The indication of three attributes! | Shanti-Parva-Section-314 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 141)
பதிவின் சுருக்கம் : அத்யாத்மம், அதிபூதம், அதிதெய்வம், முக்குணங்கள் ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...
யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, "தத்துவங்களை அறிந்த பிராமணர்கள் இரு பாதங்களையும் அத்யாத்மா என்றும், {கால்களால்} நடக்கும் செயல்பாட்டை {மார்க்கத்தை} அதிபூதம் என்றும், விஷ்ணுவையே (அந்தப் பாதங்களின்) அதிதெய்வமாகவும் சொல்கின்றனர்.(1) குதம் {பாயு} அதியாத்மம்; அதன் செயல்பாடான மலம் வெளியேற்றுதல் அதிபூதம், மித்திரன் (சூரியன், அந்த உறுப்பின்) அதிதெய்வம்.(2) பிறப்புறுப்பு {குறி} அத்யாத்மம் என்றழைக்கப்படுகிறது. அதன் ஏற்புடைய செயல்பாடு {ஆனந்தம்} அதிபூதம் என்றழைக்கப்படுகிறது, பிரஜாபதி {பிரம்மன்} அதன் அதிதெய்வமாவான்.(3) கைகள் அத்யாத்மம்; அவற்றின் செயல்களைக் குறிக்கும் செயல்பாடு அதிபூதம்; இந்திரன் அந்த உறுப்பின் அதிதெய்வம்.(4) வாக்கு அத்யாத்மம்; அவற்றின் மூலம் சொல்லப்படும் சொற்கள் {சொல்லக்கூடிய விஷயம்} அதிபூதம்; அக்னி அதன் அதிதெய்வம்.(5) கண்கள் {நேத்திரம்} அதியாத்மம்; பார்வை அல்லது வடிவம் {ரூபம்} அவற்றின் அதிபூதம்; சூரியன் அவற்றின் அதிதெய்வம்..(6) காதுகள் {ஸ்ரோத்ரம்} அத்யாத்மம்; ஒலி {சப்தம்} அதன் அதிபூதம்; திசைப்புள்ளிகள் {திக்குகள்} அதன் அதிதெய்வம்.(7)
நாக்கு {ரசனை} அத்யாத்மம்; சுவை {ரஸம்} அதன் அதிபூதம்; நீர் {அப்பு} அதன் அதிதெய்வம்.(8) நுகர்வுணர்வு {கிராணம்} அத்யாத்மம்; மணம் {கந்தம்} அதன் அதிபூதம்; பூமி {பிருதிவி} அதன் அதிதெய்வம்.(9) தோல் {துவக்கு} அத்யாத்மம்; ஊறு {தீண்டல் /ஸ்பரிசம்} அதன் அதிபூதம்; காற்று {வாயு} அதன் அதிதெய்வம்.(10) மனம் அத்யாத்மம்; எதனுடன் மனம் ஈடுபடுகிறதோ அது {நினைக்கக்கூடிய விஷயம்} அதிபூதம்; சந்திரன் அதன் அதிதெய்வம்.(11) நனவுநிலை {அகங்காரம்} அத்யாத்மம்; பிரகிருதியாகத் தன்னைக் காணும் உறுதிப்பாடு {செருக்கு / கர்வம்} அதிபூதம்; மஹத் அல்லது புத்தி அதன் அதிதெய்வம்.(12) புத்தி அத்யாத்மம்; புரிந்து கொள்வது {அறியக்கூடிய விஷயம்} அதிபூதம்; க்ஷேத்ரஜ்ஞன் அதிதெய்வம் {என்றும் தத்துவங்களை அறிந்த பிராமணர்கள் சொல்கிறார்கள்}.(13) ஓ! மன்னா {தேவராதனா}}, மூல தத்துவங்கள் அல்லது கோட்பாடுகளின் இயல்பை முழுமையாக அறிந்தவனே, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் (பல்வேறு வடிவங்களில் வெளிப்படும்) பரமனின் பலத்தை {விபூதியை} உண்மையில் தனித்தனியாக, விவரமாக {ஸ்பஷ்டமாக} உனக்கு விளக்கியிருக்கிறேன்.(14)
