Thursday, November 08, 2018

முக்தலக்ஷணம்! - சாந்திபர்வம் பகுதி – 321

The indications of emancipation! | Shanti-Parva-Section-321 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 148)


பதிவின் சுருக்கம் : முக்தி அறிகுறிகள் முதலியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தர்மத்வஜனுக்கும், பிக்ஷுகினி ஸுலபைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தின் அரச முனியே, இல்லற வாழ்வுமுறையைக் கைவிடாமல், புத்தியையும் (பிற புலன்களையும்) அழிப்பதன் மூலம் கிட்டும் விடுதலையை {முக்தியை} எவரும் அடைந்திருக்கிறார்களா? இஃதை எனக்குச் சொல்வீராக.(1) திரள் மற்றும் நுட்பமான வடிவத்தை {லிங்க சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும்} எவ்வாறு கைவிடமுடியும்? ஓ! பாட்டா, விடுதலையின் உயர்ந்த மகிமை என்ன என்பதைச் சொல்வீராக?" என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் ஜனகனுக்கும் {தர்மத்வஜனுக்கும்}, சுலபைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) பழங்காலத்தில் ஜனககுலத்தைச் சார்ந்தவனும், தர்மத்யஜன் {தர்மத்வஜன்} என்ற பெயரைக் கொண்டவனுமான ஒருவன் மிதிலையின் மன்னனாக இருந்தான். அவன் துறவற நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தான்.(4) அவன் வேதம், மோக்ஷசாத்திரங்கள், மன்னர்களுக்குரிய கடமை சார்ந்த சாத்திரங்கள் ஆகியவற்றை அறிந்தவனாக இருந்தான். அவன் தன் புலன்களை அடக்கி இந்தப் பூமியை ஆண்டுக் கொண்டிருந்தான்.(5) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உலகில் அவனது நல்லொழுக்கத்தைக் கேள்விப்பட்டவர்களும், ஞானத்தை அறிந்தவர்களுமான ஞானிகள் பலர், அவனைப் போல இருக்க விரும்பினர்.(6) அதே சத்திய யுகத்தில், துறவியும் {பிக்ஷுகியும்}, சுலபை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு பெண்மணி யோக கடமைகளைப் பயின்று பூமி முழுவதும் திரிந்து கொண்டிருந்தாள்.(7) அவ்வாறு பூமியில் திரிந்து கொண்டிருந்த சுலபை, பல்வேறு இடங்களைச் சார்ந்த தண்டிகள் பலரிடமிருந்து விடுதலை அறத்தில் {மோக்ஷதர்மத்தில்} அர்ப்பணிப்புடன் இருந்த மிதிலையின் ஆட்சியாளனை {தர்மத்யஜனைக்} குறித்துக் கேள்விப்பட்டாள்.(8) மன்னன் ஜனகனை {தர்மத்யஜனைக்} குறித்த இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, இஃது உண்மையா, இல்லையா என்பதை உறுதி செய்ய விரும்பிய சுலபை, ஜனகனிடம் தனிப்பட்ட முறையில் பேச விரும்பினாள்.(9)

தன் யோக சக்தியால், தனது பழைய வடிவத்தையும், குணங்களையும் கைவிட்ட சுலபை, களங்கமற்ற குணங்களும், ஒப்பற்ற அழகும் கொண்ட வடிவத்தை ஏற்றாள்.(10) தாமரை இதழ்களைப் போன்ற விழிகளையும், அழகிய புருவங்களையும் கொண்ட அந்தப் பெண்மணி, கண்ணிமைக்கும் நேரத்தில் மிகவிரைவான கணையின் வேகத்தில் விதேஹர்களின் தலைநகரை அடைந்தாள்.(11) பெரும் மக்கள் தொகையால் நிறைந்த மிதிலையெனும் தலைநகரை அடைந்த அவள், துறவியின் தோற்றம் பூண்டு அம்மன்னன் முன்னிலையில் சென்றாள்.(12) அவளது அழகிய வடிவைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்த அந்த ஏகாதிபதி {தர்மத்யஜன்}, யார் அவள்? யாருடையவள்? எங்கிருந்து வருகிறாள் என்பதை விசாரித்தான்.(13) அவளை {சுலபையை} வரவேற்ற அவன் {தர்மத்வஜன்}, அவளுக்கான சிறந்த இருக்கையை அளித்து, அவளது கால்களைக் கழுவி கொள்ள நீரைக் கொடுத்து கௌரவித்து, புத்துணர்வைத் தரும் சிறந்த பொருட்களால் அவளை நிறைவு செய்தான்.(14) முறையாகப் புத்துணர்வை அடைந்து, தனக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பல் சடங்குகளால் நிறைவையடைந்த பெண் துறவியான சுலபை, அமைச்சர்கள் சூழ, கல்விமான்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த மன்னனை (விடுதலையறத்தில் {மோக்ஷதர்மத்தில்} அவனது பற்றை அறிவிக்கும்படி அவனைத்) தூண்டினாள்.(15)

நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுவதன் மூலம் விடுதலை அடைவதில் ஜனகன்{தர்மத்வஜன்} வென்றுவிட்டானா என்பதில் ஐயம் கொண்டவளும், யோக சக்தியுடையவளுமான சுலபை, தன் புத்தியைக் கொண்டு மன்னனின் புத்திக்குள் நுழைந்தாள்.(16) மன்னனின் கண்களில் இருந்து வெளிப்படும் கதிர்களைத் தன் கண்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்களால் தடுத்த அந்தப் பெண்மணி, உண்மையை உறுதி செய்ய விரும்பி, யோகக் கட்டுகளைக் கொண்டு மன்னன் ஜனகனை {தர்மத்வஜனைக்} கட்டினாள்[1].(17) தனது வெல்லப்பட முடியாத தன்மையில் செருக்குடைய அந்தச் சிறந்த ஏகாதிபதி {தர்மத்வஜன்}, சுலபையின் நோக்கங்களை வீழ்த்தி, தன் பிரிதிறனால் அவளது தீர்மானத்தை அறிந்தான்[2].(18) மன்னன் தன் நுட்பமான வடிவில் அரசக் குடையும், செங்கோலும் இல்லாதிருந்தான். அந்தப் பெண்மணியான சுலபை அவளது நுட்பமான வடிவில் திரிதண்டம் இல்லாதிருந்தாள். ஒரே (திரள்) வடிவில் {மன்னன் தர்மத்யஜனின் உடலுக்குள்} இருந்த அவர்கள் இருவரும் {தர்மத்யஜனும், சுலபையும்} ஒருவருடனொருவர் உரையாடினர். அந்த ஏகாதிபதிக்கும், சுலபைக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கேட்பாயாக.(19)

[1] "சஞ்சோதயிஷ்யாந்தி Sanchodayishyanti என்பது கேள்வி கேட்பது என்ற பொருளைத் தரும். இங்கே மன்னனை உள்முகமாகக் கேள்விக் கேட்டல் அல்லது யோக சக்தியால் கேள்வி கேட்டல் என்று பொருள் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "யோகத்தை அறிந்த ஸுலபை, ‘யோகதர்மங்களின் இவன் முக்தனோ அல்லனோ’ என்ற ஸம்சயதுடன் அவருடைய புத்தியில் தன்னுடைய புத்தியினால் பிரவேசித்தவளானாள். அந்த ஸுலபையானவள் இவருடைய நயனங்களின் கிரணங்களைத் தனது கிரணங்களோடு சேரச் செய்து நேத்ரங்களால் அவரை ஏவி யோகத்தினாலுண்டான (மனோ) பந்தங்களால் கட்டினாள்" என்றிருக்கிறது.

[2] "உத்ஸ்மயன் Utsmayan என்பது, வெல்லப்பட முடியாத தன் தன்மையில் உள்ள செருக்கு என உரையாசிரியர் விளக்குகிறார். அஸ்யா பாவம் என்பது "மன்னனை ஊமையாக்கும் அவளது தீர்மானம்" எனப் பொருள் தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஜனகராஜரும் சிரித்துக் கொண்டு இவளுடைய அபிப்ராயத்தை (தம் அபிப்பிராயத்துடன் கலவாமல்) வேறுபடுத்தித் தம்முடைய அபிப்பிராயத்தினால் அவளுடைய அபிப்பிராயத்தைத் தாம் கிரகித்தார்" என்றிருக்கிறது.

ஜனகன் {தர்மத்யஜன் சுலபையிடம்}, "ஓ! புனிதமான பெண்மணியே, நீ அர்ப்பணிப்புடன் உள்ள ஒழுக்கமுறை யாது? நீ யாருடையவள்? எங்கிருந்து நீ வந்திருக்கிறாய்? இங்கே உன் காரியம் முடிந்த பிறகு, நீ எங்கே செல்லப் போகிறாய்?(20) மற்றவரின் சாத்திர அறிவை, வயதை, பிறவி வகையைக் கேள்வி கேட்காமல் எவராலும் உறுதி செய்ய முடியாது. எனவே, என்னிடம் வந்திருக்கும் நீ என்னுடைய இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.(21) அரசக்குடை, செங்கோல் முதலிய செருக்கனைத்திலிருந்து உண்மையில் விடுபட்டவனாக என்னை அறிவாயாக. நான் உன்னை முழுமையாக அறிய விரும்புகிறேன். நீ என்னால் மதிக்கத்தகுந்தவளாவாய்.(22) (இவ்வுலகில்) வேறு எவராலும் சொல்ல முடியாத விடுதலை {முக்தி} குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. பழங்காலத்தில் இந்தப் புகழ்பெற்ற ஞானத்தை யாரிடம் இருந்து அடைந்தேன் என்பதையும் சொல்கிறேன் கேட்பாயாக[3].(23) பராசர குலத்தைச் சார்ந்தவரும், சந்நியாச ஆசிரமத்தை ஏற்றவரும், மதிப்புமிக்கவரும் உயர் ஆன்மா கொண்டவருமான பஞ்சசிகரின் அன்புக்குரிய சீடன் நான்.(24) நான் ஐயங்கள் விலகியவனாக, சாங்கிய, யோக அமைப்புகளையும், நன்கறியப்பட்ட விடுதலை {முக்தி} பாதைகள் மூன்றுக்குமுரிய வேள்விகள் மற்றும் பிற சடங்குகளையும் முழுமையாக அறிந்தவனாகவும் இருக்கிறேன்[4].(25)

[3] "வைசேஷிகம் என்ற சொல் என்ன பொருளில் இங்குக் கையாளப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. வைசேஷிகம் அல்லது காணாதம் என்றழைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தத்துவ அமைப்பு இருக்கிறது. அது காணாதர் என்ற பெயரிலான முனிவரிடம் இருந்து தோன்றிய தத்துவ அமைப்பாகும். அத்தத்துவம் ஐரோப்பிய தத்துவஞானிகளின் அணுக் கோட்பாட்டுக்கு மிக நெருக்கமான தொடர்புடையதாகும். கபிலரின் அமைப்பு அல்லது சாங்கி அமைப்புடன் மிக நெருங்கிய ஒற்றுமை அதற்கு உண்டு. மேலும், சாங்கிய அமைப்பிலேயே உள்ள சில மூலக் கோட்பாடுகளும் விசேஷம் என்ற பெயரில் அழைக்கப்படுவதுண்டு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நீ என்னால் பூஜிக்கப்படத் தக்கவளென்று தோன்றுவதால் நான் உன்னை நன்றாய் அறிய விரும்புகிறேன். முற்காலத்தில் வைசேஷிகசாஸ்திரஜ்ஞானத்தை எனக்கு உபதேசித்தவரும் மோக்ஷசாஸ்திரத்தை நன்றாகச் சொல்வதில் ஒப்பற்றவருமான எனது ஆசார்யர் யார் என்பதைக் கேள்" என்றிருக்கிறது.

