Samanthapanchaka declared as Thirtha! | Vana Parva - Section 83a | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மரிடம் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "ஓ மன்னா {பீஷ்மா}, அடுத்து ஒருவன், எதைப் பார்ப்பதாலேயே அனைத்துப் பாவங்களில் இருந்தும் அனைத்து உயிரினங்களும் விடுபடுமோ அந்த வணங்கப்படும் குருக்ஷேத்திரத்திற்குச் செல்ல வேண்டும். "நான் குருக்ஷேத்திரத்தில் வாழ்வேன்" என்று தொடர்ச்சியாகச் சொல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். காற்றால் அடித்துக் கொண்டுவரப்பட்ட குருக்ஷேத்திரத்தின் தூசி கூட ஒரு மனிதனை (அடுத்த பிறவியில்) அருள் வாழ்க்கை வாழ வைக்கும்.
சரஸ்வதிக்குத் {நதி} தெற்கிலும், திருஷத்வதிக்கு {நதி} வடக்கிலுமுள்ள குருக்ஷேத்திரத்தில் வசிக்கும் யாவரும் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள் என்றே சொல்லப்படுகிறது. ஓ வீரனே {பீஷ்மனே}, ஓ வீரர்களில் முதன்மையானவனே, ஒருவன் அங்கு ஒரு மாதத்திற்கு வசிக்க வேண்டும். ஓ பூமியின் தலைவா {பீஷ்மா}, அங்கே இருக்கும் பெரும் புனிதம் நிறைந்த பிரம்மக்ஷேத்திரத்திற்கு பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், யக்ஷர்களும், நாகர்களும், ஓ பாரதா {பீஷ்மா} அடிக்கடி வருவார்கள்.
சரஸ்வதிக்குத் {நதி} தெற்கிலும், திருஷத்வதிக்கு {நதி} வடக்கிலுமுள்ள குருக்ஷேத்திரத்தில் வசிக்கும் யாவரும் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள் என்றே சொல்லப்படுகிறது. ஓ வீரனே {பீஷ்மனே}, ஓ வீரர்களில் முதன்மையானவனே, ஒருவன் அங்கு ஒரு மாதத்திற்கு வசிக்க வேண்டும். ஓ பூமியின் தலைவா {பீஷ்மா}, அங்கே இருக்கும் பெரும் புனிதம் நிறைந்த பிரம்மக்ஷேத்திரத்திற்கு பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், யக்ஷர்களும், நாகர்களும், ஓ பாரதா {பீஷ்மா} அடிக்கடி வருவார்கள்.
ஓ வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மனே}, குருக்ஷேத்திரத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஒருவன் மனதால் நினைத்தாலும் அவனது பாவங்கள் அனைத்தும் அழிந்து, கடைசியாக அவன் பிரம்மனின் உலகத்தை அடைகிறான். ஓ குரு குலத்தின் மகனே, பக்தியுடைய மனதுடன் குருக்ஷேத்திரத்திற்குச் செல்பவன், ராஜசூய வேள்வி மற்றும் குதிரை வேள்விகளைச் செய்த பலனை அடைகிறான்.
பிறகு பெரும் பலசாலியும் (குபேரனின்) வாயில் காப்போனுமான யக்ஷன் மங்கநகனை {மந்துகனை_Yaksha called Mankanaka} வணங்குவதால், ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ அறம்சார்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் ஹரி எப்போதுமே இருக்கும் விஷ்ணுவின் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கே நீராடி பிறகு மூவுலகங்களின் படைப்பாளனான ஹரியை வணங்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்திற்குச் செல்கிறான்.
பிறகு பெரும் பலசாலியும் (குபேரனின்) வாயில் காப்போனுமான யக்ஷன் மங்கநகனை {மந்துகனை_Yaksha called Mankanaka} வணங்குவதால், ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ அறம்சார்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் ஹரி எப்போதுமே இருக்கும் விஷ்ணுவின் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கே நீராடி பிறகு மூவுலகங்களின் படைப்பாளனான ஹரியை வணங்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்திற்குச் செல்கிறான்.
ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு ஒருவன் மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் தீர்த்தமான பரிப்லவம் {Pariplava} என்ற தீர்த்தத்திற்குச் சென்று (அங்கு நீராடி), அக்னிஷ்டோமா மற்றும் அதிரத்ரா வேள்விகளைச் செய்வதைவிட அதிகமான பலனை அடையலாம். பிறகு, பிருத்வி தீர்த்ததை {Prithivi அடைந்து அங்கு ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடையலாம். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு பயணி சாலூகினி {Shalukini}சென்று, அங்கு தசாஸ்வமேதத்தில் நீராடி {Dasaswamedha} பத்து குதிரை வேள்விகளைச் செய்த பலன்களை அடையலாம். பிறகு நாகர்களின் அற்புதமான தீர்த்தமான சர்ப்பதேவி {Sarpadevi} என்ற தீர்த்தத்திற்குச் செல்லும் ஒருவன், அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனைப் பெற்று நாக உலகத்தை அடைவான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் வாயில் காப்போனான துவாரரக்ஷகனை {அருந்துகனை_Tarantuka} அடைய வேண்டும். பிறகு அங்கே ஒரு நாள் தங்குவதால், ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடையலாம். பிறகு புலன்களை அடக்கி, முறையான உணவு முறையுடன் பஞ்சநதத்தை {Panchananda} அடைந்து அங்கே கோடி {koti} என்ற தீர்த்தத்தில் நீராடி ஒரு குதிரை வேள்வியின் பலனை அடையலாம். பிறகு அசுவினி {Aswins} இரட்டையர்களின் தீர்த்தத்தை அடைவதால் ஒருவன் மேனி அழகைப் பெறலாம்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, எங்கும் நிறைந்த விஷ்ணு வராக வடிவத்துடன் இருந்த வராக தீர்த்தத்தை {Varaha} அடைய வேண்டும். ஓ மனிதர்களில் முதன்மையானவனே, அங்கே நீராடுவதால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், ஜெயந்தியில் உள்ள சோம தீர்த்தத்தை {tirtha called Sama in Jayanti} அடைந்து அங்கே நீராடுவதால் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு, {Ekahansa} ஏகஹம்சத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, கிருதசௌச்சத்தை {Kritasaucha}அடையும் ஒரு பயணி சுத்தமான ஆன்மாவுடன் தாமரைக் கண் தெய்வத்தை (விஷ்ணுவை) அடைகிறான். பிறகு ஒருவன், முஞ்சவடம் {Munjavata} என்ற சிறப்பு மிகுந்த ஸ்தாணுவின் இடத்தை அடைய வேண்டும். அங்கே ஒரு இரவு உணவருந்தாமல் தங்குபன், கணபத்தியம் {கணங்களின் தலைவன்} என்ற நிலையை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே யக்ஷிணி {tirtha called Yakshini} என்ற கொண்டாடப்படும் தீர்த்தமொன்று இருக்கிறது. அந்தத் தீர்த்தத்திற்குச் சென்று, அங்கே நீராடுபவன், தனது விருப்பங்கள் அனைத்தும் கனியும் வரத்தைப் பெறுகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தமே குருக்ஷேத்திரத்தின் வாயிலாகக் கருதப்படுகிறது. பிறகு ஆன்மாவை ஒருமுகமாக்கிக் கொண்ட பயணி அதை வலம் வர வேண்டும். புஷ்கரங்களுக்கு இணையான அது, ஜமதக்னியின் மகனான உயர் ஆன்ம ராமனால் {பரசுராமனால்} உருவாக்கப்பட்டது. அங்கே நீராடி, பித்ருக்களையும், தேவர்களையும் வணங்கும் ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து அனைத்திலும் வெற்றிவாகை சூடுபவனாகிறான்.
பிறகு ஒரு பயணி ஒருமுகமான ஆன்மாவுடன் ராமஹ்ரதம் {Rama-hrada}என்ற இடத்தை அடைய வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே பெரும் சக்தி படைத்த ராமன் {பரசுராமன்} தனது பலத்தால் க்ஷத்திரியர்களை அழித்து, ஐந்து தடாகங்களை {சமந்தபஞ்சகம் என்று முன்பே பார்த்திருக்கிறோம்} ஏற்படுத்தி, ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, தன்னால் பலியானவர்களின் இரத்தத்தால் அவற்றை நிரப்பினான் என்று நாம் கேள்விப் படுகிறோம். அந்தத் தடாகங்களை க்ஷத்திரியர்களின் குருதியால் நிரப்பிய ராமன், தனது தந்தைக்கும், பாட்டன்களுக்கும் நீர்க்கடனைச் செலுத்தினான். இதனால் (நீர்க்கடனால்) திருப்தியடைந்த அந்த முனிவர்கள் ராமனிடம் {பரசுராமனிடம்}, "ஓ ராமா, ஓ ராமா, ஓ பெரும் நற்பேறு பெற்றவனே, நாங்கள் உன்னிடம் திருப்தியடைந்தோம். ஓ பிருகு குலத்தவனே, பித்ருக்கள் மீதான உனது மரியாதைக்கும், உனது வீரத்திற்கும், ஓ மேன்மையானவனே, நீ அருளப்பட்டிரு. நீ விரும்பும் வரத்தைக் கேள். ஓ பெரும் பிரகாசம் கொண்டவனே, நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டனர்.
இப்படி (அவர்களால்) கேட்கப்பட்ட அடிப்பவர்களில் முதன்மையான ராமன், கரங்களைக் கூப்பியபடி அந்தரத்தில் நின்றுகொண்டிருந்த அப்பித்ருக்களிடம், "நீங்கள் என்னிடம் திருப்தியடைந்திருந்தால், நான் உங்கள் அருளுக்குத் தகுதிபடைத்தவனென்றால், ஓ பித்ருக்களே, எனக்கு மீண்டும் தவச்சடங்குகளில் மகிழ்ச்சி உண்டாக வேண்டும் என்று கோருகிறேன். மேலும், கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்த பாவம் அனைத்திலும் இருந்து உங்கள் சக்தியால் நான் விடுபட வேண்டும். எனது இந்தத் தடாகங்களும் உலகத்தோரால் தீர்த்தங்களெனக் கொண்டாடப்படட்டும்" என்று கேட்டான். ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பித்ருக்கள் பெரும் திருப்தியும், மகிழ்ச்சியும் கொண்டு அவனிடம், "பித்ருக்களுக்கான உனது மரியாதையால் உனது தவம் பெருகட்டும். நீ உனது கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்துவிட்டாய். அவர்கள் தங்கள் தீச்செயல்களால் அழிந்ததால், நீ ஏற்கனவே அந்தப் பாவத்தில் இருந்து விடுபட்டுவிட்டாய். இந்த உனது தடாகங்கள் சந்தேகமற தீர்த்தங்களாகவே ஆகும். இந்தத் தீர்த்தங்களில் நீராடும் ஒருவன், பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்தினால், பித்ருக்கள் திருப்தியடைந்து, இவ்வுலகத்தில் சாதிக்கக் கடினமான அவனது விருப்பங்கள் நிறைவேறும் வரத்தை அவனுக்கு அளிப்பார்கள்" என்றனர்.
ஓ மன்னா {பீஷ்மா}, இந்த வரங்களை அருளிய பித்ருக்கள் பிருகு குல ராமனை {பரசுராமனை} மகிழ்ச்சியுடன் வணங்கி அங்கேயே மறைந்து போனார்கள். இப்படியே பிருகு குலத்தின் சிறப்புவாய்ந்த ராமனால் உண்டாக்கப்பட்ட அத்தடாகங்கள் புனிதமாகின. ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வுமுறை மேற்கொண்டு, புனிதமான நோன்புகள் நோற்று ராமனின் தடாகங்களில் நீராட வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே நீராடி ராமனை {பரசுராமனை} வழிபடுவதால், ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.