Wednesday, July 25, 2018

யுகத்தன்மைகள்! - சாந்திபர்வம் பகுதி – 232

The characteristics of yugas! | Shanti-Parva-Section-232 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 59)


பதிவின் சுருக்கம் : படைப்பு எழுந்த வகை; பல்வேறு யுகங்களின் தன்மைகள்; பல்வேறு யுகங்களில் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு கடமைகள் ஆகியவற்றைத் தன் மகனான சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்...


வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "தானே நீடித்துச் செயல்படும் பிரகாசமிக்க வித்தான பிரம்மனே, அசையும் மற்றும் அசையாத இருவகை உயிரினங்கள் இரண்டையும் கொண்ட மொத்த அண்டத்தையும் எழச் செய்கிறான்[1].(1) அவனது பகலின் அதிகாலையில் விழித்தெழும் அவன் அவித்யையின் உதவியுடன் இவ்வண்டத்தைப் படைக்கிறான். முதலில் மஹத் என்றழைக்கப்படுவது எழுகிறது. அந்த மகத்தே விரைவாகப் புலப்படுவதன் ஆன்மாவான {ஸ்தூலமான உருவமுள்ள} மனமாக விரைவாக மாறுகிறது[2].(2) மனமானது, பிரகாசமான சித்-ஐ அவித்யையால் மறைத்து ஏழு பெரும் பூதங்களைப் படைக்கிறது[3]. எட்டாததை எட்டுவதும், பல வழிமுறைகளைக் கொண்டதும், தனது அடிப்படை குறியீடுகளாக ஆசையையும், ஐயத்தையும் கொண்டதுமான மனமானது, படைக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, தன்னைத் தானே திருத்தி அமைத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு வகைப் பொருட்களைப் படைக்கிறது. அதனிலிருந்து முதலில் வெளி {ஆகாயம்} எழுகிறது. அதன் குணம் ஒலி என்பதை அறிவாயாக.(3,4) மேலும் திருத்தி அமைத்துக் கொள்வதன் மூலம் அந்த வெளியில் இருந்து, அனைத்து மணங்களையும் சுமப்பதும், தூய்மையானதும், வலிமைமிக்கதுமான காற்று எழுகிறது. அது தீண்டலின் குணத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.(5)

[1] "தேஜோமயம் Tejomayam என்பது உரையாசிரியரால் எது இன்றிப் படைப்பு நேரமுடியாதோ அந்த வாஸனாமயம் Vaasanaamayam என்றோ, ஆசைக் கோட்பாட்டைக் கொண்டது என்றோ, தன்னுள்ளே விருப்பத்தைக் கொண்டது என்றோ விளக்கப்படுகிறது. யஸ்யம் Yasya என்பது யதம் Yatah என்று பயன்படுத்தப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "மஹத் என்பது தூய, அல்லது நுட்பமான புத்தி என்ற பொருளைக் கொண்டதாகும். புலப்படுவது மனத்தில் இருந்தே இருப்பில் எழுகிறது, அல்லது மனத்தையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. எனவே, முந்தைய பகுதிகளில் {அத்தியாயங்களில்} விளக்கப்பட்டதைப் போலவே மனமானது வியக்தாத்மகம் என்றழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "இந்த ஏழு பெரும்பூதங்கள் அல்லது இருப்புகள் என்பன மஹத்தே ஆகும், அவையே விரைவாக மனமாகவும், வெளி உள்ளிட்ட ஐந்து அடிப்படை பூதங்களாகவும் மாறுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



மேலும் திருத்தி அமைக்கப்படுவதன் மூலம் காற்றிலிருந்தும் பிரகாசத்துடன் கூடிய ஒளி எழுகிறது. அழகை வெளிப்படுத்துவதும், சுக்ரம் என்றழைக்கப்படுவதும், இவ்வாறு இருப்பில் எழுவதுமான அது, வடிவத்தைத் தன் குணமாகக் கொண்டிருக்கிறது.(6) மேலும் திருத்தி அமைக்கப்படுவதன் மூலம் ஒளியில் இருந்து சுவையைத் தன் குணமாகக் கொண்ட நீர் எழுகிறது. நீரிலிருந்து மணத்தைக் குணமாகக் கொண்ட பூமி எழுகிறது. இவையே தொடக்கப் படைப்பைக் குறிக்கின்றன என்று சொல்லப்படுகின்றன.(7) இவை ஒன்றன்பின் ஒன்றாகத் தங்களுக்கு முந்தையதும், தனது பிறப்பிடமுமான பூதங்களின் குணங்களை அடைகின்றன. இவை ஒவ்வொன்றும் தங்களுக்குண்டான குறிப்பிட்ட குணத்தை மட்டுமல்லாமல் தங்களுக்கு முந்தைய பூதங்களின் குணங்களையும் கொண்டிருக்கின்றன[4]. (எனவே, வெளியானது ஒலியை மட்டுமே தன் குணமாகக் கொண்டிருக்கிறது. வெளிக்குப் பிறகே காற்று {வாயு} வருவதால், அஃது ஒலி மற்றும் தீண்டல் என்ற குணங்களைக் கொண்டிருக்கிறது. காற்றில் இருந்து வரும் ஒளி அல்லது நெருப்பானது, ஒலி, தீண்டல் மற்றும் வடிவம் என்ற குணங்களைக் கொண்டிருக்கிறது. ஒளியில் இருந்து வந்த நீரானது ஒலி, தீண்டல், வடிவம் மற்றும் சுவை ஆகியவற்றைத் தன் குணங்களாகக் கொண்டிருக்கிறது. நீரில் இருந்து வந்த பூமியானது, ஒலி, தீண்டல், வடிவம், சுவை, மணம் ஆகியவற்றைத் தன் குணங்களாகக் கொண்டிருக்கிறது).(8) நீரில் மணத்தை உணரும் எவரும் அறியாமையால் அது {மணமானது} நீருக்குச் சொந்தமானது என்றால் பிழையில் வீழ்ந்தவனாகிறான், ஏனெனில், மணம் என்பது நீர் மற்றும் காற்றிலும் பற்றுக் கொண்ட நிலையில் நீடித்திருந்தாலும், அது {மணம் என்பது} பூமியின் குணமே ஆகும்.(9)

[4] கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் முதலான பூதங்களின் உற்பத்தி சொல்லப்படுகிறது. முதலாவது பூதத்தின் குணங்கள் மேன்மேலான பூதத்தை அடைகின்றன. அவர்களுள் ஒவ்வொன்றிலுமுள்ள குணங்களனைத்தும் அதனதன் காரியத்தை அடையுமென்று சொல்லப்படுகின்றன" என்றிருக்கிறது.

பல்வேறு வகைச் சக்திகளைக் கொண்ட இந்த ஏழுவகை இருப்புகளும் முதலில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாகவே இருந்து வந்தன. இவை அனைத்தும் ஒன்று கலந்த நிலையை அடையாமல் அவற்றால் எந்தப் பொருளையும் படைக்க முடியாது.(10) இந்தப் பெரும் இருப்புகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு, ஒன்றோடொன்று கலப்பதாலேயே அங்கங்கள் {அவயவ்யம்} என்றழைக்கப்படும் உடலின் பகுதிகள் அமைகின்றன[5].(11) அந்த அங்கங்கள் ஒருங்கிணைவதால் விளையும் இந்த மொத்த கூட்டுத் தொகையும் பதினாறு {16} கூறுகளைக் கொண்ட வடிவத்தை அடைந்து உடல் என்று அழைக்கப்படுகிறது. (திரள் உடல் இவ்வாறு அமையும்போது), நுட்பமான மஹத்-ஆனது வற்றாத செயல்களின் எச்சங்களுடன் திரள் உடல் என்றழைக்கப்படும் கலவைக்குள் நுழைகிறது[6].(12) அனைத்துப் பொருட்களையும் உண்மையில் படைத்தவன், தன் மாயையைக் கொண்டு தன்னைப் பிரித்துக் கொண்டு அனைத்தையும் பார்ப்பதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும் அந்த நுட்பமான வடிவங்களுக்குள் நுழைகிறான். அவனே அனைத்து உயிரினங்களையும் உண்மையாகப் படைப்பவனாக இருப்பதால், அவன் அனைத்து உயிரினங்களின் தலைவன் என்று அழைக்கப்படுகிறான்[7].(13) அவனே அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் படைக்கிறான். இவ்வாறு பிரம்ம வடிவை ஏற்கும் அவன், தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், மற்றும் மனிதர்களின் உலகங்களைப் படைக்கிறான்.(14) ஆறுகள், கடல்கள், பெருங்கடல்கள், அடிவானின் புள்ளிகள் {திசைகள்}, நாடுகள், மாகாணங்கள், குன்றுகள், மலைகள், பெரும் மரங்கள், மனிதர்கள், கின்னரர்கள், ராட்சசர்கள், பறவைகள், வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் பாம்புகள் ஆகியவற்றையும் படைக்கிறான்.(15)

[5] "சித், அல்லது ஜீவனானது, புருஷன், அல்லது உடலில் வசிப்பவன் என்றழைக்கப்படுவது ஏனெனில், பரமாத்மாவின் மூலம் அவித்யையால் அது {சித் / ஜீவன்} மறைக்கப்படும்போது, செயல்களின் சக்தியால் தீர்மானிக்கப்படும் தொடக்கக் காலப் பொருளால் அமைந்த உரையுடன் கூடிய இருப்பாய் இருக்க முடியுமேயன்றி வேறு எவ்வழியிலும் அதனால் நீடித்திருக்க முடியாது. எனவே, இங்கே அஃது அங்கங்கள் அல்லது அவயவ்யம் என்ற பொருளில் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] "10, 11 மற்றும் 12ஆம் சுலோகங்களில் சொல்லப்படுவது: ஏழு பெரும் இருப்புகளும் தங்கள் திரள் வடிவத்தில் தனியாக இருந்தால் எதையும் படைக்க இயலாது. எனவே, அவை ஒன்றோடொன்று கலக்கின்றன. இவ்வாறு முதலில் அவை உடற்கூறுகளுடன் கூடிய சரீரத்தின் ஆச்ரயனம் என்ற வடிவத்தை அமைக்கின்றன. இந்நிலையில் அவை புருஷன் அல்லது அவயவ்யம், அதாவது வெறும் அங்கங்கள் என்ற பெயரில் அறியப்பட வேண்டும். இந்த அங்கங்கள் மீண்டும் இணையும்போது, பதினாறு குணங்களைக் கொண்டதும், வடிவத்தைக் கொண்டதுமான முழு உடல் இருப்பு நிலைக்கு வருகிறது. அதன் பிறகு நுட்பமான மஹத்-ம், நுட்பமான பூதங்களும், வற்றாத செயல்களின் எச்சங்களுடன் அதற்குள் நுழைகின்றன. ஒரே மஹத் பல்வேறு வடிவங்களில் நுழைந்து வெளிப்படையாகப் பலவாகத் தெரிகிறது. இவ்வாறு திரள் உடல் மற்றும் லிங்க சரீரம் என்றழைக்கப்படும் மற்றொரு உடல் ஆக ஈருடல்கள் இருக்கின்றன. செயல்களின் எச்சங்கள் இவ்வாறு விளக்கப்படுகிறது: அனைத்து உயிரினங்களும் தங்கள் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் விளைவுகளை அனுபவிக்கின்றன. எனினும், அந்த நல்ல மற்றும் கெட்ட செயல்கள் அனைத்தும் தீர்ந்தால் மறுபிறவி ஏற்பட முடியாது. எனவே, ஓர் எச்சம் மிஞ்சுவதன் விளைவால் மறுபிறவி சாத்தியமாகிறது. படைப்பு, அழிப்பும் முடிவில்லாமல் தொடர்ந்து நடைபெறுகிறது. முதல் படைப்பின் தொடக்கம் அறியப்பட முடியாததாகும். இந்தப் படைப்பானது ஒரு தொடர் சங்கிலியின் ஒரு பகுதியாகும். பின்வரப்போகும் சுலோகங்களில் அது மேலும் விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஏழுவிதமான உருவமுள்ளவைகளும் வெவ்வேறாகப் பலவித வீரியங்களுள்ளவைகளுமான இவைகள் முழுமையும் ஒன்று சேராமல் பிராணிகளைப் படைக்கத் திறமையுள்ளவைகளாகவில்லை. பெரிய உருவமுள்ள அவைகள் சேர்ந்து ஒன்றோடொன்று கலந்து சரீர நிலையை அடைந்தன. அதனால், (ஆத்மா) புருஷன் என்று சொல்லப்படுகிறான். சரீரத்தை அடைந்த காரணத்தால் சரீரியாகிறான். பதினாறு அம்சமுள்ள ஸூக்ஷம சரீரமானது மூர்த்தியுள்ளதாயிருக்கிறது. கர்மங்களும் மஹாபூதங்களும் அதை அடைகின்றன" என்றிருக்கிறது. இங்கே சொல்லப்படும் ஏழு இருப்புகள் என்பன, மஹத், அஹங்காரம் மற்றும் ஐம்பூதங்கள் ஆகும்.

[7] "முன்னே சொல்லப்பட்ட பதினாறு கூறுகள் என்பன ஐம்பூதங்களும், மனத்துடன் சேர்ந்த அறிவு மற்றும் செயற்புலன்கள் {ஞானக் கர்மேந்திரியங்கள் மற்றும் மனம்} என்ற பதினொன்றுமாகும். திரள்கூறுகளின் அஃதாவது அந்த நுட்பமான வடிவங்களின் தன்மாத்திரைகளாக அந்தப் பெரும் இருப்புகள் இருக்கின்றன. முதலில் (அடிப்படை வளர்ச்சியைக் கொண்ட) திரள் உடல் அமைகிறது. அதனுள் நுட்பமான உடல் அல்லது லிங்க சரீரம் நுழைகிறது. முதலில் (ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல) திரள் கூறுகள் ஒன்றாகச் சேருகின்றன. அதன்பிறகு நுட்பமானவையும், செயல்களின் எச்சங்களும் சேர்கின்றன. பிறகு பிரம்மமேயான ஆன்மா அதனுள் நுழைகிறது. ஆன்மாவானது, சாட்சியாக இருப்பதற்கும், ஆய்வு செய்வதற்காகவும் அந்த நுட்பமான வடிவத்திற்குள் நுழைகிறது. அனைத்து உயிரினங்களும், அவித்யை அல்லது மாயையின் பாதிப்பால் ஏற்படும் ஆன்மாவின் புறத்தோற்றங்கள் மட்டுமே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உண்மையில் அவன், அசைவன, அசையாதன என்றும், அழியத்தக்கன, அழிவில்லாதன என்றும் இருப்பின் இருவகைப் பொருட்களைப் படைக்கிறான். படைக்கப்பட்ட இந்தப் பொருட்கள் ஒவ்வொன்றும், படைப்புக்கும் முன்பு இருந்த அந்தக் குறிப்பிட்ட குணங்களை அடைகின்றன;(16) உண்மையில் அவை ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த ஒவ்வொரு படைப்பில் அதே குணங்களையே அடைகின்றன. தீங்கிழைப்பது அல்லது அமைதி, மென்மை அல்லது கடுமை, அறம் அல்லது மறம், வாய்மை அல்லது பொய்மை ஆகியவற்றில் ஏதோ ஒரு குணத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு புதிய படைப்பிலும், ஏற்கனவே அவை பேணி வளர்த்து வந்த அந்தக் குறிப்பிட்ட குணத்தையே அடைகின்றன. இதன் விளைவாகவே அந்தக் குறிப்பிட்ட குணம் அதனைப் பற்றுகிறது.(17) விதி சமைப்பவனே, (வெளி, பூமி முதலிய) அந்தப் பெரும் இருப்புகளை, இருப்பில் உள்ள பொருளின் (வடிவம் முதலிய) புலனுக்குரிய பொருட்களிலும், அளவுகளிலும் இணைத்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட இருப்புகளுடன் கூடிய உயிரினங்களின் உறவுகளை நியமனம் செய்கிறான்.(18) பொருள் அறிவியலுக்குத் தங்களை அர்ப்பணித்த மனிதர்களுக்கு மத்தியில் உள்ள சிலர், விளைவுகளை உண்டாக்குவதில் முயற்சியே {மனித உழைப்பே} உயர்வானதெனச் சொல்கிறார்கள். சில கல்விமான்கள், விதியே {தெய்வமே} உயர்வானதெனவும், சிலர் இயற்கையே {பூதத் தொகுப்பே} செயல்படும் ஒன்றாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.(19) மேலும் சிலர், (உடல்) உழைப்பு, விதி ஆகியவற்றில் இருந்து எழும் செயல்களே, இயற்கையின் துணையுடன் விளைவுகளை உண்டாக்குகின்றன எனச் சொல்கிறார்கள். இவற்றில் எதுவும் விளைவுகளைத் தனியாக உண்டாக்கவல்லவை என்று கருதுவதற்குப் பதிலாக இவை மூன்றின் கலவையே விளைவுகள் அனைத்தையும் உண்டாக்குகின்றன என்று அவர்கள் சொல்கிறார்கள்[8].(20)

[8] கும்பகோணம் பதிப்பில், "கர்மத்தை அறிந்த சிலர் மனித முயற்சியென்றும், வேறு சிலர் தெய்வமென்றும், பூதங்களைச் சிந்திப்பவர்கள் இயற்கையென்றும் சொல்லுகிறார்கள். பௌருஷமென்னும் கர்மமும் தெய்வமும் இயற்கையும் பயனைக் கொடுப்பதில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. இம்மூன்றும் வெவ்வேறாயிருப்பவையல்ல. இவைகளுக்கு எவ்விதத்திலும் பிரிதலில்லை. இவ்விதம் இந்தக் கர்மமும் தெய்வமும் பூதங்களின் இயற்கையும் இவ்வுலகத்தை உண்டு பண்ணுகின்றன" என்றிருக்கிறது.

இக்காரியத்தைப் பொறுத்தவரையில்[9], இதுவே நேர்கிறது எனச் சிலர் சொல்கிறார்கள்; சிலர் இது நேர்வதில்லை என்று சொல்கிறார்கள்; சிலர் இவை இரண்டுமில்லை என்கிறார்கள்; சிலர் இவற்றின் முரண்நிலைகள் நேர்வதில்லை என்கிறார்கள். பொருட்களைப் பொறுத்தவரையில், செயல்களைச் சார்ந்திருப்போரின் வாதங்களே இவை. எனினும், உண்மையை நோக்கி பார்வை கொண்டோர், பிரம்மமே காரணம் என்று கருதுகின்றனர்[10].(21) வாழும் உயிரினங்களுக்குத் தவமே உயர்ந்த நன்மையாகும். அமைதி மற்றும் சுயக்கட்டுப்பாடே தவத்தின் வேர்களாகும். தவத்தின் மூலம் ஒருவன் தன் மனத்தில் விரும்பும் அனைத்தையும் அடைகிறான்.(22) தவத்தின் மூலம் அவன் இந்த அண்டத்தைப் படைப்பவனையே அடைகிறான். எவன் (தவத்தின் மூலம்) அவனை அடைவதில் வெல்கிறானோ, அவன் அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவனாகிறான்.(23) முனிவர்கள் தங்கள் தவத்தின் மூலமே வேதங்களை இடையறாமல் படிக்க இயன்றவர்களாகிறார்கள். சுயம்பு தொடக்கத்திலேயே, அறிவின் வடிவங்களும், தொடக்கமும் முடிவும் இல்லாதவையும், (குருவிடம் இருந்து சீடனுக்கும்} பாய்கின்றவையுமான அந்தச் சிறந்த வேத ஒலிகளை உண்டாக்கினான். அந்த ஒலிகளில் இருந்து அனைத்தை வகைச் செயல்பாடுகளும் உண்டாகின.(24) முனிவர்களின் பெயர்கள், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் இருப்பில் தெரியும் பல்வேறு வடிவங்கள், செயல்பாடுகள் அனைத்தின் நடைமுறைகள் ஆகியன வேதங்களிலேயே தங்கள் தோற்றுவாயைக் கொண்டிருக்கின்றன[11].(25)

[9] "அஃதாவது, இந்தப் பல்வேறு வகைப்பட்ட இருப்புகளும், பல்வேறு வகைப்பட்ட உறவுகளும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[10] "அனுபே Anubhe என்பது உபயவ்யதிரிக்தம் ubhayavyatiriktam என்று விளக்கப்படுகிறது. சத்வஸ்தாம் Sattwasthaah என்பது உண்மையில் இருப்பில் உள்ளதான பிரம்மமே விளைவுகள் அனைத்தையும் உண்டாக்க வல்ல உயர்ந்த காரணம் எனக் கருதுபவர்களைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கர்மத்திலிருப்பவர்கள் சந்தேகிக்கத்தக்கப்படியே சொல்வார்கள். ஸத்வ குணத்திலிருக்கும் ஞானிகள் எங்கும் ஒன்றான பிரம்மத்தைக் காரணமாகக் கண்டிருக்கிறார்கள்" என்றிருக்கிறது.

[11] "இந்தச் சுலோகங்களின் உண்மை பொருட்களைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. சொல்லுக்குச் சொல்லான மொழிபெயர்ப்பு இங்கே பொருளைக் கொண்டுவரவில்லை. வெளிப்படையாகச் செல்வதென்றால் வேதங்களில் அனைத்துப் பொருட்களும் இருக்கின்ற என்று சொல்வது பொருளில்லாததாகும். எனினும் உண்மையில், இந்தச் சுலோகம் சொல்ல முனைவது என்னவென்றால், படைப்பாளன் எதையும் படைப்பதற்கு முன்பு பேசிய சொற்கள் அல்லது பேச்சே வேதங்கள் என்பதாகும். {பைபிளின்} ஆதியாகமம் முதல் அதிகாரத்திற்கும், ஸ்ருதிகளில் இருப்பதற்கும் ஒரு நெருக்கமான உறவு இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பூமி உண்டாகட்டும் என்றதும் பூமி உண்டானது என ஆதியாகமத்தின் கவி சொல்ல வருகிறார். நீலகண்டர், ஸ்ருதிகளில் இருந்து இதே போன்ற வார்த்தைகளான, "பூரிதி வியாஹரண் ஸ பூமிமஸ்ரீஜத், Bhuriti vyaaharan sa Bhumimasrijat" என்பதைக் குறிப்பிடுகிறார். அப்போது நான்கு வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகளும், வழிபாட்டு முறைகள் குறிப்பிடப்படுகின்றன. எனவே, வேதங்களில் இருக்கும் அனைத்துச் செயல்களும் பிரம்மனின் வார்த்தைகளே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பைபிளின் ஆதியாகமத்தைக் கங்குலி இங்கே குறிப்பிடுவது வெள்ளைக்காரர்களுக்கு ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகவே இருந்திருக்க வேண்டும். கும்பகோணம் பதிப்பில் முற்றாக வேறு வகையில், "ஸத்வ குணத்திலிருக்கும் ஞானிகள் எங்கும் ஒன்றான பிரம்மத்தைக் காரணமாகக் கண்டிருக்கிறார்கள். அந்தப்ரம்மஜ்ஞானத்தால் பிராணிகளுக்கு மோக்ஷமுண்டாகும். அந்தப்ரம்மஜ்ஞானத்திற்குச் சமமும், தமமும் சாதகமாகும் மனத்தால் விரும்புகிற போகங்களையெல்லாம் அந்தப்ரம்மஜ்ஞானத்தால் அடைவான். உலகங்களை உண்டுபண்ணுகிறப்ரம்மத்தைத் தவத்தால் அடைவான். பிரம்மத்தன்மை பெற்ற மனிதன் எல்லாப் பிராணிகளுக்கு ஈசனாகிறான்" என்றிருக்கிறது.

உண்மையில், அனைத்துப் பொருட்களின் உயர்ந்த தலைவன், தொடக்கத்தில் வேத வார்த்தைகளில் இருந்தே அனைத்துப் பொருட்களையும் உண்டாக்கினான். உண்மையில், முனிவர்களின் பெயர்களும், படைக்கப்பட்ட வேறு அனைத்தும் வேதங்களில் இருக்கின்றன. படைக்கப்படாதவனான பிரம்மன் தன் இரவு கடந்ததும் (விடியற்காலையில்), ஏற்கனவே இருந்த மூலப் படிமங்களில் இருந்து, உண்மையில் ஏற்கனவே அவனால் உண்டாக்கப்பட்டவையேயான அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான்[12].(26) வேதங்களில், இல்லற வாழ்வுமுறையைப் பின்பற்றுதல் {கிருகஸ்தாஸ்ரமம்}, தவங்கள், வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தின் பொதுவான கடமைகளை நோற்பது, வேள்விகள், தூய புகழுக்கு வழிவகுக்கும் செயல்கள் அனைத்தையும் செய்தல், மூவகைத் தியானங்கள், இம்மையிலேயே வெற்றி (ஸித்தி) என்று அழைக்கப்படும் ஒருவகை விடுதலை என வேத கல்வியின் மூலம் அமையும் பத்து வழிமுறைகளுடன் சேர்த்து ஆன்ம விடுதலை {முக்தி} குறித்தும் சொல்லப்படுகிறது[13].(27) வேத வார்த்தைகளில் அறிவிக்கப்படுவதும், வேதங்களில் கூர்மதி கொண்டோரின் மூலம் உபநிஷத்துகளில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்படுவதும், புரிந்துகொள்ளப்பட முடியாததுமான பிரம்மத்தை, மேலே குறிப்பிடப்படும் நடைமுறைகளைப் பின்பற்றியே படிப்படியாக உணரலாம்.(28) தான் ஓர் உடலைக் கொண்டிருப்பதாக நினைக்கும் ஒரு மனிதனிடம், முரண்பட்ட இரட்டைகள் நிறைந்த இந்த இரட்டை நனவுநிலையானது, அவன் ஈடுபடும் செயல்களின் மூலம் மட்டுமே பிறக்கிறது. (அந்த இரட்டை நனவுநிலையானது, கனவுகளற்ற உறக்கத்திலோ, விடுதலை {முக்தி} அடையப்படும்போதோ மறைகிறது). எனினும், விடுதலையை {முக்தியை} அடைந்த ஒருவன், தன் அறிவின் துணை கொண்டு, அந்த இரட்டை நனவுநிலையை விரட்டுகிறான்.(29) (வேதங்கள் எனும்) ஒலியின் மூலமாகத் தெரியும் பிரம்மம் மற்றும் இரண்டாவதாக வேதங்கள் மற்றும் பரம்பொருளைக் கடந்த பிரம்மம் என்ற இரு பிரம்மங்கள் அறியப்பட வேண்டும். ஒலியில் தெரியும் பிரம்மத்தை அறிந்தவன் பரம்பொருளான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்[14].(30)

[12] "அனைத்துப் பொருட்களும் சுஜாதையாகும் Sujaata, அல்லது அவனால் நன்றாகச் செய்யப்பட்டது. பைபிளின் ஆதியாகமத்திலும் தேவன், குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னதும், குறிப்பிட்ட பொருட்கள் இருப்பில் எழுந்தன. அவன் அவற்றை நல்லவையெனக் கண்டான் என்றிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மேலேயே இருக்கும் வார்த்தைகளையும், உண்மையில் பைபிளிகளில் இருக்கும் வார்த்தைகளையும் ஒப்பிட்டால் விளையும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டைக் காணாமால் கங்குலி எளிதாக இவ்வாறு சொல்லிச் செல்வது வாசகர்களுக்கு நெருடலைத் தரலாம். இருப்பினும் கங்குலி கொடுத்திருக்கும் அடிக்குறிப்பை அப்படியே தர வேண்டும் என்பதால் உள்ளபடியே மொழிபெயர்த்திருக்கிறேன். கும்பகோணம் பதிப்பில், "ஆதியும் அந்தமுமில்லாததும் நித்தியமுமான வேதவாக்கானது பிரம்மதேவரால் வெளியிடப்பட்டது. ரிஷிகளின் பெயர்களையும், வேதத்தைப் பற்றிய அவர்களின் அறிவுகளையும், பூதங்களின் நாமரூபக்ரியைகளையும் வேதங்களிலிருந்தே முதலில் அந்த ஈஸ்வரர் உண்டுபண்ணுகிறார். ரிஷிகளுக்குள்ள பெயர்களையும், வேதங்களைப் பற்றிய அவர்களின் அறிவுகளையுமே பிரளயகாலத்திற்குப் பின் உண்டான மற்ற ரிஷிகளுக்குப்ரம்மதேவர் உண்டுபண்ணுகிறார்" என்றிருக்கிறது.

[13] "இந்தச் சுலோகத்தின் முதல் வரிக் கலைச்சொற்களை மட்டுமே கொண்டிருக்கிறது. நாமம் Naam என்பது ரிக் வேதத்தைக் குறிக்கும். எனவே, அஃது அனைத்து வேத கல்வியையும் குறிக்கும். பேதம் என்பது பாதியை, அல்லது அறச் சடங்குகள் அனைத்திலும் கணவனுடன் இணைந்திருக்க வேண்டிய மனைவியைக் குறிக்கும். தபம் Tapah என்பது தவத்தையே குறிக்கும். எனவே அது சாந்திராயணா போன்ற நோன்புகள், வானப்ரஸ்தம் உள்ளிட்ட வாழ்வு முறைகள் ஆகியவற்றையும் குறிக்கும். கர்மம் என்பது காலை மற்றும் மாலை வேளை ஜபங்கள் முதலிய செயல்களைக் குறிப்பதாகும். யஜ்ஞம் என்பது ஜ்யோதிஷ்டோமம் முதலிய வேள்விகளைப் போன்றது. அகியாம் என்பது குளம் வெட்டுதல், சாலை அமைத்தல் போன்ற நற்புகழுக்கு வழிவகுக்கும் செயல்களைக் குறிக்கும். அலோகம் என்பது மூவகைத் தியானங்களைக் குறிக்கும். இறுதியாக வரும் ஸித்தி என்பது ஒருவனுடைய வாழ்வில் அடையப்படும் விடுதலையைக் குறிக்கிறது. கே.பி.சிங்கா ஸித்தி என்ற குறிப்பைத் தவிர்த்து இந்த ஸ்லோகத்தைச் சரியாக மொழிபெயர்த்திருக்கார். பர்துவான் மொழிபெயர்ப்பாளர் இதை முற்றிலும் தவறாகப் புரிந்திருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வேதங்களில் ஆத்மாவுக்குள்ள மோக்ஷஸித்தியானது வேதாத்தியனம், கிருகஸ்தாஸ்ரமம், வானப்ரஸ்தம், பொதுவான தர்மம், யாகங்கள், கீர்த்தியைத் தரத்தக்க தர்மம், கர்மங்களைப் பற்றிய உபாஸ்தியும் சரீரத்திலுள்ள மனமுதலியவைகள் ப்ரம்ம்மாகப் பாவித்துச் செய்யப்படும் உபாஸ்தியும் ஆத்மரூபமாகப் பாவித்துச் செய்யப்படும் பரமாதமோபாஸ்தியுமாகிய மூன்றுவிதஉபாஸ்திகள், மோகக்ஷம் என்று பத்து வழிகளாக உபதேசிக்கப்படுகிறது" என்றிருக்கிறது.

[14] கும்பகோணம் பதிப்பில், "பிரணவமென்ற சப்தப்ரம்மம் பரப்ரம்மம் என்ற இரண்டு பிரம்மங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். சப்தப்ரம்மத்தைத் தியானிப்பதில் ஸமர்த்தனானவன் பரப்பரம்மத்தை அறிவான்" என்றிருக்கிறது.



விலங்குகளைக் கொல்வதே {உயிரினங்களைக் கொல்வதே} க்ஷத்திரியர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. தானியங்கள் வளர்ப்பதே வைசியர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. மூவகையினருக்கும் தொண்டாற்றுவதே சூத்திரர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. தவங்கள் (அல்லது பிரம்ம வழிபாடே) பிராமணர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது.(31) கிருத யுகத்தில் வேள்விகள் செய்வதற்கான தேவை ஏதும் இல்லாதிருந்தது. அத்தகய செயல்பாடு திரேதா யுகத்தில் அவசியமானது. துவாபர யுகத்தில் வேள்விகள் வீழத் தொடங்கின. கலியிலும் வீழ்ந்து கொண்டே இருக்கிறது.(32) கிருத யுகத்தில் மனிதர்கள் பிரம்மம் ஒன்றை மட்டுமே வழிபட்டு, முன்னேற்றம் காணும் பெரும் நோக்கத்தோடு செயல்படும் ரிக்குகள், யஜுஸ்கள், சடங்குகள், வேள்விகள் ஆகிய அனைத்தையும் தங்கள் வழிபாட்டில் இருந்து அந்நியமாகக் கருதி தவங்களின் மூலமாக யோகத்தை மட்டுமே செய்துவந்தனர்.(33) திரேதா யுகத்தில், பெரும் வலிமைமிக்க மனிதர்கள் பலர் தோன்றி அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் ஆட்சி செய்தனர். (பொதுவாக அந்த யுகத்தின் மனிதர்கள் இயல்பாகவே அறம் சார்ந்த நடைமுறைகளைச் செய்யவில்லையெனினும், பெரும் தலைவர்கள் அத்தகைய நடைமுறைகளிலேயே அவர்களைச் செலுத்தினர்). அதன்படி அந்த யுகத்தில் வேதங்கள், வேள்விகள் மற்றும் பல்வேறு வகையினருக்கிடையிலான வேறுபாடுகள், நான்கு வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} ஆகியன ஒரு கச்சிதமான நிலையிலேயே இருந்தன. எனினும், துவாபர யுகத்தில் வாழ்நாள் காலம் குறைந்ததன் விளைவால் இவை அனைத்தும் அந்த யுகத்தில் {துவாபர யுகத்தில்} அந்தக் கச்சிதமான நிலையில் இருந்து வீழ்ந்தன.(34,35)

கலியுகத்தில், வேதங்கள் அனைத்தும் மனிதர்களால் காணப்பட முடியாதபடிக்கு மிக அரிதானதாகிவிடும். கொடுமையால் பீடிக்கப்படும் அவர்கள் {கலி யுகத்தில் வாழும் மனிதர்கள்} தங்களுக்காக விதிக்கப்பட்ட சடங்குகள் மற்றும் வேள்விகளுடன் சேர்த்து அழிவை அடைகிறார்கள்.(36) கிருத யுகத்தில் காணப்படும் அறம், இப்போது {இந்தக் கலியுகத்தில்} தூய்மையான ஆன்மாக்களைக் கொண்டவர்களும், தவங்களுக்கும், சாத்திரக் கல்விக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான அத்தகைய பிராமணர்களிடம் மட்டுமே காணப்படும்.(37) பிற யுகங்களைப் பொறுத்தவரையில் மனிதர்கள், ஒரேயடியாகத் தங்கள் கடமைகளையும், அறச்செயல்களையும் விட்டுவிடாமல், வேத விதிகளை அறிந்து, தங்கள் தங்களுக்குரிய நடைமுறைகளை நோற்று, சாத்திரங்களின் அதிகாரத்தில் வழிநடத்தப்பட்டு முன்னேறும் நோக்கத்தாலும் விருப்பத்தால் வேள்விகளையும் நோன்புகளையும் செய்து, புனித நீர்நிலைகள் மற்றும் புனிதத் தலங்களுக்குச் செல்வார்கள்[15].(38)

[15] "இந்த ஸ்லோகம் ஒரே பொருளைக் கொண்ட இணைத் தொடர் என்பதில் ஐயமில்லை. உரையாசிரியர் நான் சொல்லியிருக்கும் வகையிலேயே இதைப் பொருள் கொண்டிருக்கிறார். யதாதர்மம் Yathaadharmam என்பது அவரைப் பொறுத்தவரையில், "அறம் சார்ந்த செயல்கள் மற்றும் கடமைகளை மீறாமல்" என்ற பொருளைக் கொண்டதாகும். யதாகமம் Yathaagamam என்பது "சாத்திரங்களின் அதிகாரத்தைப் பின்பற்றுவதாகும்". விக்ரியதே Vikriyate என்பது முன்னேற்றம் மற்றும் ஈட்டும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகும். அஃதாவது இதன் பொருள் என்னவென்றால், {கலியுகம் தவிர்த்த} மற்ற மூன்று யுகங்களிலும், மனிதர்கள் முற்றாக அறத்தைக் கைவிடாமல், விடுதலைக்கு {முக்திக்கு} தாயாராவதற்காக இல்லாமல் சிறு ஈட்டல் நோக்கத்தின் மூலம் நற்செயல்களையும், வேத சடங்குகள், வேள்விகள் சாத்திர நோன்புகளை நோற்றனர் என்பதாகும். கலியுகத்திலும், வேத சடங்குகள் முற்றாக அறியப்படாமல் போகாது. எனினும், அது செய்யப்படும் நோக்கம் தாழ்ந்த வகையை அல்லது இழிந்த வகையைச் சேர்ந்ததாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மழைக்காலத்தில், அசையாத வகையைச் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு புதிய பொருட்கள், மேகத்தில் இருந்து பொழியும் மழையின் மூலம் உயிர்பெறுவதைப் போலவே ஒவ்வொரு புதிய யுகத்திலும் பல்வேறு வகைப் புதி கடமைகளும், அறநோன்புகளும் தோன்றுகின்றன.(39) குறிப்பிடத்தக்க அதேவகைத் தோற்றப்பாடுகள் பருவகாலங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதுடன் சேர்ந்து மீண்டும் தோன்றுவதைப் போலவே ஒவ்வொரு புதிய படைப்பின்போதும், ஒவ்வொரு புதிய பிரம்மன் மற்றும் ஹரனில் அதே குணங்கள் தோன்றுகின்றன.(40) இதற்கு முன்பே நான், தொடக்கமும், முடிவும் இல்லாததும், அண்டத்தில் இந்தப் பல்வேறு வகைகளை விதிப்பதுமான காலம் குறித்தும் உன்னிடம் பேசியிருக்கிறேன். அந்தக் காலமே உயிரினங்கள் அனைத்தையும் படைக்கவும் விழுங்கவும் செய்கிறது.(41) முரண்பட்ட இரட்டைகளுக்கு ஆட்படும் எண்ணற்றவையும் இருப்பில் இருப்பவையுமான உயிரினங்கள் அனைத்தும், தங்கள் தங்களுக்குரிய இயல்புகளின்படியே காலத்தைத் தங்கள் புகலிடமாகக் கொள்கின்றன.(42) ஓ! மகனே, இவ்வாறே படைப்பு, காலம், வேள்விகள், பிற சடங்குகள், வேதங்கள், அண்டத்தில் உண்மையில் செயல்படும் இருப்பு, செயல்பாடு, செயல்பாட்டின் விளைவுகள் குறித்து நீ கேட்ட அனைத்து காரியங்களையும் குறித்துப் பேசிவிட்டேன்" என்றார் {வியாசர்}.(43)

சாந்திபர்வம் பகுதி – 232ல் உள்ள சுலோகங்கள் : 43

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்