[4] கும்பகோணம் பதிப்பில், "நான், பராசரமஹரிஷிக்கு ஸமான கோத்ரமுடையவரும், பிராயமுதிர்ந்தவரும், மஹாத்மாவும், ஸன்யாசியுமான பஞ்சசிகருக்கு மிக்கப்ரியனான சிஷ்யன். நான் ஸாங்கிய ஞானம், யோகம், ராஜநீதி ஆகிய (ஞானம், உபாஸனம், கர்மம் என்கிற) இந்த மூன்று விதமான மோக்ஷதர்மத்திலும் வெகுதூரஞ்சென்று ஸந்தேகந்தெளிந்தவன்" என்றிருக்கிறது.

பூமியில் திரிந்து, சாத்திரங்களால் குறிப்பிடப்படும் பாதையைப் பின்பற்றிய கல்விமானான பஞ்சசிகர், முன்பொரு மழைக்காலத்தில் நான்கு மாதங்கள் என் வசிப்பிடத்தில் மகிழ்ச்சியாக வசித்தார்.(26) சாங்கியர்களில் முதன்மையான அவர், வாய்மைக்கு ஏற்புடைய வகையிலும், புத்தியால் உணரக்கூடிய வகையிலும், விடுதலை {முக்தி} அடைவது குறித்துப் பல்வேறு வழிமுறைகள் குறித்து என்னிடம் பேசினார். எனினும், அவர் என் நாட்டைக் கைவிடச் சொல்லி எனக்கு ஆணையிடவில்லை.(27) பற்றில் இருந்து விடுபட்டு, பரப்பிரம்மத்தில் என் ஆத்மாவை நிலைநிறுத்தி, தோழமையால் அசையாமல், விடுதலை {முக்தி} குறித்துச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள மூன்று ஒழுக்கங்களை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்து வருகிறேன்.(28) (அனைத்து வகைப் பற்றிலும்) துறவு கொள்வதே விடுதலைக்கான உயர்ந்த வழிமுறையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவனை விடுதலையடையச் செய்யும் துறவு ஞானத்தில் இருந்து உண்டாவதாகச் சொல்லப்படுகிறது.(29) ஞானத்தில் இருந்து யோக முயற்சி எழுகிறது, அம்முயற்சியின் மூலம் ஒருவன் தன்னறிவை, அல்லது ஆத்ம ஞானத்தை அடைகிறான். ஞானத்தின் மூலம் ஒருவன் இன்பதுன்பங்களைக் கடக்கிறான். அதுவே அவனை மரணத்தைக் கடக்கச் செய்து உயர்ந்த வெற்றியை அடையவல்லவனாக்குகிறது.(30)

அந்த உயர்ந்த புத்தி (தன்னறிவு {ஆத்மஞானம்}) என்னால் அடையப்பட்டிருக்கிறது, அதன் படியே நான் முரண்பட்ட இரட்டைகளைக் கடந்திருக்கிறேன். இம்மையிலும் நான் திகைப்பில் {மயக்கத்தில்} இருந்து விடுபட்டவனாகவும், பற்றுகள் அனைத்தையும் கடந்தவனாகவும் இருக்கிறேன்.(31) நீரால் நிறைந்து மென்மையான மண், (விதைக்கப்படும்) வித்தைத் துளிர்க்கச் செய்வதைப் போலவே, மனிதர்களின் செயல்களே மறுபிறப்பை உண்டாக்குகின்றன.(32) வித்திற்குத் துளிர்க்கும் திறனிருந்தாலும், கடாயில் வறுக்கப்பட்டால் துளிர்க்க இயலாததைப் போலவே,(33) என் புத்தியானது, துறவறம் பயின்ற புனிதமான பஞ்சசிகரின் போதனைகளால், புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொள்ளும் பலனை உண்டாக்காமல், ஆசையால் விளையும் உற்பத்திக் கோட்பாட்டில் இருந்து {என் புத்தி} விடுபட்டிருக்கிறது.(34) என் மனைவியிடம் அன்பையோ, பகைவர்களிடம் வெறுப்பையோ நான் அனுபவிப்பதில்லை. உண்மையில், பற்று மற்றும் கோபம் ஆகியவற்றின் {விருப்பு வெறுப்பின்} கனியற்ற தன்மையைக் கண்டு நான் அவை இரண்டில் இருந்தும் விலகியிருக்கிறேன்.(35)

என் வலக்கரத்தில் சந்தனம் பூசுபவன், என் இடக்கத்தைக் காயப்படுத்துபவன் ஆகிய இருவரையும் நான் ஒன்றாகவே கருதுகிறேன்.(36) என் (உண்மை) நோக்கத்தை அடைந்துவனாகவும், மகிழ்ச்சியானவனாகவும், மண்ணாங்கட்டியையும், கல்லையும், தங்கக்குவியலையும் ஒன்றாகப் பார்ப்பவனாகவும் இருகிறேன். அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனாக நான் இந்நாட்டை ஆள்வதில் ஈடுபடுகிறேன். இதன் விளைவால் திரிதண்டதாரிகள் அனைவராலும் நான் எங்கும் புகழப்படுகிறேன்.(37) விடுதலையை {முக்தியை} அறிந்த சில முதன்மையான மனிதர்கள், விடுதலைக்கு மூன்று பாதைகள் உண்டு என்று சொல்கிறார்கள். (ஞானம், யோகம் மற்றும் வேள்விச்சடங்குகளே இவை). சிலர், உலகின் பொருள்கள் அனைத்தையும் நோக்கமாகக் கொண்ட ஞானத்தையே விடுதலைக்கான வழிமுறையாகக் கருதுகிறார்கள். சிலர், (அகம் மற்றும் புறம் என்ற) இரண்டு செயற்பாடுகளையும் துறப்பதே வழிமுறை என்கின்றனர்.(38) விடுதலை குறித்த சாத்திரங்களை அறிந்த மற்றொரு வகை மனிதர்கள், ஞானமே ஒரே வழிமுறை என்று சொல்கிறார்கள். நுண்பார்வையுடன் கூடிய யதிகள் செயல்களே வழிமுறை என்று சொல்கின்றனர்.(39) உயர் ஆன்ம பஞ்சசிகர், ஞானம் மற்றும் செயல்கள் குறித்த கருத்துகள் இரண்டையும் புறந்தள்ளி மூன்றாவதையே ஒரே வழிமுறையாக அல்லது விடுதலைக்கான பாதையாகக் கருதினார்.(40)

இல்லற வாழ்வுமுறையை நோற்கும் மனிதர்கள் {கிருஹஸ்தர்கள்}, யமம் மற்றும் நியமத்துடன் இருந்தால் அவர்கள் சந்நியாசிகளுக்கு இணையானவர்களாவர். மறுபுறம், விருப்புவெறுப்பு, மனைவிகள், கௌரவம், செருக்கு, பற்று ஆகியவற்றுடன் கூடிய சந்நியாசிகள் இல்லறவாழ்வுமுறையை நோற்கும் மனிதர்களுக்கு இணையானவர்களாவர்[5].(41) ஞானத்தால் ஒருவன் விடுதலையை அடையமுடியுமெனில் திரிதண்டத்தில் விடுதலை இருக்கும் (ஏனெனில் அத்தகைய தண்டங்களைத் தரிப்பவர்கள் அடைய வேண்டிய ஞானத்தை அடைவதில் வேறு எதுவும் தடுக்காது). அவ்வாறெனில், குடையிலும், செங்கோலிலும் ஏன் விடுதலை கிட்டாது?, குறிப்பாகத் திரிதண்டம் தரிக்கவும், செங்கோல் தரிக்கவும் ஒரே காரணம் இருக்கும்போது ஏன் விடுதலை கிட்டாது?(42) ஒருவனுக்குக் குறிப்பிட்ட காரணங்களால் தேவைப்படும் பொருட்கள் மற்றும் செயல்களில் அவன் பற்று கொள்கிறான்.(43) ஒரு மனிதன், இல்லற வாழ்வுமுறையின் களங்கங்களைக் கண்டு (பெரும் தகுதி நிறைந்ததாகத் தான் கருதும்) மற்றொரு வாழ்வுமுறைக்காக அதைக் கைவிடும்போது, அத்தகைய புறக்கணிப்புக்கும், பின்பற்றுதலுக்கும் அவன் பற்றுகளில் இருந்து உடனே விடுபட்டுவிட்டதாகக் கருத முடியாது (அவன் செய்திருப்பதெல்லாம் முந்தைய வாழ்வு முறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புதிய வாழ்வுமுறையில் பற்று கொண்டதை மட்டுமே).(44) அரசுரிமையானது, பிறரை கௌரவிக்கவும், தண்டிக்கவும் வேண்டிய முறைகள் நிறைந்தது. ஒரு துறவியின் வாழ்வும் அதே போன்றவை நிறைந்தவையே (ஏனெனில் அவர்களும் பிறரை கௌரவிக்கவும், தண்டிக்கவும் செய்கிறார்கள்). எனவே, இவ்வகையில் துறவிகளும் மன்னர்களும் ஒரே நிலையில் இருக்கிறார்கள் எனும்போது ஏன் துறவிகள் மட்டும் விடுதலையை அடைய வேண்டும்? மன்னர்கள் ஏன் அடையக்கூடாது?(45)

[5] கும்பகோணம் பதிப்பில், "மஹாத்மாவான அந்தப் பஞ்சசிகர் கேவலஞானமும், கேவல கர்மமுமாயிருக்கிற அந்த இரண்டையும் தள்ளிவிட்டு இந்த மூன்றாவது நிஷ்டையை நன்றாகச் சொல்லியிருக்கிறார். யமமும், நியமமும், துவேஷமும், ஸ்திரீ முதலான பரிக்கிரகமும், கர்வமும், டம்பமும், ஸ்நேகமும் ஆகிய இவைகளில் இருக்கும் விஷயத்தில் அந்த யதிகள் கிருகஸ்தகளோடொப்பானவர்களே" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தப் பெரும் ஆன்மா கொண்டவர் ஞானம் அல்லது செயல்களை மட்டுமே போதுமானதாவையாகக் கருதாமல் மூன்றாம் வகையைச் சிறப்பானதாகச் சொன்னார். யமம், நியமம், வெறுப்பு, ஆசை, பெறுதல், செருக்கு, துடுக்கு பற்று ஆகியவற்றில் ஒரு திரிதண்டிக்கு இணையானவராக ஓர் இல்லறவாசியால் இருக்கமுடியும்" என்றிருக்கிறது.

எனவே, அரசுரிமை இருந்தபோதிலும், ஞானத்தால் மட்டுமே அனைத்துப் பாவங்களையும் கழுவிக்கொண்டு, பரப்பிரம்மத்தில் அவன் வாழ்ந்திருக்கிறான்.(46) காவி உடை அணிந்து, தலையை மழித்துக் கொண்டு, திரிதண்டமும், கமண்டலமும் ஏந்துவது ஒருவனுடைய வாழ்வுமுறையின் புற அடையாளங்கள் மட்டுமே ஆகும். ஒருவன் விடுதலை அடைவதற்குத் துணை புரிவதில் இவற்றுக்கு எந்த மதிப்பும் கிடையாது.(47) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறையின் புற அடையாளங்களைப் பின்பற்றியபோதிலும், ஞானம் மட்டுமே ஒருவனைத் துன்பத்தில் இருந்து விடுதலையடையச் செய்யும் காரணமாக இருக்கும் எனும்போது, வெறும் அடையாளங்களைப் பின்பற்றுவது முற்றிலும் பயனற்றதாகும்.(48) அல்லது, அவற்றால் துன்பங்களைத் தணிக்க முடியும் என்பதைக் கண்டு நீ சந்நியாச அடையாளங்களைத் தரித்தால், நான் தரிக்கும் குடை மற்றும் செங்கோலில் ஏன் அந்தத் துன்பத்தைக் காணக்கூடாது?(49) விடுதலை {முக்தி} வறுமையில் இல்லை; அதே போலப் பற்றும் செழிப்பில் காணப்படுவதில்லை. ஒருவன் வறுமையில் இருந்தாலோ, செழிப்பாக இருந்தாலோ அவன் ஞானத்தால் மட்டுமே விடுதலையை அடைய முடியும்.(50)

(பொதுவாக மனிதர்களிடம்) பற்றை உண்டாக்கும் நாடு, மனைவிகள் என்ற வடிவில் அறம், பொருள் மற்றும் இன்பத்தை அனுபவிப்பதாக மேம்போக்காகத் தெரிந்தாலும் இக்காரணங்களால் நான் சுதந்திரமான நிலையில் வாழ்வதாக அறிவாயாக.(51) நாடு மற்றும் செல்வத்தால் உண்டாகும் கட்டு {பந்தம்}, பற்றுகளாலான கட்டு {பந்தம்} ஆகியவற்றை, விடுதலையைச் சொல்லும் சாத்திரங்கள் எனும் கல்லில் கூராக்கப்பட்ட துறவு எனும் வாளால் வெட்டிவிட்டேன்.(52) என்னைப் பொறுத்தவரையில் நான் இவ்வழியிலேயே என்னை விடுவித்துக் கொண்டேன். ஓ! பெண் துறவியே, நான் உன்னிடம் அன்பை வளர்க்கிறேன். ஆனால், நீ பின்பற்றும் வாழ்வுமுறைக்கேற்ற நடைமுறைகள் தொடர்பானதாக உன் நடத்தை இல்லை என்பதை நான் உன்னிடம் சொல்வதை அது {உன்னிடம் நான் கொண்டுள்ள அன்பு} தடை செய்யாது.(53) உன் வடிவில் பெரும் மென்மையை {மார்த்தவத்தைக்} கொண்டிருக்கிறாய். நீ அழகாக இருக்கிறாய். சிறந்த வடிவமைப்பை நீ கொண்டிருக்கிறாய். வயதின் இளமையுடனும் இருக்கிறாய். இவை அனைத்தும் இருந்து நீ நியமத்துடன் (புலனடக்கத்துடன்) இருக்கிறார். உண்மையில் நான் இஃதை ஐயுறுகிறேன்.(54) உண்மையில் நான் விடுதலையடைந்திருக்கிறேனா இல்லையா என்பதை உறுதி செய்வதற்காக (யோக சக்தியின் துணையுடன் என்னுள் புகுந்து) என் உடலை நிறுத்தியிருக்கிறாய். இந்தச் செயல்பாடு, நீ தரிக்கும் அடையாளங்களுக்குரிய வாழ்வுமுறைக்குக் களங்கம் கற்பிப்பதாக இருக்கிறது.(55)

ஒரு யோகி ஆசையுடன் இருந்தால் அவன் தண்டந்தரிக்கத் தகுந்தவனல்ல. உன்னைப் பொறுத்தவரையில் நீ உன் தண்டத்தில் பற்று கொள்ளவில்லை. விடுதலை பெற்றவர்களைப் பொறுத்தவரையில் அவர்களும் வீழ்ச்சியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(56) உன் புத்தியின் துணையுடன் என் திரள் உடலில் நுழைந்து என்னுடன் தொடர்பை ஏற்படுத்துக் கொண்ட விளைவால் ஏற்படும் வரம்புமீறுதலைச் சொல்கிறேன் கேட்பாயாக.(57) நீ என் நாட்டுக்கு, அல்லது என் அரண்மனைக்கும் வந்த காரணம் என்ன? யாருடைய குறிப்பின் மூலம் நீ என் இதயத்திற்குள் {மனத்திற்குள்} நுழைந்தாய்?(58) நீ பிராமணப் பெண்ணாக இருப்பதால், முதன்மையான வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவளாக இருக்கிறாய். எனினும் என்னைப் பொறுத்தவரையில், நான் ஒரு க்ஷத்திரியனாவேன். நம் இருவருக்கும் ஒரு சேர்க்கையும் இல்லை. வர்ணக்கலப்பைச் செய்யாதே.(59) விடுதலைக்கு வழிவகுக்கும் கடமைகளின் நடைமுறையில் நீ வாழ்கிறாய். நானோ இல்லற வாழ்வுமுறையை வாழ்கிறேன். எனவே, எதிரெதிரான இரு வாழ்வு முறைகளின் இயல்பற்ற கலவையால் உன் செயல் மற்றொரு தீமையையும் செய்திருக்கிறது.(60)

நீ என் கோத்திரத்தைச் சேர்ந்தவளா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. உன்னைப் பொறுத்தவரையிலும், நீயும் என்னை (நான் சார்ந்த கோத்திரத்தை) அறிய மாட்டாய். நீ என் கோத்திரமாகவே இருந்தால், இயல்பற்ற சேர்க்கையாக என் உடலில் நுழைந்ததன் மூலம் நீ மற்றொரு தீமையைச் செய்திருக்கிறாய்.(61) உன் கணவர் உயிரோடிருந்து, தொலைவான இடத்தில் வசித்துக் கொண்டிருந்தால், நீ விதிப்படி சேர்ந்திருக்க வேண்டியவனுடன் இல்லாததால் என்னுடனான இந்தச் சேர்க்கையின் மூலம் நான்காவது தீமையையும் செய்திருக்கிறாய்.(62) எந்தக் குறிப்பிட்ட காரியத்தை நிறைவேற்றும் நோக்கத்தால் தூண்டப்பட்டு இந்தப் பாவச் செயல்கள் அனைத்தையும் நீ செய்தாய்? நீ இவற்றை அறியாமையில் செய்கிறாயா? அல்லது பிறழ்புத்தியால் செய்கிறாயா?(63) உன் தீய இயல்பின் விளைவால் நீ முற்றிலும் சுதந்திரமானவளாக இருந்தாலோ, தடையற்ற நடத்தை கொண்டவளாக இருந்தாலோ, உனக்குச் சாத்திர அறிவு என ஏதும் இருந்தால், நீ செய்திருக்கும் அனைத்தும் தீமையை உண்டாக்கவல்லவை என்பதை நீ புரிந்து கொள்வாய்.(64) நீ செய்த இந்தச் செயல்களின் விளைவால் மன அமைதியை அழித்ததும் மூன்றாம் களங்கமாகும். உன் மேன்மையை வெளிக்காட்ட முயற்சி செய்ததன் மூலம் தீய பெண்ணின் அடையாளம் உன்னில் காணப்படுகிறது.(65)

உன் வெற்றியை உறுதி செய்ய விரும்பி நீ என்னை மட்டும் வீழ்த்த விரும்பவில்லை, (கல்விமான்களும், மிக மேன்மையான பிராமணர்களும் அடங்கிய) என் முழு சபையையும் நீ வெல்ல விரும்புவது வெளிப்படையாகத் தெரிகிறது.(66) தகுதிமிக்க இந்தப் பிராமணர்கள் அனைவர் மீதும் இவ்வழியில் உன் கண்களைச் செலுத்துவதன் மூலம், இவர்கள் அனைவரையும் அவமதிக்கவும், (அவர்களை அவமதித்து) உன்னை மகிமைப்படுத்திக் கொள்ளவும் விரும்புகிறாய் என்பதும் வெளிப்படையாகத் தெரிக்கிறது.(67) யோக பலத்தில் நீ கொண்டிருக்கும் செருக்கால் திகைப்படைந்தும், (என் பலத்தைக் கண்டதில்) பிறந்த பொறாமையினாலும், உன் புத்தியை என் புத்தியோடு கலந்ததன் மூலம் உண்மையில் அமுதத்துடன் நஞ்சைக் கலந்துவிட்டாய்.(68) ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பும்போது ஏற்படும் சேர்க்கை அமுதம் போன்ற இனிமையாகும். எனினும், ஒரு பெண் விரும்பி நேரும் ஆணுக்கும், பெண்ணுக்குமான சேர்க்கையில், அவள் தன்னை விரும்பாத எதிர் பாலினத்தானை அடைந்தால், தகுதிக்கு {புண்ணியத்திற்குப்} பதிலாக, நஞ்சு போன்ற களங்கம் மட்டுமே விளையும்[6].(69) என்னைத் தீண்டுவதைத் தொடராதே. நான் அறவோன் என்பதை அறிவாயாக. உன் சாத்திரங்களின்படியே நீ செயல்படுவாயாக. நான் விடுதைலயடைந்தவனா? இல்லையா? என்று நீ செய்ய விரும்பிய விசாரணை நிறைவடைந்தது.(70)

[6] கும்பகோணம் பதிப்பில், "ஆசையுள்ள ஸ்திரீ புருஷர்களுடைய சேர்க்கையானது அமிருதத்திற்கொப்பாகும். ‘தன்னைவிரும்புகிற புருஷனாகப்படவில்லை’ என்கிற அந்தத்தோஷமும் விஷத்திற்கொப்பாகும்" என்றிருக்கிறது.

