சபா பர்வம் பகுதி 13 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைவரையும் தனது குடும்பத்தில் ஒருவரைப் போலப் பாதுகாத்தான். பீமன் அனைவரையும் நீதியுடன் ஆண்டான். அர்ஜுனன் தனது இரு கரங்களையும் பயன்படுத்தி, மக்களை (வெளிப்புற/வெளிநாட்டு) எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தான். ஞானம் கொண்ட சகாதேவன் நடுநிலையாக {பாரபட்சம் இல்லாமல்} நீதியுடன் நிர்வாகம் செய்தான். நகுலன் அனைவரிடமும் பணிவான தனது இயற்கை குணத்துடன் நடந்து கொண்டான். மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் கலகங்களிலும், அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் நாடு விடுபட்டது. அனைத்து மக்களும் தங்களுக்குரிய தொழிலில் கவனம் செலுத்தினர். மேலும் வேண்டும் என்று விரும்பாத அளவுக்கு மழை நிறைந்திருந்தது. நாடும் வளமையில் வளர்ந்தது. மன்னனின் அற ஒழுக்கத்தால், கடன் கொடுப்பவர்களும், வேள்விக்குத் தேவையான பொருட்களும், கால்நடை வளர்த்தலும், உழுதலும், வணிகமுமான அனைத்துத் தொழில்களும் வளம் பெற்றன. உண்மையில், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சிகாலத்தில், அச்சுறுத்திப் பணம் பறித்தலோ, வாடகை பாக்கிக்காகத் துன்புறுத்துதலோ, நோய், நெருப்பு, விஷம் அல்லது மந்திரத்தால் உண்டாகும் மரணத்தைக் குறித்த பயமோ, அந்த நாட்டில் இல்லாதிருந்தது. திருடர்களோ, ஏமாற்றுப் பேர்வழிகளோ, அரசுகுல நண்பர்கள் மன்னிடமோ அல்லது தங்களுக்குள்ளோ தவறாக நடந்து கொண்டார்கள் என்று, யாரும் எப்போதும் கேள்விப்படவில்லை. - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section13.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
சபா பர்வம் பகுதி 14அ - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: இருப்பினும், தற்போது, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மன்னன் ஜராசந்தன், அவர்கள் அனைவரையும் விட வளமையில் அதிகரித்தும், பலத்தில் அதிகரித்தும், அனைத்து மன்னர்களுக்கும் தலைவனாகத் தன்னை நிறுவிக் கொண்டான். மேலும் ஜராசந்தன் பூமியின் மத்தியப் பகுதியை {மதுராவை} ஆட்சி செய்து நமக்குள் ஒற்றுமையின்மையைத் தோற்றுவிக்கிறான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அந்த மன்னன் {ஜராசந்தன்}, மன்னர்களில் உயர்ந்த மன்னாக இருந்து, இந்த அண்டத்தின் ஆட்சியே அவனை மையப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அவன் {ஜராசந்தன்} மாமன்னன் {சக்கரவர்த்தி} என்று அழைக்கப்படக்கூடிய தகுதியுடன் இருக்கிறான். மேலும், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி படைத்த மன்னன் சிசுபாலன் {Sisupala}, அவனது {ஜராசந்தனின்} பாதுகாப்புக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு, அவனது {ஜராசந்தனது} படைகளுக்குத் தளபதியாகச் செயல்படுகிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
சபா பர்வம் பகுதி 14ஆ - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, சிறு சிறு பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் எளிதாக சுமந்து செல்லும்படியாக்கி, ஜராசந்தனுக்குப் பயந்து மதுராவை விட்டு எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஓடினோம். அனைத்தையும் சிந்தித்து நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.
மேற்கில் ரைவத மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி {Kusasthali} என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம். நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாதபடி மறுபடி கட்டினோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள்? ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14b.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!