The History of Yayati! | Adi Parva - Section 75 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 11)
பதிவின் சுருக்கம் : நகுஷனைச் சுமந்த முனிவர்கள்; யயாதி வரலாற்றுச் சுருக்கம்; நகுஷனுக்குப் பிறந்த யயாதி; இளமையைப் பெற விரும்பிய யயாதி, தனக்கு அவர்களது இளமையை அளிக்கும்படி தனது மகன்களிடம் வேண்டுவது; இளையவனான பூரு இக்கோரிக்கையை ஏற்பது; பூருவை அரியணையில் அமர்த்திய யயாதி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "படைப்புத் தலைவன் தக்ஷன், சூரியனின் மகன் மனு, பரதன், குரு, பூரு, அஜமீடன் ஆகிய அரச முனிகளின் புனிதமான, அறத்திற்குக்கட்டுப்பட்ட, பதிவு செய்யப்பட்ட பரம்பரை ஆய்வை நான் உரைக்கும்போதே கேட்பாயாக. ஓ பாவங்களற்றவனே! {ஜனமேஜயனே}, யாதவர்கள், குருக்கள் மற்றும் பாரதக் குலத்தின் பரம்பரை ஆய்வையும் நான் உனக்கு உரைக்கிறேன். இந்தப் பரம்பரை ஆய்வுகள் புனிதமானவை. அவற்றை உரைப்பது என்பது மனத்தில் அமைதியை ஏற்படுத்தும் பெரிய செயலாகும். இதை உரைப்பது, செல்வம், புகழ் மற்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும். ஓ பாவங்களற்றவனே! {ஜனமேஜனே}, நான் பெயர் குறிப்பிட்ட அனைவரும் மிகுந்த காந்தியைக் கொண்டவர்கள், சக்தியால் பெரும் முனிவர்களுக்குச் சமமானவர்கள் ஆவர்.(1-3)
பிரசேதஸ் {ப்ராசீனபர்ஹி} பத்து மகன்களைப் பெற்றான். அவர்கள் அனைவரும் தவத்துறவுகளுக்குத் தங்களை அர்ப்பணித்து, எல்லா அறங்களையும் தங்களுக்குள் கொண்டிருந்தனர். பழங்காலத்தில் அவர்கள், தங்கள் வாயில் உண்டாகும் நெருப்பினால், விஷம் நிறைந்த செடிகள் பலவற்றையும், பூமியை போர்த்திக் கொண்டிருந்தவையும் மனிதர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தவையுமான எண்ணிலடங்காப் பெரிய மரங்கள் பலவற்றையும் எரித்தனர்.(4) இந்தப் பத்து பேருக்குப் பிறகு {பிராசேதஸர் என்று சொல்லப்படும்} தக்ஷன் என்றொருவன் பிறந்தான். இந்தத் தக்ஷனின் மூலமே பூமியில் உண்டான அனைத்து உயிர்களும் உண்டாயின. ஓ மனிதர்களில் புலியே! அதனால்தான் அவன் {தக்ஷன்} எல்லோருக்கும் முப்பாட்டன் என்று அழைக்கப்படுகிறான்.(5) பிரசேதஸுக்குப் பிறந்த தக்ஷன், வீரணியுடன்[1] கலந்து, தன்னைப்போன்றே கடுந்தவங்களை இயற்றும் ஆயிரம் மகன்களைப் பெற்றான்.(6) அவர்களுக்கு நாரதர், முக்திக்கு வழிவகுக்கும் சாங்கிய தத்துவத்தைப் போதித்தார்.(7) ஓ ஜனமேஜயா, அந்தப் படைப்புத் தலைவன் தக்ஷன், உயிரினங்களை உருவாக்குவதில் ஆர்வங்கொண்டு, ஐம்பது மகள்களைப் பெற்றான். அவர்கள் அனைவரையும் தனது வாரிசாகவும் (அந்த மகள்கள் பெற்றெடுக்கும் மகன்களும் தன்சார்பாக அறச்செயல்கள் செய்வதற்காக) நியமித்தான்[2].(8) தர்மனுக்குப் பத்து மகள்களையும், கசியபருக்கு பதிமூன்று மகள்களையும், சந்திரனுக்கு நேரத்தைக் குறித்துக் காட்ட நியமிக்கப்பட்டிருந்த தன் மற்ற இருபத்தேழு மகள்களையும் அளித்தான்.(9)
