடன் நூற்றுக்கணக்கான குதிரைகளையும், யானைகளையும் கூட்டிச் சென்றான்.(3) அந்த ஏகாதிபதியுடன் {துஷ்யந்தனுடன்} சென்ற படைகள் நான்கு வகையானவையாக (காலாட்படை வீரர்கள், தேர் வீரர்கள், குதிரைப்படை, யானைப்படைகளாக) இருந்தன. வீரர்கள் வாள்கள், ஈட்டிகள் தரித்தவர்களாக, தங்கள் கரங்களில் கதாயுதங்கள் மற்றும் தடித்த தண்டங்களைக் கொண்டவர்களுமாக இருந்தனர்.(4) அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, வேல்கள், பராசங்கள் ஆகியவற்றைத் தங்கள் கரங்களில் கொண்ட நூற்றுக்கணக்கான வீரர்கள் சூழத் தன் பயணத்தைத் தொடங்கினான். மன்னன் தன் அணிவகுப்பில் சென்ற போது, வீரர்களின் சிங்க முழக்கங்கள், சங்குகள் மற்றும் துந்துபி ஒலியின் இசை, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, பெரும் யானைகளின் பிளிறல்கள் ஆகியவை, குதிரைகளின் கனைப்பொலிகள் மற்றும் பல்வேறு ஆடைகளில் இருந்த பணியாட்கள் தாங்கி வந்த பல்வேறு ஆயுதங்களின் உரசல்கள் ஆகியவற்றுடன் கலந்து அங்கே காதைப் பிளக்கும் அமளி எழுந்தது.(5-7)
பெரும் அழகைக் கொடையாகக் கொண்ட மங்கையர், வீரனும், தன் சொந்த புகழை அடைந்தவனுமான அந்த ஏகாதிபதியை {துஷ்யந்தனை} அழகிய மாளிகைகளின் மாடிகளில் நின்றபடியே கண்டனர்.(8) எதிரிகளை அழிப்பவனும், எதிரிகளின் யானைகளை விரட்டும் திறன் கொண்டவனுமான அவனை {துஷ்யந்தனை}, அம்மங்கையர் சக்ரனை {இந்திரனைப்} போலக் கண்டு, அவனே வஜ்ரதாரி {இந்திரன்} என நம்பவும் செய்தனர் {அறிந்திருந்தனர்}.(9) அவர்கள் {அந்த மங்கையர்}, "இந்த மனிதர்களில் புலி {துஷ்யந்தன்}, போரில் வசுக்களுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவனாக, தன் கரங்களுடைய வலிமையின் விளைவால், எஞ்சி நிற்கும் எந்த எதிரியுமற்றவனாகவும் இருக்கிறான்” என்றனர்.(10) இதைச் சொன்ன அந்த மங்கையர் அன்பினால் அந்த ஏகாதிபதியின் தலையின் மீது மலர்களைப் பொழிந்து அவனை மனநிறைவு கொள்ளச் செய்தனர்.(11)
ஆசிகளைச் சொல்லும் பிராமணர்களில் முதன்மையானோரால் வழியெங்கும் பின்தொடரப்பட்ட மன்னன் {துஷ்யந்தன்}, இதயத்தில் பெருமகிழ்ச்சியுடன் மான்களைக் கொல்லும் ஆவலால் காட்டை நோக்கிச் சென்றான்.(12) மதங்கொண்ட யானையின் முதுகில் அமர்ந்து, தேவர்களின் மன்னனை {இந்திரனைப்} போலத் தெரிந்த அந்த ஏகாதிபதியை {துஷ்யந்தனை}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியோரில் பலர் பின்தொடர்ந்து சென்றனர்.(13) குடிமக்களும் பிற வகையைச் சார்ந்தவர்களும் அந்த ஏகாதிபதியைச் சிறிது தூரத்திற்குப் பின்தொடர்ந்து சென்றனர்.(14) இறுதியாக, அவர்கள் மன்னனின் உத்தரவால் மேலும் {பின்தொடர்ந்து} செல்லாமல் நின்றனர்.