உன் ரகசிய நோக்கங்கள் அனைத்தையும் என்னிம் இருந்து மறைப்பது உனக்குத் தகாது. இவ்வாறு வேடம் போடுவதும், உன் நோக்கத்தை மறைத்துக் கொள்வதும், உன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள இதைச் செய்தாயா? அல்லது (எனக்கு எதிரியான) வேறு மன்னனின் நோக்கத்தை நிறைவேற்ற வந்தாயா? என்பதை மறைப்பதும் உனக்குத் தகாது.(71) ஒரு மன்னனின் முன்போ; ஒரு பிராமணனின் முன்போ; பெண்களுக்குரிய குணங்களைக் கொண்ட மனைவியின் முன்போ ஒருவன் தன்னை வஞ்சகமாக மறைத்துக் கொள்ளக்கூடாது. இந்த மூவரிடமும் வஞ்சகமான வேடத்தில் தோன்றுவோர் விரைவில் அழிவையே சந்திப்பார்கள்.(72) மன்னர்களின் பலம் அவர்களுடைய அரசுரிமையில் இருக்கிறது. வேதங்களை அறிந்த பிராமணர்களின் பலம் வேதங்களில் இருக்கிறது. பெண்கள் அழகு, இளமை மற்றும் அருள்நிலையின் விளைவால் உயர்ந்த பலத்தைப் பெற்றிருக்கிறார்கள்.(73) இந்தப் பலங்களைப் பெற்றவர்கள் பலமிக்கவர்களாவர். எனவே, நன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும ஒருவன், இந்த மூவரிடமும், நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் அணுக வேண்டும். (இந்த மூவரிடமும்) நேர்மையின்மையும், வஞ்சகமும் வெற்றியை உண்டாக்கத் தவறும்.(74) எனவே, பிறப்பால் நீ சேர்ந்த வகை, உன் கல்வி, ஒழுக்கம், மனோ நிலை, இயல்பு மற்றும் நீ இந்த இடத்திற்கு வந்த நோக்கம் ஆகியவற்றை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்" என்றான் {ஜனக மன்னன் தர்மத்யஜன்}".(75)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "மன்னனால் இவ்வாறு இனிமையற்ற, முறையற்ற வகையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிந்திக்கப்பட்டாலும் சுலபை வெட்கமடையாதிருந்தாள்.(76) மன்னன் இந்த வார்த்தைகளைச்சொன்ன பிறகு, அந்த அழகிய சுலபை, தன்னை விட அழகான மறுமொழியைப் பின்வரும் சொற்களில் சொன்னாள்.(77)

சுலபை {ஜனகமன்னன் தர்மத்வஜனிடம்}, "ஓ! மன்னா, ஒன்பது சொற்குற்றங்களில் இருந்தும், ஒன்பது தீர்மானப் பிழைகளில் {சொற்குற்றம் மற்றும் புத்தியின் குற்றங்களில்} இருந்தும் வாக்கானது எப்போதும் விடுபட்டிருக்க வேண்டும். தெளிவான பொருளைத் தரும் அதே வேளையில் அது நன்கறியப்பட்ட பதினெட்டு தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.(78) பொருள் மயக்கம் {ஸூக்ஷ்மம்}, தொடக்கவுரை மற்றும் முடிவுரையின் குறை நிறைகளை உறுதி செய்தல் {ஸாங்கியம்}, ஒப்பீட்டளவில் அந்தக் குறை நிறைகளின் பலம் மற்றும் பலவீனத்தை எடை போடுதல் {கிரமம்}, முடிவை நிறுவுதல் {நிர்ணயம்}, நம்பத்தகுந்த ஏற்புடைய தன்மை, அல்லது முடிவுரையோடு தொடர்புடையது {பிரயோஜனம்}, ஆகிய பொருளுடன் தொடர்புடைய இந்த ஐந்து தன்மைகளும் {காரியங்களும்}, வாக்கின் தகுதிகளாக {வாக்கியமாக} அமைகின்றன.(79) பொருள் மயக்கம் {கருத்தில் தெளிவின்மை} முதலிய இந்தத் தேவைகளின் தன்மைகளை அவற்றின் கலவையின்படி விளக்குகிறேன் கேட்பாயாக.(80)

ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக அறியப்படும் பொருட்களின் விளைவால், ஞானமானது அந்த வேறுபாட்டைச் சார்ந்திருக்கும்போதும், (காரியத்தைப் புரிந்து கொள்வதைப் பொறுத்தவரையில்) புத்தியானது அடுத்தடுத்த சொற்கலவைகளின் பல்வேறு கருத்துகளைச் சார்ந்திருக்கும்போதும், அது {புத்தி} தெளிவில்லாமல் {பொருள் மயக்கத்துடன்} இருப்பதாகச் சொல்லப்படுகிறது[7].(81) சாங்கியம் என்றழைக்கப்படும் (குறை நிறைகளை) உறுதிசெய்தலின் மூலம், (தொடக்கவுரை, முடிவுரைகளில் உள்ள) குறை நிறைகளை நீக்கி தற்காலிகமானப் பொருள்கள் பின்பற்றப்படுகின்றன[8].(82) (மேற்கண்ட நடைமுறையின் மூலம் உறுதிசெய்யப்பட்ட) குறை நிறைகளின் ஒப்பீட்டளவிலான பலம் மற்றும் பலவீனங்களைக் கருத்தில் கொள்வது, அல்லது கிரமம் எனப்படுவது, முன்னுரிமைகளில் உரிமையைத் தீர்மானிப்பது, அல்லது ஒரு வாக்கியத்தில் உள்ள சொற்களின் துணைத்தொடர்புகளை உள்ளடக்கியதாகும். இதுவே கிரமம் என்ற சொல்லுக்குத் தொடர்புடைய பொருளாகும், என வாக்கியங்கள், அல்லது உரைகளின் விளக்கங்களை அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(83) முடிவுரை என்பது இறுதித் தீர்மானமாகும். அறம் {தர்மம்}, பொருள் {அர்த்தம்}, இன்பம் {காமம்}, வீடு {மோக்ஷம்} என்று சொல்லப்படுவதில் குறிப்பாக அவை ஒவ்வொன்றும் என்னென்ன என்று சொல்லும் உரையே முடிவுரையாகும்[9].(84) விருப்பு வெறுப்பில் இருந்து உண்டாகும் துன்பம் பெரும் அளவில் அதிகரிக்கும். ஓ! மன்னா, இக்காரியத்தில் ஒருவன் பின்பற்றும் ஒழுக்கமே (அனுபவிக்கப்படும் துன்பத்தை விலக்கவல்ல) பிரயோஜனம் என்றழைக்கப்படுகிறது[10].(85)

[7] "சௌக்ஷ்மியம் என்பது நுண்மையைக் குறிக்கும். அதற்கு இங்கே பொருள் மயக்கம் {தெளிவின்மை} என்ற பொருள் வரும். இந்த ஸ்லோகங்களின் அதீத சுருக்க நிலையை வாசகருக்குவெளிப்படுத்தவே 81ம் ஸ்லோகத்தை மிக நெருக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். இந்த ஸ்லோகத்தைப் பொருள் கொள்ளப் பின்வரும் விளக்கம் பயன்படும். இந்து விதவைகளின் மறுமணத்தை அங்கீகரிக்கும் நன்கறியப்பட்ட பராசரரின் ஸ்லோகத்தைப் போல, ஒரு வாக்கியமானது பல்வேறு பொருட்களைக் கொண்ட வார்த்தைகளால் தொகுக்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் வார்த்தைகளின் பொருட்கள் பல்வேறு வகையில் இருக்கின்றன. பிறவற்றில் இருந்து பொருளை வேறுபடுத்தி, அந்த வேறுபடுத்தும் வழிமுறைகளின் மூலம் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் நிச்சயமாக அறிவது நேர்கிறது. அப்போது, புத்தியானது, நிச்சய பொருளை அடையும் முன்னர், இப்போது ஒன்றும் அப்போது ஒன்றும் என அடுத்தடுத்து பல்வேறு கருத்துகளைச் சார்ந்திருக்கிறது. உண்மையில் நீக்கும் செயல்முறையால் உண்மையான பொருள் அடையப்படுகிறது. எந்த வாக்கியத்தின் பொருளையும் புரிந்து கொள்ள இத்தகைய செயல்முறை தேவைப்படும்போது நேரும் பிழையே, தெளிவின்மை அல்லது ஸூக்ஷ்ம பிழை என்று சொல்லப்படுகிறது.

[8] "எடுத்துக்காட்டாக: இந்து விதவைகளின் மறுமணத்தை உண்மையில் அங்கீகரிக்கும் பராசரரின் நன்கறியப்பட்ட ஸ்லோகத்தைப் போல எடுத்துக் கொள்வோம். அந்த ஸ்லோகத்தில் இந்தப் பொருளைச் சுட்டும் பல்வேறு சொற்கள் உள்ளன, சில சொற்கள் அவ்வாறு சுட்டாது. காரணங்களையும் இயல்நிலைகளையும கருத்தில் கொண்டு, ஓர் இந்து விதவைக்கு இரு கணவர்களை முனிவர் அங்கீகரிக்கிறார் என்ற தற்காலிக கருத்து நிறுவப்படுகிறது. இதுவே சாங்கியமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[9] "குறிப்பிட்ட ஸ்லோகத்திற்கு இரு கணவர்கள் என்ற பொருளைத் தற்காலிகமாக ஏற்ற பிறகு, முடிவுரை என்பது அவற்றை ஏற்பதாகவோ, மறுப்பதாகவோ இருக்க வேண்டும். பிற உரைகளைப் பொறுத்தவரையில் தீர்மானிக்கப்பட்டிருக்கும் முடிவுரைகளுக்கு இந்தத் தற்காலிகப் பொருள் பொருந்துவதாக இல்லை என்பதைக் காண்பதன் மூலம், அந்தத் தற்காலிக பொருளை மறுத்து, இரண்டாம் கணவன் நியோகவிதியின் படி மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், திருமணத்தால் அல்ல என்ற இறுதி தீர்மானத்தை {உள்ளபடியே பராசரரின் அந்தக் குறிப்பிட்ட ஸ்லோகத்தைப் பொறுத்த வரையில் பொருள் இவ்வாறு} எட்ட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[10] "பிரயோஜனம் என்பது ஒரு பொருளை அடைவதற்காகவோ, தவிர்ப்பதற்காகவோவான நிறைவை எட்ட விரும்பும் ஒருவன் பின்பற்றும் ஒழுக்கமாகும். அடைதல், அல்லது தவிர்த்தலில் அடையும் நிறைவின்மை துன்பத்தை உண்டாக்கும். அந்தத் துன்பத்தை விலக்க ஒருவன் பின்பற்றும் செயல் அல்லது ஒழுக்கம் பிரயோஜனம் என்றழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா {தர்மத்வஜா}, பொருள் மயக்கம் முதலிய (எண்ணிக்கையில் ஐந்து) தன்மைகள் ஒன்றாகத் தோன்றும்போதே, புரிந்து கொள்ளக்கூடிய ஒரு முழுமையான வாக்கியமாக அஃது அமையும்[11].(86) நான் சொல்லும் வார்த்தைகள் பொருள் நிறைந்தவையும்{1}, (சொல் ஒவ்வொன்றும் பல பொருட்களின் அடையாளங்களாக இல்லாததன் விளைவால்) பொருள் மயக்கத்தில் இருந்து விடுபட்டவையும்{2}, காரணக் காரியத் தொடர்புடையதும் {தர்க்கப்பூர்வமானதும்}{3}, கூறியது கூறல், அல்லது ஒருபொருட்பன்மொழி ஆகியவற்றில் இருந்து விடுபட்டதும்{4}, மென்மையானதும்{5}, நிச்சயமானதும்{6},(87) மிகைப்பேச்சில் இருந்து விடுபட்டதும்{7}, ஏற்புடையதும், அல்லது இனிமையானதும்{8}, உண்மை நிறைந்ததும்{8}, (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய) முத்தொகுப்புக்கு ஏற்புடையதும்{9}, (பிராகிருதத்தில் இருந்து விடுபட்டதும்) பண்பட்டதும்{10},(88) கோளமற்றதும், அல்லது குற்றமில்லாததும்{11}, கடுமையற்றதும், அல்லது புரிந்து கொள்ளக் கடினமற்றதும்{12}, முறையாக வகைப்படுத்தப்பட்டதும்{13}, பொருளைப் பொறுத்தவரையில் வலிந்து பெறப்படாததும்{14}, காரணம் மற்றும் விளைவில் {காரணக் காரியங்களில்} ஒன்றுக்கொன்று சரியானதும்{15}, தனித்தனியான ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட பொருளைக் கொண்டதுமாக{16} இருக்கும்[12].(89) ஆசை, கோபம், அச்சம், பேராசை, நம்பிக்கையற்ற தன்மை, வஞ்சனை, வெட்கம், கருணை, செருக்கு ஆகியவற்றால் தூண்டப்பட்ட நான் உன்னிடம் ஒன்றையும் சொல்லமாட்டேன். (நீ சொன்னதற்குப் பதிலளிப்பதே முறை என்பதால் பதிலளிக்கிறேன்).(90)

