Friendship, hostility and relationship! | Shanti-Parva-Section-80 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 80)
பதிவின் சுருக்கம் : நண்பன், எதிரி, உறவினன் ஆகியோரின் பண்புகளையும், அமைச்சர்களாகத் தகுந்தவர்களையும், அவர்களிடம் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, மிக அற்பமான காரியத்தைக் கூடத் துணையில்லாமல் எந்த மனிதனாலும் நிறைவேற்ற முடியாது. அப்படியிருக்கையில் (நாட்டை ஆளும் காரியத்தில்) மன்னனைக் குறித்து என்ன சொல்வது?(1) மன்னர்களுடைய அமைச்சரின் நடத்தையும், செயல்களும் எவ்வாறு இருக்க வேண்டும்? எவன் மீது மன்னன் நம்பிக்கை வைக்கலாம்? எவன் மீது வைக்கக் கூடாது?" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னர்களுக்கு நான்கு வகை நண்பர்கள் உண்டு.
{1}ஒரே நோக்கம் கொண்டவன் {ஸஹார்த்தன்},
{2}அர்ப்பணிப்புள்ளவன் {பஜமானன்},
{3}பிறப்பால் உறவினன் {ஸஹஜன்} மற்றும்
{4}(கொடைகளாலும், அன்பாலும்) வெல்லப்பட்டவன் {கிருத்திரிமன்}
ஆகியோரே அவர்கள்[1].(3)
{5}இரு தரப்புக்கும் அல்லாமல், ஒரு தரப்புக்கு சேவை செய்யும் அற ஆன்மா கொண்டவன் மன்னர்களின் நண்பர்களுடைய பட்டியலில் ஐந்தாவதாகச் சேர்த்துக்கொள்ளத் தக்கவனாவான். அத்தகு மனிதன், அறத்தின் தரப்பைப் பின்பற்றி, நீதியுடன் நடந்து கொள்பவனாவான்.(4) அத்தகு மனிதனைப் பொறுத்தவரையில், அவனது பரிவைப் பெறாத எந்தக் காரியத்தையும் மன்னன் அவனிடம் வெளிப்படுத்தக்கூடாது[2]. வெற்றியை விரும்பும் மன்னன் நீதி மற்றும் அநீதி ஆகிய இருபாதைகளையும் பின்பற்றக்கூடிய கடப்பாடுடையவனாவான்.(5) நான்கு வகை நண்பர்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் உயர்வானவர்கள் ஆவர். அதேவேளையில் முதல் மற்றும் நான்காவது வகையைச் சேர்ந்தவர்கள் எப்போதும் ஐயத்துடனே கருதப்படத்தக்கவர்கள் ஆவர்.(6)
{1}ஒரே நோக்கம் கொண்டவன் {ஸஹார்த்தன்},
{2}அர்ப்பணிப்புள்ளவன் {பஜமானன்},
{3}பிறப்பால் உறவினன் {ஸஹஜன்} மற்றும்
{4}(கொடைகளாலும், அன்பாலும்) வெல்லப்பட்டவன் {கிருத்திரிமன்}
ஆகியோரே அவர்கள்[1].(3)
{5}இரு தரப்புக்கும் அல்லாமல், ஒரு தரப்புக்கு சேவை செய்யும் அற ஆன்மா கொண்டவன் மன்னர்களின் நண்பர்களுடைய பட்டியலில் ஐந்தாவதாகச் சேர்த்துக்கொள்ளத் தக்கவனாவான். அத்தகு மனிதன், அறத்தின் தரப்பைப் பின்பற்றி, நீதியுடன் நடந்து கொள்பவனாவான்.(4) அத்தகு மனிதனைப் பொறுத்தவரையில், அவனது பரிவைப் பெறாத எந்தக் காரியத்தையும் மன்னன் அவனிடம் வெளிப்படுத்தக்கூடாது[2]. வெற்றியை விரும்பும் மன்னன் நீதி மற்றும் அநீதி ஆகிய இருபாதைகளையும் பின்பற்றக்கூடிய கடப்பாடுடையவனாவான்.(5) நான்கு வகை நண்பர்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் உயர்வானவர்கள் ஆவர். அதேவேளையில் முதல் மற்றும் நான்காவது வகையைச் சேர்ந்தவர்கள் எப்போதும் ஐயத்துடனே கருதப்படத்தக்கவர்கள் ஆவர்.(6)
[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸஹார்ஜன் என்பவன், "இந்தக் காரியத்தைச் செய்து, இதன் பயனை இருவரும் அடைவோம்" என்று பேசிக் கொண்டு சேர்க்கப்பட்டவன். பஜமானன் என்பவன், தகப்பன் பாட்டன் பரம்பரையாய் உபகாரம் செய்பவன். ஸஹஜன் என்பவன், பந்துவாயிருப்பவன். கிருத்திரிமன் என்பவன், உபகாரஞ்செய்து ஏற்படுத்தப்பட்டவன்" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "ஒருவரிடமும் பக்ஷபாதமில்லாத தர்ம்புத்தியுள்ள புருஷன் ஐந்தாவது மித்திரனாவான்; அவன் யாரிடமும் கபடமில்லாமல் தர்மமுள்ள பக்ஷத்தை நாடி நிற்பான்; அல்லது, ஒருவிதப் பற்றுமின்றி உதாஸீனனாயிருப்பான். (தருப்படி நடந்து வரும் அரசன் அவனை அடுக்கலாம்.) ஆனால், அவனுக்குச் சம்மதமில்லாத பொருள்விஷயத்தை அவனிடம் வெளியிடாமலிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
தன் நண்பர்களைக் கண்காணிக்கும் காரியத்தில் மன்னன் ஒருபோதும் கவனமில்லாமல் செயல்படக்கூடாது. கவனமில்லாமல் இருக்கும் மன்னன் எப்போதும் பிறரால் அவமதிக்கப்படுவான்.(7) தீய மனிதன் நேர்மையெனும் ஆடையை உடுத்தி வருவான், அதே வேளையில் நேர்மையானவர்களும் மாறானவர்களாவார்கள். ஓர் எதிரி நண்பனாவான், ஒரு நண்பனும் எதிரியாவான்.(8) ஒரு மனிதன் எப்போதும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டான். எவன்தான் அவனை முழுமையாக நம்புவான்? எனவே, முக்கியச் செயல்கள் அனைத்தையும் மன்னன் நேரடியாகத் தன் மேற்பார்வையிலேயே நிறைவேற்ற வேண்டும்.(9) (அமைச்சர்களை) முழுமையாக நம்புவது, அறம், பொருள் ஆகிய இரண்டுக்கும் அழிவைத் தரும். அனைவரிடமும் நம்பிக்கையில்லாமல் இருப்பது காலனைவிடக் கொடியதாகும்.(10)
நம்பிக்கை நிறைந்திருப்பது அகால மிருத்யுவாகும். நம்பிக்கையால் ஒருவன் ஆபத்துக்கு உள்ளாவான். ஒருவன் மற்றொருவனை முழுமையாக நம்பினால் அவன் நம்பும் மனிதனால் பாதிப்பை அடைந்து வாழ்வான் எனச் சொல்லப்படுகிறது.(11) இதன் காரணமாகவே அனைவரையும் நம்ப வேண்டும், அதே வேளையில் நம்பாமலும் இருக்க வேண்டும். ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, கவனத்தில் கொள்ள வேண்டிய கொள்கையில் நித்திய விதியாகும் இது.(12) ஒருவனுடைய இறப்பில், அவனுடைய செல்வத்தை அடையும் மனிதனை ஒருபோதும் நம்பக்கூடாது. அத்தகு மனிதன் அவனுடைய எதிரியாவான் என்று ஞானிகள் அறிவிக்கின்றனர்.(13) மன்னனின் வளர்ச்சியில் கட்டற்ற இன்பத்தையும், மன்னனின் அழிவில் துன்பத்தையும் அடையும் மனிதன் மன்னனுடைய சிறந்த நண்பர்களுக்குரிய குறிப்புகளை வெளிப்படுத்துகிறான்.(14) எவன் உனது வீழ்ச்சியில் வீழ்வானோ, அவனை உனது தந்தையைப் போல முழுமையாக நம்பலாம். நீ வளர்ச்சியடையும் போது, உனது சக்திக்குத் தக்க அளவில் அவனையும் நீ வளரச் செய்ய வேண்டும்.(15,16)
உன் அறச்சடங்குகளில் கூட உன்னைத் தீங்கிலிருந்து காக்க முனையும் ஒருவன், பிற பணிகள் அனைத்திலும் தீங்கான வழியில் இருந்து உன்னைக் காப்பான். மறுபுறம், ஒருவனுடைய தீங்கை விரும்புபவர்கள் அவனுடைய எதிரிகளாவர்.(17) உனக்கு இடரேற்படும்போது அச்சமடைபவனும், நீ செழிப்பாய் இருக்கும் போது மகிழ்பவனுமான ஒரு நண்பன் உன்னைப் போன்றவனே ஆவான் என்று சொல்லப்படுகிறது.(18) அழகு, நல்ல நிறம், சிறந்த குரல், ஈகை, நற்குணம், நற்பிறப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மனிதன் அத்தகு நண்பனாக இருக்க முடியாது[3].(19) நுண்ணறிவு மற்றும் நினைவுத்திறனைக் கொண்டவனும், தொழில் பரிவர்த்தனையில் கெட்டிக்காரனும், இயல்பாகவே கொடுமையில் நாட்டமில்லாதவனும், ஒருபோதும் கோபப்படாதவனும், மதிக்கப்பட்டாலும், அல்லாவிட்டாலும் எப்போதும் நிறைவுடன் இருப்பவனுமான மனிதன்,(20) உன் புரோகிதராகவோ {ரித்விக்காகவோ}, ஆசானாகவோ, மதிப்பிற்குரிய நண்பனாகவோ இருந்தாலும், அவன் உன் அமைச்சராக இருப்பதை ஏற்றாலோ, உன் வசிப்பிடத்தில் இருந்தாலோ அவர்கள் எப்போதும் உனது வழிபாட்டைப் பெற வேண்டும்.(21,22)
[3] கும்பகோணம் பதிப்பில், "நல்ல ஆகிருதியும், அழகும், குரலுமுள்ளவனும், பொறுமையுள்ளவனும், அஸூயையில்லாதவனும், நிற்குலத்தில் பிறந்தவனும், நல்ல ஸ்வபாவம் நிரம்பினவனுமான புருஷன் அரசனுக்கு ப்ரதானமந்திரியாயிருக்கத்தக்கவன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "உனக்கு நெருக்கமான ஒரு மனிதன் அழகானவனாகவும், நல்ல நிறம், நல்ல குரல் ஆகியவற்றைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். அவன் பொறுமையுள்ளவனாகவும், தீமையற்றவனாகவும் இருக்க வேண்டும். அவன் நல்ல குலத்தில் பிறந்தவனாகவும், நன்னடத்தைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
அத்தகு மனிதனிடம் மிகக் கமுக்கமான ஆலோசனைகளையும் சொல்லலாம், அறம் மற்றும் பொருள் சார்ந்த உன் காரியங்கள் அனைத்தின் உண்மை நிலையையும் சொல்லலாம். நீ அவனை உன் தந்தையைப் போல நம்பவேண்டும்[4].(23) ஒரு பணியில் ஒருவனே நியமிக்கப்பட வேண்டும், இருவரோ, மூவரோ அல்ல. இவர்கள் ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். ஒரு பணியில் பலரை ஈடுபடுத்தினால், அவர்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதே எப்போதும் காணப்படுகிறது.(24) புகழை அடைபவனும், கட்டுப்பாடுகள் அனைத்தையும் பயில்பவனும், திறன்மிக்கோரிடம் ஒருபோதும் பொறாமை கொள்ளாதவனும், எந்தத் தீய செயலையும் செய்யாதவனும்,(25) காமத்தினாலோ, அச்சத்தினாலோ, பேராசையினாலோ, கோபத்தினாலோ அறத்தை {நீதியைக்} கைவிடாதவனும், தொழில் பரிவர்த்தனையில் கெட்டிக் காரனும், ஞானம் நிறைந்த பேச்சைக் கொண்டவனுமான ஒரு மனிதன் உன் அமைச்சர்களில் முதன்மையானவனாக இருக்க வேண்டும்.(26)
[4] கும்பகோணம் பதிப்பில் இவ்வரிக்கான அடிக்குறிப்பாக, "பிரகிருதி முக்யமான காரணம். இது பொருளுக்கும், தர்மத்திற்கும் இவ்விரண்டிற்குமென மூவகைப்படும்; இவைகளில் கிருஷி, வர்த்தகம், கோட்டை, கரை, யானைபிடிக்குமிடம், தங்கம் ரத்ன முதலியவை எடுக்கும் இடம், கப்பம் வாங்குதல், நாதனற்றவிடம் என எட்டும் பொருள் ஸம்பந்தமான ப்ரகிருதியாகும்; தர்மாதிகாரியென்னுமொருவர் தர்மப்பரகிருதியைச் சேர்ந்தவராவார்; கோட்டைத் தலைவன், சேனைத் தலைவன், அரசன், புரோஹிதன், வைத்தியன், சோதிடன் இவ்வாறு பேரும் அறம், பொருள் இரண்டிற்கும் பிரகிருதியாவர்" என்றிருக்கிறது.
நற்பிறவி, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டோரும், ஈகையாளர்களும், தற்புகழ்ச்சியில் ஒருபோதும் ஈடுபடாதவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், மதிப்பிற்குரியவர்களும், கல்விமான்களும், வளம் நிறைந்தவர்களும்,(27) உன் காரியங்கள் அனைத்தையும் கண்காணிக்கும் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும். உன்னால் கௌரவிக்கப்பட்டு, செல்வத்தால் நிறைவடைந்த அவர்கள் உன் நன்மைக்காகச் செயல்பட்டு உனக்குப் பேருதவியாக இருப்பார்கள்.(28) பொருள் மற்றும் பிற முக்கியக் காரியங்களின் தொடர்புடைய அலுவல்களில் நியமிக்கப்படும் அவர்கள் எப்போதும் பெருஞ்செழிப்பையே கொண்டு வருவார்கள்.(29) நலமிக்கப் போட்டியுணர்வால் தூண்டப்படும் அவர்கள், தேவையானபோதெல்லாம் ஒருவரோடொருவர் ஆலோசித்துப் பொருள் சார்ந்த கடமைகள் அனைத்தையும் செய்வார்கள்.(30)
காலனையே கண்டதுபோல நீ உன் இரத்த உறவினர்களைக் கண்டு அஞ்ச வேண்டும். தன்மீது மேலாதிக்கம் செலுத்துபவனின் {பேரரசனின்} செழிப்பைப் பொறுக்கமுடியாத சிற்றரசனைப் போல, ஓர் உறவினன் மற்றொரு உறவினனின் செழிப்பைப் பொறுக்க மாட்டான்.(31) நேர்மை, மென்மை, ஈகை, பணிவு, உண்மை நிறைந்த பேச்சு ஆகியவற்றைக் கொண்ட ஓர் உறவினனின் அழிவில் மற்றொரு உறவினனையன்றி வேறு எவனும் மகிழ்ச்சியடையமாட்டான்.(32) அதே போல உறவினர்களே இல்லாதவர்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உறவினனற்றவர்களை விட வேறு எந்த மனிதனும் அருவருக்கத்தக்கவன் அல்ல. எந்த உறவினனும் இல்லாத ஒரு மனிதன் எளிதில் எதிரிகளால் வெல்லப்படுகிறான்.(33) ஓர் உறவினன் பிற மக்களால் பீடிக்கப்படுவதை மற்றொரு உறவினனால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால், பிறரால் பீடிக்கப்படும் ஒருவனுடைய புகலிடமாக ஓர் உறவினனே இருப்பான்.(34) ஓர் உறவினன் அவனுடைய நண்பர்களாலேயே தண்டிக்கப்படும்போது, தண்டிக்கப்படுபவனின் ஒவ்வொரு உறவினனும், தானே அந்தத் தீங்கால் துன்புறுவதாகக் கருதுவான். எனவே, உறவினர்களால் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகிய இரண்டும் உண்டு.(35)
உறவினர்களற்ற ஒரு மனிதன், வேறு எவனுக்கும் ஒருபோதும் நன்மை செய்வதுமில்லை, எவனிடமும் பணிவு கொள்வதுமில்லை. எனவே, உறவினர்களில் உள்ள நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் குறித்துக் கொள்ளப்பட வேண்டும்.(36) இதன் காரணமாகவே ஒருவன் தன் உறவினர்களைச் சொல்லாலும், செயலாலும் எப்போதும் மதிக்கவும் வழிபடவும் செய்து, அவர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைத்து விடாமல் இனிமையான காரியங்களையே செய்ய வேண்டும்.(37) ஒருவன் இதயத்தால் அவர்களை நம்பாமல், அவர்களை முழுமையாக நம்புவதைப் போலவே அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களது {உறவினர்களது} இயல்பைச் சிந்தித்துப் பார்த்தால், அவர்களால் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை என்றே தோன்றுகிறது.(38) இவ்வழியில் கவனமாக நடக்கும் ஒரு மனிதன், தங்கள் பகைவர்கள் பகைமையை விட்டு, நண்பர்களாக மாறுவதைக் காண்கிறான்.(39) உறவினர்கள் மற்றும் சொந்தங்களுக்கு மத்தியில் எப்போதும் இவ்வழியிலேயே நடக்கும் ஒருவன், இவ்வாறே நண்பர்களிடமும், பகைவர்களிடமும் நடந்து கொண்டு நிலைத்து நீடிக்கும் புகழை அடைவதில் வெல்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(40)
சாந்திபர்வம் பகுதி – 80ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |