The history of Naga and Brahmana! | Shanti-Parva-Section-366 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 193)
பதிவின் சுருக்கம் : தர்மாரண்யருக்கும் நாகன் பத்மநாபனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் உலகில் வரலாறான கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, இவ்வழியில் அந்த முதன்மையான நாகனை வணங்கிய (தர்மாரண்யர் என்ற பெயரைக் கொண்ட) அந்தப் பிராமணர், உஞ்ச வகை வாழ்வுமுறையைப் பின்பற்றுவதில் உறுதியான தீர்மானதைத அடைந்து, அந்த நோன்பை முறையாகக் கற்கவும், தொடங்கவும் பிருகு குலத்தின் சியவனரிடம் சென்றார்.(1)
சியவனர் அந்தப் பிராமணருக்கான சம்ஸ்கார சடங்குகளைச் செய்து, முறையாக அவரது உஞ்ச வகை வாழ்வுமுறையைத் தொடங்கி வைத்தார். ஓ !ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்தப் பிருகுவின் மகனே இந்த வரலாற்றை மன்னன் ஜனகனின் அரண்மனையில் உரைத்தார். மன்னன் ஜனகனும் பதிலுக்கு உயர் ஆன்மாவைக் கொண்ட தெய்வீக முனிவரான நாரதருக்கு இதைச் சொன்னான்.(2,3)
களங்கமற்ற செயல்களைக் கொண்டவரான முனிவர் நாரதரும் ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்று, இந்த வரலாறு கேட்கப்பட்ட போது இதை இந்திரனுக்குச் சொன்னார்.(4) நாரதரிடம் இருந்து இவ்வாறு இஃதை அடைந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்}, ஓ! ஏகாதிபதி, பிராமணர்களில் முதன்மையானோர் அனைவரும் அடங்கிய ஒரு கூட்டத்தில் இந்த அருளப்பட்ட வரலாற்றைச் சொன்னான்.(5)
ஓ! மன்னா, (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்} நான் பிருகு குலத்தின் ராமருடன் {பரசுராமருடன்} பயங்கரமாகப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, தெய்வீக வசுக்கள் இந்த வரலாற்றை எனக்குச் சொன்னார்கள்.(6)
ஓ! அறவோரில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உன்னால் கேட்கப்பட்ட நான் பெருந்தகுதி நிறைந்ததும், புனிதமானதும், சிறந்ததுமான இந்த வரலாற்றை உனக்குச் சொன்னேன்.(7)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த கடமை எது என்று நீ என்னிடம் கேட்டாய். உன் கேள்விக்கான என் பதில் இந்த வரலாறே ஆகும். ஓ! ஏகாதிபதி, எந்தக் கனியையும் எதிர்பாராமல் இவ்வழியில் உஞ்ச நோன்பைப் பின்பற்றி அவர் {தர்மாரண்யர் நிச்சயம்} துணிவுமிக்க மனிதரே.(8) நாகர்களின் தலைவனால் {பத்மநாபனால்} தமது கடமை குறித்துக் கற்பிக்கப்பட்ட அந்தப் பிராமணர், உறுதியான தீர்மானத்தை அடைந்து, யமம் மற்றும் நியமம் என்ற நடைமுறைகளைப் பின்பற்றி, மற்றொரு காட்டிற்குச் சென்று, உஞ்ச நோன்பில் அனுமதிக்கப்பட்ட வகையிலான உணவை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தார்" என்றார் {பீஷ்மர்}.(8)
சாந்திபர்வம் பகுதி – 366ல் உள்ள சுலோகங்கள் : 8
*********மோக்ஷதர்மம் உபபர்வம் முற்றும்*********
*********சாந்தி பர்வம் முற்றிற்று*********
*********அடுத்தது அநுசாஸனபர்வம்*********
ஆங்கிலத்தில் | In English |