மரீசியின் மூத்த மகனான கசியபர், அந்தப் பதிமூன்று மனைவியருள் மூத்தவளிடம் இந்திரனைத் தங்கள் தலைவனாகக் கொண்ட ஆதித்தியர்கள் என்ற தேவர்களையும், விவஸ்வானையும் (சூரியன்) பெற்றார். விவஸ்வானுக்கு யமன் பிறந்தான்.(10,11) அந்த மார்த்தாண்டன் (விவஸ்வான் [சூரியன்]) யமனுக்குப் பிறகு, பெரும் புத்திசாலித்தனத்தைக் கொடையாகக் கொண்ட மனுவைப் பெற்றான்.(12) மனு பெரும் ஞானம் கொண்டவராக இருந்து, அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்தார். அவரே ஒரு பரம்பரையின் உற்பத்தியாளராக இருந்தார். மனுவின் குலத்தில் பிறந்தவர்களே மனிதர்கள், அதனாலேயே அவர்கள் மானவாஸ் {மானவர்கள் [மனிதர்கள்]}[3] என்று அழைக்கப்படுகிறார்கள்.(13) இந்த மனுவின் மூலமே பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் அனைத்து மனிதர்களும் உற்பத்தியாகினர். ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயா}, அதன்பிறகு பிராமணர்கள், க்ஷத்திரியர்களுடன் சேர்ந்து ஒன்றாக இருந்தனர்.(14) மனுவின் மகன்களான பிராமணர்கள், வேதக் கல்விக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். மனு மேலும் பத்துப் பிள்ளைகளைப் பெற்றார். அவர்கள் வேனன், திருஷ்ணு, நரிஷ்யன், நாபாகன், இக்ஷ்வாகு,(15) காரூஷன், சர்யாதி, எட்டாவதாக இளை என்ற பெண், ஒன்பதாவதாகப் பிருஷத்ரன், பத்தாவதாக நாபாகரிஷ்டன் {அரிஷ்டன்} ஆகியோராவர். அவர்கள் அனைவரும் க்ஷத்திரியர்களுக்கான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.(16) இவர்களைத் தவிர்த்து மனுவுக்கு இந்தப் பூமியில் ஐம்பது மகன்கள் இருந்தனர்.(17) ஆனால், அவர்கள் அனைவரும் ஒருவருவருக்கொருவர் சண்டையிட்டு அழிந்துவிட்டதாக நாம் கேள்விப்படுகிறோம்.
கல்வியறிவுபெற்ற புரூரவஸ் {மனுவின் மகளான} இளை என்பவளுக்குப் பிறந்தவன்.(18)[3] இளையே அவனுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்ததாக நாம் கேள்விப்படுகிறோம். அந்தப் பெரும் புரூரவசுக்குக் கடலில் உள்ள பதிமூன்று தீவுகளில் ஆதிக்கம் இருந்தது. அவன் மனிதனாக இருந்தாலும், அவனைச் சுற்றி மனிதசக்திக்கு அப்பாற்பட்டவர்களே நட்பாக இருந்தனர்.(19) புரூரவஸ் தனது பலத்தால் போதை கொண்டு, பிராமணர்களிடம் சண்டையிட்டு, அவர்களின் கோபத்தைப் பற்றி கவலை கொள்ளாமல், அவர்களது செல்வத்தை எடுத்துக் கொண்டான்.(20) இதைக் கண்ட சனத்குமாரர்கள் பிரம்மலோகத்திலிருந்து வந்து, அவனுக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறினர். ஆனால் அவையனைத்தையும், புரூரவஸ் நிராகரித்தான்.(21) பலத்தால் போதையுண்ட அந்தக் கஞ்சத்தனமான ஏகாதிபதி {புரூரவஸ்}, காரணக் காரியங்களை அறியும் சக்தியை இழந்ததைக் கண்ட அந்த முனிவர்கள், பெரும் கோபம் கொண்டு, தங்கள் சாபத்தால் அவனை {புரூரவஸை} உடனே அழித்தனர்.