The indications of death! | Shanti-Parva-Section-318 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 145)
பதிவின் சுருக்கம் : உயிர் வெளியேறும் உறுப்புகள் குறிப்பிடும் கதி; மரணக் குறியீடுகள் ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...
யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, "ஓ! மன்னா, மரணமடைபவர்கள் செல்லும் இடங்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன், கவனத்துடன் கேட்பாயாக. ஜீவாத்மா கால்களின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் விஷ்ணுலோகத்திற்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது.(1) ஆடுதசைகளின் வழியே வெளியேறினால் அவன் வசுக்களின் உலகத்திற்குச் செல்கிறான் என நாம் கேள்விப்படுகிறோம். முழங்கால் முட்டிகளின் வழியே வெளியேறினால் அவன் சத்யஸ்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் தோழமையை அடைகிறான்.(2) குதத்தின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் மித்ரனின் உலகத்தை அடைகிறான். பின்தட்டுகளின் வழியே வெளியேறினால் அம்மனிதன் பூமிக்குத் திரும்புகிறான். தொடைகளின் வழியே வெளியேறினால் அவன் பிரஜாபதியின் உலகத்திற்குச் செல்கிறான்.(3)
விலாக்களின் வழியே வெளியேறினால், அம்மனிதன் மருத்துகளின் உலகத்திற்கும்,
மூக்குத்துளைகளின் வழியே வெளியேறினால் சந்திரனின் உலகத்திற்கும் செல்கிறான்.
கரங்களின் வழியே வெளியேறினால் அம்மனிதன் இந்திரலோகத்திற்கும்,
மார்பு வழியே வெளியேறினால் ருத்ரலோகத்திற்கும் செல்கிறான்.(4) கழுத்தின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் நரன் என்ற பெயரில் அறியப்படும் முதன்மையான தவசியின் சிறந்த உலகத்திற்குச் செல்கிறான்.
வாயின் வழியே வெளியேறினால் அம்மனிதன் விஸ்வேதேவர்களின் உலகிற்கும்,
காதுகளின் வழியே வெளியேறினால் பல்வேறு திசைப்புக்களின் தேவர்களுடைய உலகத்திற்கும் செல்கிறான்.(5)
மூக்கின் வழியே என்றால் வாயுதேவனின் உலகத்திற்கும்;
கண்களின் வழியேயென்றால் அக்னிலோகத்திற்கும் அம்மனிதன் செல்கிறான்.
புருவங்களின் வழியேயென்றால் அஸ்வினிலோகத்திற்கும்,
நெற்றியின் வழியேயென்றால் பித்ருலோகத்திற்கும் அம்மனிதன் செல்கிறான்.(6)ஓ! மிதிலையின் ஆட்சியாளா,
உச்சந்தலையின் வழியே வெளியேறினால், அம்மனிதன் தேவர்களில் முதன்மையானவனும், பலமிக்கவனுமான பிரம்மனின் உலகத்திற்குச் செல்கிறான். ஜீவாத்மாக்கள் தங்கள் உடல்களில் இருந்து வெளியேறும் வழிகளின்படியே மனிதர்கள் செல்லும் பல்வேறு இடங்களைக்குறித்து நான் உனக்குச் சொன்னேன்.(7)

வாழ்வதற்கு ஒருவருடம் மட்டுமே கொண்டவர்களைக் குறித்து ஞானிகளால் விதிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை குறியீடுகளை {மரணக் குறியீடுகளை / அரிஷ்டங்களை} இப்போது நான் சொல்லப் போகிறேன்.(8) அருந்ததி என்றழைக்கப்படும் நிலையான விண்மீனை முன்பே கண்டும், துருவம் என்றழைக்கப்படும் மற்றொரு விண்மீனைக் காணத் தவறும் ஒருவனுக்கு, அல்லது முழு நிலவையோ, எரியும் விளக்கின் தழலையோ தென்புறம் நோக்கி உடைந்திருப்பதைப் போலக் காணும் ஒருவனுக்கு வாழ்வதற்கு ஒரு வருடம் மட்டுமே உண்டு {அவர்கள் ஒரு வருடத்திற்கு மேல் இறந்து விடுவார்கள் என்பது பொருள்}.(9) ஓ! மன்னா, பிறரின் கண்களில் பிரதிபலிக்கப்படும் தங்கள் தோற்றங்களைக் காண முடியாத மனிதர்கள் வாழ்வதற்கு ஒரு வருடம் மட்டுமே உண்டு.(10)
காந்தியுடன் கூடிய ஒருவன் அஃதை இழப்பது, அல்லது ஞானத்துடன் கூடியவன் அஃதை இழப்பது என இவ்வாறு தங்கள் அக மற்றும் புற இயல்பில் மாற்றம் கொண்ட ஒருவன் வாழ்வதற்கு ஆறு மாதங்கள் மட்டுமே உண்டு.(11) தேவர்களை அவமதிப்பவன், அல்லது பிராமணர்களிடம் சச்சரவு செய்பவன், அல்லது, இயல்பாகக் கரிய நிறம் கொண்டிருந்தும் வெண்ணிறம் அடையும் ஒருவன் வாழ்வதற்கு ஆறு மாதங்கள் மட்டுமே உண்டு.(12)
சிலந்தி வலையைப் போலச் சந்திரனில் பல துளைகளைக் காணும் ஒருவன், அல்லது அதே போன்ற துளைகளைச் சூரியனில் காணும் ஒருவன் வாழ்வதற்கு ஒரு வாரம் மட்டுமே உண்டு.(13) வழிபாட்டுக்குரிய இடங்களில் நுகரும் நறுமணத்தைச் சவங்களின் நாற்றத்தைப் போல உணர்பவன் வாழ்வதற்கு ஒரு வாரம் மட்டுமே உண்டு.(14)
மூக்கு, அல்லது காதுகள் தளர்வது {வளைவது}, பற்கள் மற்றும் கண்கள் நிறமிழப்பது {அவற்றில் பசையற்றுப் போதல்}, நினைவுகள் அனைத்தையும் இழப்பது, உடல் வெப்பமனைத்தையும் இழப்பது ஆகியன அந்த நாளே ஏற்படப்போகும் மரணத்தைக் குறிப்பிடும் அறிகுறிகளாகும்.(15)
உணரத் தக்க எந்தக் காரணமுமின்றி இடது கண்ணில் இருந்து திடீரெனக் கண்ணீர் சிந்துவது, ஒருவனுடைய தலையில் இருந்து ஆவி வெளியேறுவது போலக் காணப்படுவது ஆகியன அந்த நாள் முடிவடைவதற்குள் அந்த மனிதன் இறக்கப் போகிறான் என்பதற்கான உறுதியான அறிகுறிகளாகும்.(16)

இந்த முன்னெச்சரிக்கை அறிகுறிகள் அனைத்தையும் அறிந்து கொள்பவனும், தூய்மையான ஆன்மாகக் கொண்டவனுமான மனிதன், பகலும், இரவும் தன் ஆன்மாவை பரமாத்மாவோடு (சமாதியில்) கலக்க வேண்டும்.(17) இவ்வாறே அவன் அழிய வேண்டிய நாள்வரை செயல்பட வேண்டும். எனினும் அவன் இறக்க விரும்புவதற்குப் பதில் இவ்வுலகில் வாழ விரும்பினால், ஓ! மன்னா, மணம் மற்றும் சுவைகள் அனைத்திலும் உள்ள இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, துறவியாக வாழ வேண்டும்.(18,19)
உண்மையில், ஓ! ஏகாதிபதி, ஆன்ம ஞானத்தால் அருளப்பட்ட மனிதன், சாங்கியர்களால் பரிந்துரைக்கப்படும் வாழ்வுமுறையை நடைமுறையாக்கி, தன் ஆத்மாவைப் பரமாத்மாவுடன் கலப்பதன் மூலம் மரணத்தை வெல்கிறான்.(20) இறுதியாக அவன், முற்றிலும் அழிவற்றதும், பிறப்பற்றதும், மங்கலமானதும், மாற்றமில்லாததும், நித்தியமானதும், நிலையானதும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அடைய முடியாததுமான நிலையை அடைகிறான்" என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(21)
சாந்திபர்வம் பகுதி – 318ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |