Be an eunuch cursed Urvasi! | Vana Parva - Section 46b | Mahabharata In Tamil
(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)
சித்திரசேனன் சொல்கேட்டு அர்ஜுனனிடம் சென்று தனது விருப்பத்தை ஊர்வசி உரைத்தல்; கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்ட அர்ஜுனன் ஊர்வசியைத் தாயாகக் கருதுவதாக பதிலுரைத்தல்; அப்சரஸ்களின் நிலையை ஊர்வசி எடுத்துச் சொல்லல்; அர்ஜுனன் மீண்டும் மறுத்தல்; ஊர்வசி அர்ஜுனனைச் சபித்தல்; இக்காரியங்களை அறிந்த இந்திரன் அர்ஜுனனுக்குச் சமாதானம் சொல்லல்....
வைசம்பாயனர் சொன்னார் "ஓ மனிதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அழகான கண்களைக் கொண்ட ஊர்வசி, அர்ஜுனனுடைய மாளிகை வாயிலை அடைந்து, வாயில்காப்போனிடம் சில வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினாள். (உத்தரவு கிடைத்ததும்), அவள் {ஊர்வசி} விரைவாக அந்த பிரகாசமான, அழகான அரண்மனைக்குள் நுழைந்தாள். ஆனால், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவளைத் தனது மாளிகையில் இரவு நேரத்தில் பார்த்த அர்ஜுனன், இதயத்தில் பயத்தால் பீடிக்கப்பட்டு, அவளை உரிய மரியாதையுடன் அழைக்க வெளியே வந்தான். விரைவில் அவளைக் கண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, அடக்கத்தால் {Modesty} தனது கண்களை மூடிக்கொண்டான். அவளை {ஊர்வசியை} வணங்கிய அவன் {அர்ஜுனன்}, தன்னை விட உயர்ந்த ஒருவரிடம் {குருவைப் போன்ற மூத்தவருக்கு} செய்யும் வழிபாட்டை அந்த அப்சரஸுக்குச் {ஊர்வசிக்குச்} செய்தான். பிறகு, அர்ஜுனன், "ஓ அப்சரஸ்களில் முதன்மையானவளே, நான் எனது சிரம் தாழ்த்தி உன்னை வணங்குகிறேன். ஓ மங்கையே, உன் கட்டளைகளை நீ எனக்குத் தெரியப்படுத்து. நான் உனது பணியாள் {அடிமை} போல உனக்குக் காத்திருப்பேன்" என்றான் {அர்ஜுனன்}
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பல்குனனின் {அர்ஜுனனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட ஊர்வசி, தனது உணர்ச்சிகளை இழந்தாள். விரைவில் அவள் {ஊர்வசி}, அர்ஜுனனிடம், கந்தர்வனான சித்திரசேனனுக்கும் தனக்கும் நடைபெற்ற உரையாடலை எடுத்துரைத்தாள். மேலும் அவள் {ஊர்வசி}, "ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, சித்திரசேனனுக்கும் எனக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலையும், நான் ஏன் இங்கு வந்தேன் என்பதையும் சொல்கிறேன். நீர் இங்கு வந்ததும், ஓ அர்ஜுனரே, மகேந்திரன் {இந்திரன்} ஒரு பெரிய அழகான சபையைக் கட்டினார். அதில் தேவலோக விழாக்கள் அனைத்தும் நடைபெறும். ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, அந்த சபைக்கு, ருத்திரர்களும், ஆதித்தியர்களும், அசுவினிகளும் வசுக்களும் வந்தனர். அங்கே பல பெரும் முனிவர்களும், அரசமுனிகளும், சித்தர்களும், சாரணர்களும், யக்ஷர்களும், பெரும் நாகர்களும் கூட வந்தனர். ஓ அகன்ற கண்கள் உடையவரே {அர்ஜுனரே}, சூரியனையும் சந்திரனையும் போன்ற பிரகாசமிக்க அந்தச் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தகுதிக்கேற்றபடியும், மரியாதைக்கேற்றபடியும், வீரத்திற்கு ஏற்றாற்படியும் ஆசனங்களில் அமர்ந்தனர். ஓ சக்ரனின் மகனே {அர்ஜுனரே}, கந்தர்வர்கள் வீணை மீட்டி தெய்வீக இசையுடன் கூடிய அழகான பாடல்களைப் பாடினர். ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே {அர்ஜுனரே}, முக்கியமான தேவதைகள் {அப்சரஸ்கள்} அனைவரும் அங்கே நடனமாடினர்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பல்குனனின் {அர்ஜுனனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட ஊர்வசி, தனது உணர்ச்சிகளை இழந்தாள். விரைவில் அவள் {ஊர்வசி}, அர்ஜுனனிடம், கந்தர்வனான சித்திரசேனனுக்கும் தனக்கும் நடைபெற்ற உரையாடலை எடுத்துரைத்தாள். மேலும் அவள் {ஊர்வசி}, "ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, சித்திரசேனனுக்கும் எனக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலையும், நான் ஏன் இங்கு வந்தேன் என்பதையும் சொல்கிறேன். நீர் இங்கு வந்ததும், ஓ அர்ஜுனரே, மகேந்திரன் {இந்திரன்} ஒரு பெரிய அழகான சபையைக் கட்டினார். அதில் தேவலோக விழாக்கள் அனைத்தும் நடைபெறும். ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, அந்த சபைக்கு, ருத்திரர்களும், ஆதித்தியர்களும், அசுவினிகளும் வசுக்களும் வந்தனர். அங்கே பல பெரும் முனிவர்களும், அரசமுனிகளும், சித்தர்களும், சாரணர்களும், யக்ஷர்களும், பெரும் நாகர்களும் கூட வந்தனர். ஓ அகன்ற கண்கள் உடையவரே {அர்ஜுனரே}, சூரியனையும் சந்திரனையும் போன்ற பிரகாசமிக்க அந்தச் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தகுதிக்கேற்றபடியும், மரியாதைக்கேற்றபடியும், வீரத்திற்கு ஏற்றாற்படியும் ஆசனங்களில் அமர்ந்தனர். ஓ சக்ரனின் மகனே {அர்ஜுனரே}, கந்தர்வர்கள் வீணை மீட்டி தெய்வீக இசையுடன் கூடிய அழகான பாடல்களைப் பாடினர். ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே {அர்ஜுனரே}, முக்கியமான தேவதைகள் {அப்சரஸ்கள்} அனைவரும் அங்கே நடனமாடினர்.
பிறகுதான், ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனரே}, நீர் உமது நிலைத்த பார்வையை என் மேல் செலுத்தினீர். தேவர்களின் சபை முடிந்ததும், உமது தந்தையால் கட்டளையிடப்பட்ட தேவர்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். முக்கியமான தேவதைகளும் {அப்சரஸ்களும்} தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். மற்றவர்களும் கூட, ஓ எதிரிகளைக் கொல்பவரே {அர்ஜுனரே}, உமது தந்தையின் {இந்திரனின்} கட்டளைக்கிணங்கி அவரிடம் விடைபெற்று சென்றனர். அதன்பிறகுதான், சக்ரனால் {இந்திரனால்} அனுப்பப்பட்ட சித்திரசேனன் எனது வசிப்பிடத்திற்கு வந்தார். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவரே, அவர் {சித்திரசேனன்}, என்னிடம், "ஓ அழகான நிறம் கொண்டவளே, நான் தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} அனுப்பப்பட்டேன். மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, எனக்கும், உனக்கும் ஏற்புடைய வகையில் ஒரு காரியத்தைச் செய். ஓ அழகான இடை கொண்டவளே, போர்க்களத்தில் சக்ரனைப் {இந்திரனைப்} போன்ற வீரனும், எப்போதும் பெருந்தன்மை கொண்டவனுமான அர்ஜுனனைத் திருப்தி செய்ய முயற்சி செய்" என்றார். இவையே அவர் சொன்ன வார்த்தைகளாகும். இப்படியே, ஓ பாவங்களற்றவரே {அர்ஜுனரே}, அவராலும் {சித்திரசேனராலும்}, உமது தந்தையாலும் கட்டளையிடப்பட்டு, ஓ எதிரிகளைக் கொல்பவரே {அர்ஜுனரே}, உமக்காகக் காத்திருப்பதற்காக, நான் உம்மிடம் வந்திருக்கிறேன். உமது நற்குணங்கள் எனது இதயத்தைக் கவர்ந்தன. அதனால் நான் ஏற்கனவே காம தேவனின் ஆளுகைக்குள் விழுந்துவிட்டேன். ஓ வீரரே, நான் அதை