(22) கந்தர்வலோகத்திலிருந்து மூன்று வகையான நெருப்பை (வேள்வி காரியங்களுக்காக) முதலில் இங்கே கொண்டு வந்தது அந்தப் புரூரவஸே. அவன் அங்கிருந்து அப்சரஸ் ஊர்வசியையும் கொண்டு வந்தான்.(23) அந்த இளையின் மகன் {புரூரவஸ்}, ஊர்வசியிடம் ஆறு மகன்களைப் பெற்றான். ஆயுஸ், தீமான், அமாவஸு, திருடாயுஸ், வனாயுஸ், சதாயுஸ் ஆகியன அவர்களது பெயர்கள்.(24) அதில் ஆயுஸ் என்பவன் சுவர்ணபானுவின் மகளிடம் {சுவர்ணபானவியிடம்}, நகுஷன், விருத்தசர்மன், ரஜிங்கயன், அநேனஸ் என்ற மகன்களைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது.(25) ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே}, ஆயுஸின் மகன்கள் அனைவரிலும், நகுஷன் என்பவன் பெரும் புத்திசாலித்தனத்தையும், பெரும் வீரத்தையும் கொடையாகக் கொண்டு அவனது அரசை அறத்துடன் ஆண்டு வந்தான். (26)
மன்னன் நகுஷன், பித்ருக்களையும், தேவர்கள், முனிவர்கள், பிராமணர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், ராட்சசர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களையும் சமமாகப் பாவித்துத் தாங்கினான்.(27) கள்வர்க்கூட்டங்களைத் தன் பலம் வாய்ந்த கரங்களால் ஒடுக்கினான். முனிவர்கள் தனக்குக் கப்பம் கட்டும்படியும், அவர்கள் சுமை சுமக்கும் விலங்குகளாகத் தன்னை அவர்களின் முதுகில் சுமக்கும்படியும் செய்தான்.(28) தனது அழகால், அறத்தால், வீரத்தால், சக்தியால் தேவர்களையும் வெற்றிக் கொண்டு, இந்திரனைப் போல் ஆட்சி செய்தான்.(29) நகுஷன் இனிமையான பேச்சுக் கொண்ட ஆறு மகன்களைப் பெற்றான். அவர்கள் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, மற்றும் துருவன்[4] ஆகியோராவர்.(30)
யதி, துறவை மேற்கொண்டு முனிவராகிப் பிரம்மனுக்குச் சமமாக உயர்ந்தான். யயாதி பெரும் வீரமும், அறமும் கொண்ட ஏகாதிபதி ஆனான்.(31) அவன் இந்த முழு உலகத்தையும் ஆண்டான். பல வேள்விகளைச் செய்தான். பித்ருக்களை மிகுந்த மரியாதையுடன் வழிபட்டான். அவன் எப்போதும் தேவர்களை மதித்தான்.(32) அவன் முழு உலகத்தையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்து, எதிரிகளால் அழிக்கப்பட முடியாதவனாக இருந்தான். யயாதியின் மகன்கள் அனைவரும் பெரும் வில்லாளிகளாக இருந்தனர். அவர்கள் அனைத்து அறங்களும் கொண்டு பிரகாசிப்பவர்களாகவும் இருந்தனர்.(33) ஓ மன்னா, (அவனது {யயாதியின்} இரு மனைவியரான) தேவயானி மற்றும் சர்மிஷ்டைக்குப் பிறந்தனர். தேவயானிக்கு யதுவும், துர்வசுவும் பிறந்தனர்.(34) சர்மிஷ்டைக்குத் திருஹ்யு, அநு மற்றும் பூரு ஆகியோர் பிறந்தனர். ஓ மன்னா, தனது குடிகளை அறம்சார்ந்து பல காலம் ஆண்ட யயாதி,(35) முதுமை தனது அழகை அழிப்பதைக்கண்டு கலங்கினான்.
