Senses, their objects and elements! | Shanti-Parva-Section-252 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 79)
பதிவின் சுருக்கம் : புலன்கள், தன்மாத்திரைகள் மற்றும் ஐம்பூதங்களுக்கிடையில் உள்ள உறவு; ஐம்பூதங்களின் குணங்கள் ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்து, அறம், பொருள் ஆகிய இரண்டு காரியங்களையும் நிறைவேற்றிய ஒரு சீடனிடம், திறம்பெற்ற ஓர் ஆசான் அத்யாத்மா குறித்து முன்சொன்ன பகுதியில் சொல்லப்பட்ட அனைத்தையும் முதலில் சொல்ல வேண்டும்.(1) ஐந்து பொருட்களை உள்ளடக்கமாகக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, ஒளி, நீர், ஐந்தாவதாகக் கணக்கிடப்படும் பூமி, பாவம், அபாவம் ஆகியற்றைக் கொண்டுள்ளது[1].(2) வெளியானது {நிரம்பாமல்} வெறுமையாக இருக்கும் இடைவெளியாகும். கேள்விப் புலன்கள் வெளியைக் கொண்டிருக்கின்றன. வடிவம் கொண்ட பொருள்களின் அறிவியலை அறிந்தவர்கள், வெளியானது ஒலியைத் தன் குணமாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.(3)
[1] பஞ்சசு Panchasu என்பது பஞ்சாத்மகேஷு Panchaatmakeshu என உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. எனவே அவர், பாவம், அபாவம் மற்றும் காலம் ஆகியவற்றையும் முறையாகவே பூதங்களுக்குள் சுட்டிக்காட்டுகிறார். பாவம் என்பது கர்மம், சாமான்யம், விசேஷம், சமவாயம் ஆகிய நான்கைக் குறிக்கிறது. அபாவம் என்பது, ஒரு பொருளால் கொள்ளப்படாத குறிப்பிட்ட குணங்களின் எதிர்மறை நிலை என்ற பொருளைக் கொண்டுள்ளது. ஒரு பொருள் வேறு குணங்கள் எதனைக் கொண்டிருந்தாலும், அதற்கு இல்லாத குறிப்பிட்ட குணங்களை எண்ணாமல் அப்பொருளை நம்மால் நினைக்க முடிவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(இடம்பெயர்வதில் துணைபுரியும்) கால்கள், காற்றையே {வாயுவையே} தங்கள் சாரமாகக் கொண்டுள்ளன. முக்கிய மூச்சுக்காற்றுகள் காற்றாலானவையாகும்.
ஊறுபுலன் {தீண்டலை உணரும் புலன்} (தோல்) தீண்டலைத் தன் குணமாகக் கொண்டுள்ளது.(4)
வெப்பம், வயிற்றில் உள்ள செரிமான நெருப்பு, அனைத்துப் பொருட்களைக் காணும் ஒளி, உடலில் உள்ள சூடு, ஐந்தாவதாகக் கண் ஆகியன அனைத்தும் பல்வேறு நிறவடிவங்களைத் தன் குணமாகக் கொண்ட ஒளியாகும்.(5)

வெளியேறும் திரவங்கள் {வியர்வை, சிறுநீர்}, பசை, அனைத்து வகைத் திரவங்கள் ஆகியன நீராகும். குருதி, மஜ்ஜை, (உடலுக்குள்) பசையுடன் இருக்கும் அனைத்தும் நீரைத் தங்கள் சாரமெனக் கொண்டவையாக அறியப்பட வேண்டும். சுவைப்புலன் நாவாகும், சுவையானது நீரின் குணமாகக் கருதப்படுகிறது.(6)
எலும்புகள், பற்கள், நகங்கள், தாடி, உடலில் உள்ள முடிகள், தலை முடி, நரம்புகள், தசைநார்கள், தோல் ஆகியவற்றைப் போலவே திடப்பொருட்கள் அனைத்தும் பூமியாலானவை.(7)
மூக்கு மணப்புலனாக அழைக்கப்படுகிறது. அப்புலனின் நுகர் பொருளான மணமே பூமியின் குணமாக அறியப்பட வேண்டும்.(8)
அடுத்தடுத்த பூதங்கள் ஒவ்வொன்றும், தன் குணத்தையும் தவிர, தனக்கு முந்தைய பூதத்தின் குணத்தையும் பெற்றிருக்கின்றன. வாழும் உயிரினங்கள் அனைத்திலும், (அவித்யை {அறியாமை}, காமம் {ஆசை}, கர்மம் {செயல்} என்ற மூன்று) அடிப்படை காரியங்களும் இருக்கின்றன. ஐம்பூதங்களையும், அவற்றின் விளைவுகளையும், அவற்றில் இருந்து பாயும், அல்லது அவற்றுக்குச் சொந்தமான குணங்களையும் முனிவர்கள் இவ்வாறே சொல்லியிருக்கின்றனர்.(9)

{ஐம்பூதங்கள் மற்றும் மூன்று காரியங்களைப் பொறுத்த} கணக்கீட்டில் மனமானது ஒன்பதாவதாக அமைகிறது, புத்தியானது பத்தாவதாகக் கருதப்படுகிறது. முடிவிலியாக உள்ள ஆன்மாவானது பதினொன்றாவதாக அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் உயர்ந்தவையாகச் சொல்லப்படுகின்றன.(10) மனமானது ஐயத்தைத் தன் சாரமாகக் கொண்டுள்ளது. புத்தியானது, பகுத்தறிந்து, நிச்சயத்தன்மையை உண்டாக்குகிறது. (ஏற்கனவே முடிவிலியாகச் சொல்லப்பட்ட) ஆன்மாவனது, செயல்களில் இருந்து பெறப்பட்ட விளைவுகள் மூலம் உடல்படைத்த ஜீவன் (அல்லது ஜீவாத்மன்) என அழைக்கப்படுகிறது[2].(11) உயிரினங்கள் அனைத்தும், காலத்தைத் தங்கள் சாரமாகக் கொண்ட இவை அனைத்தையும் கொண்டிருந்தாலும், {முன் சொன்னவற்றால்} அவற்றால் களங்கப்படாதனவாக அவற்றை {அந்த உயிரினங்களைப்} பார்க்கும் மனிதன், குற்றத்தால் பாதிப்படைந்த செயல்களை ஒருபோதும் தொடர வேண்டியிருக்காது {ஒருபோதும் செயல்களில் கலக்கமடைய வேண்டியதில்லை}[3]" என்றார் {வியாசர்}.(12)
[2] இது மிகக் கடினமான சுலோகமாகும் எனச் சொல்லும் கங்குலி சம்ஸ்க்ருத இலக்கணம் மற்றும் இங்கே அமைந்திருக்கக்கூடிய வாக்கிய அமைப்பு ஆகியவற்றைக் குறித்து இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சரீரத்தை அறிகிறவனான அந்த ஜீவனானவன் கர்மபலரூபமான காரணத்தினால் அறியத் தகுந்தவன்" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "காலரூபமான இந்தக் கொள்கைகளெல்லாவற்றாலும் எல்லாம் வியாபிக்கப்பட்டதாகப் புத்தியினால் கலக்கமின்றிப் பார்க்கிறவன் மோகத்தை அடைகிறதில்லை" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 252ல் உள்ள சுலோகங்கள் : 12
ஆங்கிலத்தில் | In English |