எப்போதும் பேணிக் காப்பேன். அது எனது விருப்பமும் கூட" என்றாள் {ஊர்வசி}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இச்சூழலில் சொர்க்கத்திலிருந்தபோது, அர்ஜுனன் அவளது {ஊர்வசியின்} அழுத்தமான பேச்சால் நாணமுற்றான். தனது காதுகளைத் தனது கைகளால் மூடிக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, "ஓ அருளப்பட்ட மங்கையே {ஊர்வசியே}, நீ என்னிடம் இப்படிப் பேசுகிறாயே! எனது கேட்கும் உணர்வுக்கு ஐயோ. ஓ அழகிய முகம் கொண்டவளே, எனது மதிப்பீட்டின் படி நீ என்னைவிட உயர்ந்தவரின் மனைவிக்குச் {wife of a superior} சமமானவளாவாய். நீ எனக்கு நற்பேறுபெற்ற குந்தியை {தாயைப்} போன்றவளும், இங்கிருக்கும் இந்திரனின் ராணியான சச்சியைப் போன்றவளுமாவாய். இதுவே எனது விருப்பம். நான் அதை எப்போதும் பேணிக் காப்பேன். ஓ மங்களமானவளே, இதில் சந்தேகமே கிடையாது. ஓ அருளப்பட்டவளே, நான் உன்னை நிலைத்த பார்வையுடன் பார்த்தது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் இருக்கிறது. ஓ ஒளிரும் புன்னகையுடையவளே, நான் அதை உனக்கு உண்மையாகச் சொல்வேன். "பளபளக்கும் மங்கையான இவள் கௌரவ குலத்தின் தாயாக இருப்பாள்" என்று மனதினில் நினைத்தே, மகிழ்ச்சியுடன் கண்களை அகல விரித்து உன்னை நிலைத்த பார்வை கொண்டு பார்த்தேன். ஓ அருளப்பட்ட தேவதையே {அப்சரஸே}, நீ எனது குலத்தின் தாயாக இருந்து, என்னைவிட மேன்மையானவர்களுக்கும் மேன்மையானவளாக இருப்பதால், நீ என்னைக் கருதி மற்ற உணர்வுகளை வளர்ப்பது தகாது" என்றான் {அர்ஜுனன்}.
அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட ஊர்வசி, "தேவர்கள் தலைவனின் மகனே {அர்ஜுனரே}, அப்சரஸ்களான நாங்கள் சுதந்திரமானவர்கள், தேர்வு செய்வதில் கட்டுப்பாடில்லாதவர்கள். ஆகையால், நீர் என்னை உமக்கு மேன்மையானவளாக மதிப்பிடுவது தகாது. புரு குலத்தின் மகன்கள் பேரர்கள் ஆகிய அனைவரும், தங்கள் தவத் தகுதிகளின் தொடர்ச்சியாக இங்கே வந்து எங்களுடன் விளையாடுவார்கள். அதனால் அவர்கள் எந்தப் பாவமும் அடைவதில்லை. ஆகையால், ஓ வீரரே, உமது கண்டிப்பைக் குறைத்துக் கொள்ளும். என்னை வெளியே அனுப்புவது உமக்குத் தகாது. நான் ஆசையால் எரிந்து கொண்டிருக்கிறேன். நான் உமக்கு என்னை அர்ப்பணித்திருக்கிறேன். ஓ தகுந்த மரியாதை அளிப்பவரே {அர்ஜுனரே}, என்னை ஏற்றுக் கொள்ளும்" என்று பதிலுரைத்தாள் {ஊர்வசி}.
அர்ஜுனன், "ஓ சுத்தமானக் களங்கமற்ற குணம் கொண்ட அழகான மங்கையே {ஊர்வசியே}, கேள். நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன். நான்கு திசைகளும், அதற்கு குறுக்காக உள்ள திசைகளும் {எட்டு திக்குகளும்}, ஏன் தேவர்களும் கூட கேட்கட்டும். ஓ பாவமற்றவளே, எனக்கு குந்தி, மாத்ரி, சச்சி ஆகியோர் எப்படியோ, அதே போல நீயும் எனது குலத்தின் தாயே. எனது மரியாதைக்கு உரியவளே, நான் உனக்குத் தலைவணங்கி, உனது பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கேட்டுக் கொள்கிறேன். ஓ அழகான நிறம் கொண்டவளே, திரும்பிச் செல். நீ எனது சொந்தத் தாயைப் போல என்னால் வழிபடத்தகுந்தவள். நீ என்னை மகனைப் போலப் பாதுகாப்பதே உனக்குத் தகும்" என்று மறுமொழி கூறினான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பார்த்தனால் {அர்ஜுனனால்}, இப்படிச் சொல்லப்பட்ட ஊர்வசி, கோபத்தால் தனது உணர்வுகளை இழந்தாள். அவள் {ஊர்வசி}, கோபத்தால் நடுங்கி, தனது