ஓ பாரதா! {ஜனமேஜயா}, முதுமையால் தாக்குண்ட அந்த ஏகாதிபதி {யயாதி}, தனது மகன்களான யது, துர்வசு, திருஹ்யு, அநு, மற்றும் பூருவிடம் இப்படிப் பேசினான்,(36) "நீங்கள் எனது அன்புக்குரிய மகன்களாக இருக்கிறீர்கள். இளம்பெண்களிடம் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, நான் இளம் மனிதனாக இருக்க விரும்புகிறேன். எனக்கு நீங்கள் உதவுவீர்களா?" என்று கேட்டான்.
அதற்குத் தேவயானிக்குப் பிறந்த மூத்த மகன்,(37,38) "ஓ மன்னா, உமக்கு என்ன வேண்டும்? நீர் உமது இளமையைப் பெறக் கேட்கிறீரா?" என்று கேட்டான். யயாதி, "ஓ மகன்களே, எனது முதுமையை ஏற்பீராக.(39) உங்கள் இளமையைக் கொண்டு நான் இன்பமாக இருப்பேன். பெரும் வேள்வியின் போது, முனிவர் உசானஸால் (சுக்ரன்) நான் சபிக்கப்பட்டேன். ஓ மகன்களே, உங்கள் இளமையைக் கொண்டு நான் இன்பமாக இருப்பேன்.(40) உங்களில் யாராவது ஒருவன் எனது முதுமையை ஏற்றுக் கொண்டு, எனது உடலால் இந்த நாட்டை ஆண்டுக் கொள்ளுங்கள். உங்கள் இளமையால் புத்துயிர் ஊட்டப்பட்டு, நான் இன்பமாக இருப்பேன். எனவே எனது மகன்களே, எனது முதுமையை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.(41)
ஆனால் எந்த மகனும் அவனின் {யயாதியின்} முதுமையை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை. பிறகு, அவனது இளைய மகன் பூரு அவனிடம் {யயாதியிடம்} வந்து,(42) "ஓ மன்னா, நீர் மீட்டெடுக்கப்பட்ட இளமையுடனும், புத்துயிர் ஊட்டப்பட்ட உடலுடனும் மறுபடியும் இன்பமாக இருப்பீராக. நான் உமது முதுமையை ஏற்றுக் கொள்கிறேன். உமது உத்தரவின் பேரில் இந்த நாட்டை ஆள்கிறேன்" என்றான்.(43) இப்படிச் சொல்லப்பட்ட அந்த அரச முனி {யயாதி}, தனது அறத்தன்மை கொண்ட ஆன்ம பலத்தால், முதுமையைத் தனது உயர் ஆன்ம மகனுக்கும் {பூருவுக்கும்}, பூருவின் இளமையைத் தனக்கும் மாற்றிக் கொண்டு இளமையை அடைந்தான்.(44) அந்த ஏகாதிபதியின் {யயாதியின்} வயோதிகத்தை ஏற்றுக் கொண்ட பூரு, நாட்டை ஆண்டான்.(45)
அதன்பிறகு, ஆயிரம் வருடங்கள் கடந்தும், மன்னர்களில் புலியான அந்த யயாதி, ஒரு புலியைப் போன்ற பலத்துடனும், வலுவுடனும் இருந்தான்.(46) அவன் தனது இரு மனைவியரிடமும் {தேவயானி, சர்மிஷ்டையிடம்} இன்பமாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். மேலும், சித்ரரதனின் (கந்தர்வ மன்னன்) நந்தவனத்தில் அப்சரஸ் விஸ்வாசியுடனும் இன்பமாக இருந்தான்.