Vyasa and Sugamuni! | Shanti-Parva-Section-231 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 58)
பதிவின் சுருக்கம் : வியாசருக்கும் அவரது மகன் சுகருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; காலத்தின் பல்வேறு பிரிவினைகள், ஒவ்வொரு யுகத்தின் கால அளவு, பல்வேறு யுகங்களில் மனிதர்களின் வாழ்நாட்கள் ஆகியவற்றை வியாசர் சுகருக்கு உரைப்பது...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தவரே, உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்தையும், முடிவையும் குறித்தும்; அவற்றின் தியான இயல்பு மற்றும் அவற்றின் செயல்கள் குறித்தும்; காலப்பிரிவினைகள் மற்றும் ஒவ்வொரு யுகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட வாழ்நாள் காலங்கள் குறித்தும் நான் அறிய விரும்புகிறேன்.(1) உலகத்தின் தோற்றம் மற்றும் ஒழுக்கம் குறித்தும்; உயிரினங்களின் வருகை மற்றும் அவை செயல்படும் விதம் குறித்துமான முழு உண்மையையும் நான் அறிய விரும்புகிறேன். உண்மையில், அவற்றின் படைப்பும், அழிவும் எங்கிருந்து நடைபெறுகின்றன?(2) ஓ! அறவோரில் சிறந்தவரே, நீர் எங்களுக்கு உதவ எண்ணினால், நான் கேட்பது குறித்து எங்களுக்குச் சொல்வீராக.(3) இதற்கு முன்பு நீர் சொன்னவகையில் பிருகுவுக்கும், மறுபிறப்பாள தவசியான பரத்வாஜருக்கும் இடையில் நடந்த சிறந்த உரையாடலைக் கேட்டு என் புத்தி அறியாமையில் இருந்து நீங்கி,(4) உலகம் சார்ந்த பொருட்களில் இருந்து விலகி, யோகத்தில் மிகவும் பற்றுக் கொண்டு, தெய்வீகத் தூய்மையில் நிலைத்திருக்கிறது. எனவே, இக்காரியம் குறித்து மீண்டும் உம்மிடம் நான் கேட்கிறேன். (இது குறித்து மேலும் விரிவாக) என்னிடம் உரையாடுவதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக தெய்வீகமான வியாசரிடம் அவரது மகனான சுகர் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பழைய உரையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(6) எல்லையற்ற வேதங்களையும், அதன் அங்கங்களையும், உபநிஷத்துகளையும் கற்று, சிறந்த அறத்தகுதியை ஈட்டியதன் விளைவால் பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்க விரும்பிய சுகர்,(7) தீவில் பிறந்த முனிவரான தன் தந்தையிடம் {வியாசரிடம்} இதே கேள்விகளையே கேட்டு, அவரால் ஐயங்கள் தீர்க்கப்பட்டார். அவர் (கல்வி மற்றும் தியானத்தின் மூலம்) கடமைகளைக் குறித்த உண்மைகள் தொடர்பான அனைத்து ஐயங்களையும் நீக்கினார்.(8)
சுகர் {வியாசரிடம்}, "கால அறிவால்[1] அனைத்து உயிரினங்களின் படைப்பாளனென உறுதிசெய்யப்பட்டவன் எவன் என்பதையும், ஒரு பிராமணனால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டார்".(9)
[1] "காலஞானேனா நிஷ்திதம் Kaalajnaanena nishthitam என்பதே மூலச் சொற்களாகும். படைப்பு மற்றும் இல்லாமை எனும் அடுத்தடுத்த காலங்கள், அல்லது, பிரம்மன் விழித்திருக்கும் மற்றும் உறங்கும் காலங்களின் எல்லைகளை வரையறுப்பதே வியாசரின் பதிலாக அமையும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "காலத்தின் அறிவில் நிச்சயமுள்ளவரும், பூதக்கூட்டங்களைப் படைத்தவருமான ஈஸ்வரரையும், பிராம்மணன் செய்யத்தக்கதையும் குறித்து நீர் சொல்ல வேண்டும்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மகனால் {சுகரால்} கேள்வி கேட்கப்பட்டவரும், கடந்த காலம் மற்றும் எதிர் காலம் ஆகிய இரண்டின் அறிவைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், முற்றறிவு பெற்றவருமான தந்தை {வியாசர்}, அக்காரியம் குறித்து இவ்வாறே உரைத்தார்.(10)