ஓ! ஏகாதிபதி, பிரகிருதியானவள் தான் விரும்பியபடி விளையாடுவதைப் போல, தானே மாறுபாடுகளுக்கு {விகாரங்களுக்கு} உட்பட்டு, குணங்கள் என்றழைக்கப்படும் மூல மாறுபாடுகளின் கலவையை ஆயிரமாயிரமாகப் படைக்கிறாள்.(15) மனிதர்கள் ஒரே விளக்கில் இருந்து ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றுவதைப் போலவே, பிரகிருதியும், மாறுபாட்டின் மூலம், புருஷனின் (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் எனும்) முக்குணங்களைச் சார்ந்த இருப்பிலுள்ள ஆயிரக்கணக்கான பொருட்களைப் பெருக்குகிறாள்.(16)
{சத்வ குணம்:}
பொறுமை {தைரியம்}, இன்பம் {ஆனந்தம்}, செழிப்பு {அபிவிருத்தி}, நிறைவு {பிரீதி}, மேலான காரியங்களில் விருப்பம், மகிழ்ச்சி {சுகம்}, {மனத்}தூய்மை, உடல்நலம் {ஆரோக்கியம்}, உள்ளடக்கம் {ஸந்தோஷம்}, நம்பிக்கை {ஸ்ரத்தை},(17) கொடை, கருணை, மன்னிக்கும் தன்மை, உறுதி, நன்மை, சமமாய் இருத்தல், வாய்மை, கடமைகளை அறிதல் {கடனில்லாமை}, மென்மை {நேராயிருத்தல்}, பணிவு {லஜ்ஜை}, அமைதி {சபலமில்லாமை},(18) புறத்தூய்மை {சரீரசுத்தி}, எளிமை {மேன்மை}, கடமை நடைமுறைகளைச் செய்தல் {ஆசாரம்}, ஆசையின்மை, இதயத்தில் அஞ்சாமை {மனத்தில் பரபரப்பில்லாமை}, தோற்றம் அல்லது முற்பிறவி செயல்களின் நன்மை தீமைகளில் அலட்சியம்,(19) கொடைகளைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே பொருட்களைப் பெறுவது, பேராசையின்மை {வைராக்கியம்}, பிறரின் நலத்தைக் கருத்தில் கொள்வது {பரோபகாரம்}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை {தயை} ஆகிய இவை சத்வ குணத்தோடு தொடர்புடையன என்று சொல்லப்படுகிறது.(20)

{ரஜஸ் குணம்:}
ரஜஸ் குணம் தொடர்புடைய பண்புகளின் பட்டியல் மேனியழகில் செருக்கு, தலைமை நிலையை உறுதி செய்தல், போர் {கலகம்}, ஈயாமை, கருணையின்மை {தயையில்லாமை}, இன்பதுன்பங்களை அனுபவித்தல்,(21) பிறரை நிந்திப்பதில் விருப்பம், அனைத்து வகைச் சச்சரவுகளிலும் ஈடுபடல், ஆணவம், மதிப்பின்மை, கவலை, பகைமை பாராட்டல்,{22) பரிதாபம், பிறர் உடைமைகளை அபகரித்தல், வெட்கமின்மை, குறுக்கு புத்தி, ஒழுங்கின்மை, முரட்டுத்தனம், காமம், கோபம், செருக்கு,(23) மேன்மையை உறுதி செய்தல், வன்மம், அபிமானம் ஆகியற்றைக் கொண்டதாகும்.
{தமஸ் குணம்:}
தமஸில் இருந்த உண்டாகும் குணக்கூட்டங்களை இப்போது உனக்குச் சொல்லப்போகிறேன்.(24) தீர்மான மயக்கம் {மோகம்}, ஒளியின்மை, இருள் {தாமிஸ்ரம்}, குருடாக்கும் இருள் {அந்ததாமிஸ்ரம்} ஆகியவையே அவை. இருளின் மூலம் மரணம் குறிப்பிடப்படுகிறது, குருட்டு இருள் என்பது கோபமாகும்.(25). இவற்றைத் தவிர்த்த தமஸின் பிற குறியீடுகள் அனைத்து வகை உணவிலும் பேராசை, உணவிலும் பானத்திலும் தீராப்பசி,(26) மணம், உடை, கேளிக்கை, படுக்கை, இருக்கை, பகலுறக்கம், விவாதம், அலட்சியவுணர்வில் பற்று, விழிப்பின்மையால் உண்டாகும் அனைத்து வகைச் செயல்கள்,(27) அறியாமையால் நடனம், கருவி மற்றும் குரலிசையில் பற்று, சிறப்புமிக்க அறங்கள் அனைத்திலும் வெறுப்பு ஆகியவையாகும். உண்மையில் இவையே தமஸின் குறியீடுகளாகும்" என்றார் {யாஜ்ஞவல்கியர்}.{28}

சாந்திபர்வம் பகுதி – 314ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |