ஆதிபர்வம் பகுதி 6 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: துயரத்தால் தடுமாறிப் போயிருந்த அந்த அழகிய புலோமா, பிருகு மைந்தனான தனது குழந்தை சியவனனை எடுத்துக் கொண்டு நடந்துசென்றாள். தனது மைந்தனின் களங்கமற்ற மனைவி அழுதுகொண்டிருப்பதைப் பெருந்தகப்பன் பிரம்மா கண்டான். அவளது {புலோமாவின்} கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் ஒரு பெரிய நதியை உருவாக்கியது. அந்த ஆறு பெரும் துறவியான பிருகுவின் மனைவியின் பாதங்களில் உருண்டோடியது. எல்லா உலகங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} தனது மகனின் {பிருகுவின்} மனைவியால் {புலோமாவால்} உற்பத்தியான அந்த ஆற்றைக் கண்டு, அதற்கு வதூசரை என்று பெயர் வைத்தான் {பிரம்மன்}. அது சியவனனின் ஆசிரமத்தைக் கடந்து சென்றது. இந்த விதத்தில்தான் பிருகுவின் மைந்தனான பெரும் ஆன்ம சக்தியுள்ள சியவனன் பிறந்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section6.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதிபர்வம் பகுதி 7 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: நான் என்னைப் பெருக்கிக் கொண்டு, பல உருவங்களில் இருக்கிறேன். வருடக் கணக்காக நடைபெறும் வேள்விகளில் இருக்கிறேன். புனித சடங்குகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இருக்கிறேன். வேத மந்திரங்களுடன் எனதுச் சுடர்களின் மேல் இடப்படும் நெய்யை தேவர்களும், பித்ருக்களும் பெற்று சாந்தம் அடைகின்றனர். தேவர்களும், பித்ருக்களும் நீர் ஆவர். வேள்விகளில் அளிக்கப்படுவனவற்றில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் சம பங்கு உரிமை உள்ளது. ஆகையால் தேவர்களும், பித்ருக்களும் வேறுவேறாகார். அவர்களைச் சேர்த்து வைத்தும், பிரித்தும் சந்திரனின் மாறுதல்களுக்கு ஏற்ப வழிபடப்படுகிறார்கள். அந்த தேவர்களும் பித்ருக்களும் என் மீது ஊற்றப்படுவதையே உண்கின்றனர். அதனால், என்னை தேவர்களின் வாய் என்று சொல்வர். முதல்மதியில் (அமாவாசையில்) பித்ருக்களும், முழுமதியில் (பௌர்ணமியில்) தேவர்களும், சுத்திகரிக்கப்பட்ட நெய்யை, எனது வாய்மூலமாகத்தான் உண்கிறார்கள். அவர்களின் வாயாக இருப்பதால், எப்படி எல்லாவற்றையும் (சுத்தமானதும், சுத்தமில்லாததும்) என்னால் சாப்பிட முடியும்?" என்றான் {அக்னி} - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section7.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதிபர்வம் பகுதி 8 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: முன்பொரு காலத்தில் தவச்சக்தியும், கல்வியும், எல்லா உயிரிடமும் அன்பு செலுத்தும் குணமும் கொண்ட ஸ்தூலகேசா என்ற ஒரு முனி இருந்தார். ஓ அந்தண முனிவரே {சௌனகரே}, அந்த நேரத்தில், கந்தர்வர்களின் மன்னன் விஸ்வாவசு, தேவலோக மங்கை மேனகையுடன் நெருக்கமாக இருந்தான். ஓ பிருகுவின் வழித்தோன்றலே, அந்த அப்சர மேனகை, அவளது நேரம் நெருங்கியதும், ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கருகே ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள். அந்தப் புதிதாகப் பிறந்த குழந்தையை அவள் ஆற்றங்கரையிலேயே விட்டுவிட்டாள். ஓ அந்தணரே {சௌனகரே}, மேனகை என்ற அந்த அப்சரஸ் பாசத்தையும் அவமானத்தையும் துறந்து அங்கிருந்து சென்றுவிட்டாள். அந்த அந்தண முனி ஸ்தூலகேசர் அந்தக் குழந்தையைக் கண்டார். அது ஒரு பெண்குழந்தை என்பதைக் கண்டார். அதன் அழகையும், காந்தியையும் கண்டு அதன் மீது பரிவு ஏற்பட்டு, அந்தக் குழந்தையை எடுத்துச் சென்றார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section8.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதிபர்வம் பகுதி 9 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: "தனது துணையை இழந்த ருரு இப்படி கதறிக்கொண்டிருக்கையில், தேவலோகத் தூதுவன் {a messenger from heaven} ஒருவன், அந்தக் கானகத்துக்கு வந்து, அவனிடம் {ருருவிடம்}, "ஓ ருருவே, உனது துயர் மேலீட்டால் நீ இப்போது உச்சரித்தாயே வார்த்தைகள், அவை பயனற்றவை. ஓ நல்லவனே, இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு நாட்கள் முடிந்தால், அவர்கள் திரும்பி வருவதில்லை. கந்தர்வருக்கும், அப்சரசுக்கும் பிறந்த இந்த அப்பாவிக் குழந்தையின் நாட்கள் முடிந்துவிட்டன. அதனால் மகனே, நீ உனது இதயத்தைத் துயருக்குப் பறிகொடுக்காதே. இருந்தாலும், ஒப்பற்ற தேவர்கள் முன்பே அவளது உயிரின் மீட்பைப் பற்றி சொல்லி வைத்துள்ளனர். நீ அதன்படி நடந்தால் பிரம்மத்வாரா கிடைக்க வாய்ப்பிருக்கிறது," என்றான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section9.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதிபர்வம் பகுதி 10 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: அதற்கு துந்துபா, "ஓ அந்தணா, மனிதர்களைக் கடிக்கும் பாம்பினம் வேறு வகை. பெயரளவிலேயே பாம்புகளாக இருக்கும் துந்துபாக்களை {நீர்பாம்புகளை} நீ கொல்லுதல் கூடாது. மற்ற பாம்பு வகைகளிலும் கடிக்கும் வகையுள்ளன. அவற்றின் நற்பேறுகள் எங்களுக்கு {நீர் பாம்புகளுக்கு} கிடைப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு நேரும் கெடுதிகள் அனைத்தும் எங்களுக்கும் {நீர் பாம்புகளுக்கு} நேருகின்றன. அவர்களின் துயரம் எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சி எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆகையால் இதையறியாமல் துந்துபாக்களைக் {நீர் பாம்புகளைக்} கொன்றுவிடாதே," என்றது. - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section10.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதிபர்வம் பகுதி 11 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: துந்துபா வகை பாம்பு {சஹஸ்ரபத்} ருருவிடம், "முன்பு ஒரு காலத்தில், எனக்கு காகமா என்ற நண்பன் இருந்தான். அவன் பேச்சில் வல்லவனாக, கடுந்தவங்களின் பயனால் ஆன்மிக சக்தியுடன் இருந்தான். ஒருநாள் அவன் {காகமா} நெருப்பு வேள்வி (அக்னி ஹோத்ரம்) செய்து கொண்டிருக்கும்போது, புற்களால் பாம்பு போன்ற தோற்றத்தைச் செய்து, அதைக்காட்டி அவனை {காகமாவை} பயமுறுத்தினேன். அவன் மயக்கமுற்று விழுந்தான். உண்மை பேசும், தனது உறுதிகளில் உறுதியாய் இருக்கும் துறவியான அவனுக்கு புலனுணர்வு மீண்டவுடன், கோபம் கொண்டு, "சக்தியில்லாத பொய்ப்பாம்பைக் காட்டி என்னை பயமுறுத்தியதால், நீ நஞ்சில்லாப் பாம்பாகப் போ" என்ற சபித்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section11.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதிபர்வம் பகுதி 12 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: மறைந்த முனிவரைத் {சஹஸ்ரபத்தைத்} தேடி ருரு ஓடினான். அந்தக் கானகத்தில் அவரைக் கண்டுபிடிக்கமுடியாமல், களைத்து, சோர்வடைந்து தரையில் விழுந்தான். முனிவர் {சஹஸ்ரபத்} சொன்னதை மனதில் நினைத்துப் பார்த்தான். மிகவும் குழம்பிப் போய் புலன் உணர்வை இழந்தான். உணர்வு மீண்டதும், ருரு தனது இல்லத்திற்கு வந்து, தனது தந்தையிடம் {பிரம்மாதியிடம்} இந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டான். அப்படிக் கேட்கப்பட்டதால், அந்த தந்தையும் {பிரம்மாதியும்} கதையைச் சொன்னார்." - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section12.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!