Tuesday, October 23, 2018

உடல் மற்றும் வடிவம்! - சாந்திபர்வம் பகுதி – 306

Body and form! | Shanti-Parva-Section-306 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 133)


பதிவின் சுருக்கம் : உயிரினங்கள் உடல் மற்றும் வடிவம் ஆகியவை உண்டாகும் வழிமுறை; ஆத்மா, பரமாத்மா, விடுதலை ஆகியவை குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்...


ஜனகன் {கராளன் முனிவர் வசிஷ்டரிடம்}, "ஓ! புனிதமானவரே, ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உறவானது, அழிவற்றதற்கும் {அக்ஷரத்திற்கும்}, அழிவுள்ளதற்கும் {க்ஷரத்திற்கும்} (அல்லது புருஷனுக்கும் {ஆன்மாவுக்கும்} பிரகிருதிக்கும்) இடையில் உள்ளதை {உள்ள உறவைப்} போன்றது எனச் சொல்லப்படுகிறது.(1) ஓர் ஆணில்லாமல் ஒரு பெண்ணால் ஒருபோதும் கருவுறமுடியாது. ஒரு பெண்ணில்லாமல் ஓர் ஆணாலும் ஒருபோதும் எந்தவொரு வடிவத்தையும் படைக்க முடியாது.(2) ஒருவரோடொருவர் கொள்ளும் கலவியின் விளைவாலும், ஒருவர் அடுத்தவரின் குணங்களைச் சார்ந்திருப்பதாலும் (உயிரினங்களின்) வடிவங்கள் உண்டாவது காணப்படுகிறது. அனைத்து வகைப் பிறவிகளிலும் இதுவே வழக்கமாக இருக்கிறது.(3) (பாலினப்) புணர்வு நோக்கங்களுக்காக ஒருவரோடொருவர் கொள்ளும் கலவியின் மூலமும், ஒருவர் மற்றவரின் குணங்களைச் சார்ந்திருப்பதன் மூலமும், மாதவிடாய் {ருது} காலங்களில் (உயிரினங்களின்) வடிவங்கள் உண்டாகின்றன. அதன் குறியீடுகளை நான் உமக்குச் சொல்கிறேன்.(4) தந்தைக்குரிய குணங்களையும், தாய்க்குரிய குணங்களையும் கேட்பீராக. ஓ! மறுபிறப்பாளரே {வசீஷ்டரே}, எலும்புகள், நரம்புகள், ஊன் ஆகியன தந்தையிடம் இருந்து பெறப்படுகின்றன என்று நாம் அறிகிறோம்.(5) தோல், சதை, குருதி ஆகியன தாயிடம் இருந்து பெறப்படுகின்றன எனக் கேள்விப்படுகிறோம். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, வேதங்களிலும், பிற சாத்திரங்களிலும் இதையே படிக்க முடிகிறது.(6)

வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டதாகப் படிக்கப்படும் எதுவும் அதிகாரமிக்கதாகக் கருதப்படுகிறது. மேலும், வேதங்கள் மற்றும் (வேதங்களுக்கு இணங்கிய) பிற சாத்திரங்களின் அதிகாரம் நித்தியத்தன்மை கொண்டதாகும்.(7) பிரகிருதி மற்றும் புருஷனால், ஒன்றையொன்று எதிர்த்தும், ஒன்றின் குணங்களை மற்றது சார்ந்துமென எப்போதும் கலந்திருக்க முடியுமென்றால்,(8) ஓ! புனிதமானவரே {வசீஷ்டரே}, விடுதலை {முக்தி} என்ற ஒன்று இருக்க முடியாது என்றே நான் காண்கிறேன். ஓ! புனிதமானவரே, அனைத்துப் பொருட்களும் உமது கண்ணெதிரே இருப்பது போன்ற ஆன்ம பார்வையைக் கொண்டவர் நீர். எனவே, விடுதலையின் {முக்தியின்} இருப்புக்கான நேரடி சான்று ஏதேனும் இருந்தால், அது குறித்து எனக்குச் சொல்வீராக.(9) நாம் விடுதலையை அடைய விரும்புகிறோம். உண்மையில், மங்கலமானதும், உடலற்றதும், முதுமையற்றதும், நித்தியமானதும், புலன்களின் திறனுக்கு எட்டாததும், தனக்கு மேன்மையான ஏதும் அற்றதுமான அஃதை அடையவே நாம் விரும்புகிறோம்" என்றான் {கராளன்}.(10)