[11] "இந்த ஐந்து தன்மைகள் ஒன்றாகத் தோன்றும்போதே, அஃதாவது ஒன்றாகக் கவனிக்கப்படும்போதே ஒரு பேச்சாளர் அல்லது எழுத்தாளரின் வாக்கியம் முழுமை பெறவும், புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். நியாயத் தத்துவத்தில், பிதிக்ஞை, ஹேது, உதாஹரணம், உபநயம், நிகாமனம் என்ற ஐந்து தேவைகள் உண்டு. மீமாம்சை தத்துவத்தில், விஷயம், சம்ஸ்யம், பூர்வபக்ஷம், உத்தரம், நிர்ணயம் என்ற வேறு பெயரில் ஐந்து தேவைகள் உண்டு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[12] "இந்தப் பதினாறு தன்மைகளையும் சேர்த்து, போஜதேவரின் "சரஸ்வதி கந்தாபரணம்" என்றழைக்கப்படும் சொல்லாட்சி சாத்திரத்தில் மொத்தம் இருபத்துநான்கு தன்மைகள் குறிப்பிடப்படுவதாக உரையாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பேசுபவன், கேட்பவன், சொல்லப்படும் வார்த்தைகள் ஆகியன, பேச்சின் போக்கில் ஒன்றோடொன்று முற்றிலும் ஏற்புடைய வகையில் இருக்கும்போது, பெருள் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.(91) என்ன சொல்லப்பட வேண்டும் என்ற காரியத்தில், தான் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் பேசுபவன் கேட்பவனின் புத்தியை அலட்சியம் செய்யும்போது {அவமதிக்கும் போது}, அந்த வார்த்தைகளை எவ்வளவுதான் நல்லவையாக இருந்தாலும், அவை கேட்பவனால் எடுத்துக்கொள்ளக்கூடியவையாக இருப்பதில்லை.(92) பேசுபவன் தான் பேசும் பொருளுக்கான மதிப்பைக் கைவிட்டு, சிறந்த ஒலியும் பொருளும் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், கேட்பவரின் மனத்தில் தவறான தாக்கத்தையே ஏற்படுத்துகிறான். அத்தகைய சொற்களின் அத்தகைய தொடர்பு நிச்சயம் களங்கத்தையே ஏற்படுத்தும்.(93) எனினும், பொருளை வெளிப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லிக் கேட்பவனுக்கு நன்றாகப் புரியும் வகையில் பேசுபவன், உண்மையில் பேச்சாளன் என்று அழைக்கப்படத் தகுந்தவனாவான். வேறு எந்த மனிதனுக்கும் அப்பெயர் தகுந்ததில்லை.(94) எனவே, ஓ! மன்னா, பொருள் நிறைந்தவையும், சொற்செல்வத்துடன் கூடியவையுமான என் வார்த்தைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(95)

நான் யார்? யாருடையவள்? எங்கிருந்து வந்தேன்? முதலிய கேள்விகளை நீ என்னிடம் கேட்டாய். ஓ! மன்னா, உன் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில் சிதறாத மனத்துடன் கேட்பாயாக.(96) அரக்கு மற்றும் மரமும், புழுதித் தூசி மற்றும் நீர்த்துளியும் ஒன்றாகக் கலந்திருப்பதைப் போலவே அனைத்து உயிரினங்களின் இருப்பும் இருக்கிறது.(97) ஒலி, ஊறு {தீண்டல்}, சுவை, வடிவம் மற்றும் மணம், புலன்கள், ஆகியவை தங்கள் சாரங்களில் வெவ்வேறானவையாக இருந்தாலும், அரக்கும், மரமும் போலக் கலந்த நிலையிலேயே நீடிக்கின்றன.(98) இவற்றில் எதனிடமும் எவனும் நீ யார் எனக் கேட்பதில்லை என்பது நன்கறியப்பட்டது. அவை ஒவ்வொன்றுக்கும் தன்னைக் குறித்தோ, பிறவற்றைக் குறித்தோ எந்த அறிவும் கிடையாது.(99) கண்ணால் தன்னைக் காணமுடியாது. காதால் தன்னைக் கேட்க முடியாது. மேலும் கண்ணால் பிற புலன்களின் செயல்பாடுகள் எதையும் செய்ய முடியாது., அதே போலப் புலன்களில் எதனாலும் தன்னுடையதைத் தவிர வேறொரு புலனின் செயல்பாட்டைச் செய்ய முடியாது.(100)

இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தாலும் கூட, எவ்வாறு புழுதியும், நீர்த்துளியும் ஒன்றாகக் கலந்திருந்தாலும் ஒன்றையொன்று அறிந்து கொள்ள முடியாதோ, அதே போலவே அவை அனைத்தும் தங்களை அறியத் தவறுகின்றன. தங்கள் தங்களுக்குரிய செயல்பாட்டைச் செய்வதற்காக அவை புறத்தில் இருக்கும் தங்கள் நுகர் பொருட்களின் தொடர்புக்காகக் காத்திருக்கின்றன.(101) கண், வடிவம் மற்றும் ஒளி ஆகியன பார்த்தல் என்ற செயல்பாட்டின் மூன்று தேவைகளாக இருக்கின்றன. பிற புலன்களின் செயல்பாடுகளிலும், அவற்றின் விளைவான கருத்துகளிலும் இதுவே நேர்கிறது.(102) மேலும், (பார்வை, கேட்டல் முதலிய) புலன்களின் செயல்பாடுகளுக்கும், அவற்றின் விளைவுகளான (வடிவம், ஒலி முதலிய) கருத்துகளுக்கும் இடையில் புலன்களைத் தவிர மற்றொரு உட்பொருளாக இருக்கும் மனமும் தனக்கென உரிய செயல்பாட்டைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. அதன் உதவியாலேயே ஒருவன், இருப்பையும், இல்லாமையையும் வேறுபடுத்திப் பார்த்து (புலன்களில் இருந்து பெறப்படும் கருத்துகள் அனைத்தின் காரியத்திலும்) நிச்சயத் தன்மையை அடைகிறான்.(103) ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்}, ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} மற்றும் மனம் ஆகியவை சேர்த்து இவை மொத்தம் பதினொன்றாக இருக்கின்றன. பனிரெண்டாவது புத்தியாகும். எது அறியப்பட வேண்டும் என்பதில் ஐயம் எழும்போது புத்தியே முன்வந்து (சரியான புரிந்து கொள்ளத் துணை புரிந்து) ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கிறது.(104) இந்தப் பனிரெண்டாவதற்கு {புத்திக்குப்} பிறகு, எண்ணிக்கையில் பதிமூன்றாவதாக வருவது சத்வம் எனும் மற்றொரு தத்துவமாகும். அதன் உதவியால் உடல் அமைப்புகளில் அஃது எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு குறைபடுகிறது என்பதைக் கொண்டு உயிரினங்கள் அடையாளங்காணப் படுகின்றன.(105)

இதன் பிறகு, (எண்ணிக்கையில் பதினான்காவதாகத் தான் {சுயம்} என்ற) மற்றொரு கோட்பாடு நனவுநிலையாகும். அஃது ஒருவன் சுயத்துக்கும், சுயமல்லாததற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள உதவுகிறது.(106) ஆசை என்பது பதினைந்தாவது தத்துவமாகும். அதற்குள்ளேயே மொத்த அண்டமும் இருக்கிறது.(107) அவித்யை பதினாறாம் தத்துவமாகும். பிரகிருதி மற்றும் வியக்தி (மாயை மற்றும் பிரகாசம்) என்றழைக்கப்படும் பதினேழாம் மற்றும் பதினெட்டாம் கோட்பாடுகள் அதனுள்ளேயே {அவித்யைக்குள்ளேயே} இருக்கின்றன.(108) இன்பம் மற்றும் துன்பம், முதுமை மற்றும் மரணம், ஈட்டல் மற்றும் இழத்தல், ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை ஆகிய முரண்பட்ட இரட்டைகள் பத்தொன்பதாம் தத்துவமாக அமைகின்றன. பத்தொன்பதாம் தத்துவத்தையும் கடந்து, இருபதாவது என்றழைக்கப்படும் மற்றொரு தத்துவமான காலம் இருக்கிறது. இந்த இருபதாம் தத்துவச் செயல்பாட்டின் மூலமே உயிரினங்கள் அனைத்திற்கும் பிறப்பிறப்புகள் நேர்கின்றன என்பதை அறிவாயாக.(110)