(47) இப்படியெல்லாம் இன்பமாக இருந்தும்கூட, அந்தப் பெரும் மன்னன் மனநிறைவு அடையவில்லை. பிறகு அந்த மன்னன் {யயாதி} புராணங்களில் அடங்கிய பின்வரும் உண்மைகளை நினைவுகூர்ந்தான்.(48) {அந்த யயாதி} "உண்மையாக, ஒருவனது ஆசைகள் இன்பங்களால் நிறைவடையாது. மாறாக, நெருப்பில் வேள்வி நெய்யை விட்டால் எரிவது போல, அது சுடர்விட்டு எரியவே செய்யும்.(49) ஒருவன், இந்த முழு உலகத்தில் உள்ள செல்வங்கள், வைரம், தங்கம், மிருகங்கள், பெண்கள் என அனைத்தையும் அனுபவித்து இன்பமாக இருந்தாலும், அவனால் மனநிறைவை அடைய முடியாது.(50) ஒரு மனிதன், எந்த உயிர்வாழும் பொருளுக்கும், எண்ணத்தாலும், செயலாலும், பேச்சாலும் எந்தப் பாவமும் செய்யாமல் இருந்தால், அவன் பிரம்மனைப் போன்று தூய்மையானவனாக இருப்பான்.(51) எப்போது ஒருவன் எதற்கும் பயப்படாதவனாக இருக்கிறானோ, எப்போது எதற்கும் பயத்தை ஏற்படுத்தாமல் இருக்கிறானோ, எப்போது எதற்கும் ஆசைப்படாமல் இருக்கிறானோ, எப்போது எதற்கும் எந்தத் தீங்கையும் செய்யாமல் இருக்கிறானோ அப்போதே அவன் பிரம்மனைப் போன்ற தூய நிலையை அடைய முடியும்" {என்று புராணங்களில் உரைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை நினைத்துப் பார்த்தான்}.(52)
பெரும்ஞானியான அந்த ஏகாதிபதி {யயாதி}, இவற்றை எண்ணிப் பார்த்து ஒருவனது ஆசைகளால் என்றும் மனநிறைவு கொள்ள முடியாது என்பதில் மனநிறைவு கொண்டு, தனது மனத்தை தியானத்தின் பக்கம் திருப்பினான். தனது மகனிடம் சென்று, அவனுக்கு உரிய முதுமையை ஏற்றுக் கொண்டான்.(53) அவன், தனது ஆசைகளில் மனநிறைவுகொள்ளாத நிலையில் இருந்தாலும், இளமையைத் தன் மகனுக்குத் திருப்பிக் கொடுத்து, அவனை (பூருவை) அரியணையில் அமர்த்தி, அவனிடம்,(54) "நீயே எனது உண்மையான வாரிசு, எனது குலத்தைத் தொடர வைக்கப் போகும் நீயே எனது உண்மையான மகன். இந்த உலகத்தில் எனது குலம் உனது பெயரால் அறியப்படட்டும்" என்றான் {யயாதி}.(55)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு அந்த மன்னர்களில் புலி{யயாதி}, தனது மகன் பூருவை அரியணையில் அமர்த்தி, தன்னை தவத்துறவுகளுக்கு அர்ப்பணித்து, பிருகு {பிருகுதுங்கம்} என்ற மலைக்குச் சென்றுவிட்டான்.(56) பெரும் தவத் தகுதிகளை அடைந்து, பல வருடங்களுக்குப் பிறகு காலத்தால் கட்டுப்படுத்த முடியாத இடத்திற்குச் சென்றான். அவன் உண்ணா நோன்பு இருந்து, தனது மனித உடலைவிட்டுத் தனது மனைவிகளுடன் தேவலோகத்திற்கு உயர்ந்தான்."(57)

[1] வீரணனுடைய மகள் என்பதால் வீரணி
[2] அந்த ஐம்பது பெண்களையும் புத்ரிகைகளாக நிச்சயஞ்செய்து கொண்டான்.

[3] சந்திரனுக்கும், பிரஹஸ்பதி எனப்படும் தேவகுருவின் மனைவியான தாராவிற்கும் பிறந்தவர் புதன். மனு, புத்திரனுக்காக மித்ரா வருணயாகம் செய்ய அதில் ஏற்பட்ட பிழையின் காரணமாக இளை பெண்ணாகப் பிறந்தாள். அதன் பின்னரே ஒன்பது மகன்கள் பிறந்தனர். அவள் புதனை மணந்து புரூரவஸைப் பெற்றாள். பின்னர் யக்ஞ புருஷனைக் குறித்து யாகஞ்செய்து, அந்த யாகத்தில் தோன்றிய ஸ்ரீயக்ஞபதியினுடைய அனுக்கிரகத்தினால் இளையானவள் மீண்டும் ஆண் பிள்ளையாகி சுத்தியும்னன் என்ற பெயரைப் பெற்றான். இதனாலேயே இளாவே புரூரவஸூக்கு தாயும் தந்தையுமாக கருதப்பட்டான்(ள்). இளாவுக்கு அதன் பின் உத்கலன், கயன், விதானன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுத்தியும்னனோ, முன்பு பெண்ணாக இருந்ததனாலே ஆட்சியுரிமை பெறவில்லை. ஆயினும் வசிஷ்ட மாமுனிவரின் சொற்படி, அவனது தந்தை பிரதிஷ்டானம் என்ற நகரத்தைப் புரூரவனுக்குக் கொடுத்தான். பிரதிஷ்டானம் என்ற இந்த இடம் இன்று உத்திரப்ரதேச மாநிலம், பிராயக்ராஜ் {அலாகாபாத்} அருகில் உள்ள Jhusi ஆகும். https://en.wikipedia.org/wiki/Jhusi சில ஆய்வாளர்கள் புரூரவஸ் இருந்தது பாரசீகம் (பெர்ஷியா) என்றும் சொல்கிறார்கள்.
மன்னன் நகுஷன், பித்ருக்களையும், தேவர்கள், முனிவர்கள், பிராமணர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், ராட்சசர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களையும் சமமாகப் பாவித்துத் தாங்கினான்.(27) கள்வர்க்கூட்டங்களைத் தன் பலம் வாய்ந்த கரங்களால் ஒடுக்கினான். முனிவர்கள் தனக்குக் கப்பம் கட்டும்படியும், அவர்கள் சுமை சுமக்கும் விலங்குகளாகத் தன்னை அவர்களின் முதுகில் சுமக்கும்படியும் செய்தான்.(28) தனது அழகால், அறத்தால், வீரத்தால், சக்தியால் தேவர்களையும் வெற்றிக் கொண்டு, இந்திரனைப் போல் ஆட்சி செய்தான்.(29) நகுஷன் இனிமையான பேச்சுக் கொண்ட ஆறு மகன்களைப் பெற்றான். அவர்கள் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, மற்றும் துருவன்[4] ஆகியோராவர்.(30)
[4] கங்குலியில் ஐவர்தான் சொல்லப்பட்டுள்ளனர். மன்மதநாததத்தரின் பதிப்பில், "யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, அயதி மற்றும் துருவன் ஆகிய ஆறுபேர் குறிப்பிடப்படுகின்றனர். கும்பகோணம் பதிப்பிலும் அவ்வாறே ஆறு பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிபேக்திப்ராயின் பதிப்பில், அவர்களது பெயர்களில் சில மாறுபடுகின்றன. "யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, பஞ்சன் மற்றும் உத்தவன்" ஆகியோரே அந்த அறுவர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூலத்தில் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, பாஞ்சம், உத்தவன் என ஆறு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. பாஞ்சம் என்பதை ஐந்தாவதாக என்று கங்கூலி மொழிபெயர்த்திருக்கக் கூடும். விஷ்ணுபுராணம், பாகவதம், பிரம்மபுராணம் போன்ற புராணங்களில் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்ற ஆறுபேர் சொல்லப்படுகிறார்கள்.
யதி, துறவை மேற்கொண்டு முனிவராகிப் பிரம்மனுக்குச் சமமாக உயர்ந்தான். யயாதி பெரும் வீரமும், அறமும் கொண்ட ஏகாதிபதி ஆனான்.(31) அவன் இந்த முழு உலகத்தையும் ஆண்டான். பல வேள்விகளைச் செய்தான். பித்ருக்களை மிகுந்த மரியாதையுடன் வழிபட்டான். அவன் எப்போதும் தேவர்களை மதித்தான்.(32) அவன் முழு உலகத்தையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்து, எதிரிகளால் அழிக்கப்பட முடியாதவனாக இருந்தான். யயாதியின் மகன்கள் அனைவரும் பெரும் வில்லாளிகளாக இருந்தனர். அவர்கள் அனைத்து அறங்களும் கொண்டு பிரகாசிப்பவர்களாகவும் இருந்தனர்.(33) ஓ மன்னா, (அவனது {யயாதியின்} இரு மனைவியரான) தேவயானி மற்றும் சர்மிஷ்டைக்குப் பிறந்தனர். தேவயானிக்கு யதுவும், துர்வசுவும் பிறந்தனர்.(34) சர்மிஷ்டைக்குத் திருஹ்யு, அநு மற்றும் பூரு ஆகியோர் பிறந்தனர். ஓ மன்னா, தனது குடிகளை அறம்சார்ந்து பல காலம் ஆண்ட யயாதி,(35) முதுமை தனது அழகை அழிப்பதைக்கண்டு கலங்கினான்.
ஓ பாரதா! {ஜனமேஜயா}, முதுமையால் தாக்குண்ட அந்த ஏகாதிபதி {யயாதி}, தனது மகன்களான யது, துர்வசு, திருஹ்யு, அநு, மற்றும் பூருவிடம் இப்படிப் பேசினான்,(36) "நீங்கள் எனது அன்புக்குரிய மகன்களாக இருக்கிறீர்கள். இளம்பெண்களிடம் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, நான் இளம் மனிதனாக இருக்க விரும்புகிறேன். எனக்கு நீங்கள் உதவுவீர்களா?" என்று கேட்டான்.
அதற்குத் தேவயானிக்குப் பிறந்த மூத்த மகன்,(37,38) "ஓ மன்னா, உமக்கு என்ன வேண்டும்? நீர் உமது இளமையைப் பெறக் கேட்கிறீரா?" என்று கேட்டான். யயாதி, "ஓ மகன்களே, எனது முதுமையை ஏற்பீராக.(39) உங்கள் இளமையைக் கொண்டு நான் இன்பமாக இருப்பேன். பெரும் வேள்வியின் போது, முனிவர் உசானஸால் (சுக்ரன்) நான் சபிக்கப்பட்டேன். ஓ மகன்களே, உங்கள் இளமையைக் கொண்டு நான் இன்பமாக இருப்பேன்.(40) உங்களில் யாராவது ஒருவன் எனது முதுமையை ஏற்றுக் கொண்டு, எனது உடலால் இந்த நாட்டை ஆண்டுக் கொள்ளுங்கள். உங்கள் இளமையால் புத்துயிர் ஊட்டப்பட்டு, நான் இன்பமாக இருப்பேன். எனவே எனது மகன்களே, எனது முதுமையை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.(41)
ஆனால் எந்த மகனும் அவனின் {யயாதியின்} முதுமையை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை. பிறகு, அவனது இளைய மகன் பூரு அவனிடம் {யயாதியிடம்} வந்து,(42) "ஓ மன்னா, நீர் மீட்டெடுக்கப்பட்ட இளமையுடனும், புத்துயிர் ஊட்டப்பட்ட உடலுடனும் மறுபடியும் இன்பமாக இருப்பீராக. நான் உமது முதுமையை ஏற்றுக் கொள்கிறேன். உமது உத்தரவின் பேரில் இந்த நாட்டை ஆள்கிறேன்" என்றான்.(43) இப்படிச் சொல்லப்பட்ட அந்த அரச முனி {யயாதி}, தனது அறத்தன்மை கொண்ட ஆன்ம பலத்தால், முதுமையைத் தனது உயர் ஆன்ம மகனுக்கும் {பூருவுக்கும்}, பூருவின் இளமையைத் தனக்கும் மாற்றிக் கொண்டு இளமையை அடைந்தான்.(44) அந்த ஏகாதிபதியின் {யயாதியின்} வயோதிகத்தை ஏற்றுக் கொண்ட பூரு, நாட்டை ஆண்டான்.(45)