வசிஷ்டர் {கராளனிடம்}, "(இக்காரியத்தைப் பொறுத்தவரையில்), வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் குறியீடுகள் நீ சொல்வது போலத்தான் இருக்கின்றன. அக்குறியீடுகளை நீ எடுத்துக் கொள்ள {புரிந்து கொள்ள} வேண்டிய வகையிலேயே எடுத்திருக்கிறாய் {புரிந்து வைத்திருக்கிறாய்}.(11) எனினும், வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் உரைகளை மட்டுமே நீ உன் புத்தியில் கொண்டிருக்கிறாய். ஓ! ஏகாதிபதி, அவ்வுரைகளின் உண்மையான பொருளை நீ உண்மையில் அறிந்து கொள்ளவில்லை.(12) எந்த மனிதன், வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் உரைகளுடைய உண்மைப் பொருளை அறிந்து கொள்ளாமல் வெறுமனே உரைகளை மட்டும் தன் புத்தியில் சுமக்கிறானோ, அவன் அவற்றைக் கனியில்லாமலேயே சுமக்கிறான்.(13) உண்மையில், ஒரு படைப்பின் பொருளைப் புரிந்துகொள்ளாமல், அதன் உள்ளடக்கத்தை நினைவில் கொள்பவன், பயனற்ற சுமையைச் சுமப்பதாகவே சொல்லப்படுகிறது. எனினும், ஓர் ஆய்வின் {கிரந்தத்தின்} உண்மைப் பொருளை அறிந்தவன், அவ்வாய்வின் நோக்கத்தைக் கற்றவனாகச் சொல்லப்படுகிறான்.(14) ஓர் உரையின் பொருளைக் குறித்துக் கேட்கப்படும்போது, கவனமாகக் கற்றதன் மூலம் தான் புரிந்து கொண்ட பொருளைச் சொல்வதே ஒருவனுக்குத் தகும்.(15)

எந்த மந்த புத்தியுள்ளவன், கல்விமான்களின் கூட்டத்திற்கு மத்தியில் உரைகளின் பொருளை விளக்க மறுப்பானோ அந்த மூடப் புத்தியுள்ளவனால், சரியான பொருளை ஒருபோதும் விளக்க முடியாது[1].(16) அறியாமை கொண்டவன், ஆய்வுகளின் உண்மைப் பொருளை விளக்கப் புகும்போது கேலிக்குள்ளாகிறான். ஆன்மாவைக் குறித்த அறிவைக் கொண்டவர்களும் கூட, (அவர்கள் விளக்குவது கல்வியால் {கவனத்துடன் படித்துப் புரிந்து கொண்ட கல்வியால்} அடைந்ததாக இல்லையென்றால்) அத்தக்கைய சந்தப்பங்களில் கேலிக்கே உள்ளவார்கள்.(17) ஓ! ஏகாதிபதி {கராளனே}, சாங்கிய மற்றும் யோக தத்துவ அமைப்புகளை அறிந்த உயர் ஆன்மாக்களுக்கு மத்தியில் (பழங்காலத்தில் இருந்து ஆசான்களால் சீடர்களுக்கு) விடுதலை குறித்து எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதை இப்போது கேட்பாயாக.(18) யோகிகள் காண்பதையே சரியாகச் சாங்கியர்களும் அடைய முனைகிறார்கள். எவன் சாங்கிய மற்றும் யோக அமைப்புகளை ஒன்றெனக் காண்கிறானோ அவன் புத்திமானெனச் சொல்லப்படுகிறான்.(19) நீ என்னிடம் சொன்ன தோல், சதை, குருதி, கொழுப்பு, பித்தம், ஊன், நரம்புகள், (ஞானம் மற்றும் செயல் என்ற இரு வகை) புலன்கள் ஆகியன {உண்மையில்} இருக்கின்றன.(20)