புருவங்களைச் சுருக்கி, அர்ஜுனனைப் பார்த்து, "ஒரு பெண், உமது தந்தையின் உத்தரவின் பேரிலும், அவளது சொந்த விருப்பத்தின் பேரிலும், உமது மாளிகைக்கு வந்திருக்கிறாள். காமனின் கணைகளால் துளைக்கப்பட்ட அந்தப் பெண்ணை நீர் அவமதித்து விட்டீர். ஆகையால், ஓ பார்த்தரே {அர்ஜுனரே}, நீர் உமது ஆண்மையை {ஆண் தன்மையை} இழந்து, இழிந்த அலியாகி, மகளிருக்கு மத்தியில் ஆடற்கலைஞராக உமது பொழுதைக் கழிப்பீர்" என்று சபித்தாள் {ஊர்வசி}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி அர்ஜுனனைச் சபித்த ஊர்வசியின் உதடுகள் அதன் பின்பும் நடுங்கியபடியே இருந்தன. அவள் {ஊர்வசி} நீண்ட மூச்சுகளை விட்டபடியே இருந்தாள். விரைவில் அவள் {ஊர்வசி} தனது சொந்த வசிப்பிடத்திற்குத் திரும்பினாள். எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன், நேரத்தைக் கடத்தாமல் சித்திரசேனனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனிடம், அன்றிரவு ஊர்வசிக்கும் தனக்கும் இடையில் நடந்த சம்பவங்களைச் சொன்னான். அவன் {அர்ஜுனன்} சித்திரசேனனிடம் நடந்தது அத்தனையும் சொல்லி, தனக்கு அவள் {ஊர்வசி} சாபமிட்டத்தையும் திரும்பத் திரும்பச் சொன்னான். சித்திரசேனன் இவை அனைத்தையும் சக்ரனிடம் {இந்திரனிடம்} சொன்னான். அந்த ஹரிவாஹனன் {இந்திரன்}, தனது மகனை {அர்ஜுனனைத்} தனிமையில் அழைத்து, இனிமையான வார்த்தைகளால் சமாதானம் கூறி, புன்னகையுடன், "ஓ உயிரினங்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, ஓ குழந்தாய், பிருதை {குந்தி} உன்னை அடைந்ததால், இன்று அவள் {குந்தி} உண்மையிலேயே அருளப்பட்ட தாயானாள். ஓ பலம் பொருந்திய கரம் கொண்டவனே {அர்ஜுனா}, நீ இப்போது, உனது பொறுமையாலும், சுயக்கட்டுப்பாட்டாலும் முனிவர்களையும் வீழ்த்திவிட்டாய். ஆனால், ஓ தகுந்த மரியாதை கொடுப்பவனே, ஊர்வசி உனக்கிட்ட சாபம் உனக்கு நன்மையையே பயக்கும். ஓ குழந்தாய், நீ நல்ல இடத்திலேயே நிற்பாய். ஓ பாவங்களற்றவனே {அர்ஜுனனே}, பூமியில் நீ {வனவாசத்தில்} பதிமூன்றாவது {13} வருடத்தை, எவரும் அறியாமல் கழிக்க வேண்டும் அல்லவா? அப்போதுதான் நீ ஊர்வசியின் இந்தச் சாபத்திற்கு ஆளாவாய். ஆண்மையின்றி ஆடற்கலைஞராக ஒரு வருடம் கழித்த பிறகு, நீ உனது சக்தியைத் திரும்ப அடைவாய்" என்றான் {இந்திரன்}.
சக்ரனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்த எதிரி வீரர்களைக் கொல்பவனான பல்குனன் {அர்ஜுனன்}, பெரும் மகிழ்ச்சியை அடைந்து, சாபத்தைக் குறித்து நினைப்பதை நிறுத்தினான். பிறகு, பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, கந்தர்வனான சித்திரசேனனுடன் சொர்க்கத்தின் பல பகுதிகளில் பெரும் கொண்டாட்டத்துடன் விளையாடினான்"
"பாண்டு மகனின் {அர்ஜுனனின்} இந்த வரலாற்றைக் கேட்கும் எந்த மனிதனின் ஆசைகளும் காமவிகார முடிவை நோக்கி ஓட முடியாது {ஆசையால் உண்டாகும் காம விகாரங்கள் முழுவதும் தொடராமல் முடிவடையும்} [The desires of the man that listeneth to this history of the son of Pandu never run after lustful ends]. தேவர்கள் தலைவனின் மகனான பல்குனனின் {அர்ஜுனனின்} இந்த சுத்தமான நடத்தையை பரிதாபத்துடன் கேட்கும் மனிதர்களில் முதன்மையானவர்கள், கர்வம், அகந்தை, கோபம் மற்றும் பிற குறைகளையெல்லாம் களைந்து, சொர்க்கத்தை அடைந்து, பேரின்பத்துடன் அங்கே விளையாடுவார்கள்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.