அதன்பிறகு, ஆயிரம் வருடங்கள் கடந்தும், மன்னர்களில் புலியான அந்த யயாதி, ஒரு புலியைப் போன்ற பலத்துடனும், வலுவுடனும் இருந்தான்.(46) அவன் தனது இரு மனைவியரிடமும் {தேவயானி, சர்மிஷ்டையிடம்} இன்பமாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். மேலும், சித்ரரதனின் (கந்தர்வ மன்னன்) நந்தவனத்தில் அப்சரஸ் விஸ்வாசியுடனும் இன்பமாக இருந்தான்.(47) இப்படியெல்லாம் இன்பமாக இருந்தும்கூட, அந்தப் பெரும் மன்னன் மனநிறைவு அடையவில்லை. பிறகு அந்த மன்னன் {யயாதி} புராணங்களில் அடங்கிய பின்வரும் உண்மைகளை நினைவுகூர்ந்தான்.(48) {அந்த யயாதி} "உண்மையாக, ஒருவனது ஆசைகள் இன்பங்களால் நிறைவடையாது. மாறாக, நெருப்பில் வேள்வி நெய்யை விட்டால் எரிவது போல, அது சுடர்விட்டு எரியவே செய்யும்.(49) ஒருவன், இந்த முழு உலகத்தில் உள்ள செல்வங்கள், வைரம், தங்கம், மிருகங்கள், பெண்கள் என அனைத்தையும் அனுபவித்து இன்பமாக இருந்தாலும், அவனால் மனநிறைவை அடைய முடியாது.(50) ஒரு மனிதன், எந்த உயிர்வாழும் பொருளுக்கும், எண்ணத்தாலும், செயலாலும், பேச்சாலும் எந்தப் பாவமும் செய்யாமல் இருந்தால், அவன் பிரம்மனைப் போன்று தூய்மையானவனாக இருப்பான்.(51) எப்போது ஒருவன் எதற்கும் பயப்படாதவனாக இருக்கிறானோ, எப்போது எதற்கும் பயத்தை ஏற்படுத்தாமல் இருக்கிறானோ, எப்போது எதற்கும் ஆசைப்படாமல் இருக்கிறானோ, எப்போது எதற்கும் எந்தத் தீங்கையும் செய்யாமல் இருக்கிறானோ அப்போதே அவன் பிரம்மனைப் போன்ற தூய நிலையை அடைய முடியும்" {என்று புராணங்களில் உரைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை நினைத்துப் பார்த்தான்}.(52)
பெரும்ஞானியான அந்த ஏகாதிபதி {யயாதி}, இவற்றை எண்ணிப் பார்த்து ஒருவனது ஆசைகளால் என்றும் மனநிறைவு கொள்ள முடியாது என்பதில் மனநிறைவு கொண்டு, தனது மனத்தை தியானத்தின் பக்கம் திருப்பினான். தனது மகனிடம் சென்று, அவனுக்கு உரிய முதுமையை ஏற்றுக் கொண்டான்.(53) அவன், தனது ஆசைகளில் மனநிறைவுகொள்ளாத நிலையில் இருந்தாலும், இளமையைத் தன் மகனுக்குத் திருப்பிக் கொடுத்து, அவனை (பூருவை) அரியணையில் அமர்த்தி, அவனிடம்,(54) "நீயே எனது உண்மையான வாரிசு, எனது குலத்தைத் தொடர வைக்கப் போகும் நீயே எனது உண்மையான மகன். இந்த உலகத்தில் எனது குலம் உனது பெயரால் அறியப்படட்டும்" என்றான் {யயாதி}.(55)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு அந்த மன்னர்களில் புலி{யயாதி}, தனது மகன் பூருவை அரியணையில் அமர்த்தி, தன்னை தவத்துறவுகளுக்கு அர்ப்பணித்து, பிருகு {பிருகுதுங்கம்} என்ற மலைக்குச் சென்றுவிட்டான்.(56) பெரும் தவத் தகுதிகளை அடைந்து, பல வருடங்களுக்குப் பிறகு காலத்தால் கட்டுப்படுத்த முடியாத இடத்திற்குச் சென்றான். அவன் உண்ணா நோன்பு இருந்து, தனது மனித உடலைவிட்டுத் தனது மனைவிகளுடன் தேவலோகத்திற்கு உயர்ந்தான்."(57)
ஆங்கிலத்தில் | In English |