"Karna, is not a fourth part of the Pandavas" said Bhishma! | Vana Parva - Section 251 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
வனம் சென்றதற்காகப் பீஷ்மர் துரியோதனனைக் கடிந்து கொண்டது; கர்ணன் துரியோதனனிடம் பீஷ்மரைப் பழித்துப் பேசியது; 'நான்கு பாண்டவர்கள் சேர்ந்து வென்ற பூமியை நான் ஒருவனாகவே வெல்வேன்' என்று சூளுரைக்கும் கர்ணன், துரியோதனனிடம் அனுமதி பெற்றுக் கிளம்புவது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், "பிருதையின் {குந்தியின்} உயர் ஆன்ம மகன்கள் கானகத்தில் வாழ்ந்த போது, மனிதர்களில் முதன்மையானவர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான திருதராஷ்டிரனின் மகன்கள் என்ன செய்தார்கள்? சூரியனின் வாரிசான கர்ணனும், பலமிக்கச் சகுனியும், பீஷ்மரும், துரோணரும், கிருபரும் என்ன செய்தார்கள்? இவையனைத்தையும் எனக்கு நீர் சொல்வதே தகும்"
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பலம்வாய்ந்த மன்னா {ஜனமேஜயா}, இப்படிச் சுயோதனனை {துரியோதனனை} விட்டுப் பாண்டவர்கள் சென்ற பிறகு, பாண்டுவின் மகன்களால் விடுதலை பெற்று அவன் ஹஸ்தினாபுரம் வந்த போது, அந்தத் திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, பீஷ்மர், "ஓ! குழந்தாய் {துரியோதனா}, அந்த ஆசிரமத்திற்குப் பயணிக்கும் உங்கள் நோக்கம் எனக்குத் திருப்தியைத் தரவில்லை என்பதை நான் உனக்கு முன்பே சொன்னேன். ஆனால் நீ அதைச் செய்தாய். அதன் தொடர்ச்சியாக, ஓ! வீரா, நீ எதிரியால் பலவந்தமாகச் சிறைப்பிடிக்கப்பட்டாய். அறநெறிகளை அறிந்த பாண்டவர்களால் விடுவிக்கப்பட்டாய். இருப்பினும் நீ வெட்கப்படவில்லை. ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, உனது முன்னிலையிலேயே, ஓ!மன்னா {துரியோதனா}, உன் படைகளுடன் கூடிய சூதனின் மகன் {கர்ணன்} பீதியடைந்து, கந்தர்வர்களுடனான போரில் இருந்து தப்பி ஓடினான்.
ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஓ! ஏகாதிபதியின் மகனே {துரியோதனா}, நீ உனது படையுடன் சேர்ந்து துயரத்தோடு அழுதுகொண்டிருந்த போது, உயர் ஆன்ம பாண்டவர்களின் பராக்கிரமத்தையும், ஓ! பலமிக்கக் கரங்கள் கொண்டவனே {துரியோதனா}, சூதனின் தீய மகனான கர்ணனின் பராக்கிரமத்தையும் சாட்சியாகக் கண்டாய். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, ஆயுத அறிவியலிலோ, வீரத்திலோ, அறநெறிகளிலோ, ஓ! அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனே {துரியோதனா}, கர்ணன், பாண்டவர்களின் நாலில் ஒரு பங்குக்கு ஈடாக மாட்டான். எனவே, இந்தக் குலத்தின் நன்மையைக் கருதி, நான் நினைப்பது என்னவென்றால், உயர் ஆன்ம பாண்டவர்களுடன் அமைதியைத் தீர்மானிப்பதே விரும்பத்தக்கது என்பதாகும்" என்றார் {பீஷ்மர்}.
ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஓ! ஏகாதிபதியின் மகனே {துரியோதனா}, நீ உனது படையுடன் சேர்ந்து துயரத்தோடு அழுதுகொண்டிருந்த போது, உயர் ஆன்ம பாண்டவர்களின் பராக்கிரமத்தையும், ஓ! பலமிக்கக் கரங்கள் கொண்டவனே {துரியோதனா}, சூதனின் தீய மகனான கர்ணனின் பராக்கிரமத்தையும் சாட்சியாகக் கண்டாய். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, ஆயுத அறிவியலிலோ, வீரத்திலோ, அறநெறிகளிலோ, ஓ! அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனே {துரியோதனா}, கர்ணன், பாண்டவர்களின் நாலில் ஒரு பங்குக்கு ஈடாக மாட்டான். எனவே, இந்தக் குலத்தின் நன்மையைக் கருதி, நான் நினைப்பது என்னவென்றால், உயர் ஆன்ம பாண்டவர்களுடன் அமைதியைத் தீர்மானிப்பதே விரும்பத்தக்கது என்பதாகும்" என்றார் {பீஷ்மர்}.
பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டதும், திருதராஷ்டிரன் மகனான மன்னன் {துரியோதனன்}, உரக்கச் சிரித்தான். பிறகு திடீரெனச் சுபலனின் மகனுடன் {சகுனியுடன்} {அந்த இடத்தைவிட்டு} வெளியேறினான். அவன் சென்று விட்டான் என்பதை அறிந்த வலிமைமிக்க வில்லாளிகளான கர்ணனையும், துச்சாசனனையும் தலைமையாகக் கொண்டவர்கள் அந்த உயர்ந்த பலமிக்கத் திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தொடர்ந்து சென்றனர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டதைக் கண்ட குருக்களின் பாட்டனான பீஷ்மர், அவமானத்தால் தலையைத் தொங்கப் போட்டபடி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் மாளிகைக்குச் சென்றார். ஓ! வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பீஷ்மர் சென்றவுடன், மனிதர்களின் தலைவனான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனான்}, மீண்டும் அங்கே வந்து, தனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்}, "எது எனக்கு நன்மையைத் தரும்? இன்னும் செய்யப்பட வேண்டியது என்ன? நன்மையை வெளிக்கொணர சிறந்த முறையில் எவ்வாறு செயல்படலாம் என்பதை இன்று விவாதிப்போம்" என்று கலந்தாலோசித்தான்.
கர்ணன், "ஓ! குருவின் மகனே துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உனது இதயத்தில் நன்றாகப் பதிந்து வைத்துக் கொள். பீஷ்மர் எப்போதும் நம்மைப் பழித்து, பாண்டவர்களைப் புகழ்கிறார். உன்னிடம் அவர் பகரும் பகைமையால், என்னையும் அவர் வெறுக்கிறார். ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, உனது முன்னிலையில் அவர் என்னை எப்போதும் நிந்திக்கிறார். ஓ! பாரதா {துரியோதனா}, பாண்டவர்களைப் புகழ்ந்து, உன்னை நிந்திக்கும் இந்த விஷயத்தில் பீஷ்மரின் இவ்வார்த்தைகளை என்னால் எப்போதும் பொறுக்க முடியாது. ஓ! பகைவர்களை ஒடுக்குபவனே, ஓ! மன்னா {துரியோதனா}, பணியாட்கள், படைகள் மற்றும் ரதங்களோடு எனக்கு அனுமதி அளி. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, நான் மலைகள், காடுகள், வனங்களுடன் கூடிய இந்த உலகை வெல்வேன். நான்கு பலமிக்கப் பாண்டவர்களால் இந்தப் பூமி வெல்லப்பட்டுள்ளது. சந்தேகமற நான், உனக்காகத் தனியொருவனாக அதை {பூமியை} வெல்வேன். நிந்திக்கத்தகாதவர்களை இகழ்பவரும், புகழத்தகாதவர்களைப் புகழ்பவரும் குருகுலத்தில் இழிந்தவரும், அதீத தீய மனம் கொண்டவருமான பீஷ்மர் அதைக் காணட்டும். இந்நாளில் அவர் எனது பலத்தைக் கண்டு, தன்னையே பழித்துக் கொள்ளட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, எனக்கு உத்தரவு கொடு. வெற்றி நிச்சயம் உனதாகும். ஓ! ஏகாதிபதி, எனது ஆயுதங்களின் மேல் நான் உனக்கு உறுதி கூறுகிறேன்" என்றான் கர்ணன்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட, அந்த மனிதர்களின் தலைவன் {துரியோதனன்}, உயர்ந்த மகிழ்ச்சியை அடைந்து, கர்ணனிடம், "நான் அருளப்பட்டவனாவேன். பெரும் பலம் நிறைந்த நீ, எனது நலனில் எப்போதும் அக்கறை கொள்வதால், நான் உன்னால் ஆதரிக்கப்பட்டவனானேன். இன்று எனது வாழ்வு கனி கொடுத்திருக்கிறது. ஓ! வீரா, நமது எதிரிகளை அனைவரையும் நீ வீழ்த்த நினைத்திருப்பதால், நீ செல். உனக்கு நன்மையே விளையட்டும்! (நான் என்ன செய்ய வேண்டும் என்று) நீ எனக்குக் கட்டளையிடு" என்றான். ஓ! பகைவர்களை வீழ்த்துபவனே {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் புத்திசாலி மகனால் இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், தனது திசைப்பயணத்திற்கு {திக்விஜயத்திற்குத்} தேவையான அனைத்து இன்றியமையாத பொருட்களையும் கேட்டுப் பெற்றான். ஒரு மங்களகரமான சந்திர நாளில், ஒரு மங்களகரமான நேரத்தில், மங்களகரமான தெய்வத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட நட்சத்திரம் நடந்த போது, அந்த வலிமைமிக்க வில்லாளி, இருபிறப்பாளர்களால் {பிராமணர்களால்} உரிய முறையில் வணங்கப்பட்டு, மங்களகரமான புனிதமான பொருட்களைப் பயன்படுத்திக் குளித்து, வார்த்தைகளால் வணங்கப்பட்டு, அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய மூவுலகங்களுக்கும் தனது தேரின் சடசடப்பொலி கேட்கும்படி கிளம்பிச் சென்றான்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.