இந்த இருபதும் ஒன்றாகவே நீடித்திருக்கின்றன. இவற்றைத் தவிர ஐம்பெரும் பூதங்களும், இருப்பும், இல்லாமையும் சேர்ந்து பட்டியலை இருபத்தேழாக்குகின்றன. இதையும் கடந்து விதி {புண்ணியப் பாவங்கள்}, சுக்ரன் {வீரியம்}, பலம் ஆகிய மூன்றும் சேர்வதால் பட்டியல் முப்பதை அடைகிறது.(111) எதனில் இந்த முப்பது தத்துவங்களும் இருக்கின்றனவோ அஃது உடல் என்று சொல்லப்படுகிறது.(112) சில மனிதர்கள், புலப்படாத பிரகிருதியே இந்த முப்பது தத்துவங்களுக்கும் மூலம் அல்லது காரணம் என்று கருதுகிறார்கள். (இது நாத்திக சாங்கிய பள்ளியின் கருத்தாகும்). மொத்த பார்வை கொண்ட காணாதர்கள் புலப்படுவதை (அல்லது அணுக்களை) அவற்றின் காரணம் எனக் கருதுகிறார்கள்.(113) புலப்படாததோ, புலப்படுவதோ எது அவற்றின் காரணமாக இருந்தாலும், அல்லது (பரமன், அல்லது புருஷன் மற்றும் புலப்படுவதுஅல்லது அணுக்கள் ஆகிய) இரண்டுமே காரணமாகக் கருதப்பட்டாலும், அல்லது நான்காவதாக (பரமன், அல்லது புருஷன், அவனது மாயை, ஜீவன், அவித்யை அல்லது அறியாமை என்ற) நான்கும் காரணமாக இருந்தாலும், அத்யாத்மாவை அறிந்தவர்கள் பிரகிருதியையே அனைத்து உயிரினங்களின் காரணமாகப் பார்க்கிறார்கள்.(115)

புலப்படாததாக இருக்கும் பிரகிருதியானது, இந்தத் தத்துவங்களின் வடிவில் புலப்படுவதாகிறது. ஓ! ஏகாதிபதி, நான், நீ, உடலுடன் கூடிய பிறர் அனைவரும், (நம் உடல்களைப் பொறுத்தவரையில்) பிரகிருதியின் விளைவுகளாவே இருக்கிறோம்.(116) கருவூட்டல் மற்றும் (கரு தொடர்புடைய) பிற நிலைகள், உயிர்வித்து மற்றும் குருதியின் கலவையின் மூலமே நேர்கின்றன. கருவூட்டலின் பின்விளைவாக, முதலில் தோன்றும் விளைவானது கலலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(117) கலலத்தில் இருந்து புத்புதம் (குமுழி) என்றழைக்கப்படுவது எழுகிறது. புத்புதமென்றழைக்கப்படும் நிலையில் இருந்து பேசி என்றழைக்கப்படும் நிலை எழுகிறது. பேசி என்றழைக்கப்படும் நிலையிலிருந்து, பல்வேறு அங்கங்கள் வழிப்படும் நிலை எழுகிறது. இந்த இறுதி நிலையில் இருந்து நகங்களும், முடியும் தோன்றுகின்றன.(118) ஓ! மிதிலையின் மன்னா {தர்மத்யஜா}, ஒன்பதாம் மாதத்தில் பிறக்கும் உயிரினத்தின் பாலினம் அறியப்பட்டு, ஆண்பிள்ளை என்றும் பெண்பிள்ளை என்றும் அழைக்கப்படுகின்றன.(119) உயிரினம் கருவறையில் இருந்து வெளிவந்ததும், அதன் நகங்களும், விரல்களும் மெருகூட்டப்பட்ட தாமிரத்தின் வண்ணத்தில் தெரிகின்றன. பிறக்கும்போது காணப்பட்ட வடிவம் மாறும்போது நேரும் அடுத்த நிலை குழந்தைப்பருவம் என்றழைக்கப்படுகிறது.(120)

குழந்தைப் பருவத்தில் இருந்து இளமைப் பருவம் அடையப்படுகிறது, இளமையில் இருந்து முதுமையும் அடையப்படுகிறது. உயிரினங்கள் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது, முந்தைய நிலையில் இருந்த வடிவம் மாற்றமடைகிறது.(121) பொதுப் பயன்பாட்டில் பல்வேறு செயல்களைச் செய்யும் உடலின் பூதங்கள் ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு கணமும் மாற்றமடைகின்றன. எனினும், அம்மாற்றங்கள் கவனிக்கப்பட முடியாத அளவுக்கு நுணுக்கமாக நடைபெறுகின்றன.(122) உயிரினங்கள் அனைத்தின் உடல்நிலைகளும் நல்ல இனத்தைச் சார்ந்த வேகமான குதிரையைப் போல இவ்வாறு தொடர்ந்து மாறுதலுக்கு உட்படுபவையாக இருக்கும்போது, யார் எங்கிருந்து வந்தவன்? எங்கிருந்து வரவில்லை?(124) யார் யாருடையவன்? யாருடையவனல்ல? அவன் எங்கே எழுவதில்லை? உயிரினங்களுக்கும், அவற்றின் உடல்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது?(125)

தீக்கல் இரும்புடன் தொடர்பு கொள்ளும்போதும், இரு கட்டைகள் ஒன்றோடொன்று உரசும்போதும் உண்டாகும் நெருப்பைப் போல ஏற்கனவே சொல்லப்பட்ட ஏற்கனவே பெயர் சொல்லப்பட்ட (முப்பது) தத்துவங்களின் கலவையால் உயிரினங்கள் உண்டாகின்றனர்.(126) உண்மையில், உன் உடலில் நீ உன் உடலையே காண்பது போலும், உன் ஆன்மாவில் உன் ஆன்மாவையே காண்பது போலும், நீ ஏன் உன் உடலையும், உன் ஆன்மாவையும் பிறரின் உடல்களிலும், ஆன்மாக்களிலும் காணவில்லை?(128) ஓ! மன்னா, "இஃது என்னுடையது, இஃது என்னுடையதல்ல" என்ற (பிழையான) இருமை {முரண்பட்ட இரட்டைகளின்} ஞானத்தில் இருந்து நீ விடுபட்டது உண்மையென்றால், யார் நீ? யாருடையவள்? எங்கிருந்து வருகிறாய்? போன்ற கேள்விகளினால் என்ன பயன் ஏற்படப்போகிறது?(129) பகைவர்கள், கூட்டாளிகள், நடுநிலையாளர்கள், வெற்றிக்காலம், அமைதிக்காலம் போர்க்காலங்களில் பிறர் செயல்படுவதைப் போலவே செயல்படும் ஒரு மன்னனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்?(130)

அனைத்துச் செயல்களிலும் ஏழுவகைகளில் வெளிப்படும் முத்தொகையின் {அறம், பொருள் மற்றும் இன்பத்தின்) உண்மை இயல்பை அறியாதவனும், அந்த முத்தொகையில் பற்று கொண்டவனுமான ஒருவனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்?[13](131) ஏற்பில்லாதவர், ஏற்புடையவர், பலவீனர் மற்றும் பலவான்களிடம் சம பார்வைச் செலுத்த தவறுபவனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்? அதற்குத் தகாத நீ செய்யும் விடுதலைக்கான {முக்திக்கான} பாசாங்கு உனது ஆலோசகர்களால் {அமைச்சர்களால்} தடுக்கப்பட வேண்டும்.(132) (உன்னிடம் இவ்வளவு களங்கங்கள் இருக்கும்போது) விடுதலையை {முக்தியை} அடைய நீ செய்யும் இந்த முயற்சியானது, தடுக்கப்பட்ட உணவுகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் ஏற்கும் நோயாளி மருந்தைப் பயன்படுத்தவதைப் போன்றதே ஆகும்.(133) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, மனைவிகள் மற்றும் பற்றுக்கான பிற தோற்றுவாய்களைக் குறித்துச் சிந்திக்கும் ஒருவன் தன் ஆன்மாவில் உள்ள இவற்றைக் காண வேண்டும். விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடாக வேறு எதைத் தான் பார்க்க முடியும்?(134) இவற்றைக் குறித்தும், விடுதலை அறத்தைப் பின்பற்றுவதாகச் சொன்னாலும் நீ இன்னும் பற்றுக் கொண்டிருக்கும் நன்கறியப்பட்ட நான்கு செயல்கள் (உறக்கத்தில் கிடப்பது, அனுபவிப்பது, உண்பது, உடுத்துவது) தொடர்பான குறிப்பிட்ட சில தோற்றுவாய்களைக் குறித்தும் இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(135)

[13] "அந்த ஏழு வழிகள்: ஒன்றுக்கொன்று சார்பற்றும், வேறுபட்டும் இருக்கும் அறம், பொருள், இன்பம் ஆகியன மூன்றும், அறமும் பொருளும் சேர்ந்த ஒன்று, அறமும் இன்பமும் சேர்ந்த ஒன்று, பொருளும் இன்பமும் சேர்ந்த ஒன்று ஆகியன என மூன்றும், மூன்றும் கலந்த நிலை ஒன்று என மொத்தம் ஏழு வழிகள் இருக்கின்றன. அனைத்துச் செயல்களிலும் இந்த ஏழில் ஒன்று காணப்படும். அறம் சார்ந்த செல்வம் ஈட்டுபவர்களின் செயல்கள் அனைத்திலும் அறமும், செல்வமும் இருக்கும்; விதிப்படி திருமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெறுவதில் அறமும், இன்பமும் இருக்கும்; உலகம் சார்ந்த மனிதர்களின் பொதுவான செயல்கள் அனைத்திலும் பொருளும் இன்பமும் இருக்கும். பிள்ளைகளை வளர்ப்பது என்ற செயலில் கடமையும் {அறமும்}, செல்வமும், இன்பமும் இருப்பதால் அதை மூன்றும் கலந்த வழி என்று கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மொத்த உலகையும் ஆள வேண்டிய மனிதன் உண்மையில் இரண்டாமவன் அற்ற ஒரே மன்னனாக இருக்க வேண்டும். மேலும் அவன் ஒரே ஓர் அரண்மனையில் மட்டுமே வாழும் கடப்பாடு கொண்டவனாவான்.(136) அந்த அரண்மனையில் அவனுக்கு ஒரே ஓர் உறங்கும் அறை மட்டுமே இருக்க வேண்டும். அந்த அறையிலும், இரவில் படுத்துக் கொள்ள அவனுக்கு ஒரே ஒரு படுக்கை மட்டுமே இருக்க வேண்டும்.(137) அந்தப் படுக்கையிலும் அவன் தன் மனைவியான ராணிக்குப் பாதியைக் கொடுக்கும் கடப்பாடு கொண்டவனாவான். மன்னனுக்குரிய பங்கு எவ்வளவு சிறியது என்பதை விளக்கும் எடுத்துக்காட்டாக இஃது அமையும்.(138) அவனது இன்பப் பொருட்கள், அவன் உண்ணும் உணவு, அவன் உடுக்கும் உடைகள் ஆகியவற்றிலும் இதுவே வழக்காகும். இவ்வாறு அவன் அனைத்துப் பொருட்களிலும் மிகச் சொற்பமான பங்கிலேயே பற்றுக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அவன் வெகுமதி அளிக்கும், தண்டிக்கும் கடமைகளிலும் பற்றற்றவனாக இருக்கிறான்.(139) மன்னன் எப்போதும் பிறரைச் சார்ந்தவனாகவே இருக்க வேண்டும். அவனுக்கு உரிய அனைத்திலும் சிறு பகுதியை மட்டுமே அவன் அனுபவிக்கிறான், மேலும் அந்தச் சிறு பகுதியிலும் அவன் (பிறர் தங்கள் தங்களுக்குரிய உடைமைகளில் பற்று கொண்டிருப்பதைப் போலவே) கட்டாயமாகப் பற்றப்படுகிறான். அமைதி மற்றும் போர்க்காரியத்திலும் மன்னனைச் சார்பற்றவனாகச் சொல்ல முடியாது.(140)

