சபா பர்வம் பகுதி 10 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: மேலும், ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரா}, உமையின் சிறப்புவாய்ந்த கணவனும் , படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் தலைவனுமான திரிசூலத்தைத் தாங்கி பாகநேத்ரன் என்ற அசுரனைக் கொன்றவனும், கடுமையான வில்லைக் கொண்ட வலிமை மிக்க தெய்வமுமான முக்கண் மகாதேவன் {சிவன்}, குள்ளமான உருவம் கொண்டவையாக சிலவும், கடுமையான முகம் கொண்டவையாக சிலவும், கூன் முதுகு கொண்டவையாக சிலவும், சிவந்த கண்கள் கொண்டவையாக சிலவும், பயங்கர ஓலமிடும் சிலவும், கொழுப்பையும் சதையையும் {இறைச்சியையும்} உண்ணும் சிலவும், காண்பதற்கு பயங்கரமான சிலவும் என நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆவிகளால் சூழப்பட்டு, பலவகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, காற்றின் {வாயு} வேகம் கொண்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண் தெய்வத்துடன் {பார்வதியுடன்}, களைப்பறியாது, அங்கே தனது நண்பனான கருவூலத் தலைவன் குபேரனுக்காகக் காத்திருக்கிறான்.
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
சபா பர்வம் பகுதி 11 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த சபை விவரிக்க இயலாதது. நாம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அது வேறு உருவை எடுக்கும். அதை வார்த்தைகளால் விவரிப்பது முடியாதது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அதன் நீள அகலங்களையும், உருவத்தைக் குறித்துச் சொல்வதும் இயலாது. நான் அதுபோன்ற ஒன்றை என்றும் கண்டதில்லை. அதற்குள் இருப்பவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பர். அங்கே குளிரும் இல்லாமல், வெப்பமும் இல்லாமல் ரம்மியமான சூழ்நிலை இருக்கும். பசி, தாகம், களைப்பு ஆகியவை அங்கு சென்றாலே காணாமல் போய்விடும். அந்தச் சபை பலவகைப்பட்ட பிரகாசமான ரத்தினங்களால் ஆனது. அது தூண்களால் தாங்கப்படுவதாகத் தெரியவில்லை. அது அழிவற்ற நிலைத்த தன்மை கொண்டது. அந்த சுய ஒளி கொண்ட மாளிகை, தனது பல எண்ணற்ற பிரகாசிக்கும் தன்மைகளாலும், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட தெய்வீகத்தன்மையாலும் சந்திரன், சூரியன், மற்றும் நெருப்பையே விஞ்சி நிற்கிறது. விண்ணுலகில் நிலைத்து, பகலை உண்டாக்குபவன் {சூரியனைப்} போல எரிந்து கொண்டிருக்கிறது. அந்த மாளிகையில் ஓ மன்னா, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெருந்தகப்பன், மாயையினால் தன்னை உருவாக்கிக் கொண்டு அனைத்தையும் உருவாக்கி அங்கே நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்.
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
சபா பர்வம் பகுதி 12 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உனது தந்தையின் {பாண்டுவின்} விருப்பத்தை நிறைவேற்று. நீ அந்த வேள்வியைச் செய்தாயானால், நீயும் உனது இறந்த முன்னோர்களுடன் சேர்ந்து இறவாதவர்கள் தலைவனின் {இந்திரனின்} பகுதியில் மகிழ்ச்சியுடன் இருப்பாய். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் தடைகளுக்குப் பிறகே அந்த வேள்வியைச் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. ஒரு வகை ராட்சசர்களான பிரம்ம ராட்சசர்கள் என்போர், இது போன்ற வேள்விகளைத் தடைசெய்ய எப்போதும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து, அந்தப் பெரும் வேள்வியில் ஏதாவது குறையைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அது போன்ற ஒரு வேள்வியை நடத்துவதால் பெரும் போர் ஏற்பட்டு க்ஷத்திரிய குலமே உலகத்திலிருந்து அழியும் நிலை ஏற்படலாம். ஒரு சின்ன தடை கூட உலகத்தைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும். இதையெல்லாம் சிந்தித்து, ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, உனது நன்மைக்கான செயலைச் செய்.
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!