வியாசர் {சுகரிடம்}, "தொடக்கமும் முடிவும் இல்லாததும், பிறப்பில்லாததும், ஒளியுடன் சுடர்விடுவதும், சிதைவுக்கு அப்பாற்பட்டதும், மாற்றமில்லாததும், அழிவில்லாததும், புலப்படாததும், மேன்மையான அறிவுமான பிரம்மம் மட்டுமே படைப்புக்கு முன்பே இருக்கிறது.(11) முனிவர்கள், காலத்தை அளந்து குறிப்பிட்ட பகுதிகளுக்குக் குறிப்பிட்ட பெயர்களை அளித்துள்ளனர். பதினைந்து கண் சிமிட்டல்களின் {கால} அளவு ஒரு காஷ்டை என்று அழைக்கப்படுகிறது. முப்பது காஷ்டைகள் ஒரு கலை என்று அழைக்கப்படுகிறது. முப்பது கலைகளும், கலைகளில் பத்தில் ஒரு பகுதியும் சேர்த்து ஒரு முகூர்த்தம் என்றறியப்படுகிறது. முப்பது முகூர்த்தங்கள் ஒரு பகலையும் இரவையும் உண்டாக்குகின்றன. முப்பது பகல்களும் இரவுகள் ஒரு மாதம் என்றழைக்கப்படுகிறது. பனிரெண்டு மாதங்கள் ஒரு வருடங்கள் என்றழைக்கப்படுகிறது.(12,13) கணித அறிவியலை அறிந்த மனிதர்கள், (சூரியனின் போக்கைச் சார்ந்து) ஒரு வருடத்திற்கு வடக்கு மற்றும் தெற்கு {உத்தராயணம், தக்ஷிணாயனம்} என்ற இரண்டு அயணங்களை அமைத்திருக்கின்றனர்.(14) சூரியன் மனித உலகிற்கான பகலையும், இரவையும் அமைக்கிறான். இரவானது அனைத்து உயிரினங்களும் உறங்குவதற்காகவும், பகலானது செயல்படுவதற்காகவும் இருக்கிறது.(15)
மனிதர்களின் ஒரு மாதமானது பித்ருக்களின் ஒரு பகலுக்கும் இரவுக்கும் {ஒரு நாளுக்கு} இணையானதாகும். (பித்ருக்களைப் பொறுத்தவரையில்) அந்தப் பிரிவானது, (மனிதர்களின்) வளர்பிறை நாட்கள் {சுக்லபக்ஷம்} செயல்படுவதற்கானதாகவும் {பித்ருக்களின் பகலாகவும்}; தேய்பிறை நாட்கள் {கிருஷ்ணபக்ஷம்} உறங்குவதற்காகவும் {பித்ருக்களின் இரவாகவும்} இருக்கிறது.(16) (மனிதர்களின்) ஒரு வருடம் தேவர்களின் ஒரு பகல் மற்றும் இரவுக்கு {ஒரு நாளுக்கு} இணையானதாகும். (தேவர்களைப் பொறுத்தவரையில்) அந்தப் பிரிவானது, இளவேனில் காலத்தில் இருந்து கூதிர் காலம் வரையில் சூரியன் பயணிக்கும் அரை வருடம் {உத்தராயணம்} தேவர்களின் பகலாகவும், கூதிர் காலத்தில் இருந்து இளவேனில் காலம் வரையில் அவன் பயணிக்கும் அரை வருடம் {தக்ஷிணாயனம்} அவர்களின் இரவாகவும் இருக்கிறது.(17) நான் உன்னிடம் சொன்னவாறு மனிதர்களின் பகலிரவுகளைக் கணக்கிடுவதன் மூலம், பிரம்மனின் பகலிரவு மற்றும் அவனுடைய வருடங்களையும் நான் சொல்லப் போகிறேன்.(18) கிருதம், திரேதம், துவாபரம் மற்றும் கலியுகங்களைப் பொறுத்தவரையில், (இவ்வாறு) பல்வேறு காரணங்களுக்காகப் பலவாறு கணக்கிடப்படும் வருடங்களின் எண்ணிக்கையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(19) (தேவர்களின்) நாலாயிரம் வருடங்கள் முதல் அல்லது கிருத யுகத்தின் காலமாகும். அந்த யுகத்தின் காலைப் பொழுது நானூறு வருடங்களையும், அதன் மாலைப் பொழுது நானூறு வருடங்களையும் கொண்டதாகும். (எனவே கிருத யுகத்தின் மொத்த கால அளவானது தேவர்களின் வருடங்களில் நாலாயிரத்து எண்ணூறு {4800} வருடங்ளாகும்).(20)
பிற யுகங்களைப் பொறுத்தவரையில், அவை ஒவ்வொன்றின் கால அளவும் ஒன்றிணைந்த பகுதியுடன் தனித்திருக்கும் நிலை மற்றும் ஒன்றிணைந்த பகுதி ஆகிய இரண்டையும் சேர்த்து கால்பகுதி அளவுக்குப் படிப்படியாகக் குறைகிறது. (இவ்வாறு கணக்கிட்டால் திரேதா யுகமானது மூவாயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது முன்னூறு வருடங்களும், மாலைப் பொழுது முன்னூறு வருடங்களும் சேர்த்து மூவாயிரத்து அறுநூறு {3600} வருடங்களாகும்.
