Monday, June 25, 2018

தோஷங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 212

Faults! | Shanti-Parva-Section-212 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 39)


பதிவின் சுருக்கம் : அறியாமையின் மூலம் பிறக்கும் களங்கங்கள்; மாயைகளை உண்டாக்கும் தமோ குணம்; களங்கங்களை விரட்டப் பயன்படும் ஆய்வு; குணங்களில் பிறக்கும் களங்கங்களை விரட்டி முக்தி அடையும் ஆன்மா ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனிடம் பேசிய பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "செயல்களை {கர்மங்களைச்} செய்வதில் ஈடுபடுபவர்கள் {ப்ரவ்ருத்தி தர்மத்திலிருப்பவர்கள்}, செயல்களைச் செய்வதையே உயர்வாகக் கருதுகிறார்கள். அதுபோலவே, அறிவில் ஈடுபாடு கொண்டவர்கள் {ஞானநிஷ்டையிலுள்ளவர்கள்} அறிவைத் தவிர வேறு எதையும் கருதுவதில்லை.(1) வேதங்கள் மற்றும் அவற்றில் சொல்லப்பட்டவற்றைச் சார்ந்தவைகளை முழுமையாக அறிந்தவர்கள் மிக அரிதானவர்களே. நுண்ணறிவுமிக்கவர்கள், சொர்க்கம் மற்றும் விடுதலை {முக்தி} ஆகிய இரண்டைவிடச் சிறந்த பாதையாகச் செயல்களைத் துறக்கும் பாதையையே {ஞான வழியையே} விரும்புகிறார்கள்[1].(2) பெரும் ஞானம் கொண்டவர்களாலேயே செயல்களில் துறவு நோற்கப்படுகிறது. எனவே, அந்த ஒழுங்கே மெச்சத்தகுந்ததாகும். செயல்களில் இருந்து விடுபடத் தூண்டும் புத்தியாலேயே ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(3) உடலைக் கொண்ட ஒரு மனிதன், கோபம், பேராசை ஆகியவற்றுடனும், ஆசை {ரஜஸ்} குணம் மற்றும் இருள் {தமோ} குணத்தில் பிறந்த மனச்சார்புகள் அனைத்துடனும், மடமையின் மூலமும், உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் பற்று கொள்கிறான்.(4) எனவே, ஒருவன், தன் உடலுடன் கொண்ட தொடர்பை அழிக்க விரும்பினால், அவன் தூய்மையற்ற எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது[2].(5)


[1] வேதங்கள், செயல்படத் தூண்டல் மற்றும் செயலில் இருந்து விலகுதல் {துறவு} ஆகிய இரு தீர்மானங்களையும் கொண்டிருக்கின்றன. முன்னது {செயல்படத் தூண்டலே} பின்னதற்கு {செயலில் துறவுநிலைக்குச்} செல்வதற்கு அவசியமான படிக்கட்டாக அமைந்திருக்கிறது. இவ்வழியில் வேதங்களின் தீர்மானங்களைப் புரிந்த கொண்டு, அத்தீர்மானங்களுக்கு இணங்கிய ஒழுக்கம் கொண்டவர்கள் அரிதானவர்களே. மறுபுறம், சிலர் செயல்களைச் செய்வதும், சிலர் செயல்களில் இருந்து விலகுவதும் {செயல்களைத் துறப்பதும்} காணப்படுகிறது. இந்தச் சுலோகத்தின் இரண்டாம் வரி நீலகண்டரின் விளக்கத்தையொட்டி சற்று விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "தேஹயாபனம் Deha-yaapanam என்பது ஆன்மாவுடன் உடல் கொண்டுள்ள தொடர்பை அழித்தல் என்று பொருள்படும். இரண்டாவது வரியில் சொல்லப்படும் செயல்களைச் செய்தல் என்பது தயாரிப்புக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. விடுதலையை {முக்தியை} விரும்பும் ஒருவன், சொர்க்கம் என்ற கனியில் உள்ள விருப்பத்தால் செயல்களைச் செய்யக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தங்கமானது, இரும்புடன் சேரும்போது, அதன் தூய்மையை இழந்து ஒளிரத் தவறுவதைப் போலவே, ஞானமானது, உலகம் சார்ந்த பற்று மற்றும் அத்தகைய களங்கங்களுடன் {தோஷங்களுடன்} இருக்கும்போது, காந்தியை வெளியிடத் தவறுகிறது.(6) பேராசையின் ஆதிக்கத்தில், கோபம் மற்றும் ஆசையின் ஆணைகளைப் பின்பற்றி, மறம் {அதர்மம்} பயின்று, அறத்தின் பாதையை மீறிச் செல்லும் ஒருவன் முற்றான அழிவையே அடைகிறான்.(7) தனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைப் பிரதிபலிக்கும் புலன்நுகர் பொருட்களில் ஒருபோதும் அதீதப் பற்றுக் கொள்ளக்கூடாது. ஒருவன் அதைச் செய்வானானால், கோபம், இன்பம் மற்றும் துன்பம் ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்றாக எழும் (அவ்வாறு எழுந்து ஒருவனைத் துன்புறுத்தும்).(8) ஒவ்வொருவரின் உடலும், மூலமான ஐந்து பூதங்களாலும், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ} குணம், இருள் {தமோ} குணம் ஆகிய குணங்களாலும் அமைக்கப்பட்டிருக்கும்போது, ஒருவன் யாரைத் துதிக்க வேண்டும்? எந்த வார்த்தைகளால் யாரை நிந்திக்க வேண்டும்?(9) மூடர்கள் மட்டுமே புலன்நுகர் பொருட்களில் பற்றுடன் இருக்கிறார்கள். மடமையின் விளைவால் அவர்கள், தங்கள் உடலானது, பூமியின் மாறுதல்கள் {பூமியில் உண்டான காரியங்கள்} மட்டுமே என்பதை அறியாதிருக்கிறார்கள்[3].(10)

[3] "இங்கே சொல்லப்பட்டிருக்கும் விஞ்ஞானம் Vijnaana என்பது அறிவின் இழப்பு, அல்லது அறிவின்மையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மண்ணால் அமைக்கப்பட்ட வீடானது, மண்ணால் பூசப்படுவதைப் போலவே, மண்ணாலான இந்த உடலும், பூமியின் மாறுதலான {காரியமான} உணவின் மூலம் அழிவில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.(11) தேன், எண்ணெய், பால், நெய், இறைச்சி, உப்பு, வெல்லம், அனைத்துவகைத் தானியங்கள், கனிகள், கிழங்குகள் ஆகிய அனைத்தும் நீருடன் கூடி பூமியின் மாறுதல்களே {காரியங்களே} ஆகும்.(12) காட்டில் வாழும் துறவிகள், (ஆடம்பர மற்றும் சுவைமிக்க உணவுக்கான) ஏக்கங்கள் அனைத்தையும் கைவிட்டு, உடலைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே சுவையற்ற எளிய உணவை உண்கின்றனர்.(13) அதே வகையில், உலகின் காடுகளில் வசிக்கும் மனிதன், உழைப்புக்குத் தயாராக இருந்து, வாழ்வைக் கடந்து செல்வதற்காக மருந்தை உட்கொள்ளும் நோயாளியைப் போலவே உணவை உட்கொள்ள வேண்டும்[4].(14)

[4] "தன் வாழ்வின் உண்மை நோக்கங்களுக்காகவும், அதாவது யாதார்த்ததிற்காகவும் Yaathaartham அறம் சார்ந்த செயல்பாட்டுக்காகவும், விடுதலையை {முக்தியை} அடைவதற்காகவும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உன்னத ஆன்மா கொண்ட மனிதன், தன்னிடம் வரும் உலகம்சார்ந்த பொருட்கள் அனைத்தின் இயல்பையும் ஆய்வு செய்து, வாய்மை, தூய்மை, வெளிப்படைத்தன்மை {நேர்மை}, துறவு {தியாகம்}, ஞானம், துணிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உறுதி {தைரியம்}, நுண்ணறிவு {புத்தி}, சிந்தனை {மனம்}, தவங்கள், ஆகியவற்றின் உதவியுடனும், அமைதியை அடையும் விருப்பத்துடனும் தன் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.(15,16) அறியாமையின் விளைவால் திகைப்படையும் உயிரினங்கள் அனைத்தும், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருளின் {தமோ குணத்தின்} மூலம் ஒரு சக்கரத்தைப் போலத் தொடர்ந்து சுழன்று {செயல்களில் ஈடுபட்டு} வருகின்றன.(17) எனவே அறியாமையில் பிறக்கும் களங்கங்கள் {தோஷங்கள்} அனைத்தையும் மிகக் கவனமாக ஆய்வு செய்து, அறியாமையைத் தோற்றுவாயாகக்கொண்டதும், துன்பத்தை உண்டாக்குவதுமான தன்னுணர்வைத் தவிர்க்க வேண்டும்.(18) ஐவகைப் பூதங்கள், புலன்கள், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {ரஜோ} குணங்கள், பரம்பொருளுடன் கூடிய மூவுலகங்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் தன்னுணர்வை {சுயப்ரக்ஞையைச்} சார்ந்தவையாக இருக்கின்றன[5].(19) காலமானது, தன் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, எப்போதும் பருவகாலத் தோற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டுவதைப் போலவே, அனைத்து உயிரினங்களிலும் உள்ள தன்னுணர்வானது, செயல்களைச் செய்யத் தூண்டுகிறது[6].(20)

[5] "முதலில் அறிவை மட்டுமே தன் குணமாகக் கொண்ட ஆன்மா, அல்லது ஜீவன் மட்டுமே இருந்தது. அஃது அறியாமையால் போர்த்தப்பட்டதும், அதைச் சுற்றி அண்டம் எழுந்தது. ஆன்மா மற்றும் அறியாமையின் கலப்பினாலேயே தன்னுணர்வு எழுந்தது. எனவே, அனைத்துப் பொருட்களும் தன்னுணர்வையே சார்ந்திருக்கின்றன, தன்னுணர்வானது கவலைகள் அனைத்திற்கும் வேராக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] "அனைத்துப் பொருட்களும் அறியாமை, அல்லது மாயையின் குணமான தன்னுணர்வைச் சார்ந்திருக்கின்றன என்றால், கனவில் உணரப்படும் அனைத்தையும் குறிக்கும் ஒழங்கின்மைக்கும் பதில் எவ்வாறு ஒழுங்கு இருக்க முடியும்? இதற்கான பதிலானது, ஒழுங்கு என்பது முற்பிறவி செயல்களின் விளைவாகும், செயல்களோ தன்னுணர்வின் மூலம் எழுந்தவையாகும். காலமானது தன் விதிகளுக்குக் கட்டுப்பட்டுப் பருவகாலத் தோற்றங்களில் ஒழுங்கை உண்டாக்குவதைப் போல இவையே உணர்வுகளில் ஒழுங்கை உண்டாக்குகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

(எதில் தன்னுணர்வு பிறக்கிறதோ அந்த) தமஸ் {இருள் குணம்}, மாயைகளை உண்டாக்கவல்லது என்பது அறியப்பட வேண்டும். அஃது {இருள் குணமானது} இருளைப் போன்றதும் அறியாமையில் பிறந்ததும் ஆகும். நற்குணம், ஆசை குணம், இருள் குணங்கள் ஆகிய மூன்று குணங்களுடன் (உயிரினங்களின்) இன்ப துன்பங்கள் அனைத்தும் பிணைக்கப்பட்டிருக்கின்றன.(21) நற்குணம், ஆசை குணம் மற்றும் இருள் குணங்களில் இருந்து எழும் விளைவுகளை இப்போது கேட்பாயாக. மனநிறைவு, இன்பத்தில் இருந்து எழும் திருப்தி, உறுதித்தன்மை {ஐயமில்லாமை}, நுண்ணறிவு {தைரியம்}, நினைவு ஆகிய இவை நற்குணத்தில் பிறந்த விளைவுகளாகும். நான் இப்போது ஆசை மற்றும் இருள் குணங்களின் விளைவுகளைச் சொல்லப் போகிறேன்.(22) ஆசை, கோபம், குற்றம், பேராசை, மலைப்பு, அச்சம், களைப்பு ஆகியவை ஆசை குணத்துக்குச் சொந்தமான விளைவுகளாகும். உற்சாகமின்மை, துயரம், நிறைவின்மை, வறட்டுப் பெருமை, செருக்கு, தீமை ஆகிய அனைத்தும் இருள் குணத்துக்குச் சொந்தமான விளைவுகளாகும்.(23) இவற்றின் கனம், அல்லது கனமின்மையையும், ஆன்மாவில் வசிக்கும் பிற குறைகளையும் ஆய்வு செய்யும் ஒருவன், (அவற்றில் எவை இருக்கின்றன, எவை பலமானவை, எவை பலவீனமானவை, எவை விரட்டப்பட்டுவிட்டன, எவை இன்னும் எஞ்சியிருக்கின்றன என்பது உறுதி செய்வதற்காக) ஒன்றன்பின் ஒன்றாக அவை ஒவ்வொன்றையும் குறித்துச் சிந்திக்க வேண்டும்" என்றார் {பீஷமர்}.(24)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "விடுதலையை {முக்தியை} விரும்பும் மனிதர்கள் எந்தக் களங்கங்களைக் கைவிடுகிறார்கள்? எவற்றை அவர்கள் பலவீனப்படுத்துகிறார்கள். (கைவிட இயலாத வகையில்) மீண்டும் மீண்டும் திரும்ப வரும் களங்கங்கள் யாவை?(25) உண்மையில், ஒரு ஞானியாவன், நுண்ணறிவும் மற்றும் காரணங்களின் துணையுடன் எந்தக் களங்கங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்துச் சிந்திக்க வேண்டும்? இவை குறித்து எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. ஓ! பாட்டா, இவை குறித்து என்னிடம் உரையாடுவீராக" என்றான்.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தூய ஆன்மா கொண்ட ஒரு மனிதன், தன் களங்கங்கள் அனைத்தையும் வேருடன் பிடுங்குவதன் மூலம், விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான். இரும்பாலான கோடரியொன்று இரும்புச் சங்கிலியைப் பிளப்பதைப் போலவே, தூய ஆன்மா கொண்ட ஒரு மனிதன், இருள் குணத்தில் உதித்தவையும், (மறுபிறவியில்) ஆன்மாவுடன் சேர்ந்து பிறப்பவையுமான அந்தக் களங்கங்கள் அனைத்தையும் அழித்து, உடலுடன் கூடிய தன் தொடர்பைக் கரைப்பதில் வெல்கிறான் (விடுதலையை {முக்தியை} அடைகிறான்).(27) ஆசையில் இருந்து பிறக்கும் குணங்களும், இருளில் இருந்து பிறக்கும் குணங்களும், தூய்மையில் இருந்து பிறக்கும் களங்கமற்றவைகளும் (நற்குணத்தின் கீழ் சேர்க்கப்படுபவையும்), உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் எதில் வளர்கின்றனவோ அந்த வித்திலேயே இருக்கின்றன. இவற்றில், நற்குணம் மட்டுமே, தூய ஆன்மாக்களைக் கொண்டோர் விடுதலை {முக்தி} அடைவதற்குக் காரணமாக இருக்கிறது.(28) எனவே, தூய்மைடைந்த ஆன்மா கொண்ட ஒரு மனிதன், ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {தமோகுணம்} ஆகிய குணங்களில் பிறக்கும் அனைத்தையும் கைவிட வேண்டும். மேலும், ஆசை மற்றும் இருள் சார்ந்தவற்றிலிருந்து நற்குணம் விடுபெறும்போது, அது {அந்த நற்குணம்} மேலும் ஒளிர்வடைகிறது {பிரகாசிக்கிறது}.(29) மந்திரங்களின் உதவியுடன் செய்யப்படும் பிற செயல்கள், வேள்விகள், ஆன்ம தூய்மைக்கு நிச்சய காரணமாக இருப்பவை ஆகியவை தீய அல்லது கொடுஞ்செயல்கள் என்று சிலர் சொல்கின்றனர். (இக்கருத்து சரியானதல்ல). மறுபுறம் அச்செயல்கள், உலகப்பற்றுகள் அனைத்திலிருந்தும் ஆன்மாவின் தொடர்பை அறுப்பதற்கும், அமைதி அறம் நோற்பதற்கும் முக்கிய வழிமுறைகளாக இருக்கின்றன[7].(30)