பெண்கள், விளையாட்டு மற்றும் பிற வகை இன்பங்கள் குறித்த காரியத்தில் மன்னனின் விருப்பம் மிகவும் சுருக்கப்பட்டதாகும். ஆலோசனை பெறும் காரியத்திலும், தன் அமைச்சர்களின் சபையிலும் மன்னனுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது?(141) எனினும், அவன் தன் ஆணைகளைப் பிற மனிதர்களின் மேல் நிறுவினால் அவன் முற்றிலும் சுதந்திரமானவனாகச் சொல்லப்படுகிறான். ஆனால், அடுத்தக் கணமே தன் வகைக்கான பல்வேறு காரியங்களில் தன்னால் ஆணையிடப்பட்ட மனிதர்களாலேயே அவனது சுதந்திரம் தடை செய்யப்படுகிறது.(142) மன்னன் உறங்க விரும்பினால், தொழில் தொடர்பாகத் தொடர்பு கொள்ளும் மனிதர்களால் தடுக்கப்பட்டு அவனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அனுமதிக்கப்படும்போதே அவன் உறங்க வேண்டும், உறங்கும் போதும், தொழில் நிமித்தமான அவசரம் கொண்டோரைக் கவனிப்பதற்கு அவன் விழிப்புடன் இருக்க வேண்டிய கடப்பாடும் அவனுக்கு உண்டு.(143) நீராடல், தீண்டல், பானம், உணவு, நெருப்பில் ஆகுதிகளை ஊற்றல், வேள்விகளைச் செய்தல், பேசுதல், கேட்டல் ஆகிய இந்த வார்த்தைகளை மன்னர்கள் பிறரிடம் கேட்டு, அவற்றைச் சொல்வோருக்கு அடிமையாக இருக்க வேண்டும்.(144) மனிதர்கள் கூட்டங்கூட்டமாக வந்து மன்னனிடம் கொடைகளை வேண்டுவார்கள். எனினும் பொதுக் கருவூலத்தின் பாதுகாவலனாக இருப்பதால் அவன் மிகுந்த தகுதியைக் கொண்டவருக்குக் கூடக் கொடைகளை அளிக்க முடியாது.(145)

அவன் கொடைகளை அளித்தால், கருவூலம் தீர்ந்துவிடும். அவன் கொடையளிக்கவில்லையெனில், வேண்டுபவர்கள் ஏமாற்றமடைந்து பகைக்கண்களுடன் பார்ப்பார்கள். இதன் காரணமாக எரிச்சலையும் அவன் {மன்னன்}, தன் மனத்தில் மானிட வெறுப்பைப் படரவிடுகிறான்.(146) ஞானிகளும், வீரர்களும், செல்வந்தர்களுமான பலர் சேர்ந்து ஒன்றாக வசித்தால், அதன் விளைவாக மன்னனின் மனம் நம்பிக்கையின்மையால் நிறைகிறது. அஞ்சுவதற்குக் காரணமேதும் இல்லாதிருந்தாலும், மன்னன் தன்னிடம் காத்திருப்போரையும் மற்றும் தன்னை வழிபடுவோரையும் அஞ்சுகிறான்.(147) ஓ! மன்னா, நான் குறிப்பிட்டவர்களும் அவனிடம் குற்றத்தைக் காண்கிறார்கள். எவ்வழியில் மன்னனுக்கு அவர்களிடம் அச்சமேற்படுகிறது என்பதைக் காண்பாயாக.(148) மேலும் தன் சொந்த வீடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் மன்னர்களே. மேலும் தன் சொந்த வீடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் இல்லற வாழ்வு முறையை வாழ்பவர்களே. ஓ! ஜனகா {தர்மத்வஜா}, மன்னர்களைப் போலவே சொந்த வீடுகளில் உள்ள மனிதர்களும் தண்டிக்கவும், வெகுமதியளிக்கவும் செய்கிறார்கள்.(149) மன்னர்களைப் போலவே பிறருக்கும், மகன்களும், மனைவியரும், தங்கள் சுயங்களும், கருவூலங்களும், நண்பர்களும், கிடங்குகளும் உள்ளன. இக்காரியங்களின் பிற மனிதர்களிடம் இருந்து மன்னன் வேறுபட்டவனல்ல.(150)

"நாடு அழிகிறது, நகரம் எரிகிறது, முதன்மையான யானை {பட்டத்து யானை} இறந்தது" ஆகிய இவை அனைத்தும் அறியாமை மற்றும் பிழையால் உண்டாகும் மனப்பதிவுகள் என்பதைக் கருத்தில் கொள்ளமால் மன்னனும் பிறரைப் போலவே {எனது என்ற அகங்காரத்தால் அவன்} துன்பவசப்படுகிறான்.(151) மன்னனானவன், ஆசை வெறுப்பு, மற்றும் அச்சம் ஆகியவற்றால் உண்டாகும் மனத்துன்பங்களில் இருந்து அரிதாகவே விடுபடுகிறான். தலைவலி மற்றும் பல்வேறு வகை நோய்களாலும் பொதுவாகவே பீடிக்கப்படுகிறான்.(152) (இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்திலும் மன்னன் (பிறரைப் போலவே) பீடிக்கப்படுகிறான். அவன் அனைத்திலும் அச்சங்கொள்கிறான். உண்மையில், எதிரிகளும், ஆளும் தடைகளும் நிறைந்த நாட்டை அனுபவித்துக் கொண்டே மன்னன் தன் இரவுகளை உறங்காமல் கழிக்கிறான்.(153) எனவே, அரசுரிமை இன்பத்தின் மிகச் சிறிய பகுதியால் மட்டுமே அருளப்பட்டிருக்கிறது. அது கொடுக்கும் துன்பமோ மிகப் பெரியதாகும். வைக்கோலை எரிக்கும் நெருப்பின் தழல்கள், அல்லது நீர்ப்பரப்பின் நுரையில் உள்ள குமிழி போல அது திடமற்றதாகும் {உறுதியற்றதாகும்}.(154) அரசுரிமையை அடைய விரும்பியோ, அஃதை அடைந்தோ அமைதியை வெல்வோம் என்ற நம்பிக்கை எவனுக்கு இருக்கும்? நீ இந்த நாட்டையும், இந்த அரண்மனையையும் உனதாகக் கருதுகிறாய்.(155)

இந்தப் படையும், இந்தக் கருவூலமும், இந்த அமைச்சர்களும் உனக்குச் சொந்தம் என நீ நினைக்கிறாய். எனினும், உண்மையில் அவை அவை யாருடையவை? யாருடையதில்லை? கூட்டாளிகள், அமைச்சர்கள், தலைநகரம், மாகாணங்கள், தண்டனை, கருவூலம், மன்னன் ஆகிய(156) நாட்டின் அங்கங்களான ஏழும், ஒன்றையொன்று தாங்கியிருக்கும் மூன்று குச்சுகளைப் போல ஒன்றையொன்று சார்ந்தவையாகும். இவை ஒவ்வொன்றின் தகுதியும், பிறவற்றின் தகுதியாலேயே நிறுவப்படுகின்றன. இவற்றில் எஞ்சியவற்றைவிட மேன்மையானது என்று எதைச் சொல்ல முடியும்(157) அந்தக் குறிப்பிட்டவை ஒவ்வொன்றும் தங்கள் இயக்கத்தின் மூலம் ஏதோ ஒரு முக்கிய முடிவைத் தருகின்றபோது அவை ஒவ்வொன்றும் தனித்துவமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு காணப்படும் திறனின் மூலமே அந்த நேரத்தில் மேன்மையானதாகச் சொல்லப்படுகிறது.(158) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஏழு அங்கங்களும், {விருத்தி, க்ஷயம் மற்றும் ஸ்தானம்} ஆகிய மூன்றும் சேர்ந்தவையும், ஒன்றையொன்று சார்ந்திருப்பவையுமான இந்தப் பத்து தொகையும் {தசவர்க்கமும்} மன்னனைப் போலவே நாட்டை அனுபவிப்பதாகச் சொல்லப்படுகிறது.(159) பெருஞ்சக்தி கொண்டவனும், க்ஷத்திரிய நடைமுறைகளில் உறுதியான பற்றைக் கொண்டவனுமான மன்னன், குடிமக்களின் வயலில் விளைவதில் பத்தில் ஒரு பாகத்தில் மட்டுமே நிறைவு கொள்ள வேண்டும். சில மன்னர்கள் பத்தில் ஒரு பாகத்தைவிடக் குறைந்த அளவிலேயே நிறைவடைவதும் காணப்படுகிறது.(160)

இவ்வுலகில் உரிமையுள்ள எவரும் இல்லாமல் அரச அலுவலுக்கு உரிய ஒருவனுமில்லை, ஒரு மன்னன் இல்லாத எந்த நாடும் கிடையாது. நாடு என்ற ஏதும் இல்லையென்றால், அறம் என்ற ஏதும் இருக்காது, அறம் என்ற ஏதும் இல்லை என்றால் விடுதலை எங்கிருந்து எழும்?(161) மிகப் புனிதமானதும், உயர்ந்ததுமான தகுதிகள் அனைத்தும் மன்னர்கள் மற்றும் நாடுகளுக்கு உரியவையாகும். ஒரு நாட்டை நன்கு ஆள்வதன் மூலம் ஒரு மன்னன் மொத்த உலகையும் தக்ஷிணையாகக் கொடுத்த ஒரு குதிரை வேள்வியைச் செய்வதற்குரிய தகுதியை ஈட்டுகிறான். (ஆனால் எத்தனை மன்னர்கள் தங்கள் நாடுகளை நன்றாக ஆள்கிறார்கள்?(162) ஓ! மிதிலையின் ஆட்சியாளா, மன்னர்கள் மற்றும் நாடுகள் தொடர்புடைய இத்தகைய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான களங்கங்களை என்னால் சுட்டிக் காட்டமுடியும்.(163) மேலும், என் உடலிடம் கூட எனக்கு உண்மையான தொடர்பேதும் இல்லாத போது, பிறரின் உடல்களில் நான் எத்தொடர்பையும் கொண்டதாக எவ்வாறு கொள்ள முடியும்? வர்ணக்கலப்பை ஏற்படுத்தியதாக நீ என்னைக் குற்றஞ்சாட்ட முடியாது.(164) விடுதலை {முக்த} அறத்தையும், அதன் வழிகள், முறைகள், நடைமுறைகள், முடிவு ஆகியவற்றையும் சேர்த்து மொத்தமாகப் பஞ்சசிகரின் உதடுகளில் இருந்து நீ கேட்டாயா?(165)

ஓ! மன்னா, நீ உன் கட்டுகள் அனைத்தையும் கடந்து விட்டதாகவும், பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டதாகவும் இருந்தால் நீ ஏன் இன்னும் இந்தக் குடையையும், அரச சின்னங்களையும் தரிக்கிறாய்?(166) நீ சாத்திரங்களைக் கேட்டதே இல்லையென்றோ, எந்தப் பயனும் இல்லாமல் அவற்றைக் கேட்டிருக்கிறாய் என்றோ, ஒருவேளை, சாத்திரங்களைப் போலத் தெரியும் வேறு ஏதோ உடன்படிக்கைகளைக் கேட்டிருக்கிறாய் என்றோ நான் நினைக்கிறேன்.(167) உலகம் சார்ந்த அறிவை மட்டுமே கொண்டிருக்கிறாய் என்றும், சாதாரண மனிதர்களும் கட்டப்படும் தீண்டல், மனைவியர், மாளிகைகள் முதலியவற்றில் நீயும் கட்டப்பட்டிருக்கிறாய் என்றும் தெரிகிறது.(168) நீ அனைத்துக் கட்டுகளில் இருந்து விடுபட்டிருக்கிறாய் என்பது உண்மையானால், என் புத்தியால் மட்டுமே உன் மேனியில் நுழைந்த நான் உனக்கு என்ன தீங்கைச் செய்துவிட்டேன்?(169) அனைத்து வகை மனிதர்களுக்கு மத்தியில் யதிகள், வசிக்கப்படாத அல்லது கைவிடப்பட்ட வசிப்பிடங்களில் வசிப்பதே வழக்கமாகும். உண்மையான ஞானத்தில் வெறுமையான புத்தியால் நுழைந்ததன்மூலம் நான் உனக்கு என்ன தீங்கைச் செய்துவிட்டேன்?(170)

ஓ! மன்னா, ஓ! பாவமற்றவனே, நான் என் உள்ளங்கைகளாலோ, கரங்களாலோ, பாதங்களாலோ, தொடைகளாலோ, என் உடலின் எந்தப் பாகத்தாலோ நான் உன்னைத் தீண்டவில்லை.(171) நீ உயர்ந்த குலத்தில் பிறந்தவனாவாய். நீ பணிவுள்ளவன். முன்னறிதிறனும் கொண்டிருக்கிறாய். நான் உன் உடலுக்குள் நுழைந்த செயலானது நன்மையோ, தீமையோ அது நம் இருவர் மட்டுமே தொடர்புடைய தனிப்பட்ட செயலாகும். அந்தத் தனிப்பட்ட செயலை உன் சபையினர் அனைவரின் முன்பும் வெளிப்படுத்தியது முறையற்றதாகாதா?(172) இந்தப் பிராமணர்கள் மதிக்கத்தகுந்தவர்களாவர். இவர்கள் ஆசான்களில் முதன்மையானவர்களுமாவர். அவர்களுடைய மன்னனாகிய நீயும் மதிக்கத்தகுந்தவனே. அவர்களை மதிக்கும் நீ, அவர்களால் மதிகப்படவும் தகுந்தவனாவாய்.(173) இவையனைத்தையும் குறித்துச் சிந்திக்கும் நீ பேச்சுரிமை விதிகளை உண்மையாக அறிந்தவனாக இருந்தால். எதிர்பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கிடையில் நடந்த சேர்க்கையை இந்த மனிதர்களில் முதன்மையானவர்களுக்கு அறிவித்தது முறையாகாது.(174) ஓ! மதிலையின் மன்னா, தாமரை இலையைத் தொடாமல் அதைச் சற்றும் நனைக்காமல் இருக்கும் நீர்த்துளியைப் போலவே நான் உன்னை முற்றிலும் தீண்டாதிருக்கிறேன்.(175)

இவ்வாறு இருக்கும்போதிலும் நீ என் தீண்டலை உணர்வாயெனில், துறவி வகையைச் சார்ந்த பஞ்சசிகரின் போதனைகள் மூலம் உன் புத்தியானது புலன்நுகர் பொருட்களில் இருந்து விலகியிருக்கிறது என்பதை எவ்வாறு நம்ப முடியும்?(176) இல்லற வாழ்வு முறையில் இருந்து விழுந்திருந்தாலும், அடைவதற்கரிய விடுதலையை {முக்தியை} நீ இன்னும் அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. விடுதலை என்ற இலக்கை அடைந்துவிட்டதாகப் பாசாங்கு செய்யும் நீ அவ்விரண்டு நிலைகளுக்கு இடையிலேயே இருக்கிறாய்.(177) விடுதலையடைந்த ஒருவன் மற்றொருவனுடன் கொள்ளக்கூடிய தொடர்பானது, நீ அஞ்சும் வகையிலான கலப்புக்கு வழிவகுக்காது. அது புருஷனுக்கும், பிரகிருதிக்கும் இடையிலான கலப்பைப் போன்றதாகும்.(178) உடலையும் ஆன்மாவையும் ஒன்றெனக் கருதுபவர்கள் மட்டுமே, பல்வேறு வகைகளையும் {வர்ணங்களையும்}, வாழ்வுமுறைகளையும் {ஆசாரங்களையும்} வெவ்வேறென நினைத்தும், கலப்பின் சாத்தியத்தை அனுமானித்தும் பிழை செய்வார்கள். என் உடல் உன்னிலிருந்து வேறுபட்டதாகும். ஆனால் என் ஆன்மா உன் ஆன்மாவிலிருந்து வேறுபட்டதல்ல. என்னால் இஃதை உணர முடியும்போது, யோகத்தின் மூலம் நான் உனக்குள் நுழைந்திருந்தாலும், என் புத்தி உன்னில் உண்மையில் இல்லை என்பதில் சிறு ஐயமும் ஏற்படவில்லை.(179)

கையில் பானை தாங்கப்படுகிறது. அந்தப் பானையில் பால் இருக்கிறது. அந்தப் பாலில் ஓர் ஈ இருக்கிறது. கை மற்றும் பானை, பானை மற்றும் பால், பால் மற்றும் ஈ ஆகியன ஒன்றாக நீடித்திருந்தாலும், அவை ஒவ்வொன்றும் வேறுபட்டவையாகும்.(180) அந்தப் பானை பாலின் இயல்பைக் கொள்வதில்லை. பாலும் ஈயின் இயல்பை அடைவதில்லை. அவற்றின் நிலை ஒன்றையொன்று சார்ந்திருந்தாலும், அவை கொண்ட தற்காலிக நிலையால் என்ற மாற்றமும் ஏற்படாது.(181) இதே வகையிலேயே நிறமும், நடைமுறைகளும் விடுதலையடைந்த மனிதனில் ஒன்றாக நீடித்திருந்தாலும், உண்மையில் அவனைப் பற்றவில்லை. நான் உன்னுடன் கொண்ட சேர்க்கையின் விளைவால் எவ்வகையான கலப்பு {வர்ணக்கலப்பு} ஏற்பட முடியும்?(182) நிறத்தால் நான் உனைனவிட மேம்பட்டவளல்ல. நான் வைசியருமல்ல, சூத்திரருமல்ல. ஓ! மன்னா, நான் உன் வகையைச் சார்ந்த ஒரு தூய {க்ஷத்திரிய} குலத்திலேயே பிறந்தேன்.(183) பிரதானர் என்ற பெயரில் ஓர் அரசமுனி இருந்தார். நீ அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பாய் என்பது வெளிப்படை. நான் அவரது குலத்தில் பிறந்தவள், என் பெயர் சுலபையாகும்.(184) (பெரும் மலைகளில் வசிக்கும் தலைமை மேதைகளான) துரோணர், சதசிருங்கர் மற்றும் சக்ரத்வாரர் ஆகியோரின் துணையுடன் தேவர்களில் முதன்மையான இந்திரன், என் மூதாதையர்கள் செய்த வேள்விகளுக்கு வழக்கமாக வருவான்.(185) அத்தகைய குலத்தில் பிறந்த எனக்குத் தகுந்த கணவனைக் காண முடியாது என்பது தெரிந்தது. விடுதலை அறம் கற்பிக்கப்பட்டவளான நான் தவப் பயிற்சிகளை நோற்றுக் கொண்டு பூமியில் மட்டுமே திரிந்து வருகிறேன்.(186) நான் பின்பற்றும் துறவு வாழ்வில் எந்தப் போலித்தனமும் எனக்குக் கிடையாது. நான் பல்வேறு வகையினரின் நடைமுறைகளைக் குழப்புவதில்லை. எனக்குச் சொந்தமான முறையான வாழ்வுமுறையையே நான் உறுதியாகப் பின்பற்றுகிறேன்.(187)

நான் என் நோன்புகளில் உறுதியாகவும், நிலையாகவும் இருக்கிறேன். சொல்லின் உரிமையைச் சிந்திக்காமல் நான் எவ்வார்த்தையையும் சொல்வதில்லை. ஓ! ஏகாதிபதி, முறையாகச் சிந்திக்கமால் நான் உன்னிடம் வரவில்லை.(188) விடுதலை அறத்தின் மூலம் உன் புத்தி தூய்மையடைந்திருக்கிறது என்று நான் கேள்விப்பட்டதால், சில நன்மைகளை விரும்பி நான் இங்கே வந்தேன். உண்மையில், நீ முயலும் விடுதலை குறித்து விசாரிக்கவே நான் இங்கே வந்தேன்.(189) என்னை மகிமைப்படுத்திக் கொள்வதற்காகவோ, என் எதிராளிகளை அவமதிக்கவோ நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் நேர்மையால் மட்டுமே தூண்டப்பட்டு நான் இதைச் சொல்கிறேன். விடுதலையை {முக்தியை} அடைந்தவன், வெற்றிக்காக வாக்குப்போரின் மூலம் ஒருபோதும் அறிவுப் போராளியாவதில்லை. மறுபுறம், உண்மையில் விடுதலையை அடைந்தவன், முற்றிலும் அமைதியான இடமாக இருக்கும் பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொள்கிறான்.(190) ஒரு துறவி வெறும் வீட்டில் ஓரிரவு மட்டும் வசிப்பதை (வசித்து மறுநாள் காலையில் செல்வதைப்) போலவே நானும் (ஏற்கனவே சொன்னது போல உண்மை ஞானமற்ற வெற்று அறையைப் போன்ற) உன்னில் வசிக்கப் போகிறேன்.(191) வாக்கு மற்றும் பிற காணிக்கைகளால் நீ ஒரு விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய விருந்தோம்பலைக் கொண்டு என்னை முறையாகக் கௌரவித்தாய். ஓ! மிதிலையின் ஆட்சியாளா, இந்த ஓரிரவு என் அறை போன்றதேயான உன்னில் உறங்கிவிட்டு, நாளை நான் செல்வேன்" என்றாள் {சுலபை}".(192)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சிறந்த பொருளும், காரணமும் நிறைந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனகன் {தர்மத்யஜன்} அவளுக்கு {சுலபைக்கு} பதிலேதும் சொல்லத்தவறினான்".(193)

சாந்திபர்வம் பகுதி – 321ல் உள்ள சுலோகங்கள் : 193

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்