[1] "ஓர் ஆய்வை ஒரு கூட்டத்தின் மத்தியில் விளக்கும் கடமையானது, எப்போதும் சிறந்த நுண்திறன்களைத் தூண்டுகிறது, அது கல்விமான்களின் கூட்டமாக இருக்கும்போது, ஏற்படும் அறிவு மோதல் சரியான பொருளை வெளிப்படுத்தும் என்ற பொருளை இந்த ஸ்லோகம் தருகிறது என நினைக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கேட்பவன் கேட்டவுடன் தத்வத்தையறிந்து அதனுடைய பயனை அடையும்படி சொல்லவல்லவனே சொல்லுதற்குத்தக்கவன். ஸ்தூல புத்தியுடையவனும், நுண்ணறிவில்லாதவனுமானவன், கிரந்தத்தினர்த்தத்தை ஸபைகளில் எங்ஙனம் உறுதியாகச் சொல்வான். நந்தக் கிரந்த நிச்சயத்தை உள்ளபடி சொல்ல மாட்டாத மறதியுள்ளவனும், அவனுக்கு நூல்களைக் கற்பித்தவனும் பரிஹஸிக்கத்தக்க புத்தியையுடைவர்களாகிறார்கள்" என்றிருக்கிறது.

பொருட்கள் பொருட்களிலிருந்தும், புலன்கள் புலன்களிலிருந்தும் உண்டாகின்றன. வித்தானது வித்திலிருந்து பெறப்படுவதைப் போலவே, ஓர் உடலிலிருந்தே ஒருவன் உடலை அடைகிறான்.(21) பரம்பொருளானவன், புலன்களற்றவனாக, வித்தற்றவனாக {வித்து அற்றவனாக}, பருப்பொருளற்றவனாக, உடலற்றவனாக இருக்கும்போது, அவன் குணங்கள் அனைத்தும் அற்றவனாகவே இருக்க வேண்டும்; அவன் அவ்வாறு இருப்பதன் விளைவால் அவன் எவ்வகைக் குணங்களையும் எவ்வாறு பெற்றிருக்க முடியும்?(22) வெளி {ஆகாயம்} மற்றும் பிற குணங்கள், சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களில் இருந்து தோன்றி, இறுதியாக அவற்றிலேயே மறைகின்றன. இவ்வாறே குணங்கள் பிரகிருதியில் இருந்து எழுந்து பிரகிருதியிலேய மறைகின்றன.(23) பிரகிருதியிலான தோல், சதை, குருதி, கொளுப்பு, பித்தம், ஊன், எலும்புகள் மற்றும் நரம்புகள் ஆகிய இந்த எட்டும் (ஆணின்) உயிர் வித்தின் மூலம் உண்டாக்கப்படுகின்றன.(24) ஜீவாத்மா, அண்டம் ஆகிய இரண்டும் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் மூலம் பிரகிருதியின் தன்மையைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. பரமாத்மாவானவான், ஜீவாத்மா மற்றும் அண்டம் ஆகிய இரண்டிலும் இருந்து வேறுபட்டவனாவான்[2].(25)

[2] கும்பகோணம் பதிப்பில், "தோல், மாம்ஸம், உதிரம், மேதை, மஜ்ஜை, பித்தம், எலும்பு, நரம்பு இந்த எட்டையும் வீரியத்தினாலுண்டானவைகளாகவும், பிரகிருதியாலுண்டானவைகளாகவும் அறி. புருஷன், புருஷனைக் காட்டிலும் வேறான ஸ்திரீ, அலி, ஆகிய மூன்று லிங்கங்களும் பிரகிருதியைச் சேர்ந்தவைகளாகக் கருதப்பட்டன. புருஷனாகாதவனும், ஸ்திரீயும், அலியுமாகாதவனுமாயிருக்கிற அந்த ஆத்மாவானவன் லிங்கத்துடன் கூடியவனாகச் சொல்லப்படுகிறான். லிங்கமற்றவனான ஆத்மாவையடைந்து பிரகிருதியானது தன்னிடமுண்டான காரியலிங்கங்களாலே அறியப்படுகின்றது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தோல், சதை, குருதி, கொழுப்பு, பித்தம், ஊன், எலும்புகள் மற்றும் நரம்புகள் ஆகிய இந்த எட்டும் வித்தில் இருந்தும், பிரகிருதியில் இருந்து படைக்கப்பட்டன என்பதை அறிவாயாக. ஆண், ஆணற்றது (பெண் மற்றும் அலி) ஆகிய இந்த மூன்று பாலினங்களும் பிரகிருதியின் விளைவுகளாகச் சொல்லப்படுகின்றன. ஆணற்றவர்கள், ஆணற்ற பாலினங்களாக {பெண் மற்றும் அலியாகச்} சொல்லப்படுகிறார்கள். பிரகிருதிக்குப் பாலினம் கிடையாது. ஆனால் அவளது வாரிசு பாலினத்தையும், வடிவத்தையும் பெறுகிறது" என்றிருக்கிறது. இவ்விரு ஸ்லோகங்களில் கங்குலி, கும்பகோணம் மற்றும் பிபேக்திப்ராய் - இம்மூன்று பதிப்புகளும் வெவ்வேறு வகையில் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கின்றன. அதிலும் கங்குலி பெரிதும் வேறுபட்டிருக்கிறது.

பருவகாலங்கள் வடிவமற்றவையாக இருந்தாலும், குறிப்பிட்ட கனிகள் மற்றும் மலர்களின் தோற்றங்களின் மூலம் {தோன்றும் காலத்தைக் கொண்டு அவை} ஊகிக்கப்படுவதைப் போலவே, பிரகிருதியும் வடிவமற்றதாக இருந்தாலும், மஹத்-ன் குணங்கள் மற்றும் அதனில் இருந்து எழும் எஞ்சிய குணங்களால் ஊகிக்கப்படுகிறது.(26) இவ்வழியிலேயே, உடலில் சைத்யன்யத்தின் இருப்பும், எந்தக் குணமும் இல்லாத, முற்றிலும் களங்கமற்ற பரமாத்மா ஆகியவை அறியப்படுகின்றன.(27) தொடக்கமும், அழிவும் இல்லாததும், முடிவு இல்லாததும், அனைத்துப் பொருட்களையும் மேற்பார்வையிடுவதும், மங்கலமானதுமான ஆன்மாவானது, தன்னை உடலோடும், பிற குணங்களோடும் அடையாளம் காண்பதன் விளைவால் மட்டுமே குணங்களுள்ளதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது {புரிந்து கொள்ளப்படுகிறது}.(28) குணங்களை உண்மையில் அறிந்தவர்கள், குணங்களுடன் கூடிய பொருட்களால் மட்டுமே குணங்களைக் கொண்டிருக்க முடியும் என்பதையும், ஆனால் எது குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கிறதோ, அதனால் எந்தக் குணத்தையும் கொண்டிருக்க முடியாது என்பதையும் அறிகிறார்கள்.(29) பிழையால் ஏற்கப்பட்டதையும், பிரகிருதியில் பிறந்த குணங்கள் அனைத்தையும், ஜீவாத்மா வெல்லும்போது மட்டுமே அது பரமாத்மாவைப் பார்க்கிறது.(30)

அறிவதாகக் கருதப்படுவதும், அறியாமை அல்லது பிழையின் குணத்தைக் கடந்ததும், புலப்படாததும், குணங்கள் அனைத்தையும் கடந்ததும், பரம் {உயர்ந்தது} என அழைக்கப்படுவதும், குணங்கள் அனைத்தின் தொடர்பறுத்ததும், அனைத்துப் பொருட்களையும் விதிப்பதும், நித்தியமானதும், மாற்றமில்லாததும், பிரகிருதியைப் புறக்கணிப்பதும், இருபத்துநான்கு தத்துவங்களைக் கடந்து இருப்பதைந்தாவதாக இருப்பதும், சாங்கியர்கள், யோகியர்கள் மற்றும் பிற அமைப்புகளை நம்புபவர்கள் அனைவராலும் புத்தியைக் கடந்தது எனச் சொல்லப்படுவதுமான பரமாத்மாவை சாங்கிய மற்றும் யோக அமைப்புகளை அறிந்த உயர்ந்த முனிவர்கள் மட்டுமே அறிகிறார்கள்.(31-33) பிறவியை அஞ்சுபவர்களும், வாழும் நனவின் {அகங்காரத்தின்} பல்வேறு நிலைகள் மற்றும் மரணத்தைக் கொண்டவர்களுமான ஞானிகள், புலப்படாததை அறிவதில் வெல்லும்போது, பரமாத்மாவைப் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(34) ஜீவாத்மாவானது, பரமாத்மாவுடன் கலப்பது சாத்திரங்களுக்கு இணக்கமானதும், முற்றிலும் சரியானதுமென ஒரு புத்திமான் கருதுகிறான்; அதே வேளையில் புத்தியற்றவனோ அவற்றை {ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும்} ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகப் பார்க்கிறான்.(35)

க்ஷரம் மற்றும் அக்ஷரம் (அழியத்தக்கது மற்றும் அழிவற்றது) ஆகிய இரண்டின் குறியீடுகளை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். அக்ஷரம் என்பது ஒருமை அல்லது ஒற்றுமை, அதே வேளையில் பலவகையானது க்ஷரமாகும்.(36) ஒருவன் இந்த இருபத்தைந்து தத்துவங்களை முறையாகப் புரிந்து கற்கத் தொடங்கும்போது, ஆன்மாவின் ஒருமை சாத்திரங்களுக்கு இணக்கமானது என்பதையும், அதன் பன்மை அவற்றுக்கு எதிரானது என்பதையும் புரிந்து கொள்கிறான்.(37) படைக்கப்பட்ட தத்துவங்கள் அல்லது கோட்பாடுகளில் சேர்க்கப்பட்டதும், அப்பட்டியலைக் கடந்து நிற்பதுமான இதன் பல்வேறு குறியீடுகள் இவையே. தத்துவங்களின் பட்டியல் எண்ணிக்கையில் இருபத்தைந்தை மட்டுமே கொண்டது என்று ஞானிகள் சொல்கிறார்கள்.(38) தத்துவங்களைக் கடந்து நிற்பதானது, எண்ணிக்கையைக் கடந்து இருபத்தாறாவதாக அமைகிறது. (எண்ணிக்கையில் இருப்பத்தைந்தாக இருக்கும்) படைக்கப்பட்ட பொருட்களை அவற்றின் (ஐந்து) பூதங்களோடு புரிந்து கொள்வது அல்லது கற்பதே, தத்துவங்களைப் புரிந்து கொள்ளும் கல்வி, அல்லது தத்துவப் புரிதலாகும். இவற்றைக் கடந்து நிற்கும் அதுவே நித்தியமானதாகும்" என்றார் {வசிஷ்டர்}[3].(39)

[3] கும்பகோணம் பதிப்பில், "பேதமானது க்ஷரமாகச் சொல்லப்படுகின்றது. இவன் இருப்பத்தைந்து தத்துவங்களிலும் நிலைபெற்று நன்றாகப் பிரவிருத்திக்கிற பொழுது, இவனுக்கு அபேதமானது ஞானமும் பேதமானது அஜ்ஞானமுமாகின்றன. தத்வத்திற்கும், நிஸ்தத்வத்திற்கும் இது தனித்தனியான உதாரணம். வித்வான்கள் இருபத்தைந்து தத்வத்தையும் தத்வமாகச் சொல்லுகின்றார்கள். தத்வமில்லாததென்கிற நிஸ்தத்வத்தை இருபத்தைந்தாவதற்கு மேலானதும் (இருபத்தைந்தான ஐந்து வர்க்கங்களில்) ஸஞ்சரிப்பதும் (அதனால்) வர்க்கத்திற்கு வர்க்கமும், ஸனாதனமும் (அதனால்) தத்வத்தைக் காட்டிலும் (மேலான) தத்வமுமான உதாரணமாகச் சொல்லுகின்றார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ! எதிரிகளை எரிப்பவனே, புத்திமான்களுக்கும், அறிந்தவர்களுக்குமான பாதைகள் வெவ்வேறானவையாக இருந்தாலும், முறையாகப் போதிக்கப்படும் குறியீடுகள் இவையே. எது அழியத்தக்கது, எது அழிவில்லாதது என்பதற்கான தனித்தனி குறியீடுகளையே அவர்கள் பேசுகிறார்கள். அழிவடையாத ஒருவன் இருக்கிறான், வேறு அனைத்தும் அழிவுக்குத்தகுந்ததாகச் சொல்லப்படுகின்றன. ஒரு மனிதன் இருபத்தைந்து குணங்களை முறையாகக் கற்றபிறகு, அனைத்து தத்துவங்களும் ஒருவனுக்கே வழிவகுக்கின்றன என்றும், பலவகைத் தத்துவங்கள் பொருத்தமில்லாதவை என்றும் உணர்ந்து கொள்கிறான். தனிப்பட்ட குறியீடுகளைக் கடந்து மேம்பட்ட உண்மையொன்று இருக்கிறது. படைக்கப்பட்ட இருப்பத்தைந்து வகைகளில் இதையே உண்மையானதெனக் கற்றோர் சொல்கின்றனர். உயர்ந்த உண்மையானது இந்த இருபத்தைந்தையும் கடந்திருக்கிறது. வகைகளும், அந்த வகைகளின்படியான ஒழுக்கமும் இருக்கிறது. இஃது உண்மையாக இருக்கும்போது, நித்திய உண்மையானது இதையும் கடந்திருக்கிறது" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 306ல் உள்ள சுலோகங்கள் : 39

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்