Dushmanta accepted Bharata! | Adi Parva - Section 74b | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : மனைவி மற்றும் மகனின் பெருமை குறித்து விவரித்த சகுந்தலை; பரதன் என்ற பெயரைப் பெற்ற சர்வதமனன்; பரதனின் ஆற்றல்...
சகுந்தலை, "ஓ மன்னா! சிறு கடுகளவு இருக்கும் அடுத்தவர்களின் தவறுகளை மட்டும் நீர் பார்க்கிறீர். ஆனால் வில்வக் {பில்வக்} கனியைப் போன்ற உமது பெரும் தவறுகளைக் காண மறுக்கிறீர்.(82) மேனகை தேவர்களில் ஒருத்தியாவாள். நிச்சயமாக, தேவர்களில் முதன்மையானவளாக அவள் அறியப்படுகிறாள். எனவே, ஓ துஷ்யந்தரே, உமது பிறப்பைவிட எனது பிறப்பு மிக உயர்ந்ததே.(83) ஓ மன்னா! நீர் பூமியில் நடக்கிறீர், நான் வானத்தில் உலாவுகிறேன். நமக்குள், மேரு மலைக்கும், கடுகு வித்துக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பீராக. எனது சக்தியைப் பாரும். ஓ மன்னா! நான் நினைத்தால், இந்திரன், குபேரன், யமன் மற்றும் வருணனின் வசிப்பிடங்களுக்குச் செல்ல முடியும்.(84)
ஓ பாவங்களற்றவரே! நான் உம் முன்னிலையில் சொல்வது அனைத்தும் உண்மையே, எந்தத் தீய எண்ணத்தினாலும் இதைச் சொல்லவில்லை. நான் சொல்வதனைத்தையும் கேட்ட பிறகு என்னை மன்னிப்பீராக.(85) அழகற்ற ஒருவன், கண்ணாடியில் தனது முகத்தைக் காணும் வரை, தன்னை அழகானவனாகவே எண்ணிக் கொள்வான்.(86) ஆனால் கண்ணாடியில் தனது அழகற்ற முகத்தைக் கண்ட பிறகே, அவனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அவன் காண்பான்.(87) உண்மையிலேயே அழகாக இருப்பவன், யாரையும் இகழமாட்டான். எப்போதும் தீயவற்றையே விரும்புபவன்தான் வசைபாடுபவனாக இருப்பான்.(88) அழகான பூக்கள் நிறைந்த நந்தவனம் இருந்தாலும், பன்றி அழுக்கையும் சகதியையுமே தேடும். அதைப் போல், ஒருவர் பேசும் நல்லதும் அல்லதுமான கருத்துகளில் தீயவற்றையே தீயவர்கள் எடுத்துக் கொள்வர்.(89) ஆனால் ஞானமுடையோர், நல்லதும் தீயதும் கலந்த மற்றவர் பேச்சினைக் கேட்டுப் பாலில் கலந்த நீரைத் தவிர்த்து, பாலை மட்டுமே அருந்தும் அன்னத்தைப் போல அந்தப் பேச்சில் உள்ள நல்லவற்றை மட்டுமே ஏற்பர்.(90)
நேர்மையானவர்களுக்கு, மற்றவர்களை இழித்துப் பேச வலிக்கும். ஆனால், தீயவர்களுக்கோ அப்படிப் பேசுவதில் தான் இன்பமே இருக்கும். நேர்மையானவர்கள் முதிர்ந்தவர்களுக்கு {நல்லோருக்கு} மரியாதை செலுத்துவதில் எப்போதும் மகிழ்வதைப் போலவே தீயவர்கள் நல்லோரை நிந்திப்பதிலேயே எப்போதும் மகிழ்ச்சி கொள்வர்.(92) நேர்மையானவர்கள் மற்றவர்கள் குறையைத் தேடாமல் மகிழ்வுடன் இருப்பர். ஆனால், தீயவர்கள் மற்றவர்களின் குறையைக் கண்டே மகிழ்வர். தீயவர்கள் எப்போதும் நல்லவர்களை இழித்தே பேசுவர். ஆனால், பின்னவர் (நேர்மையானவர்) முன்னவரால் (தீயவர்) தனக்குத் தீங்கேற்பட்டாலும், தீங்கைச் செய்யார்.(93)
தீயவர்கள், நேர்மையானவர்களைத் தீயவர்கள் என்று குற்றம் சாட்டுவதைவிடக் கேலிக்கிடமானது இந்த உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?(94) கொடும் விஷங்கொண்ட கோபக்காரப் பாம்புகளைப் போன்ற நாத்திகர்களேகூட, உண்மை மற்றும் அறத்தைக் கடைப்பிடிக்காதவர்களிடம் வெறுப்படையும்போது {ஆத்திக} நம்பிக்கையால் வளர்க்கப்பட்ட நான் எனக்கு என்ன சொல்லிக் கொள்வது?(95) ஒருவன் தன் வடிவத்திலேயே ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனைத் தன் மகனென்று கருதவில்லையென்றால், அவன் நினைக்கும் உலகத்தை அடைய முடியாது. தேவர்களும் அவனது நற்பேறையும், உடைமைகளையும் அழித்துவிடுவர்.(96)
ஒரு மகன் ஒரு குலத்தைத் தொடர வைப்பவனாகிறான். அது சிறந்த ஓர் அறச்செயலாகும். எனவே, ஒருவன் தனது மகனைக் கைவிடக்கூடாது என்று பித்ருக்கள் சொல்லியிருக்கின்றனர்.(97) தனது மனைவியிடம் தானே பெறும் மகன், மற்றவர்களிடம் இருந்து (பரிசாக) பெறும் மகன், விலைக்கு வாங்கப்பட்ட மகன், பாசத்தால் வளர்க்கப்படும் மகன், மனைவியைத் தவிர மற்ற பெண்டிரிடம் பெறும் மகன் என ஐந்து வகையான மகன்கள் இருப்பதாக மனு சொல்கிறார்.[4](98)
ஒருவனின் அறத்தையும் சாதனைகளையும் மகன்கள் தாங்கி, அவனது மகிழ்ச்சியை அதிகப்படுத்தி, நரகத்திலிருந்து மூதாதையர்களையும் மீட்கின்றனர்.(99) ஓ மன்னர்களில் புலியே! நீர் உமது மகனைக் கைவிடலாகாது. எனவே, ஓ பூமியின் தலைவரே! ஒரு மகனை மனத்தில் வைத்தால், உண்மை, அறம், ஆகியன உமது மனத்தில் தங்கும்.(100) ஓ ஏகாதிபதிகளில் சிங்கமே! நீர் இந்த வஞ்சகத்தைச் செய்வது தகாது. ஒரு தடாகத்தை {மக்களுக்கு} அர்ப்பணிப்பது என்பது நூறு கிணறுகளை அர்ப்பணிப்பதை விடத் தகுதிவாய்ந்தது {புண்ணியமானது}. ஒரு வேள்வியைச் செய்வது என்பது ஒரு தடாகத்தை அர்ப்பணிப்பதைவிடத் தகுதிவாய்ந்தது {புண்ணியமானது}. ஒரு மகன் என்பவன் ஒரு வேள்வியைச் செய்வதைவிடத் தகுதிவாய்ந்தவன். உண்மை என்பது நூறு மகன்களைவிடத் தகுதிவாய்ந்தது.(101)
ஒரு முறை, நூறு குதிரைவேள்விகள் உண்மையுடன் {சத்தியத்துடன், துலாக்கோலில்} நிறுத்திப் பார்க்கப்பட்டது. நூறு குதிரை வேள்விகளைவிட உண்மையே கனம் மிக்கதாக இருந்தது.(102) ஓ மன்னா! {துஷ்யந்தரே}, உண்மை என்பது முழு வேதங்களுக்கும், அனைத்துப் புண்ணிய இடங்களில் நீராடியதற்கும் சமம் என்று நான் கருதுகிறேன்.(103) உண்மைக்கு நிகரான வேறு எந்த அறமும் இல்லை. உண்மையைவிட உயர்ந்தது எதுவுமில்லை.(104) ஓ மன்னா! உண்மையே தெய்வமாகும். உண்மையே உயர்ந்த நோன்பும், தவமுமாகும். எனவே உமது உண்மையை {சத்தியத்தை} மீறாதீர், ஓ ஏகாதிபதியே! உண்மை உம்மில் ஒருங்கிணைந்திருக்கட்டும்.(105) என் வார்த்தைகளுக்கு நீர் மதிப்பளிக்கவில்லையென்றால், எனது விருப்பப்படியே நான் போவேன். நிச்சயமாக உமது துணை {எனக்குத்} தவிர்க்கப்பட வேண்டியதே.(106) இருப்பினும், ஓ துஷ்யந்தரே! நீர் சென்ற பிறகு {உமக்குப் பிறகு}, எனது மகன், மலைகளின் மன்னனால் அலங்கரிக்கப்பட்டதும், நான்கு கடல்களால் சூழப்பட்டதுமான இந்தப் பூமியை ஆளவான்" என்றாள் {சகுந்தலை}.