துவாபர யுகமானது இரண்டாயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது இருநூறு வருடங்களும், மாலைப்பொழுது இருநூறு வருடங்களும் சேர்த்து இரண்டாயிரத்து நானூறு {2400} வருடங்களாகும்.
கலியுகத்தின் கால அளவானது, ஆயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது நூறு வருடங்களும், மாலைப்பொழுது நூறு வருடங்களும் சேர்த்து ஆயிரத்து இருநூறு {1200} வருடங்களாகும்)[2].(21) இந்த யுகங்கள் முடிவில்லாதவையும், நித்தியமானவையுமான உலகங்களை எப்போதும் நீடிக்கச் செய்கின்றன. ஓ! குழந்தாய், பிரம்மத்தை அறிந்தவர்கள் இதையே மாற்றமில்லாத பிரம்மமாகக் கருதுகிறார்கள்.(22) கிருத யுகத்தில் வாய்மையுடன் சேர்த்து அனைத்து கடமைகளும் {தர்மங்களும்} முழுமையாக இருந்தன. நீதியற்ற அல்லது தடுக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் மனிதர்களிடம் எந்த அறிவும், பொருளும் சேரவில்லை.(23) பிற யுகங்கள் ஒவ்வொன்றிலும், வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் படிப்படியாகக் கால் பகுதி குறைவது காணப்படுகிறது. களவு, பொய்மை, வஞ்சகம் ஆகியவற்றின் விளைவால் பாவம் வளர்கிறது.(24) கிருத யுகத்தில், மனிதர்கள் அனைவரும் நோயற்றவர்களாக, அவர்களது நோக்கங்கள் அனைத்திலும் வெற்றிபெற்றவர்களாக நானூறு வருடங்கள் வாழ்கிறார்கள். திரேதா யுகத்தில் கால்பகுதி வாழ்நாள் அளவு குறைகிறது {அதாவது மனிதர்கள் முன்னூறு வருடங்கள் வாழ்கிறார்கள்}.(25)

[2] அதாவது கிருத யுகம் 4,800 வருடங்கள் கொண்டதாகும். திரேதா யுகம் 3,600; துவாபர யுகம் 2,400; கலியுகம் 1,200 வருடங்களைக் கொண்டதாகும். எனினும் இவை தேவ வருடங்களாகும் {தேவர்களின் ஒரு வருடம் மனிதர்களின் 360 வருடங்களைக் கொண்டதாகும்}. இங்கே சொல்லப்படும் 15-17 மற்றும் 20-21 சுலோகங்கள் மனுசாத்திரம் அதிகாரம் 1ல் இருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், "கிருதயுகமானது நாலாயிரம் வருஷங்களென்று கூறுகிறார்கள். அந்த யுகத்தின் ஸந்தியாகாலம் நானூறு வருஷங்களும், அப்படியே ஸந்தியாம்சம் நானூறுவருஷங்களுமாகும். அதைவிட வேறான மூன்று யுகங்களிலும் அவைகளின் ஸந்தியைகளிலும் ஸந்தியாம்சங்களிலும் ஒவ்வொன்று குறையக் கூறிய ஆயிரம் வருஷங்களும் நூறு வருஷங்களும் நூறு வருஷங்களுமாகும்" என்றிருக்கிறது.
அடுத்தடுத்த யுகங்களில் வேதங்களின் வார்த்தைகள், வாழ்நாள் காலம், (பிராமணர்கள் சொல்லும்) அருளாசிகள், வேத சடங்குகளின் கனிகள் ஆகியன அனைத்தும் படிப்படியாகக் குறைவதாக நாம் கேள்விப்படுகிறோம்.(26) கிருத யுகத்திற்காக நிறுவப்பட்டுள்ள கடமைகள் ஒருவகையாக உள்ளன. திரேதா யுகத்திற்காக நிறுவப்பட்டவை மறு வகையாக உள்ளன. துவாபர யுகத்திற்காக நிறுவப்பட்டவை வேறு வகையாக உள்ளன. மேலும் கலியுகத்திற்காக நிறுவப்பட்டவை மறுவகையாக உள்ளன. இவை அடுத்தடுத்த யுகங்களில் நேரும் வீழ்ச்சி குறிக்கும்படி அமைகின்றன.(27) கிருத யுகத்தில் தவமே முதன்மையான இடத்தைப் பெறுகிறது. திரேதா யுகத்தில் அறிவே முதன்மையானதாக இருக்கிறது. துவாபர யுகத்தில் வேள்வி முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. கலியுகத்தில் தானமே ஒரே பொருளாக விதிக்கப்பட்டிருக்கிறது.(28)
(தேவர்களின்) இந்தப் பனிரெண்டாயிரம் வருடங்களே யுகங்கள் என்றழைக்கப்படுபவையாக அமைகின்றன {ஒரு தேவயுகம் என்றழைக்கப்படுகிறது} எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள். இத்தகைய ஆயிரம் யுகங்களே பிரம்மனின் ஒரு பகல் வேளையாக அமைகிறது[3].(29) பிரம்மனின் இரவும் அதே கால அளவைக் கொள்கிறது. பிரம்மனின் பகல் தொடங்கியதும், அண்டம் உயிர்பெறத் தொடங்குகிறது. அண்டத்தின் அழிவுக்காலத்தில், படைப்பாளன் {பிரம்மன்} தியான யோகத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறான். உறக்க காலம் முடிந்ததும் அவன் விழிப்படைகிறான்.(30) இத்தகைய ஆயிரம் யுகங்கள் பிரம்மனின் ஒரு பகலாகின்றன. அதே போல ஆயிரம் யுகங்கள் அவனது ஓரிரவு ஆகின்றன. இஃதை அறிந்தவர்களே பகல் மற்றும் இரவை அறிந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(31) பிரம்மன், இரவு கடந்து விழித்ததும், அழிவற்ற சித்-ஐ அவித்யையால் மறைத்துத் திருத்தி அமைக்கிறான். பிறகு அவன் எழச்செய்யும் நனவுநிலையில் இருந்து, புலப்படுபவைக்கு ஒப்பான மனம் உண்டாகிறது" என்றார் {வியாசர்}[4].(32)

[3] "மொத்தம் 12,000 வருடங்கள். இவையே ஒரு தேவயுகமாக அமைகின்றன. ஓராயிரம் தேவ யுகங்கள் பிரம்மனின் ஒரு பகலாக அமைகின்றன. இந்த 28ம் சுலோகம் மனுசாத்திரம், அத்தியாயம் 1லும் வருகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "முந்தைய பகுதிகளை {அத்தியாயங்களை} ஏற்கனவே படித்திருப்போர் சிரமமில்லாமல் இஃதை எளிதில் புரிந்து கொள்வார்கள். புறவுலகென்பது மாற்றமடைந்த மனமேயன்றி வேறில்லை. எனவே, மனம் என்பது வியக்தாத்மகம் vyaktaatmaka அல்லது வியக்தத்தின் ஆத்மா, அல்லது புலப்படுவது, அல்லது வியக்தமாக இருப்பது, அல்லது வியக்தத்திற்கு எதற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாதது எதுவோ அதுவே ஆகும். சில வங்கப்பதிப்புகளில் இந்தப் 231ம் பகுதி 32ம் சுலோகத்தோடு முடிவடையாமல் 232-ம் பகுதியில் உள்ளவற்றையும் சேர்த்துத் தொடர்கிறது. எனினும், பம்பாய் உரைகளிலும், நான் பார்க்கும் சில வங்க உரைகளிலும் அவ்வாறில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஆயிரம் யுகங்களின் முடிவைப் பிரம்மதேவரின் பகலென்றும் ஆயிரம் யுகங்களின் முடிவையே இரவென்றும் இரவு பகல்களை அறிந்த ஜனங்கள் அறிவிக்கிறார்கள். விழித்துக் கொண்ட பிரம்மதேவர் இரவு சென்றதும் அழிந்த மஹத்துவத்தைப் படைக்கிறார். அதிலிருந்து ஸ்தூல உருவமுள்ள மனமுண்டாகிறது. மனமானது படைக்க வேண்டுமென்ற விருப்பத்தால் ஏவப்பட்டுப் படைப்பைச் செய்கிறது" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 231ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |