ஆதிபர்வம் பகுதி 16 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: வெகு காலத்திற்குப் பிறகு, கத்ரு ஆயிரம் முட்டைகளையும், வினதை இருமுட்டைகளையும் இட்டனர். அவர்களது பெண் உதவியாளர்கள் அந்த முட்டைகளைத் தனியாக வெதுவெதுப்பான பாத்திரங்களின் வைத்தனர். ஐநூறு {500} வருடங்கள் இப்படியே சென்றன, கத்ருவால் இடப்பட்ட ஆயிரம் முட்டைகளும் வெடித்து, குஞ்சுகள் வெளியே வந்தன. ஆனால் வினதையின் இரட்டையர்கள் வெளிப்படவில்லை. பொறாமையால் உந்தப்பட்ட வினதை, தனது முட்டையில் ஒன்றை உடைத்தாள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section16.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதிபர்வம் பகுதி 17 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: காந்தி மிக்க தோற்றத்துடன் தங்கம் போன்ற சூரியக் கதிர்களைத் தன்னகத்தே அடக்கிக் கொண்டு வெளியே விடாத மேரு என்ற பெயர் கொண்ட மலை ஒன்று இருந்தது. அது தங்கத்தால் நிறைந்த அழகான மலை. அதில் தேவர்களும், கந்தர்வர்களும் வசித்தனர். பாவங்கள் நிறைந்த மனிதர்களால் அந்த மலையை நெருங்கக்கூட முடியாது. பயங்கரமான மிருகங்கள் அந்த மலையின் மார்பில் அலைந்து கொண்டிருந்தன. சாதாரண மக்கள் அந்த மலையில் ஏற சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாது. மரங்களும், அருவிகளும், இனிய குரலில் மெல்லிசை பாடும் பறவைகளும் அந்த மலையில் நிறைந்திருந்தன. தேவர்கள் அதன் உச்சியில் அமர்ந்து கொண்டு அமுதத்திற்காக தவம் இருந்தனர். தேவர்களின் இந்த ஊக்கத்தைக் கண்ட நாராயணர் பிரம்மனிடம், "தேவர்களையும் அசுரர்களையும் கொண்டு அந்த பாற்கடலைக் கடையச் செய்யும். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section17.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதிபர்வம் பகுதி 18 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: அந்தக் கடினமானப் பணியைப் பாம்புகளின் இளவரசனான ஆனந்தனுக்கு (பாம்புக்கு) கொடுத்தான், தாமரைக்கண்ணன் (விஷ்ணு). ஓ அந்தணரே {சௌனகரே}, பிரம்மனாலும், நாராயணனாலும் வழிகாட்டப்பட்ட அந்த பலம்பொருந்திய ஆனந்தன், அந்த மலையை, அதன் கானகங்களுடனும், அவற்றில் வசித்த உயிர்களுடனும் பெயர்த்தெடுத்தான். தேவர்கள், பாற்கடலின் கரைக்கு ஆனந்தனுடன் வந்து, கடலிடம், "ஓ கடலே; நாங்கள் உன்னைக் கடைந்து, அமுதத்தை எடுக்க வந்துள்ளோம்", என்றனர், அதற்கு அந்தக் கடல், "அப்படியே ஆகட்டும், ஆனால் கிடைப்பனவற்றில் எனக்கும் பங்கு வேண்டும். கடையும்போது, அந்த மலையின் சுழற்சியால் ஏற்படும் நீரடிப்பையும், நீர் சுழற்சியையும் (நீர் கலங்குதல்) என்னால் தாங்கிக் கொள்ள முடியும்", என்றது. அதன்பிறகு தேவர்கள், ஆமை மன்னனிடம் (திருமாலின் கூர்ம அவதாரம்) சென்று, "ஓ ஆமை மன்னா, நீ அந்த மலையை உன் முதுகில் தாங்கிக் கொள்ள வேண்டும்." என்றனர். ஆமை மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டதால், இந்திரன் மந்தர மலையை ஆமையின் முதுகில் எடுத்து வைத்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section18.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!