காற்றின் வேகத்தைக் கொண்ட தன் தேரில் ஏறிய மன்னன், தனது தேர்ச்சக்கரத்தின் சடசடப்பொலியால் பூமி முழுவதையும், ஏன் சொர்க்கத்தையும் கூட நிறைத்தான். அப்படி அவன் செல்கையில், தன்னைச் சுற்றிலும் (தேவலோகத் தோட்டமான) நந்தனத்தைப் போன்ற ஒரு காட்டைக் கண்டான்.(15,16) அது வில்வம், எருக்கு {ஆர்கா}, கருங்காலி {கதிரா} (பாக்கு), விளா {கபிதா}, வெள்வேல {தவ} மரங்கள் நிறைந்ததாக இருந்தது. மேலும் அங்கு மண் சமமற்றதாக இருப்பதையும், அருகில் உள்ள மலைகளில் இருந்து தளர்ந்து விழுந்த பாறைகள் சிதறிக் கிடப்பதையும் அவன் கண்டான்.(17) நீரற்று, மனிதர்களற்று இருந்த அது {அந்த நிலம்}, பல யோஜனைகள் தொலைவிற்குப் பரந்து கிடப்பதையும் கண்டான். அது மான்கள், சிங்கங்கள், இரைதேடும் விலங்குகள் பலவற்றால் நிறைந்திருந்தது.(18)
மனிதர்களில் புலியான மன்னன் துஷ்யந்தன், தன் அணிவகுப்பில் இருந்த போர்வீரர்கள் மற்றும் பணியாட்கள் உதவியோடு, எண்ணற்ற விலங்குகளைக் கொன்று அந்தக் காட்டையே கலங்கடித்தான்.(19) துஷ்யந்தன், அடிக்கும் தொலைவில் இருந்த எண்ணற்ற புலிகளைத் தனது கணைகளால் வீழ்த்தினான்.(20) மேலும் அந்த மன்னன், வெகு தொலைவில் இருந்த விலங்குகளைக் {கணைகளால்} காயப்படுத்தி, மிக அருகில் இருந்த விலங்குகளைத் தன் கனமான வாளால் கொன்றான்.(21) ஈட்டி தரித்தவர்கள் அனைவரிலும் முதன்மையான அவன் {துஷ்யந்தன்}, தன் ஈட்டிகளை ஏவி அவற்றில் பலவற்றைக் கொன்றான். கதாயுதம் சுழற்றும் கலையை நன்கறிந்தவனும், அளவிலா ஆற்றலைக் கொள்ளவனுமான அம்மன்னன், {துஷ்யந்தன்}, அந்தக் கானகத்தில் அச்சமில்லாமல் திரிந்தான்.(22) சில நேரங்களில் தன் வாளைக் கொண்டும், சில நேரங்களில் தன் கதாயுதம் மற்றும் கனமான தண்டம் ஆகிவற்றை வேகமாக இறக்கியும் அந்தக் காட்டுவாசிகளைக் {விலங்குகளைக்} கொன்றான்.(23)
அற்புதமான சக்தி கொண்ட மன்னனாலும், போர் விளையாட்டுகளில் மகிழ்பவர்களும், அவனது அணிவகுப்பில் இருந்தவர்களுமான வீரர்களாலும் அந்தக் காடு இப்படிக் கலக்கப்பட்ட போது பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கின.(24) தங்கள் தலைவர்களை {தலைமை விலங்குகளை} இழந்த விலங்குக் கூட்டங்கள், அச்சத்தாலும், கவலையாலும் கதறிக் கொண்டே அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடத் தொடங்கின.(25) ஓடியதால் களைப்புற்ற அவை, முற்றிலும் காய்ந்து போயிருந்த ஆற்றுப் படுகைகளை அடைந்து, தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ள முடியாமல் அனைத்துப் பக்கங்களிலும் கீழே விழ ஆரம்பித்தன. அப்படி விழுந்த சில விலங்குகள் பசித்திருந்த வீரர்களால் உண்ணப்பட்டன.(26,27) அதே வேளையில் பிற {விலங்குகள்}, முகாம்களை அடைந்து, நெருப்பு கொளுத்தி சுடப்பட்டப் பிறகு அவர்களால் {அவ்வீரர்களால்} உண்ணப்பட்டன.(28)
வலுவான யானைகள் பல, தாங்கள் அடைந்த காயங்களால் பித்தடைந்து, மிதமிஞ்சிய அச்சத்தை அடைந்து துதிக்கைகளை உயர்த்தியபடியே தப்பி ஓடின. அந்தக் காட்டு யானைகள், சிறுநீர் கழித்தும், தங்கள் வயிற்றின் உள்ளடக்கங்களை வெளியேற்றியும், பெரும் அளவிலான இரத்தத்தைக் கக்கியும் எச்சரிக்கையின் வழக்கமான அறிகுறிகளைக் காட்டி ஓடுகையில் வீரர்கள் பலரை மிதித்துக் கொன்றன.(29,30) விலங்குகளால் நிறைந்திருந்த அந்தக் காடு, பணியாள் கூட்டத்துடன் கூடிய அந்த மன்னனின் கூரிய ஆயுதங்களால், விரைவில் சிங்கங்கள், புலிகள் மற்றும் காட்டின் பிற ஏகாதிபதிகளற்றதாகச் செய்யப்பட்டது" {என்றார் வைசம்பாயனர்}.(31)

ஆங்கிலத்தில் | In English |