[7] கும்பகோணம் பதிப்பில், "மந்திரத்துடன் கூடிய யாகத்திலுள்ள மாம்ஸ முதலியவைகளிலும் பாவமுண்டென்று சிலர் கூறுவார்கள். (அது சரியன்று). அந்த மாம்ஸமுதலியவைதாம் பரிசுத்தமான தர்மத்தைப் பரிபாலிக்கவும், சித்தசுத்தி வழியாக வைராக்கியத்தைப் பெறவும் காரணமாகின்றன" என்றிருக்கிறது.

ஆசையில் பிறக்கும் குண ஆதிக்கத்தின் மூலம், மறச்செயல்கள் {அதர்ம செயல்கள்} அனைத்தும் செய்யப்படுகின்றன, மேலும் உலகம் சார்ந்த நோக்கங்கள் நிறைந்த அனைத்தும் செயல்களும், ஆசையில் இருந்து பிறக்கும் அத்தகைய செயல்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன.(31) இருளில் பிறக்கும் குணங்களின் மூலம் ஒருவன், பேராசை நிறைந்தவையும், கோபத்தில் பிறப்பவையுமான செயல்கள் அனைத்தையும் செய்கிறான். இருள் குணத்தின் விளைவால் ஒருவன் உறக்கம் மற்றும் தாமதிக்கும் இயல்பு ஆகியவற்றைத் தழுவி, கொடூரச் செயல்கள் மற்றும் உடல் இன்பத்திற்கான செயல்கள் அனைத்தையும் செய்கிறான்.(32) எனினும், நம்பிக்கையுள்ளவனும், சாத்திர அறிவுள்ளவனும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} நோற்பவனுமான ஒருவன், நற்காரியங்கள் அனைத்தையும் செய்து, (அக) அழகுடன் கூடியவனாகவும், ஒவ்வொரு களங்கத்திலிருந்தும் விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனாகவும் மாறுகிறான்" என்றார் {பீஷ்மர்}.(33)

சாந்திபர்வம் பகுதி – 212ல் உள்ள சுலோகங்கள் : 33

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top