(107)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சகுந்தலை, அந்த ஏகாதிபதியிடம் {துஷ்யந்தனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, அவனது முன்னிலையிலிருந்து அகன்றாள். அவள் {சகுந்தலை} அகன்றதும், புரோகிதர்களுடனும், குருக்களுடனும், அமைச்சர்களுடன் அமர்ந்திருந்த துஷ்யந்தனிடம், வானத்திலிருந்து காண முடியாத வடிவங்கொண்ட ஓர் அசரீரி பேசியது.(108) {அந்தக் குரல்}, "தாயென்பவள் சதையைத் தாங்கும் உறையே, தகப்பனால் உண்டான மகன், அந்தத் தகப்பனே ஆவான். எனவே, ஓ துஷ்யந்தா! உன் மகனை ஏற்றுக் கொள்வாயாக. சகுந்தலையை அவமதிக்காதே.(109) ஓ மனிதர்களில் சிறந்தவனே! தனது சொந்த வித்தில் உண்டான மகன், யமனின் இடத்திலிருந்து ஒருவனை மீட்கிறான். நீயே இந்தப் பிள்ளையைப் பெற்றவனாவாய். சகுந்தலை உண்மையையே பேசினாள்.(110) ஒரு கணவன், தனது உடலை இரண்டாகப் பிரித்து, தனது மனைவியிடம் பிள்ளையின் வடிவில் அவனே பிறக்கிறான். எனவே, ஓ துஷ்யந்தா! சகுந்தலைக்குப் பிறந்த உனது மகனை ஏற்றுக் கொள்வாயாக.(111) ஓ ஏகாதிபதியே! வாழ்ந்து கொண்டிருக்கும் மகனை ஏமாற்றி வாழ்வது என்பது பெரும் தீப்பேறாகும். எனவே, ஓ பூரு {புரூரவஸ்} குலத்தோனே {துஷ்யந்தனே}, சகுந்தலைக்குப் பிறந்த உனது உயர் ஆன்ம மகனை ஏற்றுக் கொள்வாயாக.(112) எமது வார்த்தையால், நீ இந்தப் பிள்ளையை ஏற்றுக் கொள்வதால், இந்தப் பிள்ளை இது முதல் பரதன் (ஏற்றுக் கொள்ளப்பட்டவன்) என்று அறியப்படட்டும்" என்றது {அந்த அசரீரியின் குரல்}[5].(113)
தேவலோகவாசிகளின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பூரு {புரூரவஸ்} குலத்தோனுமான அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்} மிகவும் மகிழ்ந்து, தனது புரோகிதர்களிடமும், அமைச்சர்களிடமும் இவ்வாறு பேசினான், "தேவ தூதரால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்டீரா? இவன் {பரதன்} எனது மகன் என்பதை நானே அறிவேன்.(115) சகுந்தலையின் சொல்வன்மையை மட்டுமே கொண்டு இவனை {பரதனை} எனது மகனாகக் கொண்டிருந்தேனானால், எனது குடிமக்கள் இது விஷயத்தில் ஐயங்கொண்டிருப்பட்டிருப்பர். எனது மகனும் {பரதனும்} {பிறப்பால்} தூய்மையானவனாகக் கருதப்பட்டிருக்க மாட்டான்" என்றான் {துஷ்யந்தன்}.(116)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதக் குலத்தோனே! {ஜனமேஜயனே}, அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, தனது மகனின் {பரதனின்} தூய்மை {புனிதம்} தேவ தூதர் மூலம் நிறுவப்பட்டதால், மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.(117) அந்த மகனை {பரதனை} மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டான். அந்த மன்னன் {துஷ்யந்தன்} தனது மகனுக்குத் {பரதனுக்குத்} தந்தையால் செய்யப்பட வேண்டிய சடங்குகளைச் செய்தான்.(118) அந்த மன்னன் {துஷ்யந்தன்} தனது மைந்தனின் {பரதனின்} தலையை முகர்ந்து பார்த்து, அவனைப் {பரதனைப்} பாசத்தோடு அணைத்துக் கொண்டான். பிராமணர்கள் வாழ்த்தினர். கவிஞர்களும் புகழ்ந்தனர்.(119)
அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்} தன் மகனின் {பரதனின்} தீண்டலை மகிழ்ச்சியாக உணர்ந்தான். துஷ்யந்தன் தனது மனைவியையும் {சகுந்தலையைப்} பாசத்தோடு ஏற்றுக் கொண்டான். அவளிடம் {சகுந்தலையிடம்} பாசத்தோடு இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(120) "ஓ தேவதையே! {தேவி [சகுந்தலையே]}, உன்னுடனான எனது கலவி தனிமையில் நடந்தது. எனவே, உனது தூய்மையை எவ்வாறு நிறுவுவது என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனது மக்கள், நாம் காமத்தால் இணைந்த ஜோடியாக நினைப்பார்களேயன்றி, கணவன் மனைவியாக நினைக்கமாட்டார்கள். எனவே, எனது வாரிசாக அமரப்போகும் எனது மைந்தனின் {பரதனின்} பிறப்புத் தூய்மையற்றதாகக் கருதப்படும்.(121,122) அன்பானவளே! ஓ பெரிய கண்களைக் கொண்டவளே! கோபத்தால் நீ சொன்ன கடுமையான வார்த்தைகளனைத்தையும் நான் மன்னித்தேன். நீயே எனது அன்புக்குரியவளாவாய்" என்றான் {துஷ்யந்தன்}.(123)
ஓ பாரதா {ஜனமேஜயா}, இவ்வாறு தனது அன்பு மனைவியிடம் பேசிய அந்த அரசமுனி துஷ்யந்தன், நறுமணத் திரவியங்களும், உணவும், நீரும் கொடுத்து அவளை {சகுந்தலையை} ஏற்றுக் கொண்டான்.(124) அந்த மன்னன் துஷ்யந்தன், தனது பிள்ளைக்குப் பரதன் என்று பெயரிட்டுத் தனது வாரிசாக {இளவரசனாக} நியமித்தான்.(125) பரதனின் புகழ்வாய்ந்த பிரகாசமான தேர்ச் சக்கரங்கள், தேவர்களின் தேர்ச் சக்கரங்களைப் போல வெல்ல முடியாதவையாகச் சட சட என்ற ஒலியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் எழுப்பிக் கொண்டே இருந்தன.(126) துஷ்யந்தனின் அந்த மைந்தன் {பரதன்} பூமியின் மன்னர்கள் அனைவரையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். அவன் தன் குடிகளை அறம்சார்ந்து ஆண்டுப் பெரும் புகழ் அடைந்தான்.(127)
அந்தப் பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதி, சக்கரவர்த்தி மற்றும் சர்வபௌமன் என்ற பட்டங்களாலும் {பெயர்களாலும்} அறியப்பட்டான். மருத்துகளின் தலைவனான சக்ரனைப் (இந்தினைப்) போல அவன் பல வேள்விகளைச் செய்தான்.(128) பிராமணர்களுக்குப் பெரும் கொடை அளிக்கப்பட்ட அந்த வேள்விகள் அனைத்திற்கும் கண்வர் தலைமைப் புரோகிதராக இருந்தார். அந்த அருளப்பட்ட ஏகாதிபதி மாடு மற்றும் குதிரை வேள்விகள் ஆகிய இரண்டையும் செய்தான்[6].(129) மேலும் பரதன் புரோகிதர் கூலியாகக் கண்வருக்கு ஆயிரம் தங்கநாணயங்களைக் கொடுத்தான். அந்தப் பரதனே பல பெரும் சாதனைகளைச் செய்தவனாவான். அது முதல், அவனது {பரதன் என்ற} பெயரைக் கொண்டே அவனது குலம் {பரத/பாரதக் குலமென்று} என்று அழைக்கப்படுகிறது.(130) அவனுக்குப் பின்பு பிறந்த மன்னர்கள் அனைவரும் அவனது பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டனர். அந்தப் பாரதக் குலத்தில் பிறந்தவர்கள், தேவர்களைப் போன்ற பெரும் சக்திகள் கொண்ட ஏகாதிபதிகளாக இருந்தனர். அவர்கள் அனைவரும் பிரம்மனைப் போல இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவையாகும்.(131,132) ஆனால், ஓ பாரதக் குலத்தோனே! {ஜனமேஜயனே}, அதில் பெரும் நற்பேறு பெற்று, தேவர்களைப் போல இருந்து, உண்மைக்கும் நேர்மைக்கும் தங்களை அர்ப்பணித்த முக்கியமானவர்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும்" {என்றார் வைசம்பாயனர்}.(133)

[4] 12 வகை புத்திரர்களைப் பற்றிச் சொல்கிறது, மகாபாரதம். தர்மத்தின் விதிகள் முதல் ஆறு வகை மகன்களை வாரிசுகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் ஒப்புக் கொள்கின்றன. அடுத்த ஆறு வகை மகன்கள் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
{1} தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் பெறும் மகன் முதல் வகை
{2} அன்பு நிமித்தமாக திறமைமிகுந்த மனிதர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் இரண்டாம் வகை,
{3} பணத்தின் நிமித்தமாக ஒருவர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் மூன்றாம் வகை,
{4} கணவன் இறந்தபிறகு மனைவியால் பெறப்படும் மகன் நான்காவது வகை,
{5} திருமணம் ஆகும் முன்பு மனைவி பெறும் மகன் ஐந்தாவது வகை,
{6} கற்பற்ற மனைவியிடம் பெறும் மகன் ஆறாவது வகை,
{7} சுவீகாரமாகப் பெறப்படும் மகன் ஏழாவது வகை,
{8} சில காரணத்திற்காக பொருள் கொடுத்து வாங்கப்படும் மகன் எட்டாவது வகை,
{9} தானே முன்வந்து மகனாகுபவன் ஒன்பதாம் வகை,
{10} கர்ப்பிணி மணமகளுடன் பெறப்பட்ட மகன் பத்தாவது வகை,
{11} சகோதரன் மகன் பதினோராவது வகை,
{12} தாழ்ந்த சாதி மனைவியிடம் பெறப்படும் மகன் பனிரெண்டாவது வகை.
இங்கு சகுந்தலை குறிப்பிடுவது 1,2,3,5,6 ஆகிய ஐந்து வகை மகன்களைப் பற்றி. இது ஆதிபர்வம் 120 ஆம் பகுதியில் விளக்கமாகச் சொல்லப்படுகிறது.
ஒருவனின் அறத்தையும் சாதனைகளையும் மகன்கள் தாங்கி, அவனது மகிழ்ச்சியை அதிகப்படுத்தி, நரகத்திலிருந்து மூதாதையர்களையும் மீட்கின்றனர்.(99) ஓ மன்னர்களில் புலியே! நீர் உமது மகனைக் கைவிடலாகாது. எனவே, ஓ பூமியின் தலைவரே! ஒரு மகனை மனத்தில் வைத்தால், உண்மை, அறம், ஆகியன உமது மனத்தில் தங்கும்.(100) ஓ ஏகாதிபதிகளில் சிங்கமே! நீர் இந்த வஞ்சகத்தைச் செய்வது தகாது. ஒரு தடாகத்தை {மக்களுக்கு} அர்ப்பணிப்பது என்பது நூறு கிணறுகளை அர்ப்பணிப்பதை விடத் தகுதிவாய்ந்தது {புண்ணியமானது}. ஒரு வேள்வியைச் செய்வது என்பது ஒரு தடாகத்தை அர்ப்பணிப்பதைவிடத் தகுதிவாய்ந்தது {புண்ணியமானது}. ஒரு மகன் என்பவன் ஒரு வேள்வியைச் செய்வதைவிடத் தகுதிவாய்ந்தவன். உண்மை என்பது நூறு மகன்களைவிடத் தகுதிவாய்ந்தது.(101)
ஒரு முறை, நூறு குதிரைவேள்விகள் உண்மையுடன் {சத்தியத்துடன், துலாக்கோலில்} நிறுத்திப் பார்க்கப்பட்டது. நூறு குதிரை வேள்விகளைவிட உண்மையே கனம் மிக்கதாக இருந்தது.(102) ஓ மன்னா! {துஷ்யந்தரே}, உண்மை என்பது முழு வேதங்களுக்கும், அனைத்துப் புண்ணிய இடங்களில் நீராடியதற்கும் சமம் என்று நான் கருதுகிறேன்.(103) உண்மைக்கு நிகரான வேறு எந்த அறமும் இல்லை. உண்மையைவிட உயர்ந்தது எதுவுமில்லை.(104) ஓ மன்னா! உண்மையே தெய்வமாகும். உண்மையே உயர்ந்த நோன்பும், தவமுமாகும். எனவே உமது உண்மையை {சத்தியத்தை} மீறாதீர், ஓ ஏகாதிபதியே! உண்மை உம்மில் ஒருங்கிணைந்திருக்கட்டும்.(105) என் வார்த்தைகளுக்கு நீர் மதிப்பளிக்கவில்லையென்றால், எனது விருப்பப்படியே நான் போவேன். நிச்சயமாக உமது துணை {எனக்குத்} தவிர்க்கப்பட வேண்டியதே.(106) இருப்பினும், ஓ துஷ்யந்தரே! நீர் சென்ற பிறகு {உமக்குப் பிறகு}, எனது மகன், மலைகளின் மன்னனால் அலங்கரிக்கப்பட்டதும், நான்கு கடல்களால் சூழப்பட்டதுமான இந்தப் பூமியை ஆளவான்" என்றாள் {சகுந்தலை}.(107)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சகுந்தலை, அந்த ஏகாதிபதியிடம் {துஷ்யந்தனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, அவனது முன்னிலையிலிருந்து அகன்றாள். அவள் {சகுந்தலை} அகன்றதும், புரோகிதர்களுடனும், குருக்களுடனும், அமைச்சர்களுடன் அமர்ந்திருந்த துஷ்யந்தனிடம், வானத்திலிருந்து காண முடியாத வடிவங்கொண்ட ஓர் அசரீரி பேசியது.(108) {அந்தக் குரல்}, "தாயென்பவள் சதையைத் தாங்கும் உறையே, தகப்பனால் உண்டான மகன், அந்தத் தகப்பனே ஆவான். எனவே, ஓ துஷ்யந்தா! உன் மகனை ஏற்றுக் கொள்வாயாக. சகுந்தலையை அவமதிக்காதே.(109) ஓ மனிதர்களில் சிறந்தவனே! தனது சொந்த வித்தில் உண்டான மகன், யமனின் இடத்திலிருந்து ஒருவனை மீட்கிறான். நீயே இந்தப் பிள்ளையைப் பெற்றவனாவாய். சகுந்தலை உண்மையையே பேசினாள்.(110) ஒரு கணவன், தனது உடலை இரண்டாகப் பிரித்து, தனது மனைவியிடம் பிள்ளையின் வடிவில் அவனே பிறக்கிறான். எனவே, ஓ துஷ்யந்தா! சகுந்தலைக்குப் பிறந்த உனது மகனை ஏற்றுக் கொள்வாயாக.(111) ஓ ஏகாதிபதியே! வாழ்ந்து கொண்டிருக்கும் மகனை ஏமாற்றி வாழ்வது என்பது பெரும் தீப்பேறாகும். எனவே, ஓ பூரு {புரூரவஸ்} குலத்தோனே {துஷ்யந்தனே}, சகுந்தலைக்குப் பிறந்த உனது உயர் ஆன்ம மகனை ஏற்றுக் கொள்வாயாக.(112) எமது வார்த்தையால், நீ இந்தப் பிள்ளையை ஏற்றுக் கொள்வதால், இந்தப் பிள்ளை இது முதல் பரதன் (ஏற்றுக் கொள்ளப்பட்டவன்) என்று அறியப்படட்டும்" என்றது {அந்த அசரீரியின் குரல்}[5].(113)
[5] கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, "மஹாத்மாவும், பூரு வம்சத்தவனுமாகிய சகுந்தலையின் புத்திரனை எடுத்துக் கொள். இவனை நீயாகவும், எங்கள்சொல்லுக்காகவும் தாங்கிக் கொள்ள வேண்டியிருப்பதனால், இந்த உன் புத்திரனுக்குப் பரதனென்று பெயர் இருக்கட்டும். பரதனாலுண்டான புகழ் பாரதி எனப்படும். இவனால் இந்தக் குலத்திற்கே பாரதமென்ற பெயர்வரும். இவனுக்குப் பிந்தினவரும், முந்தினவரும் பாரதர்களேயாவார்" என்று அசரீரி சொல்லி முடிப்பதாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
தேவலோகவாசிகளின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பூரு {புரூரவஸ்} குலத்தோனுமான அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்} மிகவும் மகிழ்ந்து, தனது புரோகிதர்களிடமும், அமைச்சர்களிடமும் இவ்வாறு பேசினான், "தேவ தூதரால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்டீரா? இவன் {பரதன்} எனது மகன் என்பதை நானே அறிவேன்.(115) சகுந்தலையின் சொல்வன்மையை மட்டுமே கொண்டு இவனை {பரதனை} எனது மகனாகக் கொண்டிருந்தேனானால், எனது குடிமக்கள் இது விஷயத்தில் ஐயங்கொண்டிருப்பட்டிருப்பர். எனது மகனும் {பரதனும்} {பிறப்பால்} தூய்மையானவனாகக் கருதப்பட்டிருக்க மாட்டான்" என்றான் {துஷ்யந்தன்}.(116)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதக் குலத்தோனே! {ஜனமேஜயனே}, அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, தனது மகனின் {பரதனின்} தூய்மை {புனிதம்} தேவ தூதர் மூலம் நிறுவப்பட்டதால், மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.(117) அந்த மகனை {பரதனை} மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டான். அந்த மன்னன் {துஷ்யந்தன்} தனது மகனுக்குத் {பரதனுக்குத்} தந்தையால் செய்யப்பட வேண்டிய சடங்குகளைச் செய்தான்.(118) அந்த மன்னன் {துஷ்யந்தன்} தனது மைந்தனின் {பரதனின்} தலையை முகர்ந்து பார்த்து, அவனைப் {பரதனைப்} பாசத்தோடு அணைத்துக் கொண்டான். பிராமணர்கள் வாழ்த்தினர். கவிஞர்களும் புகழ்ந்தனர்.(119)
அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்} தன் மகனின் {பரதனின்} தீண்டலை மகிழ்ச்சியாக உணர்ந்தான். துஷ்யந்தன் தனது மனைவியையும் {சகுந்தலையைப்} பாசத்தோடு ஏற்றுக் கொண்டான். அவளிடம் {சகுந்தலையிடம்} பாசத்தோடு இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(120) "ஓ தேவதையே! {தேவி [சகுந்தலையே]}, உன்னுடனான எனது கலவி தனிமையில் நடந்தது. எனவே, உனது தூய்மையை எவ்வாறு நிறுவுவது என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனது மக்கள், நாம் காமத்தால் இணைந்த ஜோடியாக நினைப்பார்களேயன்றி, கணவன் மனைவியாக நினைக்கமாட்டார்கள். எனவே, எனது வாரிசாக அமரப்போகும் எனது மைந்தனின் {பரதனின்} பிறப்புத் தூய்மையற்றதாகக் கருதப்படும்.(121,122) அன்பானவளே! ஓ பெரிய கண்களைக் கொண்டவளே! கோபத்தால் நீ சொன்ன கடுமையான வார்த்தைகளனைத்தையும் நான் மன்னித்தேன். நீயே எனது அன்புக்குரியவளாவாய்" என்றான் {துஷ்யந்தன்}.(123)
ஓ பாரதா {ஜனமேஜயா}, இவ்வாறு தனது அன்பு மனைவியிடம் பேசிய அந்த அரசமுனி துஷ்யந்தன், நறுமணத் திரவியங்களும், உணவும், நீரும் கொடுத்து அவளை {சகுந்தலையை} ஏற்றுக் கொண்டான்.(124) அந்த மன்னன் துஷ்யந்தன், தனது பிள்ளைக்குப் பரதன் என்று பெயரிட்டுத் தனது வாரிசாக {இளவரசனாக} நியமித்தான்.(125) பரதனின் புகழ்வாய்ந்த பிரகாசமான தேர்ச் சக்கரங்கள், தேவர்களின் தேர்ச் சக்கரங்களைப் போல வெல்ல முடியாதவையாகச் சட சட என்ற ஒலியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் எழுப்பிக் கொண்டே இருந்தன.(126) துஷ்யந்தனின் அந்த மைந்தன் {பரதன்} பூமியின் மன்னர்கள் அனைவரையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். அவன் தன் குடிகளை அறம்சார்ந்து ஆண்டுப் பெரும் புகழ் அடைந்தான்.(127)
அந்தப் பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதி, சக்கரவர்த்தி மற்றும் சர்வபௌமன் என்ற பட்டங்களாலும் {பெயர்களாலும்} அறியப்பட்டான். மருத்துகளின் தலைவனான சக்ரனைப் (இந்தினைப்) போல அவன் பல வேள்விகளைச் செய்தான்.(128) பிராமணர்களுக்குப் பெரும் கொடை அளிக்கப்பட்ட அந்த வேள்விகள் அனைத்திற்கும் கண்வர் தலைமைப் புரோகிதராக இருந்தார். அந்த அருளப்பட்ட ஏகாதிபதி மாடு மற்றும் குதிரை வேள்விகள் ஆகிய இரண்டையும் செய்தான்[6].(129) மேலும் பரதன் புரோகிதர் கூலியாகக் கண்வருக்கு ஆயிரம் தங்கநாணயங்களைக் கொடுத்தான். அந்தப் பரதனே பல பெரும் சாதனைகளைச் செய்தவனாவான். அது முதல், அவனது {பரதன் என்ற} பெயரைக் கொண்டே அவனது குலம் {பரத/பாரதக் குலமென்று} என்று அழைக்கப்படுகிறது.(130) அவனுக்குப் பின்பு பிறந்த மன்னர்கள் அனைவரும் அவனது பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டனர். அந்தப் பாரதக் குலத்தில் பிறந்தவர்கள், தேவர்களைப் போன்ற பெரும் சக்திகள் கொண்ட ஏகாதிபதிகளாக இருந்தனர். அவர்கள் அனைவரும் பிரம்மனைப் போல இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவையாகும்.(131,132) ஆனால், ஓ பாரதக் குலத்தோனே! {ஜனமேஜயனே}, அதில் பெரும் நற்பேறு பெற்று, தேவர்களைப் போல இருந்து, உண்மைக்கும் நேர்மைக்கும் தங்களை அர்ப்பணித்த முக்கியமானவர்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும்" {என்றார் வைசம்பாயனர்}.(133)
[6] கும்பகோணம் பதிப்பில், "ஸாதுக்களுடைய தர்மத்தை அனுஷ்டித்த பராக்கிரமசாலியான அந்த ராஜா {பரதன்}, எல்லாவற்றிற்கும் மேலான புகழையடைந்து பூமி முழுமைக்கும் ஈசுவரனாகிய சக்கரவர்த்தியாயிருந்தான். தேவர்களுக்கு ராஜாவாகிய இந்திரனைப் போலவே அனேக யாகங்களைச் செய்தான். தக்ஷருக்கொப்பான கண்ணுவமஹரிஷி மிகுந்த தக்ஷிணைகளுடன் அவனுக்கு யாகம் செய்வித்தார். கோவித்தம் {கோக்களை மிகுதியாகவுடையது} என்று சொல்லப்பட்ட சிறப்புள்ள அஸ்வமேதயாகத்தைச் செய்தான்"என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அந்தப் பேறுபெற்றவன், எண்ணற்ற பசுக்களின் {விலங்குகளின்} பெயரால் அழைக்கப்பட்ட ஒரு குதிரை வேள்வியைச் செய்தான்" என்றிருக்கிறது. மூலத்தில் கோவிதத்தம் என்ற பெயருடைய வாஜிமேத யாகத்தைச் செய்தான் என்று இருக்கிறது. வாஜிமேதம் என்றால் புனிதமான விலங்குகளை பலியிடும் யாகம் என்று பொருள். இது அசுவமேத யாகம் அல்ல. அசுவமேத யாகம் குதிரையை பலியிட்டுச் செய்வதாகும்.
ஆங்கிலத்தில் | In English |